கர்னல் அவ்ரெலியானோ புயயண்டியா, மொத்தம் முப்பத்திரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னின்று நடத்தி அனைத்திலும் தோல்வி கண்டார். அவருக்கு பதினேழு விதமான பெண்களுடன் பதினேழு ஆண் குழந்தைகள் பிறந்து, மூத்த குழந்தை முப்பத்தைந்து வயதை எட்டுவதற்குள் அனைத்து பதினேழு குழந்தைகளும் அடுத்தடுத்து ஒரே இரவில் ஒருவர் பின் ஒருவராக அடியோடழிக்கப் பட்டார்கள். அவர் பதிநான்கு முறை தன் மீதான கொலை சூழ்ச்சிகளிலிருந்தும் எழுபத்தி மூன்று திடீர் தாக்குதல்களிலிருந்தும், ஒரு கொலைப்படை மரண தண்டனையிலிருந்தும் தப்பினார். தனது காப்பியில் கலக்கப்பட்ட ஒரு குதிரையை முழுசாக கொன்றுவிடவல்ல எட்டிக்கொட்டை விஷத்தினை அருந்திய போதும் அவருக்கு ஏதும் நேர்ந்திடவில்லை.

குடியாட்சியின் ஜனாதிபதி வழங்கிய நாட்டின் உயரிய சாதனையாளர் விருதையும் அவர் மறுத்தார். புரட்சிப் பெரும் படைகளின் தளபதியாக உயர்ந்து ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைக்கு படைகளை அனுப்பிடும் சட்ட அதிகாரம் அவருக்கு இருந்தது. அரசால் மிகவும் அச்சங் கொள்ளப்பட்ட மனிதராக, ஆனால் ஒரு போதும் தன்னை நிழற்படம் எடுக்க அனுமதிக்காதவராக அவர் இருந்தார். யுத்தத்திற்கு பிறகு அரச அளிக்க முன்வந்த ஓய்வூதியத்தை மறுத்து, முதுமை அடையும் வரையில் மெக்கான்டோவில் தனது சிறிய பொன்தச்சுப்பட்டறையில் குட்டித் தங்கமீன்களை உற்பத்தி செய்து வாழ்ஊதியம் ஈட்டினார். எப்போதும் யுத்தங்களில் தன் வீரர்களுக்கு முன் சென்று முன்னிலையே வகித்த அவருக்கு ஒரே காயம், நீர் லாண்டியா உடன்படிக்கையை கைச்சான்றிட்ட போது தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்டதுதான்.

அந்த உடன்படிக்கை தான் இருபதாண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. தன் மார்பில் துப்பாக்கி கொண்டு அவர் சுட்டுக் கொள்ள துப்பாக்கி ரவை முதுகுவழியே எந்த அத்தியாவசிய உறுப்பையும் பாதிக்காமல் வெளியே வந்தது. அவருக்காக மெக்காண்டோவில் கடைசியாக மிச்சமிருந்தது எல்லாம் அவரது பெயரில் ஒரு வீதி இருந்தது மட்டும்தான். முதுமை அடைந்து இறந்து போவதற்கு சில காலம் முன் குறிப்பிட்டதைப் போலவே மேற்கண்ட எதுவும் நிகழுமென்று, தனது இருபத்தோறு ஆட்கள் கொண்ட படையோடு ஜெனரல் விக்டோரியோ மெடினாவோடினைய புறப்பட்ட அந்த சாலையில் அவர் அறிந்திருக்கவில்லை. மெக்காண்டோவை உனது பாதுகாப்பில் விட்டுச் செல்கிறோம். கிளம்பும்முன் அர்காடியோவிடம் அவ்வளவே அவர் சொன்னார். அதை நல்ல கதியில் உன்னிடம் விடுகிறோம். நாங்கள் திரும்பி வரும்போது மேலும் உயர்வான நிலையில் ஒப்படைக்க முயற்சி செய்.

இவ்வாறான உத்திரவுகளுக்கு அர்காடியோ தனிப்பட்ட முறையில் சொந்தமான பொருள் விளக்கம் ஏற்படுத்திக் கொண்டான். வீட்டில் கிடந்த மெகியுவாடெஸ் புத்தகங்களில் ஒன்றிருந்த படைத்தளபதி ஒருவனின் படத்தை ஒத்த தலைப்பின்னும் தோளில் அணியும் சின்னமுமாய் ஒரு புதிய சீருடையை கண்டுபிடித்தான். இடுப்பிலோ தங்கக்குஞ்சம் வைத்த பித்தான் பெல்ட்டோடு வாளை தொங்கவிட்டான். அவை அவர்களால் கொல்லப்பட்ட காப்டனுடையவை. மெக்காண்டோவின் எல்லையில் இரண்டு பீரங்கி வண்டிகளை நிறுத்தி வைத்ததோடு தான் முன்னின்று நடத்திய பள்ளிக்கூடத்தின் தனது மாணவர்களை சீருடை அணிய வைத்தான். அவர்களும் அவனது சப்தமான பிரகடனங்களால் எழுச்சி யுற்றிருந்தார்கள்.

அவ்வப்போது சீருடையில் அவர்கள் ஊரில் வட்டமிட்டு மிடுக்கோடு சுற்றிவர அயல் ஆட்கள் ஊறு செய்ய முடியாதபடி ஊர் இருப்பதற்கான தோற்றத்தைப் பெற்றார்கள். ஆனால் இது இருமுனை கூர் விளைவு கொண்டதாயிற்று. பத்து மாதங்களுக்கு மெக்கான்டோவை தாக்க அரசு படைகள் தைரியங் கொள்ளவில்லை என்பது ஒருபுறம், அப்படி தாக்குதல் என்று நிகழ்த்தியபோது, அரைமணியில் எதிர்ப்பை அழித்தொழிக்கும் படியான பெரும் சேனையை அனுப்பி வைத்தது. மறுபுறம் தனது கட்டுப்பாட்டில் ஊர் வந்த நாள் முதலே தனது விருப்பு வெறுப்பிற்கு ஏற்ற பராபட்சமிக்க அரசாணைகள் அர்காடியோ வெளியிட்டபடி இருந்தன. தன் மூளையில் பட்டதை எல்லாம் அரசாணைகள் ஆக்கி நாளொன்றிற்கு நான்காக அவன் வெளியிட்டான். பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இராணுவ சேவையை கட்டாயமாக்கினான்.

ஆறுமணிக்கு மேல் ஊரில் திரியும் எந்த வகை கால்நடையையும் அரசுடமை என பொது சொத்தாக அறிவித்தான். வயதான யாவரும் சிவப்பு நிறத் துணிப்பட்டையை தோளின் கீழ் கையில் கட்ட உத்திரவிட்டான். எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனையின் பயத்தோடிருக்குமாறு அருட்தந்தை நிக்கானரை தனிமைச் சிறையிலிட்டு, அவரை பிரார்த்தனை கூட்டங்கள் நடத்திடவும் ஆலயமணி அடித்திடவும் தடை செய்து, லிபரல் வெற்றி என்றால் மட்டுமே தேவாலய மணி ஒலிக்க உத்திரவிட்டான். தனது உத்திரவுகளின் முக்கியத்துவத்தை காட்டவும் ஏதும் செய்யத்தயங்காத தனது மேலாண்மையை உறுதி செய்யவும், ஒரு கொலைப்படையால், மனித உருவம் கொண்ட வயற்காட்டுப் பொம்மையை தினந்தோறும் ஊர் மைதானத்தில் சுட்டுக் கொண்டிருக்க உத்திரவிட்டான்.

ஆரம்பத்தில் யாருமே அவனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. சிறியவர்களான பள்ளிக்கூட பையன்கள்தான் அப்படி ஏதோ முதியவர்கள் போல நடந்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு நாள் இரவு காட்டரீனோ அஸ்காடிக்கு அவன் அர்காடியோ வருகைப் புரிந்த போது, அங்கிருந்த வாத்தியப் பிரிவின் ஊதுகுழல்காரன் அனைவரும் நகைக்கத்தக்க முறையில் வாசிப்பு செய்து அவனை வரவேற்றபோது, ஆட்சியாளர்களை அவமதித்து விட்டதாக கூறி அவனை சுட்டுக் கொல்ல அர்காடியோ உத்திரவிட்டான். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுக்க முயன்றவர்கள் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறைசாலையில் இடப்பட்டு மண்டியிட்டு உணவருந்த வெறும் ரொட்டித் துண்டுகளும் தண்ணீருமே தரப்பட்டனர். கொலைகாரா அர்காடியோவின் கொடுங்கோன்மை செயல்களை அறிந்த போதெல்லாம் பொது இடங்களில் அவனைக் கண்டு ஊர்சுலா சத்தம் போடுவாள். இது குறித்து அவ்ரெலியானோ அறியும் போது உன்னை சுட்டுக் கொல்ல உத்திரவிடுவான்.

அப்போது முதலில் சந்தோ­ப்படப் போகிறவள் நான்தான். ஆனால் அதுபோன்ற மிரட்டல்களால் யாதொறு பயனும் இருக்கவில்லை. மெக்காண்டோ எப்போதும் கண்டிராத ஒரு கொடுங்கோலாண்மை ஆட்சியாளனாக ஆகும் வகையில் தனது கட்டை மேலும் மேலும் இறுக்கியபடி தேவையற்ற அச்சுறுத்தல்களை அவன் தொடரவே செய்தான். இப்போது அவர்கள் துயரங்களை அனுபவித்து அறியட்டும். ஒரு சந்தர்ப்பத்தில் டான் அப்போலினார் மாஸ்கோட் அறிவித்தார். லிபரல் ஆட்சி எனும் சொர்க்கபுரியின் லட்சணம் இதுதான். அதை அர்காடியோ அறிந்து கொண்டான். ராணுவ ரோந்துப் பணி ஒன்றில் தானே முன் கொடுத்துவந்து வீட்டை முற்றுகை இட்டு தாக்கி, அங்கிருந்த உபயோகப் பொருட்கள் இருக்கைகளை நொறுக்கி, அவரது மகள்களுக்கு கசையடிகள் வழங்கி, டான் அப்போலினார் மாஸ்கோட்டை வெளியே இழுத்து வந்தான். நகரத்தின் வீதி யயங்கும் ஆத்திரத்தோடு அவனை அசிங்கமாய் வசைபாடி சுற்றி உதை கம்பு ஒன்றை உடைத்தெடுத்துக் கொண்டு தலைமை முற்றத்தை ஊர்சுலா அடைந்தபோது அர்காடியோ தானே முன் நின்று கொலைபடைக்கு சுட்டுக்கொல்ல உத்திரவிட தயாராகிக்கொண்டிருந்தான்.

