Stan Swamyஸ்டான் சாமி என்று அழைக்கப்பட்ட இவரின் இயர்பெயர் ஸ்டானிஸ்லாய்  லூர்துசாமி. இன்றைய அரியலூர் மாவட்டம், விரகனூர் கிராமத்தில் பிறந்த இவர், பிலிப்பைன்ஸில் இறையியல், சமூகவியல் படிப்பைப் படித்தவர்.

சிறந்த சமூக செயல்பாட்டாளரான இவர் மிகவும் பின்தங்கிய மாநிலமான ஜார்கண்டில், பழங்குடியின மக்களோடு வாழ்ந்து அவர்களின் சமூக வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர். சிறந்த எழுத்தாளர், சில நூல்கள் எழுதியிருக்கிறார்.

மராட்டிய பீஷ்வாக்களை எதிர்த்து ஆங்கிலப்படையுடன் தலித்துகள் ஒன்றிணைந்து போராடிய இடம் பீமாகொரேகான். அந்த இடத்திற்க்கு டாக்டர் அம்பேத்கர் சென்று அஞ்சலி செலுத்தியதில் 100ஆம் ஆண்டு விழாவை 2007ஆம் ஆண்டு ‘எல்கார் பரிஷத்’ என்று மக்கள் கொண்டாடினார்கள்.

அதற்க்கு அடுத்த 2008ஆம் ஆண்டு அந்த விழாவோடு மாவோயிஸ்டுகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டி, ‘உபா’(UAPA) சட்டத்தைப் பயன்படுத்தி சமூக செயல்பாட்டாளர்களான சுதிர், தவாலே, மகேஸ்ராவத், சோமாசென் உள்ளிட்டவர்களைக் கைது செய்தது அரசு.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே குற்றச்சாட்டை முன்வைத்து ஆனந்த் டெல்டும்பே கைது செய்யப்பட்டார். 2020 ஆம் ஆண்டு மே மாதம் ராஞ்சியில் கைது செய்யப்பட்டார் ஸ்டான் சாமி.

அவர் கைது செய்யப்படும்போது அவருக்கு வயது 83. அவருக்கு பர்கின்ஸ் என்ற நடுக்க நோய் இருந்தது. அதனால் அவரால் கையால் உணவு சாப்பிட முடியாது. மாற்று ஏற்பாட்டை சிறைத்துறை செய்து தரவில்லை.

நோய் மற்றும் வயது முதிர்வு காரணமாக அவருக்குப் பிணை மறுக்கப்பட்ட நிலையில் 2021 ஜூலை 5ஆம் தேதி அவர் சிறையிலேயே மரணமடைந்தார்.

ஒரு நேர்மையான மக்கள் தொண்டருக்கு இந்த அரசு கொடுக்கும் மரியாதை இதுதான் என்பது கண்டனத்திற்குரியது.

வரலாறு இவரைப் பதிவு செய்கிறது.

- கருஞ்சட்டைத் தமிழர்