நாஞ்சில்நாட்டு வேளாளரிடையே 1921 வரை நடைமுறையிலிருந்த மருமக்கள் வழிமுறை தொடர் பான உசந்துடைமை ஆவணம் இது. அச்சில் வராத இந்த ஆவணம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கையெழுத்துப் பிரதியில் உள்ளது. 1903 அளவில் இதை அவர் பிரதி செய்திருக்கிறார்.

இந்த ஆவணம் மலையாள வருஷம் 658 ஆம் ஆண்டு தை மாதம் 15ஆம் தேதி (கிபி 1483 ஜனு-பெய்) எழுதப்பட்டது. மருமக்கள் வழி வேளாளரின் மரபுப்படி ஒருவரின் சொத்துக்கு உரிமை அவரது சகோதரி மகனுக்கு மட்டுமே. அந்தச் சொத்தை அவர் நிர்வகிப்பார். காரணவர் (தாய்மாமா) எனப்படும் அவரின் சொத்துக்கு அவருக்குப் பிறந்த மகன் உரிமை கொண்டாட முடியாது.

காரணவர் முறைப்படியாய்த் திருமணம் செய்து கொண்ட மனைவிக்குப் பிறந்த மகனுக்கு அவனது- ஜீவனத்திற்கு அன்பு கூர்ந்து கொடுக்கப்படும் சொத்து உசந்துடைமை எனப்படும். இந்த ஆவணம் உசந் துடைமையாகக் கொடுக்கப்பட்ட சொத்து விவரங் களைக் குறிப்பிடுகிறது. இந்தச் சொத்து பெண் வழிக்கு உரிமை உசந்துடைமையாகக் கொடுக்கப் படுகிறது.

இதன்படி மருமக்கள் வழிமுறை கிபி 1453க்கு முன் நடைமுறையில் இருந்தது என்பதும், இதே காலகட்டத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதும் தெரிகிறது.

ஆவணம் மூலம்

1.            கொல்லம் 658 ஆம் ஆண்டு தைமாதம் 15ஆம் தேதி ஆளுநரான விக்கிரம சோழ பாண்டிய

2.            கண்டன் கூத்தனான நகர சேனாபதிக்கு திருக... கோட்டாறான சொழ...

3.            ஈச்சம்பி பொரத்து மேற்படி உள்ளிட்டோம் இசைவுமுறி குடுத்த பரிசாவது

4.            இற்றைநாள் இவர் பெண்வழியாலுள்ள கோவாளை காணியாட்சையும் தாழைக்குடி...

5.            ---- பெண் வழியாலுள்ள வகைகளும் கோட்டாற்றில் பெண்வழி...

6.            --ள்ள பொதுவகையும் இவர் வூர்க மூன்றில் ஒன்றில் நாலிலொ

7.            உசந்துடைமையாக எழுதித் திருகையில் இவ்வகை...

8.            .... தாவரிட்ட அடைப்புமுறிஒற்றி படுகல மற்றும் எப்பேற்பட்டது நானிறுத்து.

9.            கொளுவேனாகவும் இப்படிச் சம்மதித்து இசைவுமுறி இட்டுக் கொடுத்தேன் ஈச்சம்பி பெரசு படி எழுத்து.

10.          ராம கண்டன் கூறினான நகர சேனாதி பதிக்கு ஈச்சம்பிமேற்படி எழுத்து...

11.          ருவாகச் சொல்ல இதை இசைவு குறித்து எழுதினான் கமென் திருவம்பல முடையான் எழுத்து.