திருமணிமுத்தாறு சேலம் மாவட்டத்திலுள்ள சேர்வரா யன் மலைத்தொடரில் உற்பத்தியாகிறது. சேலம் மாநகரின் வழியாக செல்லும் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கின் போது நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பரமத்தி, மோகனூர் ஆகிய ஒன்றியங்கள் பயனடையும். இப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள், நீர் நிலை கள் நிரம்பும். பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் செழிக்கும். திருச்சி மாவட்ட எல்லையில் காவிரி ஆற்றில் திரு மணிமுத்தாறினை சேலம் மாவட்டத்திலேயே இணைக்க வேண்டும். வீணாகக் கடலில் கலக்கும் காவிரி உபரி நீரை இதில் திறந்து விடவேண்டும். சரபங்கா, ஐயாறு ஆகியவற்றை யும் இணைத்தால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வளம் பெறும். குடிநீர் பற்றாக்குறையும் நீங்கும்.

எனவே, செத்தமலை ஓரமாக கால்வாய் வெட்டி திருமணி முத்தாற்றினை இணைத்தால் சங்ககிரி வட்டமும், நாமக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளும் பாசனம் பெறும். திருமணிமுத் தாற்றுடன் அருகிலுள்ள நீர்நிலைகளை இணைக்க 1980 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை மூலம் ஒரு திட்டம் தயாரிக் கப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தங்கத்தைப் போல நகைகள் செய்யவும், மின் கருவிகளில் உறுதியான மின்னிணைப்பு தரும் மின் முனைகளாகவும், வெப்ப நிலையை அளவிடும் கருவியாகவும், சுற்றுச் சூழலுக்கு மாசு படுத்தும் கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சை டின் நச்சுத்தன்மையைக் குறைக்கப் பயன்படுவது வெண் தங்கம் எனப்படும் பிளாட்டினம். வசந்தபுரத்தில் இந்திய புவி யியல் ஆய்வுத்துறை முகாம் அமைத்து ஆய்வு செய்து பிளாட் டினம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குன்னமலை, செலுக்கலை, கருங்கல்பட்டி, பாமகவுண்டம் பாளையம், சித்தம்பூண்டி, சின்னாம்பாளையம் ஆகிய பகுதி களில் 25 கிலோமீட்டர் சுற்றளவில் ஏராளமான பிளாட்டினம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுரங்கம் அமைத்து பிளாட்டினம் வெட்டியெடுக்கும் பணிகள் விரைவில் தொடங் கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளாட்டினம் வெட்டியெடுக் கும் சுரங்கம் அமைக்கப்பட்டால் அப்பகுதி வளம் பெறுவதோடு அதனைச்சுற்றியுள்ள பகுதிகளும் வளர்ச்சியடையும். எனவே, பிளாட்டினம் வெட்டி எடுக்கும் பணியை தனியாரிடம் விடாமல் அரசு சொந்தப் பொறுப்பில் செய்ய வேண்டும்.