அணிவகுக்கும் பட்டியல்கள்... ஆதாரங்களுடன்...

பா.ஜ.க., லஞ்சம் வாங்காத ஊழல் செய்யாத உலக உத்தம கட்சி என உலகம் முழுக்க பொய் பேசி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் அவர் கட்சியும், அவரும் ஊழலில் செய்தே திளைத்தவர்கள். பா.ஜ.க. செய்யும் ஊழலில் நாட்டின் பணம் மட்டுமல்ல, இந்த நாட்டின் சாமான்ய மக்களின் உயிரும் ஆயிரக்கணக்கில் பலியாயிருக்கிறது. அந்த ஊழல்களின் பட்டியல்களில் சில:

2003 - 40 ஏக்கர் நில மோசடி - மோடியின் குஜராத் ஊழல் : குஜராத் மாநிலத்தின் கட்ச் நகரத்தில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை அலுமினியா  ரிஃபைனரி லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு, மோடி முதலமைச்சராக இருந்த போது வழங்கினார். இதில் சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

2003ஆம் ஆண்டில் எந்த காரணத்திற்காக நிலம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பபட்டதோ அந்த பணியினை பத்தாண்டுகள் ஆகியும் தொடங்கக் கூடவில்லை. இந்த நிலத்தின் மதிப்பு 2008ஆம் ஆண்டில் 4.35 கோடி. ஆனால் இதில் நான்கில் ஒரு பங்கை மட்டும் பெற்றுக் கொண்டு நிலம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட் டிருக்கிறது. (Economic Time 24.1.2014 )

2005 - ஹட்கோ ஊழல் : முன்னர் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த போது நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்த ஆனந்த குமார் மீது, மத்திய இலஞ்ச ஒழிப்புத் துறை ஹட்கோ மூலம் 14,500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டியிருக்கிறது.

அவுசிங் அண்ட் அர்பன் டெவலப்மெண்ட்  கார்ப்ப ரேஷன் (ஹட்கோ) மூலம் ஒரே நாளில் 50 தனியார் நிறுவனங் களுக்கு ரூ.5000 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் குமார் அமைச்சராக இருக்கும்போது தனிப்பட்ட செலவான மொபைல் பில் உட்பட பல நடவடிக்கைகளை அரசு நிதியில் இருந்து தான் செய்து வந்தார் என்றும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.  (The Hindu 30/8/2005 - Economic Times 17/7/07 )

2006 கூட்டுறவு ஊழல் - சத்திஸ்கர் : சத்திஸ்கரில் உள்ள கூட்டுறவு வங்கி, இந்திரா பிரியதர்சினி நகரிக் ஷக்காரி பேங்க் ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 2006ஆம் ஆண்டு முக்கிய குற்றவாளியாக சின்ஹா மற்றும் வங்கியின் நிர்வாகஸ்தர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சின்ஹாவிற்கு நார்கோ அனாலிஸ் (உண்மை கண்டறியும் சோதனை) டெஸ்டின்போது எடுத்த காணொளி ஊடகங்களில் வெளி வந்தது.

அந்த காணொளியில் சத்திஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங்கிற்கும் அவரது அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் இருவருக்கும் கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுத்ததாக சின்ஹா கூறுகிறார்.

modi smuglling 6002007 ஆகஸ்டா விமான ஊழல் வழக்கு : ஆகஸ்டா 109, வி.ஐ.பி.க்கள் பயணிக்கும் பிரத்யேக ஹெலிகாப்டர் 2007ஆம் ஆண்டு சத்திஸ்கர் அரசால் வாங்கப்பட்டது. வேறு எந்த நிறுவனங்களையும் கலந்துரையாடாமல் ஆகஸ்டா என்ற தனி நிறுவனத்திற்கே இந்த டெண்டர் கொடுக்கப்பட்டது. இதற்கான 30 சதவீதம் கமிஷன் பணம் தவறான முறையில் 1.57 மில்லியன் டாலர் முன்னதாகவே கமிஷன் என்ற பெயரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊழலை முன்னின்று செய்தவர்கள் சத்தீஸ்கரின் முதலமைச்சராக இருந்த ராமன் சிங்கும், அவரது மகன் அபிஷேக் சிங்கும் தான் என்று தெரிய வந்தது. சிஏஜி அறிக்கையின்படி, இந்த ஒப்பந்தம் மூலம் ரூ.65 கோடி பணம் அரசாங்க நிதிக்கு இழப்பை தந்திருக்கிறது என்கிறது. (The Wire 14/2/18) (டைம்ஸ்ஆப் இந்தியா (TOI) 16/11/17)

2008 - மத்திய பிரதேச வறட்சி ஊழல் : 2008ஆம் ஆண்டு மத்தியில் இருந்த காங்கிரஸ்அரசு உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச பகுதிகளில் வறட்சியில் நிலவும் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக மொத்தமாக ரூ.7400 கோடி ரூபாயை ஒதுக்கியது. அதில் மத்திய பிரதேச அரசுக்கு 3760 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பிறகு, மத்திய பிரதேசத்தில் அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க. இந்த தொகையில் ரூ.2100 கோடி ரூபாய் அவர்களின் முன்னேற்றத்திற்காக செலவிடப்பட்டதாக கூறியது.

ஆனால் உண்மை என்னவென்று கோப்ரா போஸ்ட் என்ற பத்திரிகை ஆய்வு செய்து வெளியிட்டது. அதில் வறட்சியில் இருந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து அவர்களுக்கு எந்தவொரு முன்னேற்றத்திற்கான ஏற்பாடு களும் செய்து தரவில்லை.  அதற்கு மாறாக அவர்கள் அதிகாரிகளின் மூலமாக மேலும் அதிகமாக துன்புறுத்தப்பட் டிருக்கிறார்கள் என தெரிய வந்தது.

வறட்சி நிலைமையில் பேரழிவை சந்தித்து வந்த மக்களின் முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்ட நிதியை ஊழல் செய்து பங்கீட்டுக் கொண்டது மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு.

- (TOI 26.3.18) (The Wire 23.11.18 )

2009 மோடி - குஜராத் பெட்ரோலியம் ஊழல் : குஜராத் மாநில பெட்ரோலிய வாரியம் (GSPC) என்ற நிறுவனம் 1979களிலிருந்து குஜராத் அரசின் கீழ் இயங்கக் கூடியது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தமான பணிகளை செய்யக் கூடிய நிறுவனம் இது.

2002ஆம் ஆண்டிலிருந்து கிருஷ்ணா கோதாவரி நதிப் படுகையில் எரிவாயுவுக்கான சோதனையை நடத்தி வந்தது.

26, ஜூன் 2005ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி, இந்த பெட்ரோலிய வாரியம் இந்தியாவின் மிகப் பெரிய எரிவாயு இருக்கும் வளத்தை கோதாவரி நதிப் படுகையில் கண்டுபிடித்திருப்பதாகவும், இது ஒன்றே இந்தியாவுக்கான தேவையை நிவர்த்தி செய்யும் என்றும் கூறினார். அத்துடன் 1500 கோடியை முதலீடு செய்வதன் மூலம் 2007ஆம் ஆண்டு இங்கு எரிவாயு உற்பத்தி தொடங்கும் என்று அறிவிப்பு செய்தார்.

