தமிழீழ விடுதலைப் போரில் சிங்கள இனவெறிப் படையுடன் போரிட்டு வீரமரணம் எய்திய மாவீரர் களின் ஈகத்தையும், 2009 மே மாதத்தில் இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் குவிக்கப் பட்ட ஈழத்தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகளை விமானங்களிலிருந்து வீசி 1.4 இலட்சம் ஈழத் தமிழர் களைக் கொன்ற தமிழின அழிப்பின் கொடுமை களையும் சித்திரிக்கும் தன்மையில், தஞ்சை மாவட் டத்தில் விளாரில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ பல தரப்பனரின் கூட்டுழைப்பால் உருவாக்கப்பட்டது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலை மையில் இம்மாபெரும் வரலாற்றுச் சின்னம் உருவாக் கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்புவிழா நிகழ்ச்சி 2013 நவம்பர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு இவ்விழாவை நடத்தவிடாமல் தடுத்திடத் திட்டமிடுவதை அறிந்த விழா ஏற்பாட்டாளர்கள், முன்கூட்டியே 6-11-2013 அன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தின் திறப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நவம்பர் 9, 10 ஆகிய நாள்களில் நடைபெற விருந்த கருத்தரங்கக் கூட்டத்திற்குக் கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது. அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மூலம் நிகழ்ச்சியை நடத்திட அனுமதி பெற்றனர்.

9-11-2013 அன்று முதல்நாள் நிகழ்ச்சி இரவு 10 மணிக்குமேல் நடத்தப்பட்டது என்பதைக் காரணமாகக் காட்டி, ஒலிபெருக்கிகளைக் காவல் துறையினர் தூக்கிச் சென்றனர். இத்தகைய கடுமையான நெருக்கடிகளுக் கிடையே இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடத்து முடிந்தது. ஆயினும் முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழின எழுச்சிக்கு ஊற்றுக்கண்ணாக அமைந்திருப்பது, ஆளும் வர்க்கத் தினரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் உறுத்தியது.

எனவே முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முன் பகுதி யில் 2400 சதுர அடி பரப்பில் அழகிய நீரூற்று களுடன் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு பூங்கா நெடுஞ் சாலைத்துறைக்குச் சொந்தமான நிலப்பகுதியில் அமைந்துள்ளது என்பதைக் காரணமாகக் காட்டி, பூங்காவின் சுற்றுச்சுவரை இடித்து, பூங்காவையும் சிதைத்தது. ஈழத்தில் நடந்த கொடுமைகளை காண் போர் உள்ளங்களை உருக்கும் வகையில் அமைக்கப் பட்டிருந்த மாவீரர் துயிலும் இடங்களை இராசபக்சே அரசு தகர்த்து அழித்தது போன்றதல்லவா இது! இலங் கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்ககேற்கக் கூடாது என்று அவசரமாகக் கூட்டப்பட்ட தமிழகச் சட்டமன்றத்தில் இரண்டாவது தடவையாகத் தீர்மானம் நிறைவேற்றிய செயலலிதா அரசு, அதே நாளில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவரையும் பூங்காவை யும் தகர்த்தது மாபெரும் கொடுமையல்லவா?

தமிழக அரசின் அடவாடிச் செயலைத் தடுக்க முயன்ற பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக அரசு. இப்போது இவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர். இவர்கள் மீதான வழக்கைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். மேலும் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முன், பூங்கா அமைத்திட அனுமதி அளிப்ப துடன் அரசின் செலவிலேயே அது அமைக்கப்பட வேண்டும். இதுவே தமிழ்நாட்டு அரசு முள்ளிவாய்க் கால் முற்றத்தில் செய்த அடவாடித்தனத்திற்கு ஏற்ற கழுவாயாக அமையும்.

Pin It