நாயைக் காக்க
விலங்கு வதைச் சட்டம்
மானைக் கொன்றால்
வாழ்நாள் சிறை..

ஆனால்
ஓராண்டில்
ஒரு இலட்சம் பேர்
ஒரே நாளில்
ஐம்பதாயிரம் பேர்..

கொத்துக் கொத்தாய்
§வும் பிஞ்சுமாய்
கதறக் கதற
துரத்தித் துரத்தி
ஒளிய வழியற்று
முள்ளிவாய்க்காலே
மயானக் காடாய்..

எவருக்கும் நேராத அவலம்
எதிரிக்கும் கூடாத துயரம்

தமிழர்க்கு கேட்க
நாதியில்லை
தமிழனென்றால்
இப்புவியில் நீதியில்லை..

அனாதை இனமாய்
ஆனதேன் நாம்?

இவ்வுலகத்துக்கே
முதலில் நாம்தான் சொன்னோம்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’..

நமக்கென தோழமையாய்
எவன் வந்தான்?
நம் துயர்க்கண்டு
எவன் நொந்தான்?

எழு தமிழா.. எழு..
அழஅழப் பெற்றாலும்
நாம்தான் பெற வேண்டும்..

நமக்கானத் தீர்ப்பை
நாமே தீட்டுவோம்..
நமக்கான தேசத்தை
நாமே கட்டுவோம்..