பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, தமிழ்நாடு இயற்கை வேளாண் அமைப்பு, ரீஸ்டோர், தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு இணைந்து உருவாக்கிய “பாதுகாப்பான உணவு கூட்டமைப்பு”, பி.டி. கத்தரிக்கு எதிரான போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டு விழிப்புணர்வை பரவலாக்குவதிலும், பி.டி. கத்தரிக்கு தடை விதிக்கும் முடிவை நோக்கி அரசை நகர்த்துவதிலும் தொடர்ச்சியாக பங்கு வகித்தன.

பி.டி.கத்தரியை தடுக்க பூவுலகின் நண்பர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் இதர முக்கிய நிகழ்வுகளும்:

2009: புத்தாண்டு தின உறுதிஏற்பு

2009: தைப்பொங்கலை முன்னிட்டு சென்னை புத்தகத் திருவிழா வளாகத்தில் மரபு வழி பொங்கல்-லயோலா கல்லூரி மாணவர்களின் நாடகம், 1500 பேர் பங்கேற்பு

மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - நூல் வெளியிட்டது

தூத்துக்குடியில் நடைபெற்ற பெண்கள் இணைப்புக்குழு மாநாட்டில் கருத்துரை, பொதுக்கூட்டத்தில் பி.டி. கத்தரி ஏன் தேவையில்லை என்ற விளக்க உரை

பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க, மதிமுக கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து பி.டி. கத்தரி ஏன் தேவையில்லை என்று விளக்கியது

“பூவுலகு” இதழ் தொடங்கப்பட்டது; தொடர்ந்து ஒவ்வொரு இதழிலும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான கட்டுரைகள் வெளியிட்டது

தேசிய உணவு பாதுகாப்புக்கான மருத்துவர் குழு (Doctors for Food safety and Biosafety) தொடங்கப்பட்டது. தில்லியில் அதன் முதல் கருத்தரங்கு.

தில்லியில் Center for Sustainable Agriculture நடத்திய மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் தீங்கு குறித்த பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்றது.

2010 சென்னை புத்தகத் திருவிழாவில் பங்கேற்பு, அதை ஒட்டி பி.டி. கத்தரி மற்றும் மாற்று வேளாண் கருத்துக்கள் அடங்கிய பூவுலகின் நண்பர்கள் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் மொழிபெயர்த்த 5 நூல்களின் மறுபதிப்பும், 3 புதிய நூல்களும் வெளியிட்டது. இதில் மு. பாலசுப்ரமணியனின் “உயிரியியல் புரட்சியின் ஒடுக்குமுறை” புத்தகம் குறிப்பிடத்தக்கது.

பி.டி. கத்தரி எதிர்ப்பு சுவரொட்டிகள், பதாகைகள் தயாரிப்பில் கருத்து உதவி

“கத்தரிக்கா” -குறும்படம் தயாரிப்பில் கருத்து உதவி

பி.டி. கத்தரிக்கு தடை விதிக்கக் கோரி தமிழக முதல்வரிடம் நேரில் முறையீடு

தமிழக திட்டக்குழுத் துணைத் தலைவர் திரு. நாகநாதன் அவர்களைச் சந்தித்து விளக்கம்

ஜனவரி 30 -மெரினா கடற்கரையில் ஊர்வலம், ஓரங்க நாடகம், காந்தி சிலை முன் உறுதிமொழி

பெங்களூரில் நடைபெற்ற பொது விசாரணை கூட்டத்தில் பங்கேற்பு

தில்லி தனிமனித உரிமைகள் ஆணைய பயிலரங்கில் பங்கேற்பு

மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அவர்களிடம் நேரடி விளக்கம்

பிப்ரவரி 7: பி.டி. கத்தரிக்குத் தடை தமிழக அரசின் முடிவு அறிவிக்கப்பட்டது

பிப்ரவரி 9: பி.டி. கத்தரிக்கு அனுமதி மறுப்பு மத்திய அமைச்சர் அறிவிப்பு

அமைச்சக அறிவிப்பிலும், இணையதளத்திலும் நமது தகவல், ஆவணங்கள் மற்றும் கோரிக்கை வரிகள் இடம்பெற்றிருந்தன

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பு

 

பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு...

 இரண்டு ஆண்டுகள் முன்பு ஆனந்த விகடன் இதழ் பேட்டி ஒன்றில், “மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நாட்டுக்கு ரொம்ப அவசியம்; அவற்றால் ஏதாச்சும் அரிப்பு வேண்டுமானால் வரலாம். அதான் அவில் மாத்திரை இருக்கே, அதை போட்டுக் கொண்டால் எல்லாம் தீர்ந்தது” என்று பேசிய “அகில உலக வேளாண் சூப்பர் ஸ்டார்” விஞ்ஞானி, போராட்டத்தின் இறுதி தருவாயில் திடீரென கட்சி மாறி, “மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உண்ணப் போவது அரசல்ல, மக்கள்தான். அதனால் மக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்“ என்று பேசினார். இவர் எப்பவுமே இப்படித்தான். ஒற்றை பயிர் நடைமுறை உருவாகக் காரணமாக இருந்த இவர், பசுமைப்புரட்சியால் இந்தியாவில் பட்டினி ஒழிந்தது என்பார்! 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிலைத்த வளர்ச்சி தேவை, பல்லுயிர்களை பாதுகாப்போம் என்பார். எது காசாகிறதோ அதை விற்பவருக்குப் பெயரென்ன?