சிட்டுக்குருவியும் சிக்கனத்தார் வாழ்க்கையும்
சிக்கனமாய் வீடுகட்டி சித்திரமாய் வாழ்ந்து கொண்டு
பக்குவமாய் விண்ணேறிப் பாய்வதனால்- இக்கணமே
சிட்டுக் குருவியாகும் சிக்கனத்து வாழ்க்கையரும்
ஒட்டி உறவென்றாய் ஓது
கேழ்வரகின் நெய்யும் கஞ்கரின் கையும்
எடுக்கத்தான் பார்க்கத்தான் எந்நாளும் காணோம்
வடிக்கத்தான் வைக்கத்தான் வந்தால் - தடுக்கித்தான்
காணாது போனதுபோ கஞ்சரின்கை கேய்வரகின்
தேனான நெய்யென்றே தேடு
எறும்பும் உழைப்பாளியும்
தன்னெடைக்கு பல்மடங்கை தான்சுமையாய் தூக்குதலால்
உன்னதமாய் ஓயாமல் ஓடுதலால் - நன்னயமாய்
நள்ளிரவில் தூங்காரோ! நாளும் எறும்பாரே!
வல்லள் உழைப்பவராம் வாழ்த்து
வெளவாலும் பெருங்குடீகாரரும்
கண்ணற்றக் காரணத்தால் கால்மேலாய் நிற்பதுவாய்
புண்ணறவே போய்மோதும் போக்கினிலும் - மண்ணுலகில்
வெளவாலை போலாகி வாட்டும் குடிகாரர்
ஓவ்வாமல் ஒன்றென்றே ஓப்பு
- சிங்கைத் தமிழ்க்கிறுக்கன் (
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
)
| நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க... |
கீற்று இணையதளத்திற்கு படைப்புகளை அனுப்ப இங்கே அழுத்தவும். வேறு எந்த இணையதளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே! நாகரிகமற்ற/பிழையான பின்னூட்டங்கள் குறித்து editor@keetru.com-க்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும். br> br> |
Comments (0)
Joomla components by Compojoom
| < முன் | அடுத்தது > |
|---|








