உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் மிகுந்த சிறப்புடன் நடந்தேறி உள்ளது. தமிழகத்தின் அரசாங்கம் மற்ற அனைத்து பணிகளையும் நிறுத்தி விட்டு மாநாட்டினை கோலகலமாக பலநூறு கோடி செலவில் செவ்வனே நடத்தி முடித்துள்ளது. பொதுவாக மாநாடு என்றால் திருவிழாபோல் கூடிக்கலையும் இடமாக இன்று உள்ளது. தமிழ் மொழிக்காக தொடர்ந்து எட்டு மாநாடுகள் உலக அளவில் நடைபெற்று உள்ளது. தமிழகத்தில் மட்டும் மூன்று உலக தமிழ் மாநாடுகள் நடத்தி சிறப்பு பெற்றுள்ளது.

       இரண்டாவது ஆண்டு தொன்மைமிக்க வளமான மொழியாக தமிழ் இடதுசாரிகள் ஆரதவு பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் செம்மொழிக்கான அந்தஸ்தை பெற்றது. செம்மொழியாக தமிழ் அங்கரிக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் மாநாடு என்பதால் மொழி அடுத்த கட்ட வளர்சசி இதுவரை என்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டது. என்பதை உரிய முறையில் பரிசிலிக்க வேண்டியுள்ளது.

       தமிழ்மொழியின் வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்ல சங்கம் அமைக்க மதுரையில் ஒதுக்கப்பட்ட இடம் அப்படியே உள்ளது. அதற்கான எந்தவித முயற்சியும் அந்த இடத்தில் செய்யப்பட வில்லை. அதே போல் மொழியின் முன்னேற்றம் அடுத்த தலைமுறையை சென்றடைய கல்வியில் தமிழ் என்பது முழுமையாக சென்றடைய வேண்டும். ஆனால் இன்றைக்கு மருத்துவம் உள்ளிட்ட கல்வியை தமிழ் படிக்க வசதி கிடையாது என்பதோடு 6000 மேற்பட்ட தமிழ் ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ளது. தமிழகத்தில் தான் என்பது குறிடப்பிடத்தக்கது.

       அரசாங்கத்தில் அலுவல் மொழியாக நீதி மன்றத்தில் முழுமையான செயல்பாட்டு மொழியாக கல்வியில் அனைத்து துறையிலும் உயர்கல்வி வரை பயிற்று மொழியாக கணனியில் என பல்வேறு வளர்ச்சி பரிமானங்களை அடைய வேண்டிய நம் தமிழ்மொழி இன்றைக்கும் மிகத் துவக்க கட்டத்திலேயே உள்ளது. எனவே, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அதனுடைய வளரும் தொன்மையும் மேலும் செழுமைப்படுத்திட ஏராளமான செயல்களை தமிழக அரசு செய்திட வேண்டியுள்ளது. அதற்கு மத்திய அரசு உறுதி படுத்திட வேண்டியுள்ளது.

ஏனெனில் மொழி எப்போது மக்களின் தொடர்ந்த பயன்பாட்டில் நிலைக்கிறதோ அம்மொழி நீடித்து நிலைத்து நிற்கும். அம்முறையில் தமிழ்மொழி வளர்த்திட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் மாநாட்டில் போட்டு கலைத்த பந்தல் போல் எந்த பயனையும் தராது.

- இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழு