“பழையன கழிதலும்

புதியன புகுதலும் வழுவல

கால வகையி னானே”

என்கிறார் நாலடியார் இயற்றிய பவணந்தியார். “The old order change th, yielding Place to new” என்பது ஆங்கிலக் கவிஞன் டென்னிசன் வரிகள்.

பழையன என்பதைக் கருத்து முதல்வாதத்தில் பார்க்க வேண்டும்.

கடவுள் பெயரைச்சொல்லி, மதத்தை உருவாக்கி, கோயிலை இடிப்பதும் - கட்டுவதுமாக சனாதனத்தில் மக்களைப் பிரித்து வைப்பது, என்பது ஒதுக்கப்பட வேண்டிய பழைமை.

அதன் வழியில் மதத்தால் பிளவை உண்டாக்கிக் கடவுள் மயக்கத்தில் மக்களை வைத்து, அவர்களின் கல்வியை, தொழிலை, நாட்டின் முன்னேற்றத்தைச் சீரழித்த பார’தீய’ ஜனதா கட்சி அகற்றப்பட வேண்டிய ஒரு அடிப்படைவாத பழைமைவாதக் கட்சி. இதை ஒதுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும்.

அதேசமயம் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற அரசியல், சமூக சீர்திருத்தச் செம்மல்களால் ஏற்பட்டுள்ள புதிய புதிய முற்போக்குச் சிந்தனைகளை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

ஒதுக்கப்பட்டவர்கள் உணர்வு பெற்றார்கள், ஒடுக்கப்பட்டவர்கள் நிமிர்ந்தெழுந்தார்கள், மறுக்கப்பட்டக் கல்வி மக்களுக்குக் கிடைத்தது, மக்களின் வாழ்க்கை சமத்துவமாக உயிர்த்தெழுகிறது என்றால் அதுதான் திராவிடம்.

பா.ஜ.க + ஆர். எஸ். எஸ் = ஆரியம். இது தேவையற்ற பழையன.

முற்போக்கு + சமூகநீதி = திராவிடம். தேவையான புதியன.

2024இல் பா.ஜ.க என்ற பழையதைக் கழிப்போம், தோற்கடிப்போம்.

தந்தை பெரியாரின் திராவிடச் சிந்தனையின் வழிநடப்போம்.

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்

- கருஞ்சட்டைத் தமிழர்