தைரியமிருந்தால் சுடு... தேவிடியாள் மகனே ஊர்சுலா பெருங்கூச்சலிட்டாள்.

அர்காடியோ சுதாரித்தபடி பதிலேதும் தருவதற்குள் அவன் மீது முதல் அடி விழுந்திருந்தது. கொலைக்காரப் பாவி.. தைரியமிருந்தால் சுடுடா... அவள் கத்தினாள். என்னையும் கொன்றுவிடு. வேசிக்குப் பிறந்தவனே ஒரு கொடிய அரக்களை வளர்த்தெடுத்த வெட்கத்தை அவமானத்தை தாங்காமல் அழுது அழுது சாவதைவிட இது மேல். இரக்கமின்றி அவனை அடித்துப் பின்னியவள் அவனைத் துரத்தியடித்தபடி முற்றம் கடந்தும் உள்ளே சென்றாள். தன் கூட்டில் ஒதுங்கும் ஒரு நத்தையைப் போல அவன் அர்காடியோ தன் இடத்திற்குள் சென்று பதுங்கிக் கொண்டான்.

முன்பு பேயக்காட்டு பொம்மை கட்டப்பட்டு விளையாட்டாய் சுட்டு சின்னாபின்னமாக்கப்பட்ட அதே மரத்தில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டிருந்த டான் அப்போலினார் மாஸ்கோட் சுயநினைவை இழந்திருந்தார். தன்னையும் ஊர்சுலா அடித்து விடுவாளென பயந்து படையிலிருந்த மற்ற பையன்கள் சிதறி ஓடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சீருடை கிழிந்து வலியில் துடித்தப்படி ஆத்திரங் கொண்ட அர்காடியோவை அதே நிலையில் விட்டு, நேராக டான் அப்போலினார் மாஸ்கோட்டை கட்டவிழ்ப்பு செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். போகும்போது சிறை வைக்கப்பட்டிருந்த மற்ற அனைவரையும் விடுவித்தாள்.

அந்த நிமிடம் முதல் மெக்காண்டோவை உண்மையில் ஆண்டது அவள்தான். ஞாயிறு திருப்பலியை மறுநிர்மாணம் செய்து, தோளில் சிவப்புப்பட்டை அணிவதை நிறுத்தி, தேவையற்ற முட்டாள்தனமான சட்டங்களையும் அவள் ரத்து செய்தாள். அவ்வளவு வலு இருந்தும் தனது துரதிர்ஷ்டவசமான விதியை நொந்து அவள் அழுதாள். தனிமையின் விளைவைத் தாங்க முடியாமல் அவள் பயனற்ற தன் கணவரின் துணைநாடி செம்மலர் மரத்தின் நிழலுக்குள் தஞ்சம் புகுவாள் அவரை அனைவரும் மறந்தே விட்டிருந்தார்கள். பார் நாம் எந்த நிலைக்கு வந்துவிட்டோம் ஜுன்மாத மழை அவரது சிறு இருப்பிடக் கூறையை முற்றிலும் சிதைக்க முயன்ற அந்நாட்களில் அவள் புலம்பினாள்.

வீட்டைப்பார் நமது குழந்தைகள் பெரியவர்களாகி உலகெங்கும் சிதறினார்கள். நாம் மீண்டும் தனியாய்... பழையபடி... முதலில் நடந்தது போலவே ஆனால் அறியாமையயனும் புதைக்குழியில் முற்றிலுமாய் தன்னைத் தொலைத்து விட்ட ஜோஸ் அர்காடியோ மண்டியாவோ அவளது தேம்பல்களுக்கும் ஒப்பாரிகளுக்கும் எவ்விதத்திலும் சலனமின்றி ஒரு செவிடராகவே இருந்தார். ஆனால் மனப்பிறழ்வுஏற்பட்டிருந்த தொடக்கக் காலத்தில் தனது தினப்படித் தேவைகளை அவர் ஒரு அவசர லத்தின் சொற்றொடர்களில் ஒரு அறிவிப்பு போல செய்வார். தற்காலிகமான சில தெளிந்த கணங்களின் ஊடாக, அமரந்தாவிடமிருந்து கடுகுக்களியை பெற்றுக்கொண்டு உறிஞ்சும் கண்ணாடிக் குவளை வழியே குடிக்க எத்தனித்தபடி, தன்னை பெரிதும் வருத்தும் உடனடி பிரச்சனையை ஒரு துயரத் தேம்பலாய் வெளிப்படுத்துவார். தனது குடும்பத்தைப் பற்றிய கொடுந்துயரமனக் குமுறல்களை பட்டியலிட ஊர்சுலா அவரிடம் சென்ற அந்த நாளிலோ யதார்த்ததிடமிருந்து முற்றிலும் விடைபெற்று சகலத் தொடர்புகளையும் அவர் இழந்து விட்டிருந்தார்.

முக்காலியில் அமர்ந்திருந்த அவரை அங்குலம் அங்குலமாய் குடும்பச் செய்திகளை கூறியபடியே அவள் நீராட்டுவாள். நான்கு மாதங்களாகி விட்டன அவ்ரெலியானோ யுத்தத்திற்கு சென்று. இதுவரை அவனைப் பற்றி தகவலே இல்லை. அவரது முதுகில் சோப்புடன் பிராண்டி தேய்த்தபடி கூறுவாள். ஜோஸ் அர்காடியோ, உன்னை விட உயரமாய் பெரிய ஆளாக திரும்பி வந்தான். உடம்பெல்லாம் ஊசி வேலைப்பாடு செய்துக்கொண்டு ஆனால் வீட்டுக்கு அவமானமே அவனால் ஏற்பட்டது. ஆனால் அம்மாதிரி கெட்ட செய்திகளால் தனது கணவர் அதிகம் துயரமே கொள்வாரென திடீரென்று அவளுக்குத் தோன்றும். பிறகு அவரிடம் பொய் சொல்வதென அவள் முடிவெடுத்தாள். நான் இப்போது சொல்ல இருப்பதை உங்களால் நம்பவே முடியாது. அவரது மலத்தின் மேல் சாம்பல் எரிந்து மண் வாரியால் அள்ளிட முயன்றபடி கூறினாள்.

ஜோஸ் அர்காடியோவும், ரெபெக்காவும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ஆண்டவர் விருப்பமிட்டு இப்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தான் செய்த அந்த மோசடியில் அவள் தன்னையும் சேர்ந்தப்படி உண்மையானவளாகி தன்னையே சூதில் ஏமாற்றிக் கொண்டாள். அர்காடியோ இப்போது மிகவும் மரியாதைக்குரிய பெரியமனிதன் ஆகிவிட்டான். மிடுக்கான சீருடை... தைரியசாலியாக பெரிய வாளுடன் அவன் மிக அழகான இளைஞனாகி விட்டான். அது ஒரு இறந்த மனிதனோடு பேசுவது போலத்தான் இருந்தது. ஜோஸ்அர்காடியோ புயயண்டியா எதை குறித்தும் கவலை கொள்ளும் நிலையிலிருந்து அவர் என்றோ விடுதலையாகி யிருந்தார். இருப்பினும் அவள் விடவில்லை கட்டாயமாக கடமையாகவே கருதினாள்.

அவரது கட்டுக்களை முழுதுமாய் அவிழ்த்து விட்டுவிட அவள் முடிவெடுக்குமளவு அமைதியானவராயும் எவ்விதத்திலும் ஆபத்தே இல்லாதவராகவும் அவர் மாறி இருந்தார். அவரை விடுவிக்க அவள் முயன்றும் அது பலனற்று போனது. அந்த முக்காலியிலிருந்து அவரால் எழவே முடியவில்லை. மழையிலும் வெயிலிலுமாக அதே செம்மலர் மரத்தடியில் கட்டிப்போட தோல்வாரும் சவுக்கு கயிறும் தேவையின்றி ஏதோ தன்னாட்சி அதிகாரப் பேரரசு ஒன்றின் கண்ணுக்கு தெரியாத அதிகாரத்தின்படி செயல்படுபவர் போல கட்டவிழ்த்தும் அவர் இருக்கத் தொடங்கினார். குளிர்பனி முற்றிலும் ஆக்கிரமித்து, பனிக்காலம் முடிவுறாமல் தொடர்ந்த ஆகஸ்ட் மாதக் கடைசியாய் உண்மை போல ஒலித்த ஒரு செய்தியை அவளால் கொண்டுவர முடிந்தது.

இன்னமும் கூட அதிர்ஷ்டம் நம்மீது கருணைமழை பொழிவதை நம்புவீர்களா? அவள் அவரிடம் சொன்னாள். அமரந்தாவும், பியானோலா இத்தாலியனும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

இம்முறை வருகையின் தருணங்களில் கண்காணிப்பு கூட தேவை இல்லையயன சுதந்திரமாய் விட்ட ஊர்சுலாவின் பாதுகாப்போடு, உண்மையில் அமரந்தாவும், பியயட்ரோ கிரெஸ்பியும் தங்களுக்கிடையிலான வடிவை மேலும் ஆழமாக்கிக் கொண்டார்கள். அது ஒரு மங்கல ஒளி சந்திப்பாக இருந்தது. தனது பித்தான் துளையில் பூக்களை இறுகியபடியே அந்திப் பொழுதில் இத்தாலியன் வருகை புரிவான். பெட்ரார்ச்சின் சானட் கீதங்களை அமரந்தாவிற்காக அவன் மொழிப்பகிர்வுசெய்வான். ஓரிகானோ பூஞ்செடிகளில் நெடியில் மூச்சு திணறியபடியே முன் தாழ்வாரத்தில், ரோஜாக்களின் மண் மூடாக அவன் இசைக்க, அவள் மணிக்கட்டு பட்டைகள், யுத்தத்தின் கெட்ட செய்திகளும் அதிர்ச்சிகளும் பாதிக்காதபடி தைத்திருக்க கொசுக்கடி தாங்காமல் வரவேற்பறைக்குள் தஞ்சமடையும் வரை அவர்கள் பொழுதுகளை கழித்தார்கள்.

