Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

அண்மைப் படைப்புகள்

 

       குழந்தைகளுக்குத் தாய்ப்பால் முக்கியமான உணவாகும். ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது அது இருவருக் குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இந்த நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு இப்படியான பழக்கம் அதிகம் உள்ளது.

       பொதுவாக விரல் சூப்பும் பழக்கம் இப்போது எல்லாக் குழந்தைகளிடமும் இருக்கிறது. மூன்று வயது வரை இந்தப் பழக்கத்தைத் தவறாக நினைக்க வேண்டியதில்லை. அந்த வயதிற்குப் பின்பும் இப்பழக்கம் நீடித்தால், ஒரு ஹோமியோபதி மற்றும் பாச் மலர் மருத்துவ நிபுணரிடம் காண்பித்து சிறப்பு சிகிச்சை அளிப்பது நல்லது.

       குழந்தை விரல் சூப்புவதற்கு மிக முக்கியமான காரணமே தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதுதான் என்கிறார்கள் சில உளவியல் நிபுணர்கள். சிந்தனை அதிகமுடைய குழந்தைகளிடம்தான் விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்.

       பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காத சூழலில்தான் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் நீடிக்கிறது. பெற்றோர்களிடம் நிரந்தர சண்டை இருந்தால் அவர்களின் குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் உறுதியாக இருக்கும் என்கிறார்கள்.

குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வழியில் மன அழுத்தம் ஏற்படும் போது அவை விரல் சூப்புவதைத் தான் விரும்புகிறது. சில குழந்தைகள் ஓய்வுக்காகவும், தூக்கம் நன்றாக வருவதற்காகவும், சில சமயம் பசிக்காகவும் கூட விரல்களைச் சூப்பு கின்றன. நான்கு வயது முதல் 16 வரை விரல் சூப்பும் குழந்தைகளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. 4 முதல் 6 வயதிற்குள் குழந்தையின் பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் முளைக்கத் துவங்கும். இக்காலத்தில் குழந்தைகள் விரல் சூப்பினால் பற்கள் சற்று வெளியே நீளத் துவங்கும். பற்களுக்கு இடையில் இடைவெளி ஏற்படும். இதனால் மற்ற குழந்தை களைப் போல் பற்கள் இல்லாமல் தனக்கு மட்டும் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறதே என்கிற தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இக்குழந்தைகளுக்கு பற்கள் சீராக இல்லாதிருப்பதால் பேச்சிலும் தெளிவு இல்லாமல் இருக்கும்.

       இதுபோல் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு தொடர்ந்து எச்சிலால் விரல்கள் நனைந்து, சோர்ந்து சூம்பிக் காணப்படும். இதனால் விரல்களில் இரத்த ஓட்டம் குறைந்து பழுப்பு நிறமாகி விடும். அதே போல் குழந்தைகளின் விரல்களிலுள்ள அழுக்குகள் உள்ளே சென்று சில நோய்களை ஏற்படுத்தும்.

விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி?

       விரல்களைச் சூப்பும் குழந்தைகளுக்கு அந்த விரல்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்படி ஓவியம் வரைதல், புத்தகங்களைப் படிக்க வைத்தல் போன்ற மாற்று வழிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகள் சிறிது சிறிதாக இப்பழக்கத்தை விட்டுவிடுவார்கள்.

       சில குழந்தைகள் இரவில் தூக்கத்தின் போது கை சூப்பும். இந்நிலையில் பெற்றோர் விரல்களைஎடுத்து விடவேண்டும். இதுபோல் தூங்கும் போது குழந்தைகளின் கையில் ஏதாவது ஒரு விளை யாட்டுப் பொம்மையைக் கொடுத்தால், அந்தப் பொம்மையைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற கவனத்தில் விரல் சூப்பாமல் இருக்கும்.

       விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடு தல் போன்ற வன்முறையான செயல்களைத் தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடை வெளியை துவக்கத்திலேயே அதிகரித்துவிடும்.

       மேலும் விரல் சூப்பும் குழந்தைகளிடம் அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக, அந்த விரல்களில் சூடு போடுவது, குழந்தைகளை அடிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை விட ஹோமியோபதி மருத்துவரிடம் காண்பித்து ஹோமியோ மற்றும் மலர் மருத்துவ சிகிச்சை செய்வதே சிறந்தது. ஹோமியோபதியில் கல்கேரியா கார்ப், கல்கேரியா பாஸ், சிலிகா, நேட்ரம் மூர், பல்சடில்லா, இபிகாக், சக்காரம் போன்ற மருந்துகளும், பாச் மலர் மருத்துவத்திலும் வால்நட், ஒயிட் செஸ்ட் நட், செர்ரிபிளம், செஸ்ட்நட்பட், அக்ரிமோனி, கிளமேடிஸ் போன்ற மருந்துகளும் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற உதவுகின்றன. குழந்தைகளின் உடல், மன அமைப்பிற்கேற்ப ஹோமியோபதியிலும், மன நிலைக்கேற்ப மலர் மருத்துவத்திலும் மருந்துகள் தேர்வு செய்யப்படுகின்றன.

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Babu 2013-02-09 00:07
அம்மா என் குழந்தை முன்று வயந்து ஆகிது. அவள் இன்னும் சரியாக பேசவில்லை. சில வார்தைக பேசுகிறள். நாம் சொல்லதை கவனிக்கமாடாள். she saying well in A to Z, Words, Movie Songs, rhymes (Borth Tamil and English). But my friends are saying this is an mental disorder. Please guide and help me. Babu
Report to administrator

Add comment


Security code
Refresh