Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கவிதை

தூக்கம் மரணித்த இரவொன்றில்....
பரட்டை

விரிந்திருந்த போர்வையினுள்
பொதிக்கப்பட்ட நட்சத்திரங்களுக்கு
முன்னால் மேய்ந்துகொண்டிருக்கும்
மேகங்களில் ஒளிந்துகொண்டு தலைதூக்கும்
நிலவினை ரசித்தபடியோ அல்லது
வெறித்தபடியோ கிடக்கும் என்படுக்கை.

நடுநிசிதாண்டி தெருவோரத்தில்
அழுதுகொண்டிருக்கும் நாயின் குரலுக்கான
காரணத்தை யோசித்தபடியோ அல்லது
திட்டியபடியோ கிடக்கும் என் தனிமை..

அலுவலுக்கான பேருந்துபயணத்தில்
மூதாட்டி ஒருத்தியின் இயலாமையை
தோற்கடித்து பெறப்பட்ட இருக்கையிலிருந்து
நான் தொடுத்த அழைப்பை அவளாவது
துண்டிக்காமல் இருந்திருக்கலாம்..

அந்தக்கிழவியின் இயலாமையை
இருக்கையில் அமரவைத்தாவது
என் துயிலுக்கு உயிர்தந்திருக்கலாம்...


- பரட்டை ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com