அமரந்தாவின் உணர்ச்சிப் பெருக்கும் விவேகமும் அதே சமயம் அவளை முழுதுமாய் போர்த்தும் இளகியத் தன்மையும், அவளை மணமுடிக்க இருப்பவனை ஒரு வித வலையாகி கட்டிப்போட்டிட அதை தன் மண மோதிரம் அணியா விரல்களால் விலக்கிவிட்டு இரவு எட்டு மணிவாக்கில் வீட்டை விட்டகர்வான். இத்தாலியிலிருந்து பியயட்ரோவுக்கு வந்த புகைப்பட அட்டைகளில் இருவருமாக அழகிய படத்தொகுப்பு ஒன்றை கட்டமைத்திருந்தார்கள். தனித்த பூங்காக்களின் காதலர்கள், அமைதிப் புரோக்கர்கள், பொன்னிற ரிப்பன்கள் கொத்தியபடி இருக்கும் அம்புகளால் தைக்கப்பட்ட சிவந்த இதயங்களில் பொறிக்கப்பட படங்கள் அவை. டிபிளாரன்ஸில் உள்ளதை இந்தப் பூங்காவிற்கு தான் சென்றிருக்கிறேன்.

அட்டைகளை பார்த்தபடியே பியயட்ரி கிரெஸ்பி கூறுவான். கையை நீட்டினால் போதும் பறவைகள் உணவருந்த ஓடிவரும். சிலசமயம் வெனிஸ் நகர வர்ணப்பூச்சோவியத்தின் பால்வளக்கும்போது மண் வாசனையும், கால்வாய்களின் அழுகவைத்த சிப்பிமீன்வாடையும் விதவிதமான பூந்தோட்டங்களின்று மணமும் கொண்டபடி இருவரின் நாட்டமும் நிலைக்கொள்ளும். பண்டைக் கால மேதையை குழந்தைகளின் மொழியயான்றில் சம்பா´க்கும் அழகிய வனவான்களும் யுவதிகளுமாய் கொண்ட இரண்டாம் தாய்நாடு குறித்த கனவு பிரதேசம் ஒன்றில் அமரந்தா ஆடியும் பாடியும்.. கலகலத்து சிரித்தும் கனவாய் மிதந்தாள். சுறுசுறுப்போடு சுழற்றப்பட்ட ரிபெக்கா எனும் பெரும் புயல்கடந்து அந்த சொர்க்கபுரிக்கு கடல் முழுதும் தேடி கடந்து அடைந்து அங்கே பியயட்ரோ கிரெஸ்பி காதலைக் கண்டான். மகிழ்ச்சி. செளபாக்கியங்களுடன் கூடி அவ்விடத்தில் அவனுக்காக வீசியது.

அவனது கற்பனை சாலை ஒரு வட்டாரத்தையே அடைத்துக் கொண்டிருந்ததோடு அது கற்பனா அலங்கார உலகின் மொய்ப்பு பிரதேசமாய் இருந்ததங்கே. பிளெரன்ஸின் மணிகூண்டுகளது மாதிரிகளில் நேரத்தை ஒலிமணிக்கொத்துக்கள் இசைக்க அறிவிக்கும் கடிகாரங்களும், சோரண்டோவிலிருந்து இசைப் பெட்டிகளும், திறந்த கையோடு அய்ந்திசை முழக்கி சப்தஸ்வரங்களும் இசைத்தசீன இசைவில்லைகளும் இன்னம் கற்பனைக்கே எட்டாத வகை இசைக்கருவிகளும், மனம்போல் ஒருவர் வாங்கி மகிழும் இயந்திரப் பொம்மைகளும் கொட்டிக் கிடந்தன. இசைப்பள்ளிபோக மீதம் நேரமே இல்லாது பியயட்ரோ கிரெஸ்பி தவித்தமையால், பண்ட ஆலையை அவனது சகோதரன் புருனோ கிரெஸ்பி நிர்வகித்து வந்தான். அர்காடியோவின் காட்டு தர்பாரையும் தூரத்து யுத்தத்தின் துயரத்தையும் மறக்கடிக்க ஒரு பாலைவன சோலையாய் ஒலிகொண்ட அலங்கார பொருட்கள் அடுக்கிய ஆரவாரமிக்க வீதியாய் அவனது கடை துருக்கிய வீதி மாற்றி இருந்தது.

ஊர்சுலா ஞாயிறு திருப்பலியை மீண்டும் தொடங்கி நடத்த உத்திரவிட்டபோது பியயட்ரா கிரெஸ்பி தேவாலயத்திற்கு ஜெர்மன் ஹார்மோனியம் ஒன்றை நன்கொடையாய் வழங்கி குழந்தைகளின் கூட்டிசையை நடத்தி கிரிகோரிய பாடல்களஞ்சியம் ஒன்றையும் தயாரித்தளித்த போது அது அருட்தந்தை நிக்கானரின் அமைதியான ஜெபங்களுக்கு ஒரு பெருஞ்சிறப்பை கொடுத்தது. அவன் அமரந்தாவின் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஜோடியாய் இருப்பானென் பதில் யாருக்குமே சந்தேகம் வரவில்லை. ஒருவருக்கு ஒருவர் நேரடியில் உணர்வுகளை திணித்திடாது இயற்கையிலேயே ஒருவித பிணைப்புடன் தங்களை ஒன்றாக்கி உலா விட்ட அவர்கள் தங்களது இதயங்களால் இணைந்து இனி மணநாள் குறிக்கவேண்டிய அந்த உச்சத்தை அடைந்தனர். தடை எதையுமே அவர்கள் சந்திக்கவில்லை.

அடுத்தடுத்த ஒத்திவைப்புகளின் மூலம் ரிபெக்காவின் விதியை புரட்டித் தலைகீழாய் மாற்றிய தன்னை மிகவும் நொந்துகொண்ட அமரந்தா தனது குற்ற உணர்வு எனும் மனஉளைச்சல் மேலும் அதிகமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. யுத்தத்தின் அழிவையும், அவ்ரெலியானேவ் இல்லாததையும், அர்காடியோவின் அராஜகங்களையும், ஜோஸ்அர்காடியோ மற்றும் ரிபெக்கா தள்ளி வைக்கப்பட்டதுமான அனைத்தும் சேர்ந்து ரெமெடியாஸின் இழப்பிற்காக அனுசரிக்கப்பட்டு துக்க நாட்களின் கடுமையை பின்னெறிந்து விட்டிருந்தது. திருமண நிகழ்வின் அருகாமையை முன் உணர்ந்த பியயட்ரோ கிரெஸ்பி, தனது மகனாய் பாவிக்கும் உறவு மேம்பட்ட அவ்ரெலியானோ ஜோஸை தங்கள் முதல் குழந்தையாக அவர்கள் ஏற்பார்கள். அனைத்தும் சுமூகமாய் மகிழ்ச்சியான நாட்களை நோக்கி தான் செல்வதாய் அமரந்தாவை நிகழ்வுகள் அனைத்துமே நினைக்க வைத்தன. ஆனால் ரிபெக்காவைப் போல் தனது மனக்கிளர்ச்சியை எவ்விதத்திலும் அமரந்தா வெளிப்படுத்தவே இல்லை.

மேசை விரிப்புகளுக்கு சாயம் ஏற்றுவதிலும், மயில்தோகையை ஊசி வேலையாய் செய்தபோதும், கை பட்டைகளை நேர்த்தியுடன் தைப்பதிலும் காட்டிய அதே அளவு பொறுமையுடன் எத்தகைய சலசலப்பும் இன்றி சஞ்சலமும் இன்றி... இறுக்கமாய் இருந்து அவள் பியயட்ரோ கிரெஸ்பி மன அழுத்தம் தாங்கமுடியாத ஒரு நிலையடைந்து தன் இதயத்தின் அவாவை அடக்கமுடியாமல் வெளிவரும் வரை காத்திருந்தாள். அவளது நாள் கெடுவிதியான அக்டோபர் மழையோடு வந்தது. அவளது மடியிலிருந்து தையல் உடையை தன்கையில் எடுத்துக்கொண்டு பியயட்ரோ கிரெஸ்பி அவளிடம் சொன்னான். நாம் அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்வோம். ஐஸ் போல சில்லிட்ட அவனது கைகளில் தன் கைகள் பட்டுக் கொண்டிருந்த அந்த தருணத்தில் அமரந்தாவிற்கு நடுக்கமே வரவில்லை. துணிவில்லாத குட்டி விலங்குபோல மெல்ல தன்னை விடுவித்துக் கொண்ட அவள் தனது வேலையைத் தொடர்ந்தாள்.

அற்பத்தனமாய் இருக்காதே கிரெஸ்பி அவள் சொன்னாள். நான் செத்தால்கூட உன்னைத் திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன். பியயட்ரோ கிரெஸ்பி தன் கட்டுப்பாட்டை இழந்தான். வெட்கமின்றி தன் விரல்களை உடையும் வண்ணம் பிசைந்தபடி அவன் கதறி அழுதான். அப்படியும் அவளை உடைக்க அவனால் முடியவில்லை. உன் நேரத்தை வீணாக்காதே என்று மட்டுமே அமரந்தா திட்டவட்டமாகச் சொன்னாள். என்மீது நீ இத்தனை அன்பு வைத்திருப்பது உண்மையானால். இந்த வீட்டு வாசல்படி மிதிக்காதே. அவமானத்தில் தனக்குப் பைத்தியமே பிடித்துவிடுமென்று ஊர்சுலா பதறினாள். எத்தனை வகையான இறைஞ்சல்கள் உண்டோ அத்தனை விதமாயும் இறைஞ்சிப் பார்த்து பியயட்ரோ கிரெஸ்பி தோற்றான்.

