உழைப்பாளி மக்களின் ஒரு பகுதியாய் இருக்கிற கிறிஸ்துவ தாழ்த்தப்பட்ட! மக்களுக்காக தன் குரலை ஒலிக்கிறது இந்நூல். ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களுக்கல்ல! மதங்கள் மனிதனுக்கு என்ன செய்தன? செய்கின்றன?

உலக அளவில் பெருகிவரும் ஆதிக்கவர்க்கங்களுக்கும், சுரண்டல் முதலைகளுக்கும் பெருமளவில் ஒத்துழைப்பதில்தான் பெரும்பாலான மதங்கள் தங்களை பிழைப்பித்துக் கொள்கின்றன. இந்தியாவில் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகளில் ஒன்றான மதத்தின் வீரியமான கட்டமைப்பாகிய வர்ணாசிரக் கட்டுக்குள் 3000 ஆண்டுகாலமாக மூச்சுவிடமுடியாமல் திணறியபடி கிடந்த காலம் முழுவதும் இது விதிக்கப்பட்டவிதி, எழுதப்பட்ட எழுத்து என மீண்டும் மீண்டும் அமுக்கப்பட்டே வந்தனர். சாதியின் பெயரால் இழிவும், மதத்தின் பெயரால் மண்டியிட வைக்கப்பட்டதும், வெகுதூரத்தில் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டதும் பட்டியல் சாதிமக்களை தாழ்த்தப்பட்ட மக்களை வேறு மதங்களுக்கு துரத்தியது. இந்து வர்ணாசிரமவாதிகள் பதறினர். தங்கள் பிடிதளர்வதை ஒருநாளும் ஒப்புக்கொள்ளாத குடுமிப்பிடிகள் அரசியல் சட்டத்திற்குள்ளும், ஜனாதிபதி ஆணைக்குள்ளும் புகுந்து மிரட்டலைத் தொடர்ந்தனர் இனங்களின் ஆலோசனை கமிட்டி தலைவர், பின்னாளில் காந்தி பெரு முயற்சியெடுத்த வல்லபாய் பட்டேல், பட்டியல் சாதியினரை சிறுபான்மையினராக அங்கீகரித்த இவர்கள் அரசியல் நிர்ணய சபையில் பட்டியல் சாதியினர் சிறுபான்மையினருக்கு வழங்கப் படும் உரிமைகளும் இந்துமக்களுக்கு சிறுபான்மையினருக்கும் வழங்கப்படும் உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டுமென்றும் முன்மொழியப்பட்டது. ஏன்? கேள்விகளை எழுப்பியவர்கள், எழுப்பவேண்டியவர்கள் யார் யார் என வரலாற்றுப் பார்வையோடு, மதங்களின் பிரச்சனையாக மனிதர் களின் பிரச்சனைகளை மாற்றியவர்கள் இன்னும் வாய்ப்பு தேடி அலைகிறார்கள் என்கிற புரிதலோடு படித்துப் பார்க்கப்பட வேண்டிய புத்தகம்.

இங்குள்ள ஒவ்வொன்றின் மீதும் விரலை வைத்துக்கேள் இது இங்கே எப்படி வந்தது. வரலாற்றை அறிந்திடவும், வரலாற்றைப் படைத்திடவும், ஆர்வம் மிக்கோர் வரலாற்றின் சிறுபகுதியாக இந்நூலை வாசிப்பது ஒட்டுமொத்த மனிதகுல விடுதலைக்கான பாதையில் உள்ள தடங்கல்களை அறிய உதவிடும்

ஆசிரியர் : எ.எம்.எம்.எஸ் சேவியர்
வெளியீடு : பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை
விலை : 40 ரூபாய்

Pin It