ஆனால் 2009க்கு பிறகு இதற்கான அனுமதி பெற்றதும், தொடங்குவதற்கு 8465 கோடி தேவைப்படும் என்று சொல்லப்பட்டது. இது 2005இல் மோடி சொன்ன தொகைக்கு 90 சதவீதம் அதிகமானது. 1500 கோடியிலிருந்து 8500 கோடிக்கு மாறியது. தற்போது வரை இந்த நிறுவனம் எந்தவொரு தயாரிப்புகளையும் தொடங்கவில்லை. ஆனால், 2015 வரை மட்டும் பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து 19716 கோடி கடனாக வாங்கியிருக்கிறது. 2015ஆம் ஆண்டு வட்டி மட்டும் 1800 கோடி கடனாக வங்கிகளில் இருந்தது.

3000 கோடி மட்டுமே செலவு செய்திருப்பதாக கணக்கு காட்டியிருக்கும் நிறுவனம் இதர செலவுகளில் மற்றதை சேர்த்திருக்கிறது. இதன் மூலம் குறைந்தது 15,000 கோடிக்கு மேல் இதில் ஊழல் நடந்திருப்பது தெரிய வருகிறது.

= (Firstpost 09.12.17) (NDTV 09.5.16)

மீன் பிடி ஊழல் : மோடி குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது அவரது அமைச்சர் புருஷோத்தம் சொலான்கி 400 கோடி ரூபாய் ஊழலை மீன்வளத்துறையில் செய்திருக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறார். 2009ஆம் ஆண்டு மீன்வளத் துறை அமைச்சராக இருந்தபோது 58 குளங்களில் மீன்பிடிக்க அனுமதி தரும் டெண்டரில் 200 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார் என வழக்கு நடந்து வருகிறது.

2010 - மகா கும்பமேளா ஊழல் - உத்தரகாண்ட் : மத்தியில் இருந்த காங்கிரஸ்அரசு 2010ஆம் ஆண்டு உத்தரகாண்டில் நடக்கும் கும்பமேளாவிற்கு 565 கோடியை ஒதுக்கீடு செய்தது. ஆனால் மாநிலத்தில் இருந்த பா.ஜ.க. அரசு இதிலிருந்து 200 கோடியை தனியே எடுத்து விட்டு 300 கோடியை மட்டும் வைத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்தது. இதனால் செய்யப்பட்ட ஏற்பாடுகளில் எல்லாம் அரைகுறை நிலையிலேயே இருந்தது தெரிய வந்தது.

பிறகு தகவல் அறியும் சட்டத்தின் மூலம், இந்த கும்பமேளா நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாநில அரசு 380 கோடி தான் செலவு செய்தது என்று தெரிய வந்தது. மீதமான 180.07 கோடி பற்றி எவ்வித தகவலும் இல்லை. (India Today 1.4.2015)

ஆன்மிகத்தை கூறி அரசியல் நடத்தி வரும் பா.ஜ.க. எதிலுமே நேர்மையாக இருப்பதில்லை. பல இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் ஆன்மிக விழாக் களிலேயே ஊழல் செய்திருக்கிறது.

ரெட்டி சகோதரர்கள் ஊழல் - சுஷ்மா : ரெட்டி சகோதரர் களின் ஊழலுக்கு பா.ஜ.க. அரசும், இன்றைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மாவும் எந்தளவு பக்கபலமாக இருந்தார்கள் என்பது வெட்ட வெளிச்சமானது.

காவல்துறை அதிகாரிகள் முதன்முதலில் ரெட்டி சகோதரர்களின் வீட்டுக்குள் நுழையும்போது தான் ரெட்டி சகோதரர்களை பற்றி நாடு தெரிந்து கொண்டது. பல ஏக்கர் பரப்பளவில் வீடு, வீட்டினுள் மட்டும் 50  அறைகள், குண்டு துளைக்காத பாதாள அறை, மூன்று ஹெலிகாப்டர்கள், வீட்டை சுற்றி பாதுகாப்புக்கு மட்டும் 100 பேர், வீட்டினுள் இருக்கும் தங்க நாற்காலியின் விலை மட்டும் 2.2 கோடி ரூபாய் என எவரும் மலைத்து போகும் வசதிகளுடன் வாழ்ந்தனர் ரெட்டி சகோதரர்கள்.

கர்நாடகத்தில் உள்ள பெல்லாரியின் இரும்பு சுரங்கங்கள் சூறையாடப்பட்டதிலிருந்து தான் ரெட்டி சகோதரர்கள் இந்தளவுக்கான வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் என்பது கர்நாடக மக்கள் அனைவரும் அறிந்ததுதான். பண அதிகாரம் மட்டுமல்ல அரசியல் அதிகாரம் கூட அவர்களிடமே இருந்தது. கர்நாடகாவில் முதன்முறையாக பா.ஜ.க.வின் இந்து இராஜ்ஜியம் அமைய “ஆபரேஷன் தாமரை”யை நடத்தி கொடுத்தவர்கள் இவர்கள்தாம்.

ரெட்டி சகோதரர்கள் ரூ.16000 கோடி சுரங்க ஊழல் முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்தார் கர்நாடகாவின் அப்போதைய லோக் ஆயுக்தாவின் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. 16 மாத தனிப்பட்ட அவரது போராட்டங்களுக்கு பிறகே குற்றச்சாட்டின் பெயரில் நடவடிக்கை எடுக்க அரசு முன் வந்தது.

இப்பேர்ப்பட்ட ஊழல் பேர் வழிகளின் அரசியல் ரட்சகர் இன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஆண்டுதோறும் அவர்கள் வீட்டில் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளிலும் தவறாது கலந்து கொள்பவர். அவ்வளவு நெருக்கம் பாராட்டியவர்.

இறுதியில் சுரங்க ஊழல் வெளிவந்து 2011ஆம் ஆண்டு ஜனார்தன ரெட்டி சிறையில் அடைக்கப்படும்போது தான் ரெட்டிகளை கைவிட்டார் சுஷ்மா. அதுவரை சுஷ்மா அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து வந்தார். காரணம், ரெட்டி சகோதரர்கள் ஓசையில்லாமல் ‘ஆபரேஷன் சுஷ்மா’ என்று சுஷ்மாவை பிரதமராக கொண்டுவரும் முயற்சியை செய்து வந்தனர்.

பா.ஜ.க. ஊழல்வாதிகளுக்கு எதிரான கட்சி என்று வேஷம் போட்டுக் கொண்டாலும், அவர்களின் சேவை முழுவதும் இந்த ஊழல்வாதிகளுக்காகத்தான் இருக்கும். (தி இந்து 19.6.15)

உத்தரகாண்ட் சிடுர்கியா ஊழல் : உத்தரகாண்ட் முதலமைச்சர் ரமேஷ் போஹரியால் நிசாங்க், சிடுர்கியா பயோகெமிக்கல் நிறுவனத்திற்கு நில ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருக்கிறது. இந்த நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட 30 ஏக்கர் இடம் 400 கோடி ரூபாய் செலவில் ரிஷிகேஷ் வீட்டு திட்டமாக மாற்றப்பட்டது.

இதே ரமேஷ் போக்ரியால் 400 கோடி நில ஊழலில் ஈடுபட்டுள்ளார். நிலம் கொடுக்கப்பட்ட நடைமுறையில் பல முரண்பாடுகள் சட்ட விதி மீறல்கள் இருக்கிறது.