அவமானப்படுதலின் நம்புதற்கரிய உச்ச நிலைகளை அவன் அனுபவித்தான். தன் மடியில் தலைவைத்து ஒரு மதியம் முழுவதும் அழுத அவனைத் தேற்ற தன் ஆவியை விடவும் ஊர்சலா தயாராக இருந்தாள். இரைத்தேடி அலையும் ஒரு விலங்கு போல மழை கொட்டும் இரவுகளில், ஒருகுப்பையோடு அமரந்தாவின் படுக்கை அறையில் விளக்கு எரியாதென ஏங்கியபடி வீட்டை சுற்றி வருவான். அச்சமயம் போல வேறு எப்போதும் அவ்வளவு நேர்த்தியாக உடையணிய யாராலும் முடியாது. சித்திரவதைக்குள்ளான ராஜகுமாரன் ஒருவனின் தலை போலவே அவனது முடிக்கற்றை கலைந்திருந்தது. தலையே ஒரு வினோத உயிர்த்தன்மை கொண்டதாக காட்சியளிப்பதாயிருந்தது. அமரந்தாவோடு உடனமர்ந்து தையல் பூ வேலைகளில் முற்றத்தில் ஈடுபட்ட அவளது தோழிகளிடம் எப்படியாவது அவளது சம்மதம் பெறுமாறு அவன் மன்றாடினான்.

தனது தொழிலை மறந்துயரக்கணித்தான். தனது கையின் பின்புறம் அமர்ந்து பலவிதமான கடிதங்கள் புனைவான் பின் அவற்றை பூஞ்செடிகள் மற்றும் உலர்ந்த வண்ணத்துப்பூச்சிகளுடன் அமரந்தாவிற்கு அனுப்பிடுவான். அவளோ அனைத்தையும் பிரித்தும் பார்க்காமல் திருப்பி அனுப்பிவிடுவாள். பிறகு சித்தார் இசைக்கருவியை மனம்போல வாசிக்க மணிக்கணக்கில் கதவடைத்துக் கொண்டான் அவன். ஒரு இரவில் விநோத ஆதிமடமையின் முழுமையாய் ஈர்க்கப்பட்ட நிலையில் மெக்காண்டோவே அவன் இசைக்கு அதிர்ந்தது. சித்தாரின் இசை இவ்வுலகமே விலையாகக் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதத் தன்மை கொண்டதோடு அவனது குரல் வேறுயாருமே இத்தனை காதல் கொள்ள இயலாததெனும் அபூர்வத்தையும் உள்ளடக்கியிருந்தது.

ஊரின் அனைத்து ஜன்னல்களிலும் அந்த நள்ளிரவில் விளக்கொளியை பியயட்ரோ கண்டான் அமரந்தாவின் படுக்கை அறை ஜன்னலை தவிர நவம்பர் இரண்டாம் நாளில் ஆவிகளின் கல்லறைத் திருநாளன்று அவனது சகோதரன் கடை திறந்து அலங்கார விளக்குகள் ஒன்றுவிடாமல் ஒளியேற்றப்பட்டதையும் அனைத்து இசைப்பெட்டிகளும் திறந்து ஒவ்வொன்றிலிருந்தும் இசை வெளியேறிட கடிகாரங்கள் அனைத்துமாக முடிவுறா ஒரு மணியிலில் இசை ஒலி எழுப்பிய வண்ணமே இருக்க அந்த பெரும் ஒளி ஒலி வெள்ளத்தினையையே அவன் பியயட்ரோ கிரெஸ்பியை மேசைக்குப்பின் தன் மணிக்கட்டு நரம்புகளின் அனைத்தையும் அறுத்தெறிந்து ரத்த வெள்ளத்தை நறுமண பிசின் நிறைத்த கலத்தில் கைநனைத்து விட்டிருந்த நிலையினை கண்டான்.

அவனுக்கான எழுப்புதல் சடங்கு தன் வீட்டில் நடக்க வேண்டுமென ஊர்சுலா தன் அதிகாரத்தை பயன்படுத்தி உத்திரவு பிறப்பித்தாள். புனிதப்படுத்தப்பட்ட ஒரு நிலத்தில் அயலானின் சாவு சடங்கு ஒன்று நடப்பதை அருட்தந்தை நிக்கானோர் ஒப்புக்கொள்ள மறுத்தார். ஊர்சுலா அவருக்கு எதிராய் எழுந்தாள். நீங்களோ, நானோ புரிந்துகொள்ள இயலாத ஒரு விதத்தில் அவன் ஒரு புனிதராக வாழ்ந்திருக்கிறான். அவள் சொன்னாள் உங்கள் விருப்பத்திற்கு எதிராக நான் அவனைப் புதைக்க இருக்கிறேன். மெகியுவாடெஸ்ஸின் கல்லறைக்கு அருகே முழு நகரத்தின் ஆதரவோடு பிரமாண்டமான இறுதி ஊர்வலத்தோடும் அவள் அதைச் செய்தாள். தனது படுக்கை அறையை விட்டு அமரந்தா வெளியே வரவே இல்லை. ஊர்சுலாவின் கதறலையும் வீட்டை நினைத்தபடி வந்த கிசுகிசுக் குரல்களையும், காலடி நகைகளையும், துக்கம்தாய் நெடியையும் முடிவின்றி தொடர்ந்த அமைதியையும் தன் படுக்கையிலிருந்து அமரந்தா உணர்ந்தபடி இருந்தாள்.

மாலைவேளையில் தொடர்ந்து பியயட்ரோ கிரெஸ்பியின் நறுமணப்பூச்சின் மூச்சு சுவாசத்தை இன்னும் முகர்ந்தபடி இருந்ததும் அவள் பிதற்றலான மனக்கோளாறு நிலைக்கு இணங்காதிருக்குமளவு மனபலம் பெற்றிருந்தவளாய் இருந்தாள். ஊர்சுலா அவளை முற்றிலும் கைவிட்டிருந்தாள். திடீரென்று படுக்கை அறையிலிருந்து வெளிப்பட்டு சமையல் அறைக்கு சென்று அங்கு குமுட்டி தீக்கறியில் தன் கையைவிட்டு வலியயன்று ஒன்று மறைந்து சாவின் கொள்ளை நோய் வாடையோடு தனது சதையையும் எலும்பும் நாற்றமெடுத்தபடி பொசுங்கும் நிலைவரை கையயடுக்காது அமரந்தா நடந்து கொண்ட ஒரு மதியத்தின் போதும் ஊர்சுலா ஏறெட்டுத்து அவளைப் பார்க்கவும் இல்லை. செய்த தவறுக்கான சுயஇரங்கல் எனும் நோய் சிகிச்சைத்தது. பல நாட்களுக்கு ஊரெங்கும்      முட்டையின் வெள்ளை கருநிறைந்த பானையில் விட்டபடி அவள் சென்றாள். காயம் ஆறியபோதோ இதயத்தின் சமுக்களிலும் வெள்ளை அப்பிபோலிருந்தது. அந்த துன்பியல் சம்பவங்களின் ஒரே அடையாளமாக சுடுகாயத்தால் கருத்துப் போன கையில், சாகும்வரை அவள் அணிந்திருந்த கருத்த வலைத்துணி மட்டும்தான்.

பியயட்ரோ கிரெஸ்பிக்காக அரசு முறை துக்கத்தை உத்திரவிட்டு தனது அபூர்வமான பெருந்தன்மையை அர்காடியோ வெளிப்படுத்திக் கொண்டான். பட்டியிலிருந்து விலகிச் சென்ற ஆடு மந்தைக்குத் திரும்பியதென்று ஊர்சுலா அதை வர்ணித்தாள். ஆனால் அவள் தவறு செய்தாள். உண்மையில் அர்காடியோவை அவள் இழந்தது அவன் இராணுவ உடை அளித்த போதல்ல. ஆரம்பத்திலிருந்தே எந்த பாரபட்சமும் இன்றி தன் சொந்த மகனாகவே பாவித்து அவனை தான் ரிபெக்காவை வளர்த்தது போல வளர்த்தாக ஊர்சுலா கருதிக் கொண்டாள் என்றாலும் உறக்கமின்மை கொள்ளை நோய் காலத்திலும், பிறர்பயன் கருதியே நெறியாளுகை செய்யும் ஊர்சுலாவின் செயல்பாடுகளுக்கு இடையேயும் ஜோஸ் அர்காடியோ புயயண்டியாவின் மூளைப் பிறழ்வு காலத்திலும், வெளிப்புறசக்திகளால் நெருங்க இயலாத அவ்ரெலியானோவின் ரசவாத வேலைகளின் போதும், சாவிலும் அடங்கத் தயாராக இல்லாத ரிபெக்கா, அமரந்தா கொடுஞ்கோன்மைக்கு இடையிலும் தனிமையே துணையாகவும் அச்சமே வாழ்வாகவும் காலந் தள்ளியவன் அர்காடியோ.

யாரோ அயலானைப் போலபாவித்து தான், வேறு எதை எதையோ முன்வைத்து, அவ்ரெலியானோ அவனுக்கு எழுதவும் படிக்கவும் போதித்தாள். தனது உடைகளையே அவனுக்கு அவர் கொடுத்தார். காலைவிட பெருத்த காலணிகளாலும், ஒட்டுப்போட்டு தைத்த ஆடைகளாலும் மற்றும் தன் பெண் புட்டங்களாலும் அர்காடியோ முடிவின்றி துயரங்களை அனுபவித்தாள். விததாசியோனுடனும், காட்டாயுருடனும் அவர்களது மொழியில் உரையாடியதை விடவும் அதை ஈடுபாட்டோடும் பெருந்திருப்தியோடும் வேறுயாருடனும் அவன் உரையாடியது இல்லை. உணர்விற்கு எட்டாத தன் எழுத்துக்களையும் நிழற்பட கலை நுணுக்கங்களையும் அவனுக்கு உணர்த்த முயன்ற மெகியூவாடெஸ் மட்டும்தான் அவன் மீது குறைந்தபட்ச அக்கறை காட்டியவர்.

