மனம் பிசகிய

ஒருவன்

கனவுகளை விற்பனை

செய்து கொண்டிருந்தான்

 

நிஜங்களைப் பறிகொடுத்து

முண்டியடித்துக் கனவுகளை

வாங்கினார்கள்

 

அவனுக்கு ஆசை

ஒன்றிருந்தது எல்லோரும்

கனவுகளோடு

இருக்க

 

யாவரும் கனவுகளில்

கரைந்திருக்க

நிஜமாய் நின்றிருந்தான்

 

இடதுகை சுட்டுவிரல்

நகத்தில் கருப்பு மைப்புள்ளி

சிம்மாசனமிட்டிருந்தது

அனைவருக்கும்.