மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை

கீற்று தற்போது கைப்பேசியில்...

keetru mobile 200

keetru RSS

User Rating: 5 / 5

Star activeStar activeStar activeStar activeStar active
 

இல்லற வாழ்வில் செக்ஸ்என்பது நமது நாட்டில் அருவருக்கத்தக்க வேண்டதகாத வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக்கூடிய ஒரு பிரச்சனையாக உள்ளது. சிக்மண்ட் பிராய்டுஎன்ற உளவியல் அறிஞர் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு எவ்விதம் அவசியமோ அதுபோல ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு தெளிந்த முறையான, இயற்கையோடு ஒத்த மனநிறைவடையக்கூடிய செக்ஸ்இருபாலருக்கும் மிகவும் அவசியம்என்று கூறுகிறார். மேலும் மனிதர்கள் செக்ஸ்உணர்வில் திருப்தி அடையவில்லை என்றால் பல மன நோய்களுக்கும் ஆளாகி தன் நிலை இழந்து சமூக விரோத செயல்களுக்கும் ஆளாகிறான் என கூறுகிறார்.

மேற்கண்ட அவரது கூற்று இன்று நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியாக நடந்து கொண்டு இருக்கின்றது. இன்றைய தினத்தில் தினசரி பத்திரிக்கைகளை திறந்த உடனேயே பாலியல்குறைபாட்டு பிரச்சனைகள் வெளிப்படையாக தெரிகிறது. செய்திதாள்களில், “இரண்டு குழந்தைகளின் தாய் கள்ளக்காதலுடன் ஓட்டம்”. “கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி”, கணவன் மனைவி விவாகரத்து பிரச்சனைகள் இதுபோன்ற செய்திகளுக்கு மூலக்காரணம் யாதெனில் செக்ஸில் இருவரும் மனநிறைவு அடையாததே காரணம். மேலும் பாலியல் குறித்த முறையான அறிவு இல்லாததும்; ஒரு காரணம்.

செக்ஸின் அவசியத்தை வலியுறுத்திதான் முன்னோர்களும் அதனை நாம் வணங்கும் கோவில்களில் சிற்பங்களாக செதுக்கி வைத்துள்ளனர். கோயில்களில் காணப்படும் இதுபோன்ற சிற்பங்களின் முதன்மையான நோக்கம் பாலியல் அறிவு வளரவேண்டும் என்பதற்காகவே இதனை படைத்துள்ளனர். மேலும் காமசூத்திரம்எனும் இயற்கையான முறைப்படுத்தப்பட்ட வழிமுறை நூலையும் எழுதியுள்ளார். ஜாண்புரூக்ஷன்என்ற பாலியல் அறிஞர் செக்ஸ் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை கூறியுள்ளார். அவரது கூற்றில், “ஒரு ஆண் தனது உள்ளத்தாலும், உடலாலும் பெண்ணை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து, தனது ஆண் உறுப்பின் விரைப்புத் தன்மை குறையாமல் (சராசரி 8 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை) உடலுறவில் ஈடுபட்டு ஆணும் பெண்ணும் உச்சக்கட்ட திருப்தி நிலை அடைந்து (சராசரியாக 20 முதல் 30 நிமிடம் வரை) அமைதி பெறுவது”, இத ுவே செக்ஸ் என்பதற்கு தெளிவான விளக்கமாக பல மனோதத்துவ அறிஞர்களாலும் மருத்துவர்களா லும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து ஆகும்.

ஆண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சனை :

இன்றைய காலகட்டத்தில் எது நியாயமான செக்ஸ் உணர்வு எது செக்ஸ் பிரச்சனை என்பதில் படித்தவர்களும் பெரிய மேதைகளும் கூட தெளிவற்ற நிலையில் உள்ளனர். செக்ஸ் பிரச்சனைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான் எனவும் அதுவும் ஆண்மைக் குறைவு ஒன்று மட்டுமே பெரிதாக பேசப்படுகிறது. செக்ஸ் குறை பாட்டை கீழ்க்கண்ட வகையில் வகைப் படுத்தலாம்.

