பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பது அமைச்சர் ஜெயக்குமாருக்குத் தெரியுமா? தெரியாதா?

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநரின் துணைவேந்தர் நியமனத்துக்கும், தமிழக அரசுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்கிறார் அவர். இவர் தமிழகத்தின் அமைச்சரா, அல்லது தமிழிசையின் செய்தித் தொடர்பாளரா?

‘மாநில அரசின் பரிந்துரைப்படி நியமிக்கப்படாத’ 6 துணைவேந்தர்களின் பதவிகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது 2012ஆம் ஆண்டில், பீகாரில்.

தமிழ்நாட்டின் மாநில உரிமைகளின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகப் பல்கலைக்கழகங்களில்.

கர்நாடக இசையில் முனைவர் பட்டம் பெற்று சிறந்து விளங்கிய புஷ்பவனம் குப்புசாமியை ஓரம்கட்டிவிட்டு, பிரமிளா குருமூர்த்தியை இசைக் கல்லூரியின் துணை வேந்தராக நியமித்தார் புரோகித்.

மராட்டிய மாநில புனே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த தம்ம சூரிய நாராயண சாஸ்திரியை, அவர் மராட்டிய மண்ணின் மைந்தர் இல்லை என்று காரணம் கூறி அன்றைய பா.ஜ.க. அரசு அவரை நிராகரித்தது.

அதே சாஸ்திரி இன்று தமிழக சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆக்கப்பட்டுள்ளார் ஆளுநரால்.

காவிரிப் பிரச்னையில் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்திற்கு எதிராக. அதைப் பற்றிக் கவலைப் படாத ஆளுநர், 136 ஆண்டுகள் தமிழ்த் துணைவேந்தர்களின் ஆளுமையில் இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தராக சூரப்பா என்பவரை நியமித்து இருக்கிறார்.

கவனிக்க வேண்டிய செய்தி, கேரள பிரமிளா குருமூர்த்தியும், ஆந்திர தம்ம நாராயண சாஸ்திரியும், கர்நாடக சூரப்பாவும், ஆர்.எஸ்.எஸ். பின்புலப் பார்ப்பனர்கள். இவர்கள் தமிழக மண்ணின் மைந்தர்கள் இல்லை.

மாநில உரிமையில் இருந்த கல்வியை, மத்திய பட்டியலுக்குப் பறிகொடுத்ததன் விளைவாக வந்த நீட் தேர்வு, வர இருக்கும் பொறியியல் கல்விக்கான தேசியத் தேர்வு ஆகிய அநீதிகளுடன், துணைவேந்தர்கள் நியமனம் போன்றவை தமிழ் மாணவர்களின் எதிர்காலக் கல்விக்கான பேராபத்து.

சுருக்கமாகச் சென்னால் ‘‘இந்தியா காவிமயமாகிவிட்டது. தமிழகம் விரைவில் காவி மயமாகும்’’ தமிழிசை சவுந்தர் ராஜன் முன்பு ஒரு முறை சொல்லியிருந்தார்.

இந்தத் திட்டம், குறிப்பாக கல்வியை காவிமயமாக்கும் திட்டம் பா.ஜ.க.வின் தமிழக ஆளுநரால் நடைமுறை படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள்.

நெருப்பைப் பயன்படுத்தலாம். அதனுடன் விளையாடக் கூடாது. இன்று தமிழர்கள் சாதுவானவர்கள். நாளை காடுகொள்ளாது.

மாநில உரிமைகளுக்கு எதிராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் அத்துமீறிய செயல்கள் வலிமையான கண்டனத்துக்கு உரியன.

ஐரோப்பவைக் கதிகலங்கச் செய்தவர் இட்லர். அவரின் நாசிசமும் சுவஸ்திக் அடையாளமும் முற்றாக அழிக்கப்பட்டன என்பது நேற்றைய வரலாறு.

மதவேறியும், காவியும் அழிக்கப்பட போவது நாளைய வரலாறு.

இது பெரியார் மண்!