தாராபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் தகராறு... காவல் நிலையத்தில் சமரச பேச்சு வார்த்தை முடிந்து சமாதா னக் கடிதத்தை இரு தரப்பினரும் எழுதிக் கொண்டி ருந்த வேளையில் தடாலடி யாக புகுந்த இன்ஸ்பெக்டர், ஒரு தரப்பினரை வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி யது தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

இது பற்றி தீன்மலர் ஆட்டோ ஓட்டுநர்கள் நம்மிடம் பேசினார்.

“தாராபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் தீன்மலர் ஆட்டோ நிறுத் தம் உள்ளது. இந்த ஆட்டோ நிறுத்தத்திற்கு முன்புறம் லோக நாதன் என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 25-06-2011 அன்று ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ஜமால் முஹம்மது என்பவர் தன் னுடைய ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது சவா ரிக்கு ஒருவர் வரவே தன்னுடைய ஆட்டோவிற்கு முன்னால் இருந்த லோகநாதனின் தள்ளுவண்டியை சற்று நகர்த்தி வைக்குமாறு கூறினார்.

அப்போது லோகநாதன், “நீ சொன்னா உடனே எடுக்கனுமா? கொஞ்சம் இரு எடுக்கிறேன்...'' என்று சொன்னார். அதற்கு ஜமால், “சவாரி வேறு ஆட்டோ விற்கு போய் விடும்; வண்டியை நகர்த்துகிறாயா? இல்லையா?'' என்று கேட்டார்.

இதனால் இருவருக்கும் வார்த்தைகள் தடித்து கைகலப்பாகி விட்டது. உடனே நாங்களும் பொது மக்களும் இருவரையும் விலக்கி சமாதானப்படுத்தினோம். பிறகு லோகநாதன் தள்ளு வண்டியை நகர்த்தியவு டன் ஜமால் ஆட்டோவை எடுத் துக் கொண்டு சென்று விட்டார்...'' என்று சொன்னவர்கள் தொடர் ந்து...

“சிறிது நேரத்திற்குப் பிறகு லோகநாதன் தாராபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று ஜமால் முஹம்மது தன்னைத் தாக்கி விட்டதாக புகார் அளித்தார். லோகநாதனின் புகாரின் பேரில் போலீஸôர் ஜமால் முஹம்ம துவை விசாரணைக்கு தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத் துச் சென்றனர்.

சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் இளமுருகன் காவல்நிலையத்தி லிருந்து வெளியே சென்றிருந்த காரணத்தால் குற்றப் பிரிவு ஆய் வாளர் ராஜமாணிக்கம் இரு தரப் பினரையும் விசாரித்தார். விசார ணையின் முடிவில் இரு தரப்பின ரும் சமாதானத்திற்கு ஒத்துக் கொண்டு இடையூறு செய்ய மாட்டோம் என்று எழுதிக் கொண்டிருந்தனர்.

இரு தரப்பினரும் கடிதம் எழு திக் கொண்டிருந்தபோது வெளியே சென்றிருந்த ஆய்வா ளர் இளமுருகன் காவல் நிலை யத்திற்குள் புகுந்து, எதையும் விசாரிக்காமல் எடுத்த எடுப்பி லேயே, "இவர்கள் (முஸ்லிம்கள்) எப்போதும் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே இவர்களை விடக் கூடாது. உடனடியாக ஜமால் முஹம்மது மீது வழக்குப் பதிவு செய்யுங்கள்' என்று தடாலடி யாக கூறினார்...'' என்று நடந்த சம்பவத்தை விளக்கினர்.

உடனடியாக லோகநாதனிடம் புகாரைப் பெற்ற காவல்துறையி னர் ஜமால் முஹம்மது மீது வழக் குப் பதிவு செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர். ஆய்வாளரின் அதிரடியால் மிரண்டு போன ஆட்டோ ஓட்டுநர்கள் அனைத்து ஜமாஅத்தினருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இதனால் முஸ்லிம் அமைப்புக ளின் பிரதிநிதிகள் ஆய்வாளர் இளமுருகனை சந்தித்து விளக்கம் தர முற்பட்ட... இதனை செவி மடுக்காத ஆய்வாளர் "உங்களை யெல்லாம் யார் வரச் சொன்னா? வெளியே போங்கய்யா...' என்று விரட்டியதோடு, "மேற்கொண்டு ஏதாவது பேசினா எல்லோர் மேலேயும் கேஸ் போட வேண்டி வரும்...' என்றும் மிரட்டியுள்ளார்.

ஆய்வாளரின் நடவடிக்கை யால் அதிருப்தி அடைந்த முஸ் லிம் அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் காவல்துறை உயரதிகாரிக ளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஐஎன்டிஜே தாராபுரம் நகர செயலாளரிடம் பேசியபோது, “சகோதரர் ஜமால் முஹம்மது சமூக நலப்பணிகளி லும், மனித நேயப் பணிகளிலும் ஆர்வமுள்ளவர். ஜமாஅத் வேறு பாடின்றி அனைத்து முஸ்லிம் சகோதரர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் முன் நிற்பவர்.

சாதாரண தள்ளுமுள்ளு சண் டையை ஒரே இடத்தில் தொழில் செய்பவர்கள் என்ற அடிப்படை யில் சமரசம் செய்து வைக்காமல் வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பியிருப்பது மத துவேஷ உணர்வையே காட்டுகிறது. அதி லும் லோகநாதனிடம் பணத்தை பறித்துக் கொண்டதாக குற்றம் சுமத்தியிருப்பது வேதனையான ஒன்று...'' என்றார்.

தாராபுரம் இன்ஸ்பெக்டரின் முஸ்லிம் விரோதப் போக்கை உயரதிகாரிகள் கண்டித்து வைக்க வேண்டும். இல்லையென்றால் தாராபுரத்தில் ஏற்படும் கலவரத் திற்கு இன்ஸ்பெக்டர் இளமுருகன்தான் பொறுப்பேற்க வேண்டி வரும்.

- இப்னு மக்பூல்

Pin It