நூல் அறிமுகம்:

மனசைக் கீறி முளைத்தாய்,

மு.முருகேஷ்,

வெளியீடு: வெளிச்சம், கோவை,

பக்கம் 64. ரூ.20


தமிழ் கவிதைத் தளத்தில் தெம்மாங்கு மொழியின் ஒளித்தீற்றல்களாக ஹைக்கூ கவிதைகளை நமக்கு அள்ளித்தந்த அன்பு கவிஞர் மு. முருகேஷ் அவர்கள் “மனசைக் கீறி முளைத்தாய்’’ என்கிற தலைப்பில் ஒரு நீள் கவிதையும், பல கவிதைகளையும் காதல் கவிதைகளாகவே தந்துள்ளார்.

தன் தோழரின் இரவா காதலுக்கு ஒரு கவிதை கலைக்கோட்டத்தை உருவாக்கியுள்ளார். மனித வாழ்வின் அனுபவங்களில் எவ்வளவோ நினைத்து பார்க்கக்கூட நேரமில்லாமல் போகிறது அவைகளெல்லாம் அந்த நேரத்து வலிகளோடு மங்கி விடுகின்றன.

அதேபோல் காதல் அனுபவங்களும் சிலருக்கு இளமைத் துடிப்புடன் என்றும் மன ஆழத்தில் தங்கி விடுகின்றன. அப்படி நேர்ந்த ஓர் அனுபவத்தை தன் வலியாய் உணர்ந்து அந்த காதல் வடுவுக்கு நினைவுக் கீறலாக கவிதை சரம் தொடுத்து உள்ளார்.

“சந்திக்காமலேயே இதயத்துக்குள் உறைந்து விட்ட காதலின் பதிவு அறிமுகப்படுத்த “புல்லாங்குழலுக்குள் புகுந்த காற்றாகவும் கனவில் முகம்பார்த்து தொலைபேசியின் குரலில் மனம் தோய்ந்து அனுபவத்தை கூறியுள்ளார்.

“மா என்ற எழுத்து நிச்சயம் கொடுத்து வைத்த எழுத்துதான். ஒரே எழுத்து உன்வாயில் இரண்டு முறை உச்சரிக்கப்படுகிறதே--’’ என்று எதார்த்தம் பொங்க கவிதை வார்த்துள்ளார்.

காதல் உணர்வுகளும்\காதல் அவஸ்தைகளும் மனித சமூகத்தில் பிரிக்க முடியாத-வொன்றாக உறவுத் தொடர்-களாக வந்து சேர்ந்து விட்டன. கவிதைகள், காவியங்கள், நெஞ்சை பிசையும் வரலாற்றுக் கதைகள். வரலாற்று நிகழ்வு-களும் நம்மை மோதி சிலிர்க்க வைக்கின்றன. பேதங்கள், ஏற்றத்தாழ்வுகள் களைந்து காதலின் நியாயத்தை உணர வைத்து பதிகின்றன.

இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட காதல் தன் மகுடத்தை அலங்கரித்து கொள்கிறபோது அரசியலில் புகுந்த மதம் காதலையும் விட்டு வைக்காமல் விளாசுகிறது. காதல் தினத்திற்கு மதம் முள்முடி தரித்து பார்க்கிறது.

உலகத்தின் ஒட்டுமொத்த காதலில் ‘குளிர்ந்த நெருப்பு’ அவைகளை புறந்தள்ளிவிட்டு மலர்ந்து கொண்டேதான் இருக்கிறது. வலுவான பேதமற்ற கரங்களில் அதை பாதுகாத்து வளர்க்க வேண்டியும் உள்ளது.நண்பர் மு. முருகேஷ் காதல் குறித்தான தனது அழுத்தமான பார்வையையும், கவிதை இலக்கியப் பதிவுகளில் தனக்கென உள்ள தெளிவான இலக்கையும் இந்தத் தொகுப்பிலும் முன்னிருத்தி-யிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

Pin It