தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. இலக்கியப் பரப்பில் பலவிதமான படைப்பாக்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த 40 ஆண்டுகளாக உழைக்கும் மக்களின் ஆயுதமாக செம்மலர் இயங்கி வருகிறது. 

தமிழகத்தின் இன்றைய பிரபலப்படைப்பாளிகள் பலரை உருவாக்கிய கருவறையாக திகழும் செம்மலர் தனத 41-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிகழ்வு அதற்கே உரிய தன்மையுடன் மதுரையில் நடைபெற்றது. மதுரை சொக்கநாதர் திருமண மண்டபத்தில் மே-12 ந் தேதி செம்மலரின் 41-ஆம் ஆண்டு துவக்கவிழா மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. இலக்கிய உலகில் செம்மலர் பயணித்த 40 ஆண்டு கால பயணத்தை அழகான படங்களுடன் படக்கண்காட்சியாக உருவாக்கப்பட்டிருந்தது. 

மதுரை போக்குவரத்து கலைவாணர் கலைக்குழுவின் இராயப்பன், சுல்தான், அம்பிகா ஆகியோரின் இனிய பாடல்களோடு துவங்கிய இவ்விழாவிற்கு செம்மலரின் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் தலைமை வகித்தார். " விவசாயியையும், தொழிலாளியையும், தீப்பெட்டி ஆபீஸில் வேலைபார்க்கும் சிறுவனையும் கதாநாயகனாக்கிய பெருமை செம்மலருக்கு உண்டு. அரசியலே கூடாது எனச்சொன்னவர்களும், செம்மலர் ஒரு அரசியல் பத்திரிகை என நையாண்டி செய்தவர்கள் கூட இன்றைக்கு தங்களது பத்திரிகைகளில் அரசியல் குறித்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என எஸ்.ஏ.பெருமாள் குறிப்பிட்டார். 

இவ்விழாவிற்கு வரவேற்புரையாற்றிய இதழின் பொறுப்பாசிரியர் ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், செம்மலர் என்ற தாய்க்கு அதன் படைப்பாளிகளான பிள்ளைகள் எடுக்கும் விழா. இன்றைக்கும் உழைப்பாளி மக்களின் ஆயுதமாக திகழும் செம்மலரை ஒவ்வொருவரும் முகவராகி பழகுமிடமெல்லாம் கொண்டு செல்வோம் என்று குறிப்பிட்டார். 

தமிழகத்தில் பட்டிமன்ற மேடைகளில் மட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் இலக்கிய மணம் பரப்பி வரும் பேரா.கு.ஞானசம்பந்தன் வாழ்த்துரை வழங்கினார். செம்மலர் நல்ல எழுத்துக்கான களத்தை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.சென்னையில் இருப்பவர்களே எழுத முடியும் என்ற நிலை தற்போது மாறி வருகிறது. அதற்கு செம்மலர் போன்ற இதழ்களே காரணமாகும். மாத இதழ் அதிலும்குறிப்பாக இலக்கிய இதழ் நடத்துவது மிகவும் கடினம்.பலர் வார இதழ்களை உருவாக்கிவிட்டு செய்திகள் கிடைக்காமல் அலைகின்றனர். செம்மலரில் வெளியான கதைகளை இன்றைக்கு படித்தாலும் நாம் நெக்குருகி நிற்கிறோம். நல்ல விஷயங்களை எங்கேயும் எடுத்துரைப்பேன். ஆகவே, இனி செம்மலர் குறித்து கட்டாயம் பேசுவேன் என பேரா கு.ஞானசம்பந்தன் குறிப்பிட்டார். 

செம்மலர் இதழ் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பேரா.ச.மாடசாமி பேசுகையில், முற்போக்கு இலக்கிய உலகில் செம்மலரின் பயணம் சாதாரணமானதல்ல. பெரும் வாசகர் பரப்பை கொண்டு இயங்கும் முதல் இலக்கிய இதழான செம்மலர் 40ஆண்டுகாலம் நிற்காமல் வெளிவந்துகொண்டிருக்கிறது. சாதாரண உழைப்பாளியையும் கதாநாயகனாக்கியது செம்மலர் தான் எனக்குறிப்பிட்டார்.  