ரகசிய தனிமையிலும், மூர்க்கத்தனமாக நம்பிக்கையற்றதன் இழிநிலையையும் நொந்து மெகியூ டெஸ்ஸை உயிர்பெறச் செய்ய பெரும் பிரயத்தனம், அவரது காகிதங்களுடன் செய்த காலத்தில் அவன் எப்படியயல்லாமல் கதறி அழுதானென்று யாருமே கற்பனையும் செய்ய முடியாது. அவன் பேசுவதையயல்லாம் கவனம் செலுத்திக் கேட்டு ஊதியமும் அளித்த பள்ளியும், புகழும் சிறப்பும் வாய்ந்த சீருடையோடு எண்ணிலடங்கா அரசாணைகள் வெளியிட கிடைத்த அதிகாரமும் பழைய துயரத்திலிருந்து விடுபடதாவனுக்கு பேருதவியாய் இருந்தன. ஒருநாள் இரவில் காட்டரீனோ அங்காடியில் வைத்து அவன் காதுகளில் பட ஒருவன் அச்சமின்றி, உங்கள் கடைசீ பெயருக்கு அருகதை இல்லாதவர் நீங்கள் என கூறிட பலரும் எதிர்ப்பார்த்ததுபோல அவனை சுட்டுக்கொல்ல அர்காடியோ உத்திரவிடவில்லை. நினைத்தற்கு மாறாகத்தான் நடந்து கொண்டான்.

என் பெருமைக்குரிய விஷயமே அவன் அறை கூவுதல் செய்தான். நான் ஒரு புயயண்டியா இல்லை என்பது தான். அவரது பிறப்பு குறித்த ரகசியம் அறிந்தவர்கள், அவன் தனது பிறப்பு குறித்தறிந்து அன்று பேசியதாகக் கருதினார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவனுக்கு கடைசி வரையில் உண்மை தெரியாது. பிலெர் டெனரா, அவனது தாய், இருட்டறையில் அவனது ரத்தக்கொதிப்பை அதிகமாக்கிய அவள், அவனைப் பொருத்தவரை அடக்க முடியாத ஆட்டிப் படைக்கும் அலைக்கழிப்பாக இருந்தாள். முதலில் ஜோஸ் அர்காடியோவிற்கு இருந்ததைப்போலவும் பிறகு இவ்ரெலியானோவிற்கு இருந்ததைப் போலவும் அவனுக்கும் அவள் எப்படி யோசித்தாலும் தவிர்க்க இயலாத பெருங்கவர்ச்சியாகவே இருந்தாள். தனது சிறப்பு வளமையை, உடல் வாளிப்பை இழந்து, உதிர்க்கும் சிரிப்பின் புகழொளியும் மங்கிய போதும் அர்காடியோ அவளது வருகையை அவள் மீதான மயக்கநெடி கொண்டு நொடியில் உணர்ந்தான்.

யுத்தத்திற்கு சில காலங்களுக்கு முன் ஒரு நாள் மதியம் தனது இரண்டாவது மகனை அழைத்துச்செல்ல அவள் கொஞ்சம் காலங்கடத்தி வரநேர்ந்த அன்று, அர்காடியோதான் மதியத் தூக்கம் போட ஒதுக்கிய, பின்நாட்களில் தளவாடங்கள் வைத்த அறையில் அவளது வருகைக்காக காத்திருந்தான். முன் தாழ்வாரத்தில் குழந்தை விளையாடிக் கொண்டிருக்க அவன் அளவற்ற எதிர்ப்பார்ப்போடு தனது தொங்கு படுக்கையில் காத்திருந்தான். அவள், பிலெர்டெனரா அவ்வழியே செல்லத்தான் வேண்டுமென அவன் நன்றாக அறிவான். அவள் வந்து சேர்ந்தாள். உடனடியாக மணிக்கட்டை பிடித்து இழுத்துக் கொண்டு தன் தொங்கு படுக்கையில் அவளைக் கிடத்திட அவன் முயன்றான். என்னால் முடியாது. என்னால் முடியாது பிலெர் டெனரா அச்சத்தில் அலறினாள். உன்னை சந்தோ­ப்படுத்திட நான் எவ்வளவு விரும்புவேன் என்பது உனக்குத் தெரியாது. ஆனால் கடவுள் சாட்சியாக இது என்னால் முடியாது. வழிவழி வந்த தன் பெரும்பலங்கொண்டு அவளை இழுத்து அணைத்தபடி அவளது ஸ்பரிசம் பட்ட நொடியில் உலகை மறந்த அர்காடியோ, அம்மா புனிதவதி மாதிரி நடிக்கவேண்டாம். அவள் சொன்னாள். ஊருக்கே தெரியும் நீ வேசி என்பது தனது விதி தன்மேல் தூக்கி யயறியும் கொடிய அக்கணங்களை கடந்து வந்த பிலெர் டெனரா...

குழந்தைகள் கண்டுபிடித்து விடும் அவனது காதில் முணுமுணுத்தாள். இதே படுக்கையில் இன்றிரவு கதவுகளை திறந்துவை. அர்காடியோ அவளுக்காக அன்றிரவு தன் தொங்குபடுக்கையில் காய்ச்சலில் நடுங்கியபடி காத்திருந்தான். தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக கடைசியில் முடிவுக்கு வருமளவு. இரவு முழுதும் உறக்கமின்றி, ஓயாது கத்திய வெட்டுக்கிளிகளின் கூக்குரலை கேட்டவண்ணம். நீண்டவளை மூக்குள்ள கர்லு பறவையின் குரலில் கிட்டத்தட்ட காலை பிறந்து விட்டது வரை அவன் காத்திருந்தான். இறுதியில் எதிர்ப்பார்பு ஆத்திரமாக மாறிய நொடியில் கதவு திறந்தது. சில மாதங்களுக்குப் பிறகு கொலைப்படையை எதிர்கொண்டபோது அர்காடியோ வகுப்பறையில் அன்று கேட்ட காலடி ஓசைகளையும் எழுத்து மேசை, பெஞ்சில் கிடத்தப்படி தடுக்கு கடையில் தன் மீது சாய்ந்த ஒரு பருத்த உடலை, அறையில் நிழல்களின் ஊடாக காற்றில் மூச்சுகளை உதிர்த்தபடி தனதாக இல்லாது போன ஒரு இதயம் வேகத்தோடு இடியாய் படபடத்தை உணர்ந்த அத்தருணங்களையும் நினைவு கூர்ந்தான்.

தனது கையை நீட்டி. இருட்டில் ஒரே விரலில் இரண்டு மோதிரங்கள் அணிந்த கிட்டத்தட்ட இருட்டில் கரைய இருந்த மற்றுமொரு கையை பற்றினான். ரத்தநாளங்களின் அமைப்பையும் தொட்டுணர்ந்தது அதன் துரதிர்ஷ்டமயமான துடிப்புகளை கேட்ட எண்ணம் மிருதுவற்ற உள்ளங்கையும் கட்டை விரலடியில் முற்றிலும் தகர்ந்த ஆயுள்ரேகை... மரணமெனும் பெருத்த அரக்கவாய் பிளந்து விழுங்கப்பட்டிருந்ததையும் உணர்ந்தான். அந்த நொடியில் வந்திருப்பது தான் எதிர்ப்பார்த்திருந்தவளில்லை என்பதை அவள் மீது புகை வாடைக்கு பதில் ஒரு பூமண களிம்பின் வாடையும், ஊதிப்பெருக்கிக் கொண்ட ஆண்களின் காம்பு முளைத்த முலையும், பாறைப்பாங்கு கொண்ட பாலுணர்வும், ஒரு பலாக்கொட்டையைப் போல் வட்டவடிவமாகவும், மேலும் கிளர்ந்தெழும் அனுபவமின்மையின் ஒழுங்கற்ற மெய்மையுமாய் அவள் திகழ்ந்தாள். கன்னி கழியாதிருந்த அவள் எதிர்பாராத ஒரு பெயரைக் கொண்டிருந்தாள். சோஃபியா டி லா பைடாட்.

தற்போது அவள் செய்துக்கொண்டிருப்பதை செய்வதற்கு பிலர் டெனரா அவளுக்கு தனது வாழ்நாள் சேமிப்பான பாதியான அய்ம்பது பெஸோக்கள் கட்டியிருந்தாள். தனது பெற்றோர்களின் சிறு உணவு சாலையில் அவள் வேலைகள் செய்து கொண்டிருப்பதை அர்காடியோ பலமுறை கண்டிருக்கிறான். ஆனால் அவனது, தேவையான சமயங்களைத் தவிர ஏனைய நேரங்களில் வெளிக்காட்டிக் கொள்ளாத தன்மையால், அவனால் முழு அர்த்தத்தில் அவளை கண்டு மனஞ்செலுத்த ஏலாதிருந்தது. ஆனால் அந்த நாளிலிருந்தோ சுருண்ட பூனை போல அவளது தோளின் வெதுவெதுப்பில் தஞ்சமாய் சுருண்டான். தன் சேமிப்பின் மீதியை பிலர் டெனரா தாரை வார்த்திருந்த தம் பெற்றோர்களின் முழு சம்மதத்துடன் அவள் மதியத் தூக்கத்தின் போதும் பள்ளிக்கு அர்காடியோவிடம் செல்லளானாள். அரசுப் படைகள் ஊரை ஆக்கிரமித்து அவர்களை வெளிக்கொணர்ந்த போது, தன் உணவு சாலையின் பின்புறம் பன்றிக் கொழுப்பு டப்பாக்களுக்கு நடுவில் சோளமூட்டைகளுக்கிடையே பிணைந்து கிடந்தபடி பிடிப்பட்டனர். அர்காடியோ மெக்காண்டோவின் ராணுவத் தலைமையை ஏற்றபோது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது.

அதை அறிந்திருந்த ஒரே உறவின் முறையாய் ஜோஸ்அர்காடியோவும் ரிபெக்காவும் இருந்தார்கள். ஏனெனில் அப்போது அர்காடியோ ஜோஸ் அர்காடியோவோடு மிக நெருங்கிய நல்லுறவை தனக்கான உறவுகருதி அல்லாது, கூடிக் குற்றஞ்செய்யும் கூட்டாளி மனப்பாங்கோடு பேணி வந்தான். திருமண வாழ்வெனும் பெரும்பலியிடம் தலையை கொடுத்துவிட் ஜோஸ்அர்காடியோ, ரிபெக்காவின் பிடிவாத குணத்தாலும், பெருவேட்டை கொண்ட வயிற்றினாலும், விடாப்பற்றுருதி கொண்ட அதீத பேராசைகளாலும், தன் பலமனைத்தையும் உறிஞ்சிட இழந்தான். சோம்பித் திரிந்தனைத்தையும் விடுத்து வேலை வேலையயன துடிக்கும் பெருவிலங்கானான். அவர்கள் தூய்மை மிகு இல்லம் ஒன்றை பேணினார்கள்.