தனியார் மனை விற்பனை நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்வதற்காகவே நடந்த ஊழல் இது. (இன்டியா டுடே 26.6.10)

2012 - குஜராத் நிலநடுக்க நிவாரண நிதி ஊழல் : குஜராத் மாநிலத்தில் 2001 நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க 21.01 இலட்சம் வழங்கப்பட்டது. இந்த நிதியில் குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கர் சௌதாரி ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்.எல்.ஏ. சங்கர், அந்த பணத்தை 10 சதவீத வட்டியுடன் சேர்த்து திருப்பி கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. (இண்டியன் எக்ஸ்பிரஸ் 7.7.12)

2013 - குஜராத் கிப்ட் சிட்டி ஊழல் : மோடி குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது குஜராத்தின் காந்தி நகர் பகுதியில் கிப்ட் சிட்டி என்ற ஒரு வளர்ச்சி மிகுந்த நகரம் உருவாக்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் எல் அண்ட் டி, ஃபோர்டு, எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இதில் குஜராத் மந்திரி சபை நிலம் வழங்குவதில் பெரிய ஊழல் செய்ததாக மத்திய அரசின் தணிக்கை அறிக்கை (சிஏஜி) கூறுகிறது. ரூ.2700 கோடி ரூபாய் பெருமானம் உள்ள நிலத்தை குஜராத் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு வெறும் ரூ.1க்கு கொடுத்திருப்பதாக சிஏஜி அறிக்கை அளித்திருக்கிறது.

2700 கோடி ரூபாய் நிலம் வெறும் 1 ரூபாய்க்கு! இந்த மோசடிகளை செய்தவர்கள் எல்லாம் ஊழலுக்கு எதிரானவர்களா? (இண்டியன் எக்ஸ்பிரஸ் 3.4. 13)

2014 - பாதுகாப்புத் துறை எக்ஸ்போ ஊழல் (கோவா) : முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தனது சொந்த மாநிலமான கோவா மாநிலத்தில் உள்ள பெட்டுல் என்ற இடத்தில் உள்ள 150 ஏக்கர் கடற்கரை பகுதியை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒதுக்குவதாக கூறியது பெரும் சர்ச்சையை கோவாவில் உருவாக்கியது.

ஏனென்றால், கோவாவின் முதலமைச்சராக பாரிக்கர் இருக்கும்போது கோவாவின் நிலத்தை மத்திய அரசுக்கு தர முடியாது என்று கடுமையாக பேசியிருந்தார். அவரே மத்திய அமைச்சரான பிறகு அதனை மீறுகிறார் என்றும் கோவாவில் நிலம் கொடுக்க முடியாது என்றும் கோவாவில் போராட்டம் தொடர்ந்தது.

ஆனால் பின்னாளில் கோவாவில் மனோகர் பாரிக்கருக்கே பா.ஜ.க. முதலமைச்சர் பதவியை கொடுத்தது. சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியை போல மீண்டும் கோவாவில் தர வேண்டிய நிலத்தை தமிழ்நாட்டுக்கு மாற்றி விட்டார். இவை அனைத்தும் திரை மறைவில் நடந்து முடிந்தது. தமிழகக் கடற்கரைப் பகுதி - பாதுகாப்புத் துறைக்குப் பறி போனது. (TOI 19/1/18) (rediff 23/11/15)

இராஜஸ்தானில் 17,000 பள்ளிகள் மூடல் : இராஜஸ்தானில் உள்ள பா.ஜ.க.வை சேர்ந்த வசுந்தரா ராஜே அரசு ஆகஸ்ட் 2014ஆம் ஆண்டு 17000 அரசு பள்ளிகளை ஒரேயடியாக மூடியது. மூடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரையும் அருகிலிருக்கும் பள்ளிகளில் இணைத்துக் கொள்ள வழிவகை செய்வதாகவும் கூறியது.

ஆனால் பிற்காலத்தில் மூடப்பட்ட பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பெரும்பாலானோர் பெரும் துன்பத்திற்கு ஆளானவர்களாகவும், பலர் படிப்பை பாதியில் விட்டவர்களாகவும் மாறினர்.

ஆனால் அரசு எதற்காக இம்முடிவை எடுத்ததோ அது மட்டும் சிறப்பாக நடந்தது. ஆம், தனியார் பள்ளியின் மாணவர் சேர்க்கை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானது.

மூடப்பட்ட பள்ளிகளில் இருந்து பல மாணவர்கள் கட்டாயத்தின் பேரில் வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். தலித் மாணவர்களை, அவர்களைவிட உயர்ந்த சாதி மாணவர்களின் பள்ளிகளில் இணைத்ததால் பலர் பள்ளிக்கே வரவில்லை. அதேபோல், மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த மாணவிகள் கட்டாயம் ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கும் பள்ளிக்கு மாற்றப்பட்டனர். உருது, சிந்தி மொழிகளை தேர்ந்தெடுத்து அதில் படித்து வந்த மாணவர்கள் கட்டாயமாக இந்தி மட்டும் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

வசதி அடிப்படையிலும் கழிப்பறை இல்லாத பள்ளிகளுக்கும் பல மாணவர்கள் மாற்றப்பட்டனர். அதேபோல 4 கி.மீ. தொலைவுக்கு மேல் முதலாம், இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்கூட செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மொத்தமாக, 2012-2013இல் 72 இலட்சமாக இருந்த சேர்க்கை. 2014ஆம் ஆண்டு 68 இலட்சமாக குறையும் நிலைக்கு ஆளாக்கப்பட்டது.

2014-2016 காலகட்டத்தில் அடிப்படை வசதி இல்லாமையாலும் மொழிப்பாடம் இல்லாமையாலும் 1.4 இலட்சம் மாணவர்கள் பள்ளி வேண்டாம் என்று வெளி வந்ததாக மாவட்ட தகவல் நிலையம் சொல்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பள்ளி மூடப்பட்டதில் பல்வேறு ஊழல் அடங்கியுள்ளது. முதலாவது வறுமையால் உழலும் ஒடுக்கப்பட்ட மக்கள் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அடுத்தது, இதன் மூலம் தனியார் கல்வி நிறுவனம் பெரும் இலாபம் அடைந்தது. (The Hindu 29/9/14) (scrol 3/3/17) (TOI 6/1/15)

2015 - லலித் மோடி ஊழல் - ஊழலுக்கு உதவிய மோடி அரசு : 2010ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் மேட்ச் பிக்சிங், சூதாட்டத்தில் சுமார் ரூ.425 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாகவும், இதில் லலித் மோடிக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையில் 2010ஆம் ஆண்டு திடீரென இங்கிலாந்து தலைநகர் இலண்டனுக்கு லலித் மோடி தப்பி சென்றவர் இந்தியாவுக்கு திரும்ப மறுத்து விட்டார். அதுமட்டுமல்ல, நிதி மோசடி, சூதாட்டம், தில்லுமுல்லு உள்ளிட்ட 16 வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற லலித் மோடி ரூ.1700 கோடி நிதி மோசடி செய்திருக்கிறார். அதனால், தேடப்படும் குற்றவாளி என மத்தியில் இருந்த காங்கிரஸ்அரசு அறிவித்து அவரது பாஸ்போட்டையும் தடை செய்தது.

இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு, தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று போர்ச்சுக்கல் நாட்டுக்கு செல்ல விசா கோரி இங்கிலாந்து அரசிடம் முறையிட்டிருந்தார் லலித் மோடி. இந்நிலையில் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு விசா வழங்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இங்கிலாந்து அரசுக்கு நெருக்கடி தந்தார் என்ற செய்தி வெளி வந்தது.

