வாழ்வின் நழுவி விழும் கணங்களை புல்நுனி தாங்கும் பனித்துளி போல் மனதிற்குள் பத்திரப்படுத்த ஏற்ற கவிதை வடிவம் ஹைக்கூ. இதைப் புரிந்து கொண்டு தங்கள் கற்பனையை வித்தியாசப்படுத்தும் ஹைக்கூ கவிஞராக ச.கோபிநாத் வெளிப்பட்டுள்ளார். கவிதையோடு கதை கூறும் அட்டைப்படத்திலிருந்தே ஹைக்கூ தன் பதிவைத் துவங்கிவிடுகிறது. குழந்தைகளைத் தேடும் கடவுள், எங்ககு கண்டு எடுக்க இயலும்?

சமூகம் சார்ந்தும், அழகியல் சூழ்ந்தும் இக்கவிதைகள் நம்மைக் கவர்ந்து விடுகின்றன. ஹைக்கூவின் பலவீனம் எதுவுமில்லை. ஆனால் தமிழ்ச் சூழுலில் கிளம்பிய இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும்படியாய் ஹைக்கூவை சில கவிஞர்கள் உருமாற்றினாலும், ச.கோபிநாத்தின் சில ஹைக்கூ கவிதைகள் அதைக் பொய்யாக்கி, ஹைக்கூ கவிதைக்கு அர்த்தச் செறிவை கூடுதலாக்கியிருக்கிறது எனலாம்.

மூச்சுத் திணறும்
சாலையோர மரங்கள்
வாகனப் புகை

0
திசை திரும்பின
தாகத்துடன் பறவைகள்
வறண்ட குளம்

***
குழந்தைகளைத் தேடும் கடவுள்
ச.கோபிநாத்
வாசகன் பதிப்பகம்,
11/96, சங்கிலி ஆசாரி நகர்,
சன்னியாசி குண்டு,
சேலம் - 636015
9944391668