ரிபெக்கா, விடியலின் போதே வீட்டை அகலத்திறப்பாள். கிட்டத்து இடுகாட்டிலிருந்து காற்று சன்னல்கள் வழியே உட்புகுந்து வீசி வாசல் கதவுகள் வழியே வரவேற்பறையும் வெளிமுற்றமும் கடந்து வெளியேறி. வெள்ளையடித்த சுவர்களையும்.. மர உபயோக இருக்கைகளையும் இறந்தவரிடமிருந்து வந்த உப்புர்ப்புகசிவினால் அது உரமேற்றியது. மண்தின்னும் அடங்காபசியும், பெற்றோர் எலும்புகளின் க்ளாக் க்ளாக் ஒலியும் பியயட்ரோ கிரெஸ்பியின் தயக்கங்களால் பொறுமையற்று பொங்கிய படி இருந்த ரத்த கொதிப்பும் பற்றிய நினைவை அனைத்தும் எங்கோ பின்னோக்கி அவளது நினைவுத்தடங்களில் பழைய பரண்மீது தங்கமாய் விட்டெறியப்பட்டிருந்தன.

நாள்முழுவதும் சன்னலுக்கு மறுபுறம் அமர்ந்து அவள் தையல் பூவேலைகளில் ஈடுபட்டபடி, யுத்தத்தின் பதட்டங்கள் அனைத்திலுமிருந்து விலகி பீங்கான் மண்பாண்டங்களை அலமாரியில் படபடத்தபடி கொதித்து முதலில் சொறிபிடித்த வேட்டைநாய்களும் அதன் பின்னே குதிரையை குத்திவேகமாய்ச் செய்யும் காற்றுமுன் இணைத்த பாதுகாப்பு காலணியுடனும், இரட்டைகுழல் வேட்டை துப்பாக்கி ஒன்றுடனும் சில சமயம் பெரிய மான்குட்டியும், பெரும்பாலும் முயல்குட்டிகள் மற்றும் காட்டு வாத்துக்களுடன் பிரமாண்ட உருவம் வந்திறங்குவதற்குள், உணவை தயார் செய்து வைக்க நேரமாகும் வரை பூவேலைத் தையலில் அவள் ஈடுபடுவாள். ஒரு நாள் மதியம் தனது ஆட்சி ஏற்பட்ட புதிதில், அர்காடியோ அவர்கள் வீட்டிற்கு திடீர் விஜயம் செய்தான். வீட்டை விட்டு வந்த நாள் முதல் அவர்கள் அவனைக் கண்டது இல்லை. ஆனால் மிகுந்த நட்புடனும் வேண்டியவனைப் போலவும் அவன் நடந்துகொண்டபோது உணவருந்த அழைக்க வேண்டி வந்தது.

பிறகு அவர்கள் அமர்ந்து காப்பி பருகும் வேளையான போது தான் அர்காடியோ தான் வந்ததன் நோக்கத்தை மெல்ல அவிழ்த்துவிட்டான். ஜோஸ் அர்காடியோவைப் பற்றி அவனுக்கு ஒரு புகார் வந்திருந்தது. தனது வீட்டின் வெளித்தோட்டத்தை உழ ஆரம்பித்து அவன் அக்கம் பக்கத்தாரின் இடங்களையும் உழவு செய்து எருதுகளை ஓட்டி வேலிகள் அனைத்தையும் உடைத்து நுழைந்து, நல்விளைச்சல் இடங்களை வளைத்து போட்ட பிறகே முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. வயற்காடுகள் கொள்ளையடிக்கப்படாத அதாவது ஜோஸ் அர்காடியோவிற்கு விருப்பம் கொள்ளாத மற்ற இடங்களின் சொந்தக்காரர்களான விவசாயிகளிடமிருந்து, ஒரு தண்டத் தொகையை நிர்மாணம் செய்து. ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் வேட்டை நாய்கள் மற்றும் இரட்டைக்குழல் துப்பாக்கியோடு சென்று கட்டாய வசூல் செய்கிறான். அவன் ஜோஸ்அர்காடியோ அதை மறுக்கவில்லை.

அந்த வெளி நிலங்களை ஊர்மக்களுக்கு எப்போது பகிர்ந்தளிக்கப்பட்டதோ அப்போது பகிர்ந்து வழங்கிய ஜோஸ் அர்காடியோ புயயண்டியா, அப்போது மூளைக்கோளாறேரிடு நடந்து கொண்டிருக்கலாமென அவன் ஜோஸ்அர்காடியோ கருதி தந்தைவழிச் சொத்துக்கள் குடும்பத்தை விட்டுப்போய் விடக் கூடாதென்றே அவ்விதம் செய்ததாக தீர்மானமாய் கூறினான். அது தேவையற்ற ஒரு குற்றச்சாட்டு, ஏனெனில், அர்காடியோ நீதி வழங்கிட அங்கே வரவில்லை. ஆக்கிரமித்த நிலமனைத்தையும் ஜோஸ் அர்காடியோ அனுபவிக்க அரசு சார்ந்த பட்டா நிலம் ஒன்றை ஏற்படுத்திட அர்காடியோ வாக்களித்தான். ஆனால் மாறாக ஜோஸ்அர்காடியோ நிலத்திற்கான தண்டம் வசூலிக்கும் உரிமையை உள்ளூர் அரசிடம் விட்டுவிட வேண்டும். அவர்கள் ஒரு ஒப்பந்தமும் செய்துகொண்டார்கள். ஆண்டுகள் கழித்து சொத்துக்கள் யார் பெயரில் வழங்கப்பட்டுள்ளதென்று கர்னல் அவ்ரெலியானோ புயயண்டியா பரிசோதித்தபோது, அவை அனைத்துமே மலைகள் முதல் வானத்தை நிலம் தொடும் எல்லை வரை அனைத்து நிலமும் தனது சகோதரனின் பெயரில் இருந்ததோடு நடுவிலிருந்த இடுகாடும் கூட தப்பாது, தான் ஆட்சி செய்த பதினோறு மாதங்களும், அர்காடியோ பண வசூல் செய்தது மட்டுமின்றி இறந்தவர்களை ஜோஸ்அர்காடியோவின் நிலத்தில் புதைக்க உறவினர்களிடம் கட்டணமும் பெற்றுள்ளதை கண்டுணர்ந்தார்.

ஏற்கனவே பொதுமக்கள் அனைவருக்குமே தெரிந்திருந்தும் அவளது கஷ்டத்தை அதிகமாக்கிட விரும்பாது யாருமே வந்து பகிர்ந்து கொள்ளாததால் ஊர்சுலாவிற்கு வி­யம் மிகவும் காலம் தாழ்த்தியே தெரிந்தது. தனது கணவரின் வாயால் ஊற்றியபடியே அர்காடியோ ஒரு வீடு கட்டிவருகிறான் என அவள் கிசுகிசுத்தாள். தன்னிலையை மறந்துபின் தொடர்ந்தாள். ஏனென்று விளங்கவில்லை. இதனால் இதெல்லாம் மிகவும் ஆபத்தான கெட்ட வி­யமாக எனக்குப்படுகிறது என்றாள். பின்னர் ஒரு நாள் அர்காடியோ வீடு கட்டியதோடு மட்டுமின்றி வியன்னாவிலிருந்து மேசைகள் இருக்கைகள் வரவழைத்ததை அறிந்து பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்வதை அவள் ஊர்ஜிதம் செய்தாள். நம் குடும்பப் பெயருக்கே நீ களங்கமாகிவிட்டாய். ஞாயிறு திருப்பலி முடிந்து அவனை அவனது புதிய வீட்டில் தனது சகவீரர்களோடு சீட்டாடிக்கொண்டிருக்க கண்டு அவள் இரைந்தாள். அவளை அர்காடியோ கவனிக்ககூட இல்லை.

அப்போதுதான் அவனுக்கு ஏற்கனவே அவனுக்கு ஆறுமாதமான ஒரு பெண் குழந்தை இருப்பதும் அவனோடு வாழ்ந்துவந்த சாந்தா சோஃபியா டி லா பை டாட் மறுபடி கருவுற்றிருப்பதும் தெரியவந்தது. அவள் கர்னல் அவ்ரெலியானோ புயயண்டியாவுக்கு எழுதுவது என தீர்மானித்தாள். அவர் எங்கே இருந்தாலும் சரி, இப்போதைய நிலவரங்களை நல்லது. ஆனால் அந்த காலகட்டத்தில் சம்பவங்கள் மிக வேகமாகவும் அடுத்தடுத்தும் நடந்ததால் அவளது திட்டத்தை நடைமுறைபடுத்த இயலாது திணறி யோசனை வந்ததற்கே வருத்தமுற்றபடி இருக்க நேர்ந்தது. அதுவரையில் பெயரளவில் ஒருவருக்கு ஒருவர் குறிப்பிட்டுக் கொண்ட வி­யமாயிருந்த யுத்தம் என்பது, நேரடி நிகழ்வாக உருமாறிக் கொண்டிருந்தது.

பிப்ரவரி மாத இறுதி வாக்கில் சாம்பல் நிறமாகி வெளிறிப்போன வயதான மூதாட்டி ஒருத்தி விளக்குமாறுகள் ஏற்றி கழுதை ஒன்றில் மெக்காண்டோ வந்து சேர்ந்தாள். வழக்கமாய் சதுப்பு நிலவெளியின் மற்ற சிறு நகரங்களிலிருந்து வந்து சேரும் வியாபாரிகளை ஒத்திருந்ததால் எவ்வித ஆபத்து மற்றவளாய் கருதப்பட்டு நுழைவாயில் காவலர்களாலும் அனைத்து அரண்களிலும் நுழைந்திட அனுமதிக்கப்பட்டாள். அவள் நேராக ராணுவ தலைமையகம் சென்றாள். பின்னணிக் காவற்படையின் தற்காலிக முகாமாக மாற்றப்பட்டு தொங்குப்படுக்கைகள் அங்கங்கே சுருண்டு கிடக்க துப்பாக்கிகளும், குதிரைப்படைவீரர் பயன்படுத்தும் சிறு கை துப்பாக்கிகள் மற்றும் வேட்டை துப்பாக்கி ரவைகளும் இரைந்து கிடந்த வகுப்பறை ஒன்றில் அர்காடியோ அவளை வரவேற்றான். அந்த மூதாட்டி தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளும் முன் விறைப்பாய் நின்று ராணுவ சல்யூட் அடித்தாள்.

