நுகர்பொருள் கண்காட்சி, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட கண்காட்சிகளுக்கு முறையே நடுத்தர வயதினர், மாணவர் எனக் குறிப்பிட்ட சில பிரிவினரே சென்று களித்துப் பயனுறுவர். இவற்றுக்குத்தான் மக்கள் கூட்டம் திரண்டு செல்லும். இந்நிலையில், சமுதாயத்தையே முன்னேற்றிச் செல்ல வித்திடும் புத்தகக் கண் காட்சிக்கு மக்கள் வருவார்களா என்ற அய்யம் ஒருபுறம் இருப்பினும், ‘வருவார்கள், வரவேண்டும்’ என்ற நம்பிக்கையால் அந்த அய்யத்தைத் திணறடித்து, வளர்ந்து வந்துள்ளது இன்றைய சென்னைப் புத்தகக் காட்சி. அந்த வளர்ச்சி தமிழ்ச்...








