இந்திய அரசமைப்புச்சட்டத்தின் தலைமைச் சிற்பி, புரட்சியாளர் அம்பேத்கரின் முழு உருவச் சிலை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நிறுவப்பட்டது. இந்திய நீதிமன்ற வளாகங்களில் - உச்ச நீதிமன்றம் உட்பட - இத்தகையதொரு முயற்சி, இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட, மேற்கொள்ளப்படவில்லை என்பது வியப்புக்குரிய செய்தி அல்ல. தமிழகத்திலேயே அதிக அளவிலான உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட அமைப்பான சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், இந்த முயற்சியை கடந்த...






