புன்னகை - ஜனவரி 2011
விவரங்கள்
சித்திரைக்கனி
பிரிவு:
புன்னகை - ஜனவரி 2011
வெளியிடப்பட்டது: 07 ஜனவரி 2011
நீயே தோழன்!
அச்சிடுக
உன் இலட்சியக்
கனவுகளை
கல்லறையாக்காதே
உன் கனவுகள்
விடிந்தால் மறையும்
நிலவல்ல!
உன்
வெப்பக்கதிர்கள் பட்டு
பனித்துளியாய்
போர்த்தியுள்ள
துயரங்கள் மறையட்டும்
நீ இலட்சியப்
பூவாய் மலர்ந்தால்
உன்னில் தேசம் மணக்கும்
இதை உணர்ந்தால்
நீயே உனக்குத் தோழன்!