இரத்த ஓட்டம் சீரடையும்; நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்; நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.

உடல் பருமன் குறையும்; இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, உடல்வலிகள் கட்டுப்படும்.

உடல் இளமையாக இருக்கும்; மனதில் உற்சாகம் பெருகும் ஆயுள் அதிகரிக்கும்; நோய்கள் நெருங்காது.

பனிக்காலங்களில் கழுத்து, காதுகளை சுற்றி நன்கு மூடிக் கொண்டு, காலணிகள் அணிந்து நடைபயிற்சி செய்க.

எவ்வளவு தூரம் நடப்பது என்பது அவரவர் வயது, உடல் நலத்தை பொறுத்தது. குறைந்தபட்சம் 15 நிமிடங்களும் அதிகபட்சம் 1 மணி நேரமும் நடக்கலாம். இளைஞர்கள் 4 முதல் 6 கி.மீ. நடக்கலாம். முதியோர் 2 முதல் 4 கி.மீ. நடக்கலாம். நோயாளிகள் மருத்துவர் ஆலோசனைப்படி நடைப்பயிற்சி செய்யலாம்.