ஆண்உறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடு :

பொதுவாக செக்ஸில் ஈடுபடும் போது ஆணின் பிறப்புறுப்பு சராசரியாக 8 முதல் 15 நிமிடம் எழுச்சி பெற்று இருக்கவேண்டும். பெண்ணுறுப்பில் நுழைந்தவுடன் 3 முதல் 8 நிமிட நேரம் விரைப்பு தன்மை அவசியம். இதில் விரைப்புதன்மை மிக எளிதில் குறைந்து ஆண் உறுப்பு துவண்டு விட்டால் அது குறைபாடு. மேலும் சில நோய்கள் தாக்கப்பட்டவர்களுக்கு விரைப்புதன்மையே இல்லாத நிலை ஏற்படும். உதாரணம் சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு சில நேரங்களில் எழுச்சி இருக்கும். ஆனால் உச்சகட்ட நிலையில் விந்து வெளியாகாமல் போகும் நிலையும் உண்டு. ஒரு சிலருக்கு சிறிய ஆணுறுப்பு அமைந்து விடுவதாலும் செக்ஸ் பிரச்சனைகள் ஏற்படலாம்.

விந்து விரைவாக வெளிப்படுதல் :

பொதுவாக உடலுறவின்போது விந்து வெளியேற 5 முதல் 10 நிமிடங்கள் தேவைப்படுகிறது. அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புஉறுப்பினுள் நுழையும் முன் விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான். இதனை கிராமப்புற மக்கள் நரம்புத் தளர்ச்சிஎன கூறுகின்றனர். இது தற்போது 80% ஆண்களை பாதித்துள்ளது.

இதர குறைபாடுகள் :

செக்ஸ் உணர்வு குறைபாடு. ஆணுறுப்பு விரைப்பில் தாங்கமுடியாத வலி, செக்ஸ் அடிமைத்தனம். எந்நேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல் (இது இருபாலருக்கும் பொதுவானது) இந்த குறைபாட்டினால் தான் நாம் கலாச்சார சீரழிவுகளை சந்திக்கின்றோம்.

சிலருக்கு அதிகமான காம உணர்வு உண்டாகும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையே சேட்டிரியாஸிஸ்என்றும் பெண்ணுக்கு அதிகமாக இருந்தால் நிம்போமேனியாஎன்றும் மருத்துவ உலகில் கூறுகிறார்கள்.

இதுபோன்ற பாலியல் பிரச்சனைகளை மாற்று மருத்துவங்கள் மூலமும், ஆலோசனை மூலமும் குணப்படுத்தி விடலாம்.

பாலியல் நலப்பிரச்சனைகளுக்கு மருந்தில்லா மருத்துவமான அக்குபிரஷர் முறையில் தீர்வு :

பாலியல் பிரச்சனைகளோடு வருகின்றவர்களுக்கு அவர்களது பிரச்சனைகளுக்கு ஏற்ப மருந்திலா மருத்துவ முறையான அக்குபிரஷர் தெரபி மூலம் நல்ல குணம்; பெற செய்யலாம். அக்குபிரஷர் மூலம் உடலில் உள்ள சக்தி நாளங்களை தூண்டுவதன் மூலம் செக்ஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறலாம். ஆண்மைக் குறைபாடு, எழுச்சியின்மை, ஆண், பெண் சுய இன்பப் பழக்க அடிமைத்தனம், இயற்கைக்கு மாறான பாலியல் செயல்பாடுகளை தவிர்ப்பது, ஆண், பெண் மலட்டுத்தன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு அவரவர் உடலில் உள்ள சக்தி ஓட்ட பாதைகளை தூண்டிவிடுவதன் மூலம் அக்குபிரஷர் மூலம் நல்ல தீர்வு பெறலாம்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Add comment


Security code
Refresh