மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

“பா.ம.க. ஆட்சி அமைக்க மாற்றுக் கட்சியில் இருக்கும் வன்னியர்களை பா.ம.க. வில் சேர்க்க வேண்டும்''

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் மேற்கண்ட அறிவிப்பைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் வன்னியர்கள் எந்தக் கட்சியில் இடம் பெற்று இருந்தாலும் உடனடியாக ஒரே கட்சியில் அதுவும் அவர் கட்சியில் சேர வேண்டும் என்பது அவரின் விருப்பம். அவரை அனைத்து வன்னியர்களும் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா? இல்லையா? என்பது வேறு விவகாரம். அதற்குள்ளே நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரின் இந்த அறிவிப்பு பகுத்தறிவாளர்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் சாதிப் பற்றாளர்கள் இதனை வரவேற்கக் கூடும்.

எனவே, மருத்துவர் இராமதாசு போல் ஒவ்வொரு சாதித் தலைவர்களும் தனக்கென்று ஓர் அரசியல் கட்சியை முதலில் தொடங்கி மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து, மற்ற சாதிகளின் வாக்குகளையும் பெற்று சில இடங்களைக் கைப்பற்றிப் பதவியில் அமர்ந்து முடிந்தால் ஒரு சிலரை அமைச்சர்களாக்கி சிற்றரசர் அளவிற்கு வசதி வாய்ப்பை உருவாக்கிய பிறகு, மருத்துவர் இராமதாசு போல் தங்கள் கட்சிகளை சாதிக் கட்சிகளாக அறிவிக்கலாம்.

ஒரு காலத்தில் சாதி உணர்வோடு வாழ்ந்த மக்களிடையே ஒருசில தலைவர்கள் தோன்றி அவர்களை அணுகி ஒருங்கிணைத்து ஒரே குரலில் ஓட்டுமொத்த சமூக மேம்பாட்டிற்காகத் தமது சொத்து சுகங்களை இழந்து போராடி ஓரளவிற்குச் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய அந்த மாபெரும் தலைவர்களின் உழைப்பை, தியாகத்தை குழிதோண்டிப் புதைத்து, மீண்டும் புஷ்யமித்ர சுங்கன் தந்த மநுநீதியை நிலை நாட்டத் துடிக்கும் மருத்துவர் இராமதாசு பாராட்டப்படக் கூடியவரே.

அவர் விரும்புவது போல் ஒவ்வொரு சாதியும் தனித் தனி சாதிக் கட்சியாகப் போட்டியிட்டாலும் எந்தச் சாதிக் கட்சியும் ஆட்சியைப் பிடிப்பது சிரமம். மருத்துவரின் எண்ணம் நிறைவேற தமிழகத்தில் தற்போது உள்ள 32 மாவட்டங்களையும் 32 நாடுகளாகப் பிரித்து 252 பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் 76 தாழ்த்தப்பட்ட சாதிகளையும், 36 மலைச்சாதியினரையும் ஆக மொத்தம் 364 சூத்திர சாதிகளையும் 32 சாதிகளாக ஒருங்கிணைந்து, ஒவ்வொரு நாட்டிற்கும் முறையே முதலியார் நாடு, செட்டியார் நாடு, தேவர் நாடு, வன்னியர் நாடு, நாயக்கர் நாடு, கவுண்டர் நாடு, யாதவர் நாடு, உடையார் நாடு, பிள்ளைமார் நாடு, மருத்துவர் நாடு, வண்ணார் நாடு, ஆதிதிராவிடர் நாடு, பறையர் நாடு, அருந்ததியர் நாடு, சக்கிலியர் நாடு, பிராமணர் நாடு எனப்பெயர் சூட்டி அந்தந்த சாதியினரை அந்தந்த நாட்டில் குடியமர்த்தலாம். 

சாதிக்கு ஒரு நாடு என்றும் அந்தந்த சாதித் தலைவர்களை அந்தந்த சாதி நாட்டின் அரசராக நியமிக்க இந்தியப் பாராளுமன்றத்தில் ஒரு சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றலாம். தமிழகத்தைச் சார்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் (புதுவை உட்பட) தீர்மானத்தை முன்மொழிந்து பேசலாம். அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலோர் சாதி உணர்வாளர்களே என்பதால் இதனை எதிர்த்து எவரும் பேசமாட்டார்கள். எதிர் காலத்தில் ஒவ்வொரு மாநிலமும் இதனைப் பின்பற்றலாம் என்று அறிவித்தால் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிச்சயம் வெற்றி பெறும்.

1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது சுமார் பத்து லட்சம் மக்கள் மதவெறியால் கொல்லப்பட்டனர். அதுபோல் இம்முறை சாதி வெறியால் எவரும் கொல்லப்படாமல் பாதுகாக்க முன் எச்சரிக்கையாக இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்களிடம் போதுமான பாதுகாப்பு தரக் கோரலாம். தீர்மானம் நிறைவேறினால் எதிர்காலத்தில் அவரும் சிவகங்கை எனும் செட்டியார் நாட்டில் குடியமர வேண்டியவர்தானே. எனவே நிச்சயம் உதவுவார்.

சாதி அரசர்களின் முடி சூட்டு விழாவைத் தலைமை ஏற்று நடத்தித் தர இந்து மத தலைவர்களான, கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சங்கராச்சாரி ஜெயந்திர சுவாமியையும், பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நித்தியானந்த சுவாமியையும், ஆந்திரா போதை புகழ் கல்கி சுவாமியையும் அழைக்கலாம்.

இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை முன்னிலை வகிக்கவும், மத்திய அமைச்சர்களைச் சிறப்பு விருந்தினராகவும் அழைக்கலாம். இவர்களில் எவரேனும் சாமியார்களின் காலில் விழுந்து கும்பிட்டு முடி சூட்டு விழாவின் முக்கியத்துவத்தை கெடுத்துவிடாமல் தடுத்திட சாமியார்களைச் சுற்றி கறுப்புப் பூனைப் படைகளை நிறுத்தலாம்.

முதலில் விழுப்புரம் மாவட்டத்தை வன்னியர் நாடாக அறிவித்து மருத்துவர் இராமதாசு அவர்களை அரசராகவும், அவர் மகன் அன்பு மணியை அரசக் குமாரனாகவும் பதவி ஏற்க வைத்து விழாவைத் தொடங்கலாம்.

சாதிக்கு எதிராகப் போராடி மறைந்த தலைவர்களின் நிழற்படங்களையும் அவர்களின் நூல்களையும், தடை செய்யலாம், சிலைகளையும் தகர்த்தெறியலாம்.

தற்போது தமிழகத்தில் சாதிக்கு எதிராக நாத்திகம் பேசித் திரியும் சுயநலவாதிகளைக் கழுவேற்றிக் கொல்லலாம் அல்லது பொது மன்னிப்பு வழங்கி ஏதாவதொரு சாதி நாட்டில் தஞ்சம் புகுந்து பிழைத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.

இப்படிச் செய்தால் சாதி இன்னும் அய்யாயிரம் ஆண்டுகள் நிலைத்துப் போற்றிப் பாதுகாக்கப்படும். .....

வாழ்க சாதிகள்! வெல்க சாதிக் கட்சித்தலைவர்கள்!