• கரியமில வாயுவை 35 சதவீதம் குறைக்க இலக்கு; உலக நாடுகள் வியக்கின்றன. - பிரதமர் மோடி

ஓ - இத்தனை சதவீதம்கூட கதை விட முடியுமா என்று வியந்திருப்பார்கள்!

• தமிழக எம்.பி. சு. வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அமைச்சர் இந்தியில் பதில் கடிதம். - செய்தி

அவர் இன்னும் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளவில்லை; வருங் காலத்தில் திருத்திக் கொள்வார்.

•செல்போன் கதிர்வீச்சில் இருந்து காப்பாற்ற ‘மாட்டு சாணத்தில் சிப்’. - மத்திய கால்நடைத் துறை அறிமுகம்

இப்போது ‘சிப்’ மட்டும்தான். அடுத்து மாட்டுச் சாண செல்போன் வரப் போகிறது!

•கார்ப்பரேட்டுகளால் திவாலாக்கப்பட்ட லட்சுமி விலாஸ் வங்கி, வெளிநாட்டு டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்கப்படும்.

- ரிசர்வ் வங்கி

‘லட்சுமி’யையே நாடு கடத்துகிறீர்களே, நியாயம் தானா?

•15,000 கோடி செலவில் பங்களா - முகேஷ் அம்பானி படங்களை வெளியிட்டார். - செய்தி

இந்தத் தொழில் வளர்ச்சிக்கு வங்கிகள் கடன் கொடுத்திருக்கிறதா?

-விடுதலை இராசேந்திரன்

Pin It