புராதனப் பொதுவுடைமைச் சமுதாயத்தில், அதாவது தனிச் சொத்துரிமை என்ற எண்ணமே உதிக்காத காலத்தில், மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வேட்டையாடினர்; காய் கனிகளைப் பறித்தனர்; தேனடைகளைப் பிழிந்து தேனெடுத் தனர். அனைவரும் அவரவர் தேவைக்கு ஏற்பப் பகிர்ந்து உண்டனர். அச்சமூக அமைப்பில் ஒருவருக்கு மற்றவர் மீது மன உராய்வுகள் எற்படும் பொழுது பெரியவர்களுடைய கண்டிப்பி லும், வழிகாட்டுதலிலும் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன. அவர்களிடையே கண்டிப்பும் கனிவும் இருந்தனவே தவிர காய்தல் உவத்தல் இருந்ததில்லை.

திட்டமிடலும், வழிகாட்டுதலும் இருந்தனவே தவிர சூழ்ச்சியும் ஒடுக்குமுறையும் இருந்ததில்லை. அப்பொழுதெல்லாம் மனித சமுதாயத்தினால் தாங்கள் வாழ்வதற்கும், தங்களுக்குப்பின் தங்கள் சந்ததிகள் வாழ்க்கையைத் தொடர்வதற்கும் தேவை யான அளவிற்கு மட்டுமே பொருட்களை உற்பத்தி செய்ய முடிந்தது. இதற்கு சமூக உறுப்பினர்கள் அனைவரும் உழைப் பது அவசியமான நிபந்தனையாக இருந்தது. காலப்பேக்கில் மனிதனுடைய உற்பத்தி ஆற்றல் வளர்ந்தது. தாங்கள் வாழ்வதற்கும், தங்கள் சந்ததியினர் இப்புவியில் வாழ்க்கையைத் தொடர்வதற்கும் தேவையான பொருட்களை விட அதிகமான பொருட்களை மனிதர்களால் உற்பத்தி செய்ய முடிந்தது.

இந்த வளர்ச்சி தங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அனைவருடைய உழைப்பும் தேவை இல்லை; சிலர் உழைக்காமல் இருந்தாலும் அனைவருக்கும் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையைத் தோற்றுவித்தது. இந்நிலைமையைப் பயன்படுத்தி, சிலர் உழைப்பதைத் தவிர்க்க முனைந்தனர். உழைக்க வற்புறுத்தியோரை வன்முறையாலும் சூழ்ச்சியாலும் தாக்கி ஒடுக்கினர். இவ்வாறு ஒடுக்கும் வேலையைச் சமூக ஒழுங்கமைப்புக்கான பணி என்று பெயரும் இட்டுக் கொண்டனர். இப்படியாக மனித குலத்தில் வர்க்க சமூகம் தோன்றியது.

வர்க்க சமூகம் தோன்றிய பின் அது பல்வேறு அடுக்கு நிலையாக வளர்த்து எடுக்கப்பட்டது. காலப்பேக்கில் பல சமூகப் படிநிலைகள் கொண்ட சமூகமாக மாற்றம் அடைந்தது. கீழ்ப் படிநிலையில் உள்ளோர் தங்கள் அறிவுத் திறனையும், உழைப்புத் திறனையும் வளர்த்துக் கொண்டு, தாங்கள் இருக்கும் நிலையை விட உயர் நிலைக்குச் செல்ல முயல வேண்டும் என்றும், இது தான் அனைவருடைய குறிக்கோளாக வேண்டும் என்றும் ஒரு கருத்தியலை உயர் படிநிலையில் உள்ளவர்கள் பரப்பிக் கொண்டு வருகின்றனர்; பொதுக் கருத்தாகவும் வெற்றிகரமாக வளர்த்து எடுத்தும் இருக்கின்றனர். இதன் மூலம் படிநிலை அடிமைத்தனக் கருத்தியலை சமூகத்தில் உறுதிப்படுத் தியும் இருக்கின்றனர்.

ஆகவே ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் முன்னேற்றம் அடைவதற்கு, தன் அறிவுத் திறனையும், உழைப்புத் திறனையும் பயன்படுத்துகிறான். இந்தப் படிநிலைச் சமுதாய அமைப்பு தான் அடிமைத்தனத்தையும், வேதனைகளையும் உள்ளடக்கி உள்ளது என்பதைச் சாதாரண மனிதன் மறந்துவிட்டான். அதை அவன் புரிந்து கொண்டு விடக் கூடாது என்று மேல் படிநிலையில் உள்ளவர்கள் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

படிநிலை அடிமைத்தனம் ஒழியாத நிலையில், ஒருவன் உயர் படிநிலையை அடைவதற்கும், குறைந்த பட்சம் தன் படிநிலையில் இருந்து கீழே போய் விடாமல் இருப்பதற்கும், சுற்றிலும் உள்ள மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் அறிவுத் திறனையும், உழைப்புத் திறனையும் மட்டும் நம்பிச் செயல்பட்டால் முடிந்து விடுவது இல்லை; சில, பல சமயங்களில் அறிவுத் திறனும் உழைப்புத் திறனும் செல்லுபடி ஆவதே இல்லை. அதற்கு ஆங்காங்கே அதிகாரத்தில் உள்ளவர்களின் அனுசரணையான ஒத்துழைப்புத் தான் மிக முக்கிய கராணியாக உள்ளது. இந்த அனுசரணையான ஒத்துழைப்பு, பல வடிவங்களில் இருக்கிறது. உறவினன், நண்பன், ஒரே ஊர்க்காரன், ஒரே சாதிக்காரன், பிற்காலத்தில் உதவிகரமாக இருப்பான் என்ற பல வடிவங்களில் இந்த அனுசரணையான ஒத்துழைப்பு கிடைக்கிறது. இவற்றுடன் கூட, பணத்தை / பொருட்களை இலஞ்சமாகக் கொடுத்து ஒத்துழைப்புப் பெறுவதும் உண்டு. இந்த இலஞ்ச வடிவம்தான் எல்லாவற்றையும் விட மிக எளிமையான வடிவம்.

படிநிலைச் சமுதாயமாக இருப்பதால்தான், உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒருவன், தங்களுடைய தேவைகளை நிறைவேறப் பிறரைத் தன்னிடம் அடிபணிய வைக்கப் போதுமான வலிமை பெற முடிகிறது. படிநிலைச் சமூகமாக இல்லாமல் சமநிலைச் சமூகமாக இருந்தால், ஒரு அதிகார விரும்பியால் பிறரைத் தன்னுடைய சுயநலத்திற்காகப் பணிய வைக்கும் வலிமையைப் பெற முடியாது. அச்சூழலில் இலஞ்சம் / ஊழல் என்பது மறைந்து விடும். படிநிலைச் சமூக அமைப்பில் இருந்து சமநிலைச் சமூக அமைப்பாக மாறும் காலத்தில் இலஞ்சமும் ஊழலும் முழுமையாக ஒழியாவிட்டாலும் அதன் வலிமை குறையத் தொடங்கிவிடும்.

ஆகவே இலஞ்ச ஊழலை ஒழிக்க முனைபவர்கள் முதலில் படிநிலைச் சமூக முறையை, அதாவது சமூக ஒடுக்குமுறையை ஒழிக்க முனைய வேண்டும். அதைச் செய்யாமல் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று  உரக்கப் பேசுபவர்கள் உண்மையில் ஊழல் என்றென்றைக்கும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களே. படிநிலைச் சமூக அமைப்பை / ஒடுக்குமுறையை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது