தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் சற்றொப்ப 667 சதுர கிலோ மீட்டர் பரப்ப ளவில் மன்னார்குடி பகுதியில் மீத்தேன் எரிவாயுவை எடுப்பதற்காக, கீழை ஆற்றல் பெரு நிறுவனம் -_ “கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட்” (GEECL) என்ற தனியார் நிறுவனத்துக்கு 2010 சூலை 29 அன்று, இந்திய அரசு உரிமம் வழங்கி யது. இதைத் தொடர்ந்து, 2011 சனவரி 4 அன்று, தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, அத்தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

ஆசியாவின் மிகப்பெரும் சமவெளிப் பகுதியான காவிரிப் படுகையின் நீர்வளம், நிலவளம் என அனைத் தையும் அழித்துவிடும் கொடும் விளைவுகளை ஏற் படுத்தும், இம்மீத்தேன் திட்டத்திற்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் மட்டுமின்றி, தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இத்திட்டத்திற்கு எதிராக பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய, இயற்கை வேளாண் அறிஞரும், சூழலியல் போராளியுமான ஐயா கோ. நம்மாழ்வார் அவர்களின் பரப்புரையும், அவரது மறைவைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட பரப்புரைகளும், போராட்டங்களும் இதில் குறிப்பிடத்தக்கவை. ஐயா நம்மாழ்வார் அவர்களே முன்னின்று இத்திட்டத்திற் காக பதிக்கப்பட்டக் குழாய்களை உடைத்தெறிந்து நடத்தியப் போராட்டம், அவர் மறைவுக்குப் பிறகு காவிரிப்படுகை முழுவதும் இத்திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வை மிக வேகமாக கொண்டு சென்றது.

இதன் தொடர்ச்சியாக, பல ஊர்களில் எண்ணெய் நிறுவனம் ஊரில் நுழைய முடியாத நிலை உருவானது. குழாய் பதிக்க முடியாமல் அந்நிறுவனம் தடுக்கப் பட்டது. குழாய் பதிப்பதற்காக நடப்பட்ட அடையாளக் கற்கள் அனைத்தும் பிடுங்கி எறியப்பட்டன. மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் ஆகிய கூட்டமைப்புகள், இப்போராட் டத்தை முன்னின்று ஒருங்கிணைத்தன. மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, இத்திட்டத்திற்கு எதிராக தமிழகமெங்கும் ஒரு கோடித் தமிழர்களின் கையெழுத் துகளைத் திரட்டியது.

இதுபோன்ற அமைப்புகளின் தொடர்ச்சியான பரப்புரை, மக்களி டம் ஏற்படுத்திய விழிப்புணர்வு, போராட்டக் களத்தை சூடேற்றி யது. மீத்தேன் எடுக்கும் தனியார் நிறுவனத்துடன் தமது ஆட்சிக் காலத்தில், ‘புரிந்துணர்வு’ஒப்பந்தம் செய்த தி.மு.க.வையே, போராட்டக் களத்திற்கு இழுத்து வரும் அள விற்கு, மக்கள் எழுச்சி இருந்தது.

இந்நிலையில், கடந்த 11.03.2015 அன்று, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த, பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் எடுப்பதற்காக ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் (GEECL) நிறுவனத் திற்கு வழங்கப்பட்ட அனுமதி, நீக்கப்படுவதாகத் தெரிவித்தார். “கடந்த 03.11.2013க்குள் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான முதற் கட்டப் பணிகளை அந்நிறுவனம் செய்து முடித்திருக்க வேண்டும். ஆனால், அந்நிறுவனம் அதற்கான வேலைகளைத் தொடங்கவே இல்லை. எனவே, அந்நிறுவனத்திற் கான உரிமத்தை நீக்குகிறோம்” என்றார் அமைச்சர்.

குறித்த காலத்தில் பணிகளைத் தொடங்கவில்லை என்ற காரணத்தைக் கூறியே, இந்திய அரசு அந் நிறுவனத்திற்கான மீத்தேன் வாயு எடுப்பதற்கான உரிமத்தை நீக்கி யுள்ளது. இந்தப் பேரழிவுத் திட்டத் தைப் பற்றி தமிழகத்தில் எழுந் துள்ள அச்சம் குறித்தோ, தொடர்ந்து இத்திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட் டங்கள் குறித்தோ எவ்வித கருத் தையும் இந்திய அரசு தெரிவிக்க வில்லை. அதன் அடிப்படையிலும், இம்முடிவு எடுக்கப்படவில்லை.

ஆனால், ஒப்பந்தப்படி அத்தனி யார் நிறுவனம் அளிக்க வேண்டிய வங்கிக்கான உறுதிச் சான்றிதழ், நிதிச் செயல்பாட்டு அறிக்கை உள் ளிட்ட பல ஆவணங்களை வழங்க வில்லை என்பன போன்ற காரணங் களை இந்திய அரசு, அனுமதி நீக்கத்திற்கானக் காரணமாகக் கூறியுள்ளது.

தற்பொழுது, மீத்தேன் எடுக் கும் தனியார் நிறுவனத்திற்கான ஒப்பந்தம் நீக்கப்பட்டது என்பது ஒரு தற்காலிக வெற்றியாக இருந்தா லும், வரவேற்கத்தக்கதே. எனினும், குறிப்பிட்ட காலத்திற்குள் மீத்தேன் எடுப்பதை செய்யக்கூடிய வேறொரு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்யக்கூடிய வாய்ப்பும் உள்ளது என்பதால் நாம் விழிப்போடு இருக்க வேண்டும். இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான நடவடிக் கைகளை எப்போதும் விரைவுபடுத் தும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

மீத்தேன் எடுப்பது என்பது காவிரிப் படுகையின் சிக்கலோ, உழவர்களின் சிக்கலோ மட்டுமல்ல. அது ஒட்டுமொத்தத் தமிழர்களின் சிக்கல் என்பதை உணர்ந்து செயல் படவேண்டும்.

எனவே, காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண் டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் போராட வேண்டும்.

Pin It