சுஷ்மாவுக்கும், குற்றவாளி லலித் மோடிக்கும் உள்ள நெருக்கம் தொடக்கக் காலத்திலிருந்தே மிக அதிகம். அதை லலித் மோடியே சொல்கிறார், “சுஷ்மா என் குடும்ப நண்பர். அதைத் தாண்டி சட்ட ரீதியான (தொழில் ரீதியான) உறவும் எங்களுக்குள் இருக்கிறது. சுஷ்மாவின் கணவர் ஷ்வராஜ் 22 ஆண்டுகளாக எனக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறார். சுஷ்மாவின் மகள் கடந்த 4 ஆண்டுகளாக எனது வழக்குரைஞராக  இருந்து வருகிறார்.

தனது உறவினர் பையனுக்கு பிரிட்டனின் சஸ்ஸெக்ஸில் உள்ள கல்லூரியில் இடம் வாங்கித் தருமாறு லலித் மோடியிடம் கேட்டிருக்கிறார் சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கோசல். அதே போல் குற்றம் சாட்டப்பட்டு 2010ஆம் ஆண்டு காங்கிரஸ்அரசு பாஸ்போர்ட்டை முடக்கியபோது, அது செல்லாது என்று நீதிமன்றத்தில் லலித் மோடிக்காக வாதாடியவர் சுஷ்மாவின் மகள் பன்சூரி.

ஒரு வெளியுறவுத் துறை அமைச்சரின் குடும்பமே ஒரு தேடப்படும் குற்றவாளிக்காக, அவரை காப்பாற்றுவதற்காக வேலை செய்திருக்கிறது. இந்த நிலையில் மோடியின் அரசு ஊழலுக்கு எதிரானது என்ற பிரச்சாரம் எவ்வளவு வேடிக்கையானது.

அதுமட்டுமல்லாமல் லலித் மோடி விசா கேட்டுக் கொண்டிருந்த அதே நேரம் சுவிஸ்வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணத்தின் மதிப்பு 12615 கோடி என்று சுவிட்ஸர்லாந்து வங்கி அறிக்கை வெளியிட்டது. அதாவது முன்பு இருந்த பணத்திலிருந்து 10.6 சதவீதம் பணம் குறைந்திருந்தது. அதாவது இந்தியாவிலிருந்து சுவிஸ்வங்கியில் போடப்பட்டிருந்த கருப்புப் பணம் பாதுகாப்பாக வெளியில் எடுக்கப்பட்டிருக்கிறது. லலித் மோடியின் விசா, சுவிஸ்வங்கியில் பாதுகாப்பாக எடுக்கப்பட்டிருக்கும் பணம் என்று லலித்  மோடிக்கு விழுந்து விழுந்து உதவியிருக்கிறது பா.ஜ.க. ஆட்சி. (தி இந்து, 15.6.15 - 19.6.15)

அருண் ஜெட்லி - கிரிக்கெட் ஊழல் : டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (DCCA) தலைவராக 13 வருடம் இருந்த அருண் ஜெட்லி, இந்த சங்கத்தின் மூலம் நிறைய ஊழல் நடத்தியுள்ளதாக ஆதாரங்களுடன் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டுகிறது. அணிகள் தேர்வு செய்யப்படுவதில் போலியான நிறுவவனங்கள் மூலம் ஒழுங்கற்ற நிர்வாகம் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கிரிக்கெட் சங்கத்தின் உள் ஆய்வுக் குழுவும், டெல்லி அரசும் இணைந்து நடத்திய விசாரணையில், கிரிக்கெட்  வாரியத்தில் பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்றும், அது ஜெட்லி தலைமையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நடத்தப்பட்டிருக்கிறது என கூறுகிறது.

பெரோஷ் ஷாஹ் ஸ்டேடியம் புணரமைக்க ரூ.24 கோடி தான் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இறுதியில் ரூ.90 கோடிக்கான செலவு செய்யப்பட்டிருப்பதாக காட்டப்பட்டு இறுதியில் ஐந்து நிறுவனங்களுக்கு இந்த தொகை பிரித்து கொடுக்கப்பட்டது. ஆனால் இறுதியில், பணத்தை பெற்றுக் கொண்ட ஐந்து நிறுவனங்களும் ஒரே இயக்குனர்களின் கீழ் இயங்குவதும், ஐந்து நிறுவனங்களுமே ஒரே முகவரியில் இயங்குவதாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வேலையே செய்யாத நிறுவனங்களுக்கு போலியாக ஆவணங்கள் உருவாக்கப்பட்டு பண பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் கிரிக்கெட் வீரர் கிர்தி ஆஜாத், கிரிக்கெட் வாரிய நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பது தணிக்கையில் தெரிய வந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

தணிக்கைக் குழுவின் அறிக்கையும் அருண் ஜெட்லியையே குற்றவாளியாக மையப்படுத்துகிறது. ஆனால் அருண் ஜெட்லி மீதான புகார் அவரது பதவி மூலமும், சார்ந்த கட்சி மூலமும் திசை திருப்பப்பட்டு இந்த ஆய்வு அறிக்கைகளையே கணக்கில் எடுத்துக் கொள்ளாத நிலை ஏற்பட்டது. (Rediff 17.12.15) (Caravan 24.10.17)

ரேஷன் அரிசியில் 36,000 கோடி ஊழல் : சத்திஸ்கர் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு ரூ.36,000 கோடிக்கு ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ்கட்சி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறது. சத்திஸ்கரில் ஒரு கிலோ அரிசி ரூ.1 என்ற விலைக்கு அம்மாநில அரசு மானியமாக வழங்கி வருகிறது. இந்த மானிய விலை பொருட்கள் வழங்கும், பொது விநியோகத் துறையில் ஊழல் நடப்பது கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்  சட்டவிரோத ஆவணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டன.

ஆலை உரிமையாளர்கள், கடை உரிமையாளருக்கும் கமிஷன் போக, முதலமைச்சராக உள்ள ராமன் சிங் குடும்பத்திற்கு சொந்தமான பண்ணைகளுக்கு, பொது விநியோகத் துறையில் இருந்து அரிசி, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அரிசி விநியோகத்தில் மட்டுமின்றி உப்பு, பருப்பு, மண்ணெண்ணை உள்ளிட்ட ஏழைகளுக்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.

பா.ஜ..க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஒவ்வொரு தலைமையகங்களுக்கும் அரசின் பொது நிதியிலிருந்து ரூ.16 கோடியை முதல்வர் ராமன் சிங் கொடுத்துள்ளார். ஆனால், எதற்காக வழங்கப்பட்டது என்று முதல்வரும் சொல்லவில்லை. இரு அமைப்புகளும் சொல்லவில்லை.

