Life
எதனாலும் நிற்காமலும்
எதுவாகவும் ஆகாமலும்
எப்படிப் போகிறது வாழ்க்கை...?

சடுதியாய்ச் சந்திப்புகள் - குருதிச்
சகதியாய் விபத்துகள்,
எவராலும் தடுக்க முடியாதவையாக
அன்றாடம் நிகழ்கின்றன.

விரும்பியபடியே வாழ்க்கையெனினும்,
வாழ்க்கையின் மௌன ஓவியத்தை
விரும்பிய நிறங்களைக் கொண்டு
வரைய முடிவதேயில்லை !

வாழ்க்கை போகிறது
அதனுடனே நானும்...
சிலவற்றைப் பெற்றுக் கொண்டும்...
நிறைய இழந்து கொண்டும்...


எம்.ரிஷான் ஷெரீப் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It