தமிழ்நாடும், தமிழர்களும், தமிழும் மிகப்பெரும் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு முதலாளி களாலும், இந்தியப் பெரு முதலாளிகளாலும் தமிழ்நாடு சுரண்டப்பட்டும், சூறையாடப்பட்டும் நலிந்து கிடக்கிறது.

இந்தியப் பார்ப்பனிய அதிகார கும்பல்களால் தமிழர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகின்றனர். தமிழக அரசியல் வரலாறெல்லாம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்மொழி கல்விநிலையில் மட்டுமன்றி, ஆட்சி நிலையில், அதிகார நிலையில், வழக்குமன்ற நிலையில், வழிபாட்டு நிலையில் என அனைத்து நிலைகளிலும் மறுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்படுகிறது ...

தன் இறுதி மூச்சைப் பிடித்துக்கொண்டு உயிர்த்திருக்கும் நிலையில் தமிழ்நாடும், தமிழினமும், தமிழ் மொழியும் உள்ளன.

இந் நிலையில் ஆரியப் பார்ப்பனியத்தையும், இந்திய வல்லாட்சியையும், பன்னாட்டுச் சூறையாடல்களையும் தமிழ் நாட்டிலிருந்து விரட்டியாகவேண்டிய நிலையில் இவற்றின் மீது அக்கறை கொண்ட இயக்கங்களுக்கான கடமைகள் உள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் இயங்குகின்ற பல இயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு வகை முயற்சியில் தனித்தனியே இயங்கிக் கொண்டிருக்கிற நிலை யில், இந்தியப் பார்ப்பனிய அதிகார வகுப்பை எளிதே எதிர்க் கவோ வீழ்த்தவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை இந்தியப் பார்ப்பனிய அதிகார வர்க்கத்திற்குப் பெரும் ஆக்கமாகப் போய்விடுகிறது.

இந்தியப் பார்ப்பனிய அதிகார வர்க்கத்தை வீழ்த்தாமல், அதனோடு ஒட்டி உறவாடிக் கூட்டுச் சேர்ந்திருக்கிற பன்னாட்டுச் சுரண்டல் அதிகாரங்களையும் எதிர்க்காமல் தமிழ்நாட்டின் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைப் பெற்றெடுக்க முடியாது. தமிழ்நாட்டு உரிமைகளை மட்டு மல்ல, இந்தியாவில் அடைக்கப்பட்டிருக்கிற எந்த மொழித் தேசங்களின் உரிமைகளையும் எவரும் பெற்றுவிட முடியாது.

எனவே, தமிழ்நாட்டளவில் அந்த அதிகார வகுப்பினரின் ஆளுமையை வீழ்த்துவதற்கு இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் வேண்டும் எனும் பெரும் இலக்கோடு ஒருங்கிணைக்கப்படுகிற ஒரு தொடக்க முயற்சியாகவே, பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பு - தொடங்கப்பட்டிருக்கிறது.

தமிழர்களின் இன உரிமை மீட்பு என்பது பல நூற்றாண்டுக்கால முயற்சி என்று சொன்னாலும், நாட்டளவில் தமிழ்நாட்டை அடையாளப்படுத்தித் தமிழ்நாட்டு உரிமைகளோடு இணைத்து எழுச்சி கொண்ட இயக்க முயற்சிகளுக்கு எண்பதாண்டுக் கால வரலாறு உண்டு.

1938-ஆம் ஆண்டு தமிழக வரலாற்றில் முகாமை யான ஆண்டாகும் என்பதை அனைவரும் அறிந் திருக்கிறோம். அன்றைக்கு ஆரியப் பார்ப்பனிய வெறியோடு குலக்கல்வியைத் திணிக்கிற நோக் கோடு, இந்தியைக் கட்டாயப்படுத்தித் திணித்த ஆட்சியை எதிர்த்துத் தமிழகமே அணிதிரண்டிருந்த காலம் அது ...

வேறுபட்ட கொள்கைகள் கொண்டிருந்த இயக்கங்கள் எல்லாம் தமிழ்மொழி காக்க, தமிழினம் காக்க ஒரே மேடையில் ஒரே குரலாய் ஓங்கி ஒலித்த ஒரு பெரும் நிகழ்ச்சியை அடையாளப்படுத்திய ஆண்டு அது.