நான் தான் கர்னல் கிரகேரியோ ஸ்டீபன்ஸன். அவர் கெட்ட செய்தி கொண்டுவந்திருந்தார். லிபரல் வசமிருந்த மையங்கள் பல தகர்ந்து போய்விட்டன. ரியோஹாச்சாவிற்கு அருகே கடும் சண்டையில் அவரால் விட்டு வரப்பட்ட கர்னல் அவ்ரெலியானோ புயயண்டியா, அர்காடியோவிற்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அவன் அரசு படைகள் தாக்கும் போது லிபரல் ஆதரவாளர்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்திருக்கக் கூடாது எனும் நிபந்தனையோடு உடனடியாக சரணடைந்து விடவேண்டும். செய்தி கொண்டு வந்திருந்தவரை அர்காடியோ உன்னிப்பாக ஆராய்ந்தான். ஓடிவந்துவிட்ட பரிதாபத்திற்குரிய பாட்டி ஒருத்தியாகவும் அது இருக்கலாம்.

நீங்கள் எழுத்தில் ஏதாவது அவரிடமிருந்து கொண்டு வந்திருப்பீர்கள் அவசியம் அவன் சொன்னான். அவசியம் எடுத்து வரவில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட யுத்தக்காலச் சுழலில் ஒருவர் தன்னையே காட்டிக் கொடுத்துவிடும் எதையும் சுமந்து வருவது விரும்பத்தக்கதல்லவே தூதர் அழுத்தம் திருத்தமாக பதில் சொன்னார்.

பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் தனது உடம்பில் துழாவி ஒரு சிறு தங்கமீனை வெளியே எடுத்தார். இது போதுமானதாக இருக்கும் என்றே கருதுகிறேன். அவர் சொன்னார். கர்னல் அவ்ரெலியானோ புயயண்டியாவால் செய்து தரப்பட்ட சிறுமீன்களில் அது ஒன்றென அர்காடியோ கண்டான். ஆனால் அதை யுத்தத்திற்கு முன்பாக ஒருவர் வாங்கியோ திருடியோ இருக்கவோ முடியும் என்பதோடு அது ஒருவரின் அடையாள அட்டையினது தகுதிபெற முடியாததாயிருந்தது. தூதர் தான் செய்திருந்த ராணுவ உறுதி மொழியை கூட மீறி ரகசியம் ஒன்றை உதிர்த்தார்.

குராகுவோ கட்டளைக் குழுவில் தானும் அங்கம் வகித்து கரீபிய பகுதிகளிலிருந்து யுத்தத்திற்கு ஆள் எடுக்கவும், போதுமான தளவாடங்கள், தேவைப்பொருட்கள் பெற்று வருட இறுதியில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பெருமுயற்சியை தானும் செய்வதாகவும் கூறி. அப்படி ஒரு முடிவிருப்பதால் கர்னல் அவ்ரெலியானோ புயயண்டியா, நம்பிக்கை கொண்டு இத்தருணத்தில் அநாவசிய உயிரிழைப்புகளை தவிர்க்கவே விரும்புவதாகவும் கூட தெரிவித்தார். ஆனால் அர்காடியோ வளைந்து கொடுக்கவில்லை. தனது அடையாளத்தை சரியாக காட்டும் வரையில் இராணுவ முகாம் சிறையில் தூதரை கட்டிப்போட்டிருக்க உத்திரவிட்ட அவன், நகரத்தை உயிர் போகும் வரை பாதுகாக்க உறுதி பூண்டான்.

நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. லிபரல் தோல்வி என்பது மேலும் மேலும் ஊர்ஜிதமானது. மார்ச் மாத இறுதிவாக்கில் முன்வந்த முழுமையற்ற பெருமழை காலை ஒன்றின் போது இறுக்கமாயிருந்த பலவார கால அமைதியை உடைத்தப்படியே துப்பாக்கி சுடும் ஓசையும், பீரங்கி முழக்கமும் கேட்டு தேவாலயத்தின் கோபுர மேல்தளம் தகர்ந்திருந்தது. எதிர்த்துப் போரிடுவது என்று அர்காடியோ செய்த முடிவு பயித்தியக்காரத்தனமானதாகும். அவனிடம் மோசமாய் ஆயுதம் தரித்த பயிற்சியற்ற அய்ம்பது வீரர்களே இருந்தனர். மேலும் இருபது பேருக்கான ரவைகள் கூட முகாமில் கையிருப்பும் இல்லாதிருந்தது. ஆனால் அவனது எழுச்சி மிகு வீர பிரகடனங்களால் இறுதி யுத்தத்திற்கு உயிரைவிட அவனது மாணவர்கள் தயாராக இருந்தார்கள்.

தாறுமாறான கட்டளைகளும் குண்டுமழைபொழிந்த படி இங்கும் அங்கும் ஓடிய ராணுவ பூட்ஸ்களின் ஓசையும் பூமியை அதிர வைத்த அந்த களேபரத்தின் நடுவில் கர்னல் ஸ்டீபன்ஸன். அர்காடியோவிடம் ஸ்பியோ பேசினார். ஒரு பெண் உடையில் இந்த சிறையில் வெறுமனே சாகும் முடிவை எனக்குக் கொடுத்து விடாதே அவனிடம் அவர் சொன்னார். நான் சாக வேண்டுமாயின் யுத்தத்தில் சண்டையிட்டபடி சாகிறேன். அவனை அவர் சம்மதிக்க வைத்திருந்தார். அர்காடியோ அவருக்கு இருபது குண்டுகள் போடப்பட்ட இராணுவ துப்பாக்கியை தர உத்திரவிட்டான். தலைமையகத்தை தாக்க அய்ந்து வீரர்களுடன் அவ்விடம் அவரை விட்டுதான் எல்லைக்கு செல்ல என அரசுப் படையை தடுத்து நிறுத்த அவன் தனது ஆட்களோடு புறப்பட்டான். ஊர் எல்லையின் சதுப்பு நில சாலையைக் கூட அடைந்திருக்கமாட்டான்.

இராணுவ கண்காணிப்பு அரண்கள் உடைக்கப்பட்டு நேரடியாக தெருக்களில் சண்டை நடந்து கொண்டிருந்தது. முதலில் குண்டுகள் இருக்கும்வரை பெரிய ரக துப்பாக்கியிலும் பிறகு கைத்துப்பாக்கிகளாலும் சராமரியாக சுட்டுக்கொண்ட அவர்கள் அதுவும் காலியாகவே கைகலப்பில் இறங்க தயாரானார்கள். தோல்வி முடிவான ஒரு தருணத்தில் பெண்களும் கூட சமையல் கத்தி அரிவாள் மனைகளோடு தெருக்களில் இறங்கியிருந்தார்கள். அந்த குழப்பமான சூழலால் அர்காடியோ இரவு கவுனில் அமரந்தா, ஜோஸ் அர்காடியோ புயயாண்டியாவின் பழைய இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சாலையில் பயத்தியம் பிடித்தவனைப் போல ஓடியதைக் கண்டான். ஆயுதமிழந்த ஒருவீரனுக்கு தனது துப்பாக்கியை கொடுத்துவிட்டு அர்காடியோ அமரந்தாவிடமிருந்து துப்பாக்கிகளில் ஒன்றை வாங்கிக் கொண்டு அவசரமாய் குறுக்குத்தெரு ஒன்றின் வழியே அவளை வீட்டுக்கு இழுத்துச் சென்றான்.

கதவருகிலேயே பீரங்கி சப்தங்களுடன் பக்கத்து வீட்டு வெளிக்கதவு துளையிடப்பட்டும் எவ்வித பீதியுமின்றி ஊர்சுலா காத்திருந்தாள். மழை விட்டிருந்தும் கூட சாலையில் சேறும் சகதியுமாய் வழுக்கியபடி ஈர சோப்பு போல காணப்பட்டான். இருளில் ஒருவாறு தூரங்களை அனுமானிக்கவும் வேண்டி இருந்தது. ஊர்சுலாவிடம் அமரந்தாவை ஒப்படைத்த அர்காடியோ திடீரென்று ஒருமுனையிலிருந்து தன்னை நோக்கிப்பாய்ந்த இரு வீரர்களை சமாளிக்க முற்பட்டான். வெகுகாலம் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகள் வேலை செய்யவில்லை. அர்காடியோவை தனது உடம்பால் மறித்தபடி ஊர்சுலா அவனை வீடு நோக்கி இழுக்க முற்பட்டாள்.

கடவுள் பெயரால் அழைக்கிறேன். வா வீட்டிற்குள் வந்துவிடு. ஊர்சுலா அர்காடியோவை பார்த்து இறைந்தாள். போதும் உன் பயித்தியக்காரத் தனத்தால் நடந்தது போதும். வீரர்கள் அவர்களை நோக்கி சுடத்தயாரானார்கள். மேடம் அந்த ஆளை உடனே அனுப்பிவிடு. அவர்களில் ஒருவன் கத்தினான். அப்புறம் விபரீதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

ஊர்சுலாவை வீட்டிற்குள் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தான் அர்காடியோ சரணடைந்தான். சற்று நேரத்தில் துப்பாக்கி சுடும் சப்தங்கள் ஓய்ந்து ஆலயமணி ஒலிக்கப்பட்டது அரைமணிக்குள்ளாக ஊரின் தற்காப்பு முற்றிலும் தகர்க்கப்பட்டிருந்தது. அர்காடியோவின் வீரர்கள் யாருமே தாக்குதலில் இருந்து தப்பவில்லை. ஆனால் இறந்து போகும்முன் அவர்கள் முந்நூறு வீரர்களைக் கொன்றிருந்தார்கள். கடைசியாக மிகக் கடினமான யுத்தம் நடந்து தலைமையகத்தில்தான். தாக்கப்படும் முன்பாக கர்னல் கிரிகோயோ ஸ்டீபன்ஸன் கைதிகள் அனைவரையும் விடுவித்து விட்டு ஆட்களையும் சாலையில் சென்று போர் புரிய அனுப்பிவிட்டார்.