இந்த ஊழலில் பா.ஜ.க. முதல்வர் ராமன்சிங்,  அவரது மனைவி, மைத்துனி, சமையல்காரர் என நான்கு பேர் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். ஊழல் தடுப்பு  அமைப்பு நடத்திய சேதனையில் கிடைக்கப் பெற்ற முக்கிய ஆவணங்களான டைரி, பென்ட்ரைவ் போன்றவற்றில் முதல்வரின் பெயரும், அவரது மனைவி பெயரும் இடம் பெற்றிருக்கிறது. அதேபோல் ஊழலில் கிடைத்த பணம் டெல்லி, நாக்பூர், லக்னோவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஊழல் தடுப்பு நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. (இந்துஸ்தான் டைம்ஸ் 25.7.15) (தினமலர் 5.7.15) (விகடன் 5.7.15)

நில ஊழல் - கர்நாடகா : தற்போதைய சட்ட ஒழுங்கு துறை அமைச்சர் சந்தான தேவகோடா, கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சராக இருந்தபோது 10 ஏக்கர் நிலத்தை சட்ட விரோதமான முறையில் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்தார். ஏக்கருக்கு 3 கோடி பெருமானமுள்ள அந்த நிலத்தை ஏக்கருக்கு வெறும் 60 இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு கொடுத்தார். இது 2017ஆம் ஆண்டு வருமான வரித் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்பந்தம் கைவிடப்பட்டது. (நியூஸ்மினிட் 10.12.15)

நில உழல்-கேரளா: கோவாவின் முன்னாள் முதலமைச்சர் லக்ஷ்மிகாந்த் பர்சேகரின் உதவியோடு அவரது சகோதரியின் கணவர் திலிப் மல்வங்கர் ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப பெறுவதற்காக இன்னொருவரிடம் இருந்து இலஞ்சம் பெறப்பட்டது தெரிய வந்து இலஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா தீ அணைப்புக் கருவி ஊழல் : மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த, கல்வித் துறை அமைச்சராக இருந்த வினோத் தாவ்டே, தீ அணைப்புக் கருவி வாங்குவதில் 191 கோடி ருபாயை ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். டெண்டர் வழங்குவதில் முறைகேடு செய்து தனிப்பட்ட தான் விரும்பிய நிறுவனத் திற்கு ஒதுக்கீடு செய்ததில் இந்த ஊழல் வெளி வந்தது.

பல் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வியாபம் ஊழலைவிட பெரிய அளவிலான ஊழல் நடைபெற்றிருப் பதாக சி.பி.ஐ. கூறுகிறது.

பா.ஜ.க. அரசுக்கு கீழாக இருந்த மத்திய பிரதேசத்தில், ஆயிரத்திற்கும் அதிகமான தகுதி குறைந்த மாணவர்கள் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. அதன் பெயரிலேயே சி.பி.ஐ. பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஆள் பற்றாக்குறை இருப்பதால் விசாரணையில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தது.

மொத்தம் 15 பல் மருத்துவ தனியார் கல்லூரிகளும், 6 தனியார் மருத்துவ கல்லூரிகளும் மத்திய பிரதேசத்தில் இருக்கின்றன. இதிலுள்ள 2800 இடங்களுக்கான நுழைவுத் தேர்வை ‘ஏ.டி.பி.எம்.சி.’ என்ற அமைப்பு நடத்துகிறது. இந்த தேர்வு மூலமே சேர்க்கை நடைபெறுகிறது. 42 சதவீதம் மாநில அரசு ஒதுக்கீடு, 43 சதவிதம் மேனேஜ்மென்ட் ஒதுக்கீடு, ‘என்.ஆர்.அய்.’களுக்கு (வெளிநாடுகளில் வாழ்வோர்) 15 சதவீதம் ஒதுக்கீடு என்ற முறையில் சேர்க்கை நடைபெறு கிறது. ஆனால் இந்த 43 சதவீதம் ஒதுக்கீடு, நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் முறையில் சேர்க்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.

ஆனால், பணம் மூலம் வாங்கப்படும் சீட்டுகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு வெள்ளைத் தாளை அப்படியே வைத்து விடுவார்கள். தேர்வு முடிந்த பிறகு அந்த தாளில் விடைகளை எழுதி அவரை தேர்ச்சி பெறச் செய்து அவருக்கான இடம் உறுதி செய்யப்படுகிறது.

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுஹனின் மனைவி சாதனா சிங்கின் சகோதரர் மகளுக்கும், மாநில அரசின் கீழ் உள்ள நான்கு அமைச்சர்களின் உறவினர் களுக்கும் இப்படி சேர்க்கை வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

‘டி.எம்.ஏ.டி.’ நுழைவுத் தேர்வு மூலம் ரூ.8000 முதல் ரூ.10000 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது என்கிறார்கள் சிபிஐ அதிகாரிகள். (TOI 13.8.15) (Wire 14.7.15) (The Hindu 15.8.15) (TOI 31.190.17)

பருப்பு ஊழல் (குஜராத் மற்றும் மகாராஷ்டிரா) : பா.ஜ.க. ஆட்சி செய்த குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் 2015-16ஆம் ஆண்டில் மிகப் பெரும் பருப்பு நெருக்கடி ஏற்பட்டது. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஊழல். ஆனால் இதை தவிர்க்க வேண்டிய மோடி அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. மக்களவைத் தேர்தலின்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பேன் என்று மோடி சொல்லியிருந்தார். ஆனால் 15 மாதங்கள், 1 கிலோ, 70 ரூபாய்க்கு விற்ற பருப்பு ரூ.200க்கு விற்கப்பட்டது.

இந்த விலையேற்றத்திற்குக் காரணம், மத்திய அரசின் தவறான கொள்கைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும் தான். மேலும் இயற்கையாக உருவான விலையேற்றம் அல்ல இது. வியாபாரிகளால் திட்டமிட்டு விலையேற்றப்பட்டு விற்பனைக்கு வரும் வணிக ஊழல் இங்கு நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது.

நமது நாட்டில் விளையும் பருப்பு 70 சதவீதம் மட்டுமே நம் நாட்டிற்கு போதுமானதாக இருக்கிறது. மீதம் எல்லாம் இறக்குமதி செய்யப்படுவதுதான். ஆனால் இந்த இறக்குமதிக்கு ஏற்பட்ட கால தாமதமே பருப்பு விலை உச்சத்திற்கு சென்றதற்குக் காரணம். இந்த தாமதமும் தானாக ஏற்பட்டது இல்லை. திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது.

மியான்மர், ஆஃப்ரிக்க நாடுகளான கென்யா, டான்சானியா போன்ற நாடுகளில் இருந்துதான் அதிக இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு துறைமுகங்களில் பதுக்கப்படுகிறது.

அங்கிருந்து தேவையான நேரத்தில் கப்பல் மூலமாக இறக்குமதி செய்யப்படும். இங்கு பருப்பு தட்டுப்பாடு ஏற்படும்போது அந்தத் தட்டுப்பாட்டின் வீரியத்தை வளர விடுகின்றன நிறுவனங்கள். பிறகு பருப்பின் விலை உச்சத்தை அடையும்போது அதிக விலைக்கு பருப்பு உள்நாட்டில் வணிகர்களுக்கு விற்கப்படுகிறது. வணிகர்கள்  இதனை மேலும் தங்களுக்கான இலாபத்தை சேர்த்து நுகர்வோரான மக்களுக்கு அளிக்கிறார்கள்.

2.50 இலட்சம் கோடி ஊழலுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம், நிர்வாகம் செய்ய தெரியாமல் வேடிக்கைப் பார்த்த மோடி அரசையே சாரும். (தி இந்து 18.10.15), (எக்னாமிக் டைம்ஸ் 30.7.16), (இண்டியா டுடே 23.11.15), (பிசினஸ்ஸ்டாண்டர்ட் 29.7.16)

ரஃபேல் ஊழல் : இந்திய விமான படைக்கு போர் விமான பற்றாக்குறை இருப்பதால், 2007ஆம் ஆண்டே, அன்று ஆட்சியிலிருந்த காங்கிரஸ்தலைமையிலான அரசு, விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு டெண்டர் விட்டது. அதில், லாக்ஹீட் மார்ட்டின், எஃப் 16, தசால்ட் ரஃபேல், போயிங் எஃப்/ஏ, ருஷ்யா எம்.ஐ.ஜி-25, சுவீடன் சாப்ஸ்கிரிஃபன், ஈரோஃபைட்டர் டிஃபூன் போன்ற பல நிறுவனங்கள் கலந்து கெண்டன. இறுதியில் டசால்ட் ரஃபேல் நிறுவனம் தான், ரஃபேல் போர் விமானத்தை தயார் செய்யும் பொறுப்பைப் பெற்றது.

பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 2012இல் 54000 கோடிக்கு குறைவாக 126 ரஃபேல் போர் விமானங்களை தயாரித்து தருவதாகவும், அதில் 18 பிரான்சில் உள்ள தங்கள் நிறுவனத்திலிருந்து பறக்கும் நிலையிலும், மீதி 108 விமானங்களை எச்.ஏ.எல். (இந்துஸ்தான் ஏரோனாட்டிக் லிமிடெட்) என்ற இந்தியாவின் பொதுத் துறை நிறுவனத் திற்கு தனது தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்து இந்தியாவிலேயே தயாரித்து  தருவதாகவும் டசால்ட் நிறுவனம் ஒப்புக் கொண்டது. பிறகு 2014 ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று. இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத் தானது.

2014ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பிரதமர்  மோடி2015ஆம் ஆண்டு பிரான்ஸ்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது முன்னால் போடப் பட்டிருந்த ஒப்பந்தத்தை இரத்து செய்து இராணுவ விமானம் சம்பந்தமாக புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. அதில் 36 ரஃபேல் போர் விமானங்களும் பிரான்சிலேயே தயாரித்துத் தரப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.

பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்ட, அப்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், இந்தியாவிற்கு அதிக போர் விமானத்திற்கான தேவை இல்லை. மேலும் முன்னாள் சொல்லப்பட்ட ஒப்பந்தத்திற்கான நிதி ஒதுக்கீடு அளவும் அதிகமாக உள்ளதாகவும், அதனாலேயே ஒப்பந்தம் மாற்றப்பட்டிருப்ப தாகவும் கூறினார். ஆனால், பாதுகாப்புத் துறையில் சிறப்பு அனுபவம் வாய்ந்த சுக்லா, சொல்லும்போது, இந்தியாவிற்கு 200க்கும் அதிகமான போர் விமானங்களின் தேவையிருக்கும் நிலையில் இப்படியொரு முடிவு எடுப்பது அவசியமற்றது என்கிறார்.

ஜூலை 2015இல், காங்கிரஸ்ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு செப். 28, 2016ஆம் ஆண்டு பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ்பாதுகாப்பு தனியார் நிறுவனம் 36 ரஃபேல் போர் விமானங்களை 58,000 கோடி செலவில் தயார் செய்ய வேண்டும் என்று மோடி அரசால் ஒப்பந்தம் போடப்பட்டது. 2017 பிப். 16இல் அதிகாரப்பூர்வமாக உறுதியும் செய்யப்பட்டது.

ஆனால் போடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள முரண் பாடுகள், பலத்த சந்தேகத்தை உருவாக்குவதுடன், நாட்டின் பாதுகாப்புத் துறையில் பெரிய ஊழல் நடந்திருப்பதையும் வெளிச்சமிட்டு காட்டுகிறது. (தி ஒயர் 17.11.18)

இது  தொடர்பாக பல முறைகேடுகளை ஒவ்வொன்றாக ஆவணங்களுடன் ‘இந்து’ ஆங்கில நாளேடு அம்பலப்படுத்தி வருகிறது.

காங்கிரஸ்ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 126 ரஃபேல் விமானங்கள் 54000 கோடிக்கு குறைவாக தயார் செய்து தர  வேண்டும் என்று இருந்தது. ஆனால் மோடி அரசால் போடப்பட்ட ஒப்பந்தம், வெறும் 36 விமானங்களுக்கு 58000 கோடி என நிர்ணயிக்கிறது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நான்கு ஆண்டுகளுக்குள் எதற்காக இந்த இமாலய வித்தியாசத்தில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும்? (தி ஒயர் 17.11.18)

எண்ணிக்கை 36 ஆக குறைந்ததற்கு இந்தியாவிற்கு பெரிய எண்ணிக்கையில் போர் விமானம் அவசியம் இல்லை என்றும், பொருளாதார ஒதுக்கீடு போதாது என்றும் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கூறினார். ஆனால் 126 போர் விமானங்களுக்கு 54000 கோடி, நாட்டின் நிதிநிலை பிரச்சினை என்றால், 36 விமானங்களுக்கு 58000 கோடி ஒதுக்கீடு எப்படி சரியாகும்? (தி ஒயர் 17.11.18)

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 126 விமானங்களில் 18 மட்டும் பிரான்சிலும் மீதி 108 விமானங்கள் இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான எச்.ஏ.எல். உடன் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் செய்த தரப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், மோடி அரசால் போடப்பட்ட ஒப்பந்தம் 36 விமானங்களும் பிரான்சில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் கட்டாயம் இல்லை என்றும் சொல்கிறது. பா.ஜ.க. தன் விளம்பரங்களில் எல்லாம் ‘மேக் இன் இந்தியா’ என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறது. ஆனால் இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு கிடைக்க இருந்த பெரும் தொழில்நுட்ப வளர்ச்சியை கிடைக்க விடாமல் செய்தது ஏன்? (தி ஒயர் 17.11.18)

இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமாக உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டி நிறுவனத்திற்கு SU-30MKI, Tejas  போன்ற விமானங்களை தயாரித்திருக்கிற அனுபவம் இருக்கிறது. ஆனால் எவ்வித அனுபவம் சிறிதும் இல்லாத அம்பானியின் ‘ஆர்.டி.எல்.’ நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பது ஏன்? மோடியின் இம்முடிவு பாதுகாப்புத் துறையின் கொள்கை விதிகளுக்கே எதிரானது என்கிறார் பாதுகாப்புத் துறை நிபுணர் அஜாய் சுக்லா. (National Herald 18.2.18)

முன்னாள் இராணுவ அதிகாரியாக இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாறிய எம்.ஜி. தேவசகாயம், பிரதம அமைச்சர் இந்த நாட்டினுடைய மக்களின் பணத்தை செலவு செய்வதில் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். இதில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். இதற்கு பதிலளிக்க வேண்டிய தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரின் (நிர்மலா சீதாராமன்) போக்குகளை பார்க்கும் போது, இந்த ஒப்பந்தம் அவருக்கு விளையாட்டாக தெரிகிறது. இது பாதுகாப்பு சம்பந்தமான ஒப்பந்தம். ஆயிரக்கணக்கான கோடி சம்பந்தப்பட்டது. பாதுகாப்பு கொள்கை விதிகளின்படி, குறிப்பிட்ட அனுபவம் இருக்கும் நிறுவனங்களுக்கே இணைந்து தயாரிக்கும் உரிமையை கொடுக்க வேண்டும். ஆனால் அம்பானியின் ஆர்.டி.எல். நிறுவனத்திற்கு இதில் ‘அரிச்சுவடியே’ கூட தெரியாது.