தமிழ்க் கடலாய் அதேபோது சமயச் சார்பின ராய் இருந்த மறைமலை அடிகள் மற்றும் சோம சுந்தர பாரதியார், தந்தை பெரியார், கி.ஆ.பெ. விசுவநாதம், குமாரசாமி, பட்டுக்கோட்டை அழகிரி சாமி, திருமலைச்சாமி - என எண்ணற்ற தமிழ் அறிஞர்களும், சுயமரியாதை இயக்கத்தவர்களும் தங்களுக்குள் வேறுபாடு கொண்டிருப்பினும் தமிழ் மொழி காக்க, இனம் காக்க ஒருங்கிணைந்து போராடினர் ... சிறை சென்றனர் ... தமிழ்நாடு தமிழருக்கே என்று ஓங்கி முழங்கினர் ...

அவர்கள் எல்லாம் அவ்வாறு முன்னெடுத்துக் களம் கண்டு போராடி இன்றைக்கு 80 ஆண்டுகள் ஆகிவிட்டன ...

ஆனாலும் ஆரியப் பார்ப்பனியம் வலுப்பெற்று இருக்கிற அளவில், அதிகாரம் கொண்டிருக்கிற அளவில் அதை எதிர்ப்பதான இயக்கங்கள் வலுப் பெறவில்லை ... அதிகாரம் பெற்றிருக்கவில்லை...

அன்றைய தமிழ்நாட்டு விடுதலைக்கான முன் வைப்பு இன்றைக்கும் அப்படியே கிடக்கிறது ...

அன்றைக்கு இருந்த உரிமைகள் அளவில் கூட இன்றைக்கு உரிமைகள் தமிழர்களிடம், தமிழ் நாட்டிடம் இல்லை; நிறைய இழந்திருக்கிறோம்...

கனிம வளங்கள், தொழில் வளங்கள், நில வளங்கள் என எல்லாமும் வெளிநாட்டு நிறுவனங் களுக்கும், இந்திய அரசு அதிகாரங்களுக்கும் கை மாறிவிட்டன ...

கல்வி உரிமை பெரும்பகுதி இந்திய அரசுக்குப் போய்விட்டது...

தமிழ் மருத்துவம் படிக்கவேண்டும் என்றாலும் இந்திய அரசு இசைவு இருந்தால்தான், அதுவும் சமசுக்கிருத மொழிக் கலப்பில்தான் படிக்க முடியும் ... தமிழ்நாடு அரசு அதில் தலையிட முடிவதில்லை ...

சென்னைக் கோட்டைக்குட்பட்ட அதிகாரம் இந்திய அரசுக்குப் போய்விட்டது ... அதில் கொடி ஏற்றுகிற, அதுவும் இந்தியக் கொடி ஏற்றுகிற உரிமைக்கே படாத பாடுபட்டுப் போராடி வாங்க வேண்டியதாயிற்று ...

தமிழ்நாட்டு வரலாற்றுச் சிறப்புமிக்கக் கீழடியை ஆய்வு செய்கிற உரிமை தமிழ்நாட்டு அரசுக்கு இல்லை ...

இந்திய அரசு நம் வரலாற்று எச்சங் களைப் பிரித்து மேய்ந்து, குத்திக் குதறி அழித்து மூடு கிறது ...

3000 ஆண்டு இலக்கியச் செழுமை படைத்த உலகின் பழமை வாய்ந்த நம் தமிழ் மொழி, இந்தியப் பார்ப்பனியத்தால் நீச பாசையாகப் புறக்கணிக்கப்படுகிறது ...

இவற்றையெல்லாம் மாற்றும் வழி என்ன? மாற்றுவோர் யார்? எப்படி மாற்றுவது?

இதற்கான வழித் தேடல்களில் ஒருவரோ, ஓர் இயக்கமோ, ஒரு கட்சி மட்டுமோ செயல்பட்டுத் தீர்மானித்துவிட முடியாது.

வலுப்பட்டிருக்கிற இந்தியப் பார்ப்பனிய அதிகார வகுப்புகளை வீழ்த்த வேண்டுமானால், அதை விளங்கிக் கொண்ட இயக்கங்கள் எல்லாம் இணைந்து மக்களைத் திரட்டி மிகப் பெருமளவில் வலுப்பட வேண்டும்.

அப்படியாக ஒருங்கிணைவதான நிகழ்வு திடு மென ஒரே நாளில் நடந்துவிடமுடியாது ...

இந்த இடத்தில் இன்னொன்றையும் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

பெரியாருக்கு முன்பு இயங்கி வந்தவர்கள் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பரசியல் பேசி வந்தவர் களானாலும் இந்தியத்தையும், பார்ப்பனியத்தை யும் இணைத்து எதிர்த்து வந்தவர் பெரியாரே.

இந்திய விடுதலை நாளையும், குடியரசு நாளையும் இழவு நாள்களாக அறிவித்தவர் அவர் ஒருவரே ...