செம்மலர் இதழ் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பேரா.ச.மாடசாமி பேசுகையில், முற்போக்கு இலக்கிய உலகில் செம்மலரின் பயணம் சாதாரணமானதல்ல. பெரும் வாசகர் பரப்பை கொண்டு இயங்கும் முதல் இலக்கிய இதழான செம்மலர் 40ஆண்டுகாலம் நிற்காமல் வெளிவந்துகொண்டிருக்கிறது. அதில் வந்த கதை மாந்தர்கள் உண்மையாக நம்மிடையே உலவிக்கொண்டிருப்பவர்கள் எனக்கூறினார்.  

செம்மலரில் தொடர்ந்து பங்களிப்பைச் செய்து வரும் பேரா.அருணன் பேசுகையில், தோழர்கள் என்.சங்கரய்யா, கே.முத்தையா ஆகியோரின் வழிகாட்டுதலில், உழைப்பாளிமக்களின் ஏடாகிய செம்மலர் முற்போக்கு இலக்கியத்திற்கான போராளியாக இருந்துவருகிறது. வாழ்வில் சற்றென்று புரியாத விஷயங்களை புரிதலோடு சொல்லவேண்டும். வாழ்வின் உண்மைகளை நுட்பமாகச் சொல்லி போராட்ட அலைகளை உருவாக்குவதுதான் யதார்த்தவாதம். அதை செம்மலர் செய்து கொண்டிருக்கிறது. சோசலிசம் காலாவதியாகிவிட்டது என பிறர் கூறிவந்தபோது, சோசலிசம் தான் எதிர்காலம் என சரியாக கணித்துப் போராடியது செம்மலர் தான் என அவர் குறிப்பிட்டார். 

செம்மலரை கருவாக்கி, உருவாக்கி ஈன்றெடுத்தவர் கு.சின்னப்ப பாரதி. இருட்டில் இருந்து கொண்டு பல எழுத்தாளர்களை, தலைவர்களை உருவாக்கியவர் தி.வரதராசன் எனக்குறிப்பிட்ட மேலாண்மை பொன்னுச்சாமி, என்னைப் போன்ற பல படைப்பாளிகளை உருவாக்கியது இந்த செம்மலர் தான். 40 ஆண்டு களாக தத்துவ நேர்த்தியோடு, அரசியல் தெளிவோடு, இலக்கிய மணத்தை செம்மலர் பரப்பி வருகிறது எனக்குறிப்பிட்டார்.  

செம்மலரின் முதல் ஆசிரியரும், சிறந்த படைப்பாளியுமான கு.சின்னப்ப பாரதியும், செம்மலரின் முதல் இதழுக்கு அட்டைப்படம் வரைந்ததில் இருந்து இன்று வரை செம்மலரின் வளர்ச்சியில் தன்னைக் கரைத்துக் கொண்டுள்ள தி.வரதராசன் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். செம்மலரின் முதல் ஆசிமிகவும் பெருமை சேர்க்கக்கூடியதாகும். பல்வேறு விஷயங்கள் இன்றைக்கு பணத்தால் தீர்மானிக்கப்படுகிறது. பணம் கொடுத்து செய்திகளை வெளியிடுவதில் துவங்கி இன்றைக்கு எல்லாமே வியாபாரமயமாகி வருகிறது. தேர்தலுக்கு 100 கோடி 200 கோடி என செலவு செய்கின்றனர். ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் பட்டியல் நீள்கிறது. இந்தப்பணத்தை தேர்தல் களத்தில் விட்டால், ஜனநாயகம் என்னவாகும் என்ற கேள்வி எழுப்பிய அவர், கலாச்சார நிகழ்வைக்கூட சில கட்சிகள் தங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்தும் சூழலில், உழைப்பாளி மக்களின் ஆயுதமாக, தொழிலாளி-விவசாயிகளின் மான கு.சின்னப்ப பாரதியும், கடந்த 40 ஆண்டுகளாக செம்மலரின் உயிரோட்டத்தில் கலந்து நிற்கும் தி.வரதராசன் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன் நினைவுப்பரிசுகளை வழங்கினார். 