எல் அண்ட் டி நிறுவனம் 40 வருட அனுபவம் கொண்டது. டாடா 30 வருட அனுபவம் கொண்டது. ஆனால், எந்த அனுபவமும் இல்லாத நிறுவனத்திற்கு ஒதுக்கியிருப்பது திட்டவட்டமாக மிகப் பெரிய ஊழல் என்கிறார். (National Herald 18.2.18)

அனில் அம்பானியும், பிரதமர் மோடியும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் அதற்காக, இந்தியாவின் பாதுகாப்புத் துறை சம்பந்தமான ஒப்பந்தத்தை முடிவு செய்ய அவரை உடன் அழைத்துச் சென்று அந்த ஒப்பந்தத்தையும் அவருக்கே வழங்குவது மிகப் பெரிய ஊழல். ரஃபேல் ஒப்பந்தம் பெற்று தந்த அதே வருடத்திலேயே அம்பானியை ரஷ்யாவிற்கும் உடன் அழைத்துச் சென்று ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இந்தியாவின் பாதுகாப்பிற்காக வேலை செய்ய வேண்டிய பிரதமர் மோடி, தொழிலதிபர் அனில் அம்பானிக்காக பறந்து பறந்து வேலை செய்வது ஏன்?  (National Herald 18.2.18)

ரஃபேல் ஊழலில் பிரதமர் மோடிக்கு நேரடியாக பங்கு இருப்பதை சில புலனாய்வு நிறுவனங்கள் கூறியதால் அதன் பேரில் விசாரணை தொடங்கவிருந்த காரணத்திற்காகவே சிபிஐ இயக்குனர் அசோக் வர்மா அவர்களை, வேக வேகமாக அப்பதவியிலிருந்து நீக்கம் செய்தது என்று பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் சொல்கிறார்.  (Financial Express 25.11.18)

ஒப்பந்தம் போடப்பட்டபோது பிரான்ஸ்அதிபராக இருந்த பிரான்கொயிஸ்ஹாலண்டே, இந்த ஒப்பந்தத்தை அம்பானி நிறுவனத்திற்கு கொடுக்கும்படி மோடி கேட்டுக் கொண்டார் எனவும், மற்ற நிறுவனங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை என்றும், பத்திரிகைகளுக்கு சொல்லியிருக்கிறார். (rediff4.1.19)

இந்த ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் 40,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊழலை மோடி நேரடியாகவே முன்னின்று நடத்தி யிருக்கிறார்.

அமித்ஷா மகன் ஜெய்ஷா விஸ்வரூப வளர்ச்சி : மோடி தனது நாடாளு மன்ற தேர்தல் பிரச்சார மேடை களில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 இலட்சம் பணமும், விவசாயிகளின் வருமானம் இருமடங்காக்கப்படும். பல கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சொன்னார்.

சொன்னவற்றில் ஒன்றைகூட காப்பாற்ற முடியவில்லை என்றாலும் இருந்த சிறுதொழில்களை நாசமாக்கி, விவசாயிகளின் தற்கொலைகளை எப்போதும் இல்லாத அளவு அதிகமாக்கி, இருந்த வேலை வாய்ப்பை எல்லாம் திட்டங்கள் என்ற பெயரில் அழித்து விட்டு சாமானியனின் வாழ்வாதாரத்தையே அழித்தவர், தனியார் பெரும் தொழி லதிபர்களுக்கு மட்டும் பெரும் சேவையாற்றி யிருக்கிறார். இந்த வரிசையில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா வின் மகன் ஜெய்ஷாவின் வளர்ச்சி குறிப்பிடத் தக்கது.

2014-2015 இல் வருடத்திற்கு வெறும் 50,000 இலாபம் பெற்ற ஜெய்ஷாவின் நிறுவனம், மோடி ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடத்திற்குப் பிறகு ஜெய்ஷாவின் நிறுவனம்  2015-16ஆம் ஆண்டில் 80 கோடிக்கு மேல் இலாபம் பெறும் நிறுவனமாக வளர்ந்து நின்றது. 50,000 ரூபாயிலிருந்து 80,00,00,000 ரூபாய் இலாபமாக ஒரு வருடத்தில் மாய வளர்ச்சியை பெற்றிருக்கிறது. 16 இலட்ச சதவீதம் முன்னேற்றம் ஒரு வருடத்தில்.

தனது ஆட்சி முடிவதற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு ஆக்கப்படும் என்றார் மோடி. ஆனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாவும் அவலம் அதிகமாகி இருக்கிறது. ஆனால், தொழிலதிபர் களுக்கு அதுவும் அமித் ஷாவின் குடும்பத்துக்கு வருமானத்தை 16,000 மடங்கு அதிகமாக்கிக் கொடுத்திருக்கிறார். (தி ஒயர் 8.10.17)

450 கோடி போக்குவரத்து ஊழல் : மத்திய உள்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜ்ஜுவின் உறவினர் 450 கோடி மதிப்பிலான ஊழலில் ஈடுபட்டதாகவும் அதற்கு கிரண் ரிஜ்ஜு உதவி செய்ததாகவும் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சதிஸ்வர்மா 129 பக்க அறிக்கையை விசாரித்து தாக்கல் செய்திருக்கிறார்.

600 மெகாவாட் ஹைட்ரோ மின் திட்டம் கொண்ட இரண்டு அணைகளை கட்டுவதில் 450 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது.

ஒப்பந்ததாரர்களால் கொடுக்கப்பட்ட பல ஆவணங்கள் போலியானதாக இருந்தது. அணை கட்டுவதற்கு தேவையான கற்களை ஏற்றிச் சென்ற வாகன போக்குவரத்தில் போலி படிவங்களே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதற்கு பின்னணியில் இருப்பது, ரிஜ்ஜுவின் உறவினர் நடத்தும் Patel Engineering Limited (PEL)  என்ற நிறுவனம் என்று அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார் வர்மா.

மேற்கொண்டு விசாரணை நடக்கவிருந்த நிலையில் உண்மையை வெளிக்கொண்டு வந்த காரணத்திற்காக, வேறு காரணம் கூறி அதிகாரி, வர்மா திரிபுராவில் இருக்கும் CRPFற்கு உடனடியாக பணிமாற்றப்பட்டார். (தி ஒயர் 13.12.16)

2016 - MIDC ஊழல் - மகாராஷ்டிரா : முன்னாள் பா.ஜ.க. மந்திரி ஏக்நாத் காட்சே, தனது மனைவி பெயரிலும் மருமகன் பெயரிலும் மஹாராஷ்டிராவின் போஷாரி பகுதியில் சட்ட விரோதமான முறையில் நிலத்தை வாங்கியிருக்கிறார். அதுவும் இந்நிலம் மஹாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டு நிறுனத்துக்கு சொந்தமானது. அன்றைய மார்கெட் விலை ரூ.40 கோடி என்று இருக்கும்போது வெறும் ரூ.3.75 கோடிக்கு இந்த நிலத்தை சட்ட விரோதமாக வாங்கியிருக்கிறார். இதனை இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அறிக்கையாக பதிவு செய்திருக்கிறார்கள். (இண்டியன் எக்ஸ்பிரஸ் 15.5.18)

பணமதிப்பிழப்பு : நள்ளிரவில் மக்களை பிச்சைக்காரர் களாக மாற்றிய திட்டம். நாட்டின் பிரபலங்களெல்லாம் புரட்சி, மாற்றம், முன்னேற்றம் என்று சமூக வலைத் தளங்களில் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாடிக் கொண்டு இருந்த நேரம் இந்தியாவின் சாமான்ய மக்கள் ஏடிஎம் வாசல்களில் நாள் கணக்காக  அன்றாடம் சேமித்து வைத்த பணத்தை எடுக்க முடியாமல் அவதிக்குள்ளானார்கள். இதுவெல்லாம் இந்தியாவின் வளர்ச்சிக்கு தான் என்று ஏசி ரூம்களில் உட்கார்ந்து கொண்டு நாளுக்கு ஒருவர் வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பொருளாதார அறிஞர்கள் எல்லாம் முட்டாள்தளமான நடவடிக்கை என்று கத்திக் கொண்டிருந்தபோது நடிகர்கள் மாபெரும் புரட்சி என்றார்கள். மக்கள் உணவுக்கு வழி இல்லாமல் செத்துக் கொண்டிருந்தனர். இழந்தது எக்கச்சக்கமாக இருப்பினும் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தானே இந்த இழப்பெல்லாம் என்று நினைத்த சாமானியனையும் ஏமாற்றினார் மோடி.