பிறகு தனக்கு வழங்கப்பட்ட இருபதே சுற்று குண்டுகளையும் கூட ஆகத் திறமையோடு தனி ஆளாக நேர்த்தியுடன் பிரயோகித்து தலைமையகம் ஏராளமானோரால் காக்கப்படுவதான தோற்றம் தர, பீரங்கிகளை கொண்டு அரசு படை அதை அங்குலம் அங்குலமாய் தலைமட்டமாக்கி தகர்த்தெறிய முடிவெடுத்தது. அந்த முழு தாக்குதலையும் முன்னெடுத்து நடத்தி முதலில் உள்ளே சென்ற படைத்தலைவன், அங்கே யாருமில்லாது வெறிச்சோடிய நிலையையும், தனது கால் டவுசருடன் கையில் துப்பாக்கியை விட்டுவிடாது ஒரு பெண்ணின் தலைமுடியும் கழுத்தில் செயினில் தொங்கிய சீப்பும் தங்கமின் டாலருமாய் விழுந்து கிடந்த ஒற்றை ஆளைக்கண்டு அதிர்ந்தான். பிறகு விளக்கொளி மூலம் ஆளைப்புரட்டி முகத்தை கண்டவன் ஜீஸஸ் கிரைஸ்ட் என கூவியபடி விக்கித்து நின்றான். மற்ற ராணுவ அதிகாரிகள் அவனை நோக்கி ஓடினார்கள்.

இது யாரென்று பாருங்கள் படைத்தலைவன் அறிவித்தான். இது கர்னல் கிரகேரியோ ஸ்டீபன்ஸன்.

விடியலின்போது, ஒரு இராணுவ விசாரணைக்குப் பிறகு, அர்காடியோ இடுகாட்டு சுவரின் ஓரம் நிற்கவைத்து கொலைப்படையால் சுட்டுக் கொல்லப்படடான். தனது வாழ்வின் கடைசி இரண்டு மணி நேரம், தனது பிறப்பிலிருந்து சித்திரவதை செய்த ஒருவகை அச்சம் ஏன் விடைபெற்று விட்டிருந்ததென்று அறியாது அவன் குழம்பினான். சமீபத்திய வீரத்தனத்தை காட்டிக் கொண்ட விதத்தைக் கூட மறந்து எவ்வித சலனமும் இன்றி அவன் தனக்கு எதிராக வாசிக்கப்பட்ட முடிவற்ற குற்றச்சாட்டுக்களை அமைதியாக செவிமடுத்தான். அவர் ஊர்சுலாவை அவள் அத்தருணத்தில் செம்மலர் மரத்தடியில் ஜோஸ் அர்காடியோ புயயண்டியாவோடு காப்பி அருந்தியபடி இருக்க வேண்டுமென யோசித்தவாறு நினைவில் கொண்டான்.

இன்னமும் பெயரிடப்படாத தனது எட்டு மாத மகளையும் மேலும் வரும் ஆகஸ்ட்டில் பிறக்க இருக்கும் அடுத்த குழந்தையையும் நினைத்தான். முதல் நாள் இரவு உப்பிட்டு மான் ஒன்றை பதப்படுத்தி மறுநாள் உணவுக்கு என வைத்துவிட்டு தான் வந்துவிட்ட தன் சாந்தா சோஃபியா டி லா பைடாட்டை நினைத்தான். தோளில் வந்து விழுந்த முடிக்கற்றையையும் செயற்கையாய் விளைந்தது போலவே இருந்த நேர்த்தியான புருவமேடுகளையும் அவன் இப்போது இழந்துவிட்டான். எவ்வித உணர்ச்சியுமின்றி தன் நகரமக்களை நினைத்தான். தான் வாழ்வின் இறுதியை நெருங்கிவிட்ட துயரமுடிவின் போதுதான் உணர்ந்தான். தான் மிகவும் வெறுத்த அம்மக்களை தான் உண்மையில் எவ்வளவு ஆழமாக நேசித்தான் என்பதை. ராணுவ வழக்குமன்ற இறுதியாய் தலைவர் பேசத் தொடங்கிய போது இரண்டு மணிநேரங்கள் கடந்து விட்டதை அர்காடியோ உணர்ந்தான்.

கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான நிரூபணம் இல்லாதிருக்கும் என எடுத்துக் கொண்டாலும் தலைவர் குறிப்பிட்டார் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் தனக்கு கீழ் இருந்த வீரர்களை யுத்தத்தில் தள்ளி மரணமடைய வைத்துவிட்ட ஒரு காரணம் போதும். மரணதண்டனை வழங்கிட தகுதி வாய்ந்தவனே. தன் அதிகாரத்தின் பாதுகாப்பை உணர்ந்த, முழுதும் உணராதுபோயின் காதலை அனுபவித்த அந்த சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடத்தில் கிடந்து மரணம் நோக்கிய சம்பிரதாயங்களை அர்காடியோ வெறுத்தான். மரணம் அவனைப் பொறுத்தவரை பெரிய வி­யமே அல்ல. ஆனால் இப்போது வாழ்க்கையை அவன் மதித்தான். அதனால் அவர்கள் முடிவை அறிவித்தபோது பயத்தாலன்றி பழக்கதோசத்தால் அவன் உணர்ச்சி வசப்பட்டான். அவனது கடைசி விருப்பத்தை அவர்கள் கேட்கும் வரை அவன் எதுவுமே பேசவில்லை.

என் மனைவியிடம் சொல்லுங்கள். கணீரென்ற குரலில் அவன் பதிலளித்தான். என் மகளுக்கு ஊர்சுலா எனப் பெயரிட வேண்டும். நிறுத்தி பிறகு திரும்பச் சொன்னான். ஊர்சுலா அவளது பாட்டியைப் போலவே அப்புறம் பிறக்கப்போகும் குழந்தை பையனாக இருந்தால் அவனுக்கு ஜோஸ் அர்காடியோ என அவர்கள் பெயரிடவேண்டும். மாமாவிற்காகவல்ல. அவனது தாத்தாவின் நினைவுக்காக.

கொலை தண்டனை சதுக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படும் முன் அருட்தந்தை நிக்கனேர் அவனை சந்தித்தார். வருத்தம் ஏதும் எனக்கில்லை. அவர் அர்காடியோ திட்டவட்டமாக சொன்னான். பிறகு கொலைப்படையின் ஆணைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு கருப்புகாப்பி ஒரு குவளை அருந்திவிட்டு அவர்களோடு புறப்பட்டான். கொலை தண்டனைகளை நிறைவேற்றுவதில் அதி திறனை பெற்றிருந்த படைத்தலைவன் ஆகப் பொருத்தமான பெயர் கொண்டிருந்தான் என்பது எத்தேச்சையாக அமைந்ததாய் தெரியவில்லை. அவன் பெயர் காப்டன் ரோக் கார்னிசரோ... அப்பெயருக்கு இறைச்சி வெட்டுபவன் என்று பொருள். இடுகாட்டு சுவருக்கு போகும் வழியில் லேசான தூரலின் முடிவில் மிகப்பிரகாசமான புதன்கிழமை பிறப்பதை உதயத்தின் பக்கம் கண்டு அர்காடியோ உணர்ந்தான்.

அவனது பழக்கதோசம் மறைந்து அவ்விடத்தை எராளமான எதிர்ப்பார்ப்போடு புதிதாக காண்பவன் போல அதைக் கண்டான். தனது முதுகை சுவர்மேல் படும்படி நிற்க அவர்கள் கட்டளை இட்டபோது தான் அவன் ஈரத்தலையுடனும் ரோஜா நிற பூவேஸை பாடுகொண்ட உடையுடனும் ரிபெக்காவைக் கண்டான். அவள் கதவுகளை விரியத் திறந்தாள். அவளுக்கு சைகை செய்து எப்படியோ அவள் தன்னை அடையாளம் காண வைக்க அவன் முயன்றான். அவளும் அங்கிருந்த காட்சியை கண்டு உறைந்து போய் அவனுக்கு இறுதி விடைகொடுக்க முடியாதவளாய் நின்றாள். அர்காடியோ கையசைத்தான் குட்பை... அந்த நொடியில் எப்போது வேண்டுமானாலும் புகைவிடும் நிலையில் அவனை நோக்கி துப்பாக்கிகள் குறிவைக்க வரிக்குவரி மெகியூவாடெஸ் ஜெபம் போல வாசித்த வரிகளை ஒவ்வொன்றையும் மனம் திரும்பக் கூறக் கண்டான். சாந்தா சோஃபியா டி லை பைடாட் ஒரு கன்னிப்பெண்ணாய் வகுப்பறைக்குள் நுழைவதை நினைத்தான். இறந்த ரெமெடியாஸின் நாசியில் வீசிய மரணத்தின் நொடி தன் நாசியில் வீசுவதை உணர்ந்தான்.

ஓ மை காட்... அவன் யோசித்தான். பிறக்கப்போவது பெண் குழந்தையாய் இருந்தால் அதற்கு ரெமெடியாஸ் என்று பெயரிடுமாறு கூறிட மறந்துவிட்டேன். ஒரு கூற்றகம் அனைத்தையும் திரட்டி மீண்டும் அவன் வாழ்வெங்கும் சித்திரவதை செய்த அர்த்தங்கெட்ட அச்சத்தால் அழுத்துவதை கண்டான். படைத்தலைவன் சுடும் கட்டளையைப் பிறப்பித்தான். தன் தலையை நிமிர்த்தி நெஞ்சை உயர்த்திட அர்காடியோடிவிற்கு போதுமான அவகாசம் இருக்கவில்லை. தன் தொடைகளை சுட்டப்படி கொட்டிய திரவம் எங்கிருந்து ஒழுகி ஓடுகிறது என்பதை புரிந்து கொள்ள அவனால் முடியவில்லை.

தேவிடியாள் மகன்களா அவன் கத்தினான். லிபரல் கட்சி பல்லாண்டு வாழ்க!

(அடுத்த இதழிலிருந்து ஒவ்வொரு இதழுக்கும் ஐந்து அத்தியாயங்கள் வீதம் ஒரு நூறாண்டு காலத் தனிமை தொடரும்.)

தமிழில்: இரா. நடராசன்

Pin It