தமிழ் காக்க உண்ணா நோன்பு

 

தமிழ்நாட்டில் குடிசைவீடு முதல் வசதியாளர் வீடு வரையில் உள்ள மழலையர் முதல் வளர்ந்தோர் வரை மம்மி, டாடி என்று சொல்லும் அவல நிலை வந்தது - அது வளர்கிறது - அது நீடித்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது.

  
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது உளவியல் உண்மை. ஆகவே மழலையர் பள்ளி முதற்கொண்டே அவர்கள் உள்ளத்தில் தமிழ் விதைக்கப்பட வேண்டும். தாய்மொழியாம் தமிழ்வழிக் கல்வியே தமிழகத்துக்குரியது.  இதனை வலியுறுத்தித் தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னை மாநகரில் தமிழியக்கம் புரட்சிப் பாவேந்தர் பிறந்த நாளாம் மேழம் மாதம் 16 ஆம் நாள் (ஏப்பிரல் 29ஆம் நாள் - வரும் 29.4.2010) நாளில் காலவரையற்ற உண்ணாநோன்பு மேற்கொள்ள முடிவெடுத்து, அதில் பங்கேற்க உணர்வுள்ள தமிழர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

  
பங்கேற்போர் தங்கள் விருப்பத்தையும் பெயரையும் முகவரியுடன் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன். உண்ணாநோன்பு நடைபெறவுள்ள இடமும் பொழுதும் அடுத்த அறிவிக்கையில் தெரிவிக்கப்படும்.தொடர்புக்கு:
நா.ப. செந்தமிழ்க்கோ, இயக்குநர், தமிழியக்கம், புரட்சிப் பாவேந்தர் இல்லம், அஞ்சற்பெட்டி எண். 115, எண்.27/12, மாசிலாமணி இரண்டாம் தெரு, குயப்பேட்டை, வேலூர் - 632 001. தொலைபேசி: 0416 - 2222511 / கைப்பேசி: 9486051228