ஆரியப் பார்ப்பனியம் தனக்கென இந்திய அர சமைப்பைத் தன்வயப்படுத்தி இந்தியமே ஆரியப் பார்ப்பனியம் என்பதாக ஆட்சி செய்து கொண்டு வரும் நிலையில், இந்திய எதிர்ப்பில்லாமல் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு இல்லை என்பதையும், ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு இல்லாமல் இந்திய எதிர்ப்பு இல்லை என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஆக, இந்தியத்தை அதன் ஆரியப் பார்ப்பனி யத்தை எதிர்ப்பது என்பது எந்த வகையிலும் இந்திய அரசதிகாரத்தோடோ, பார்ப்பனியத் தோடோ சறுக்கல் இல்லாத நடைமுறையைக் கொண்டது.

அந்த வகையில் ஆரிய பார்ப்பனியத்தையும், இந்தியத்தையும் எதிர்த்து அவற்றின் பாசிசப் போக்கை எதிர்க்கவேண்டிய இக் காலச்சூழலில் பெரியார் நமக்குப் பெரும் ஆற்றலாய் முன் நிற்கிறார்...

அவ்வகையில், இன்றைக்குக் காலத்தின் தேவை யாய் ஆரியப் பார்ப்பனியத்தை அதன் இந்தியத்தை முதன்மை எதிரிகளாய் நிறுத்திச் செயல்படுகிற பெரியாரிய இயக்கங்களைத் தோழமைப்படுத்திக் கொண்டு தமிழ்த்தேச இயக்கங்கள் களம் காண்பது காலத்தின் இன்றியமையாதது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அவ்வகையில், காலத்தால் பேரெழுச்சி கொள்ளு கிற அளவில் பெருந்திரளாய்த் தமிழர்கள் ஒருங் கிணையும் சூழலுக்கான அடித்தளமாய் இன்றைக் குப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பாய் ஒருங் கிணைந்திருக்கிறோம் ...

தமிழ்நாட்டு உரிமை விடுதலைக்கு, சாதிய இழிவுகளின் ஒழிப்பிற்கு, பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களுக்கான வழிகாட்டியாய் நமக்குப் பெரியார் மிகப்பெரும் அடையாளமாகவும் முன் னோடியாகவும் இருக்கிறார்.

பெரியாரின் கருத்துகளும் செயற்பாடுகளும் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பையும் சாதிய இழிவு ஒழிப்பையும், தமிழ்நாட்டு உரிமை மீட்பையும் நமக்கு அடையாளப்படுத்தியிருக்கிற சூழலில்தாம், பெரியாரிய உணர்வாளர்களாய் ஒருங்கிணைந்து கூட்டமைப்பாய் நாம் திரண்டிருக்கிறோம் ...

திருவள்ளுவரின் அற கருத்துகளோடு ஊன்றி யவர்கள் நாம் ... வேத மனுதர்மங்களின் கருத்து களை வெளி யேற்றும் உணர்வு படைத்தவர்கள் நாம் ...

மறைமலையடிகளாரின் தமிழில், பாவாணரின், பாவேந்தரின், பெருஞ்சித்திரனாரின் தமிழோடு, தமிழிய உணர்வோடு, தமிழ்நாட்டுரிமை மீட்பு உணர்வுகளோடு உறவாடி உரம் பெற்றவர்கள் நாம் ...

அயோத்திதாசப் பண்டிதரின் கருத்தில் அம்பேத் கரின் அடித்தளத்தில் செழுமைப்படுத்திக் கொண் டவர்கள் நாம் ...

மார்க்சிய ஒளியில் அறிவியல் வழியில் அறிவைப் பகுத்தாயும் திறன் கொண்டிருப்பவர்கள் நாம் ...

இன்றைக்கு இந்த வகையில் திரட்சியாய் இணக் கமும் வலுப்படுத்தமும் கொண்டிருக்கிறோம்...

தொடர்ந்து நம் கொள்கைகளை மேலும் வலுப் படுத்தும் பெரும் முயற்சியில் நம் எதிரிகளை வலுவிழக்கவும் ஆட்டம் காணவும் வைப்போம்...

நம் நாடு தமிழ் நாடு, இங்கு ஏதடா இந்து நாடு என்று ஆரியப் பார்ப்பனியத்தை அதிரவைப்போம் ...

நம் போர்க்குரல்கள் ஈட்டியாய் இந்தியப் பார்ப்பனியத்தின் செவிப்பறையைக் கிழிக்கட்டும் ...

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமென்று பரணி பாடுவோம் ...

இடக்கு செய் ஆரிய இனக் கொழுப்பு உருக்கிட

வடக்குக் கதவினை இறுக்கிப் பூட்டுவோம்!

திருச்சி, தமிழருக்குத் திருப்பு முனையாகட்டும்! ...