இங்கு என்னை செம்மலரின் முதல் ஆசிரியர் எனக்குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செம்மலர் பணியை செய்யுங்கள் எனச்சொல்லாமல் இருந்தால் இந்த பாராட்டு எனக்கு கிடைத்திருக்காது. இந்த பாராட்டுக்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கட்சிக்கே சேரும் என கு.சின்னப்ப பாரதி தனது ஏற்புரையில் குறிப்பிட்டார். தேனியில் விவசாயக்கூலியாக இருந்த என்னை கண்டுபிடித்து ஒரு ஓவியராக்கி அதற்காக எனக்கு சம்பளம் வழங்கியவர் கு.சின்னப்ப பாரதி எனக்குறிப்பிட்ட தி.வரதராசன், இன்றளவும் உயிரோட்டமுள்ள படைப்பாக்கங்கள் வருவது செம்மலரில் தான் என்று குறிப்பிட்டார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் இரா.அண்ணாதுரை, புறநகர் மாவட்டச்செயலாளர் சி.ராமகிஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவின் நிறைவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன் பேசியபோது, மார்க்சீய இயக்கத்தில் இருந்துகொண்டு எழுதுவது சாதாரணவிஷயமல்ல. ஒருவர் எழுதி அது பிரசுரமாகி, அது பற்றி மூன்று நாட்கள் வரை யாரும் எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லையெனில் நாம் பிரமாதமாக எழுதி இருக்கிறோம் என்று அர்த்தம். சிலர் எழுதி பெயர் கிடைத்தவுடன் காணாமல் போய்விடுவார்கள்.தோழர்கள் கு.சின்னப்பாரதி, தி.வரதராசன், அருணன், மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் மார்க்சிஸ்ட் கட்சியையும் செம்மலரையும் ஒன்றாகப் பாவித்து வருகின்றனர். இது மிகவும் பெருமை சேர்க்கக்கூடியதாகும்.  

பல்வேறு விஷயங்கள் இன்றைக்கு பணத்தால் தீர்மானிக்கப்படுகிறது. பணம் கொடுத்து செய்திகளை வெளியிடுவதில் துவங்கி இன்றைக்கு எல்லாமே வியாபாரமயமாகி வருகிறது. தேர்தலுக்கு 100 கோடி 200 கோடி என செலவு செய்கின்றனர். ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் பட்டியல் நீள்கிறது. இந்தப்பணத்தை தேர்தல் களத்தில் விட்டால், ஜனநாயகம் என்னவாகும்? லஞ்சம், ஊழல், மதவெறிசக்திகள், சாதீய சக்திகள் இவற்றிற்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும். கலாச்சார நிகழ்வைக்கூட சில கட்சிகள் தங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்தும் சூழலில், உழைப்பாளி மக்களின் ஆயுதமாக, தொழிலாளி-விவசாயிகளின் ஆயுதமாக, எதிரிகளை வீழ்த்தும் ஆயுதமாக செம்மலர் இதழ் கலை இலக்கிய தளத்தில் தமது பங்களிப்பை செலுத்தி வருகிறது என அவர் கூறினார்.செம்மலரின் துணை ஆசிரியர் சோழ.நாகராஜன் நன்றி கூறினார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மாவட்டக்குழுக்கள் சார்பில் 10 ஆண்டு, 5 ஆண்டு, 1 ஆண்டு என 48 ஆயிரத்து 540 ரூபாயை சந்தாவாக வழங்கி செம்மலரின் வளர்ச்சியில் துணை நிற்போம் என்பதை மெய்ப்படுத்தினர். 

Pin It