மாலதியின் அப்பா
கைகுலுக்கவே தயங்கினார்.
அச்சத்தோடு பார்த்தார்
அவளது அம்மா,
கண்டு கொள்ளாமல்
சென்றான் அவள் அண்ணன்.
வேட்டியை மடித்துக் கட்டியபடி
வெளியேறினார்
அரசியல்வாதிபோலிருந்த
அவள் சித்தப்பா.
தேசமிழந்த அகதியைப் போல்
கேட்பாரற்று கிடந்தேன்
நாற்காலி ஒன்றில் நான்.
ஊழல் நாயகனாகவோ...
கூலிப்படை கொலையாளியாகவோ...
எப்படித் தெரிந்தேனோ........
அவரவர் பார்வைக்கு.....
என்னதான் சொல்லித் தொலைத்திருப்பாள்
இந்த மாலதி..........?
என் நண்பன்...... என்பதைத் தவிர !