‘இனவியல்: ஆரியர்-திராவிடர்--தமிழர்' கட்டுரைக்கு எதிர்வினையாக ‘புராணங்கள் வரலாறாகுமா?’ என்ற கேள்வியை புலவர் க.முருகேசன் எழுப்பியிருந்தார் (தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், மே1--15,2011). புரா ணங்கள் உறுதியாக வரலாறில்லை.ஆனால் புராணங்களின் அடிப்படையில் தவறான கோட்பாடுகள் இதற்கு முன்னரே கட்ட பட்டிருந்தால், அப்புராணங்களை குறுக்கு வெட்டு நெடுக்கு வெட்டு செய்து, அக்கு அக்காகப் பிரித்து ஆய்வு செய்ய வேண்டியது ஒரு வரலாற்றாளனின் கடமை.
பல்லவர் வரலாற்றை பாகவத புராணத்திலிருந்து தொடங்குவதாகவும், மனுவை...








