கடலூர் மாவட்டம் மேலும் நஞ்சாகப்போகிறது

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் கடலூர் சிப்காட் வேதியியல் தொழிற்சாலைகளால் கடுமையாக மாசுப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக கடலூர் மாவட்டம் ஏற்கெனவே பதிவாகியுள்ளது.

மேலும் இம்மாவட்டத்தில் நிலக்கரியை எரித்து 8020 மெகா.வாட் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இந்திய ஏகாதிபத்தியம் அனுமதி வழங்கியிருக்கிறது. தமிழக உழவர்கள் நிலங்களை இழந்துள்ளனர். தமிழக மீனவர் வாழ்வாதாரம் மேலும் பறிக்கப்படபோகிறது. தமிழகத்தின் மின்பற் றாகுறை கிட்டத்தட்ட 3000மெகா.வாட் மட்டுமே. உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்திற்கு பயன்பட போவதில்லை.அதன் தீய விளைவுகள் மட்டும் தமிழன் தலையில்!

காற்றும், நிலமும், நீரும், மக்கள் நலமும் கடுமையாக பாதிக்கப்படபோவதை கணக்கில் கொள்ளாமல் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி யுள்ளது.

வாழ்ந்த மக்கள், வளர்ச்சியின் பெயரால் வாழ் விழக்க போகிறார்கள். நெய்வேலி நிலக்கரி சுரங்கத் திற்கு நிலம் கொடுத்தவர்கள் வாழ்விழந்த நிலைமை நமக்கு தெரிந்ததுதான். பன்னாட்டு, இந்நாட்டு பெரும் முதலாளிகள் கொழுக்கப் போகிறார்கள் இதைத் தான் வளர்ச்சி என்கின்றனர் ஆள்பவர்களும் அவர்களது அடிவருடிகளும்.

சுற்றுச்சூழலோடு இயைந்த தமிழன் வாழ்வை வளர்ச்சி என்பதன் பெயரால் இந்திய ஏகாதிபத் தியத்திற்கு பலி கொடுக்க வேண்டுமா?

மக்களை முதன்மைப்படுத்தாத வளர்ச்சியைத் தடுப்போம்

 - மா.கோ.தேவராசன்