100க்கும் மேற்பட்ட மரணங்கள், 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வேலை பறி போனது. 150 மில்லியன் மக்களுக்கு மேல் பல வார ஊதியம் இல்லாமல் போனது. இது மட்டும் அல்லாமல் இந்தியா பல முன்னேற்றங்களை இழந்து நின்றதற்கு மோடி என்ற ஒற்றை நபரின் சர்வாதிகார போக்குதான் காரணம்.

நவம்பர் 2016 திடீரென நள்ளிரவு முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இன்று வரை இந்தியா அதனால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள முடியவில்லை.

ரிசர்வ் வங்கிக்கு 99.3 சதவீத நோட்டுகள் திரும்ப வந்து விட்டது, ஆனால் நாட்டின் கருப்புப் பணம் ஒழிந்து விடும் என்ற மோடியின் வாக்கு பொய்யாகிப் போனது. கருப்புப் பணம் என்பது நோட்டுகளாக மறைத்து வைக்கப்படவில்லை. தங்கமாக, நிலமாக, அயல்நாடுகளில் சேமிப்பாக வைக்கப்பட்டிருக்கிறது என பொருளாதார மேதைகள் சொல்கிறார்கள். பொருளாதாரம் படிக்க வேண்டும் என்பதில்லை. டீ விற்கும் சாமானியருக்கும்கூட இது தெரிந்திருக்கும். இருந்தும் இது பிரதமருக்கு தெரியவில்லை.

மோடியின் தவறால் ஏற்பட்ட பாதிப்புக்கும்கூட அவர் பொறுப்பேற்பதில்லை. மீண்டும் மீண்டும் மேடைகளில் தான் செய்தது சாதனை என்று பொய் பேசி புள்ளி விவரங்களுக்கு மாறாக பேசி வருகிறார்.  இந்தியா இதுவரை இப்படி பொய் மட்டுமே பேசும் பிரதமரை பார்த்ததே இல்லை. மோடி செய்தது தவறு என பொறுப்பேற்றுக் கொண்டாலாவது, அவரால் பலியான 100க்கு மேற்பட்ட இந்திய குடிமக்களின் உயிருக்கு வருந்துகிறார் எனக் கூறலாம். ஆனால் மோடியின் பொய்கள் இது அநியாயமாக ஏற்படுத்தப்பட்ட பலி இல்லை. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கொலை என்பதைப்போல் காட்டுகிறது. (தி கார்டியன் 31.8.18)

பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் ஏமாற்று நடவடிக்கை. இதன் மூலம் பா.ஜ.க. பெரும் ஊழலை நிகழ்த்தியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே பா.ஜ.க.வினர் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வங்கிகளிலோ அல்லது நிலங்களை வாங்குவதிலோ பத்திரப்படுத்தி விட்டனர்.

பீகார் சட்டமன்றத்தின் உறுப்பினர், சஞ்சீவ் சௌராசியா சொல்கிறார், ‘பீகாரில் மட்டும் அல்ல பீகார் உள்பட இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் நிலம் வாங்கப்பட்டது. அதற்கான பணம் கட்சியிலிருந்து எங்களுக்கு தரப்பட்டது. இந்த நிலங்கள் அனைத்தும் கட்சி பணிகளுக்காக வாங்கப்பட்டது. இந்த நிலங்கள் அனைத்தும் நவம்பர் மாத தொடக்கத்தில் வாங்கப்பட்டது என்கிறார்.

16 ஆயிரம் கோடி பணம் தவிர எல்லாம் ரிசாhவ் வங்கிக்கு வந்து சேர்ந்து விட்டது. இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமாக ஏழை மக்கள் மாற்ற முடியாமல்  போன, கிழிந்து போன, தொலைந்து போன பணமாக இருக்கலாம். ஆனால் இதனையே கருப்புப் பணம் என சொல்கிறது பா.ஜ.க. அப்படியே 16 ஆயிரம் கோடி பணத்தை செல்லாமல் போக செய்வதற்காக 21 ஆயிரம் கோடி செலவில் புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டன. எவ்வளவு ஏமாற்றுத்தனம்? இதற்காக நாட்டின் பொருளாதாரம், 15 இலட்சத்திற்கும் அதிகமான வேலை இழப்பு, 100 மக்களுக்கு மேற்பட்ட உயிர்ப் பலி நடந்து முடிந்தது.

அசையாத சொத்துக்களின் எண்ணிக்கை முந்தைய காங்கிரஸ்ஆட்சிக்கு கீழ் 2.5 இலட்சம் கோடியாக இருந்தது. ஆனால் இன்று மோடி அரசின் கீழ் 12.5 இலட்சம் கோடியாக மாறியிருக்கிறது. இது சாமானிய மக்களின் வளர்ச்சி அல்ல கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கான வளர்ச்சி. மோடி சாமானியருக்கான பிரதமர் அல்ல.  அவர் கார்ப்பரேட் முதலாளிகளின் பிரதமர். (எக்னாமிக் டைம்ஸ் 21.8.18)

கூட்டுறவு வங்கியின் மூலம் ஊழல் : பணமதிப்பிழப்பு நடவடிக்கை, முட்டாள்தனமான ஒன்று என்றாலும், இந்தத் திட்டத்திற்குப் பின்னால் பா.ஜ.க. நிகழ்த்திய ஊழலும் மிகப் பெரியது.

இயக்குனர்களில் ஒருவராக, பா.ஜ.க. தேசிய தலைவர், அமித்ஷா உள்ள அஹ்மதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி தான், அனைத்து கூட்டுறவு வங்கிகளைவிட அதிகமான பணத்தை மாற்றியிருக்கிறது. ரூ.745.59 கோடி ரூபாய், பணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஐந்து நாட் களுக்குள் இந்த வங்கியில் மட்டும் போடப்பட்டிருக்கிறது.

பா.ஜ.க. கண்காணிப்பின் கீழ் குஜராத் மாநிலத்தில் உள்ள கூட்டறவு வங்கிகளில் மட்டும் ரூ.3118.51 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு கீழ் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ.14293.71 கோடி ரூபாய் பணபரிமாற்றம் நடந்திருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு கூட்டுறவு வங்கிகளில் பழைய பணத்தை மாற்ற தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே பெரும் தொகை மாற்றப்பட்டுவிட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவு சரிய செய்த நடவடிக்கையாக இருந்தாலும், பா.ஜ.க.வில் பலருக்கு அது கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொள்ளும் திட்டமாக அமைந்திருக்கிறது. (தி ஒயர் 22.6.18) (இன்டியா டுடே 22.6.18)

விளம்பர மோசடி ஊழல் : பா.ஜ.க. இந்திய மக்களின் வரியிலிருந்து ரூ.14 கோடி ரூபாயை போலி செய்திகளை பரப்புவதற்காக மட்டும் பல வலைத்தளங்களை உருவாக்கி யுள்ளது. இதுவரை 234 வலைத்தளங்கள் கண்டறியப்பட் டிருக்கின்றன.

மக்களின் வரிப் பணத்தை இப்படி வீணாக்குவது மட்டுமல்லாமல், தங்களது இந்துத்துவ கொள்கையை பரப்புவதற்கும், மக்களுக்குள் வெறுப்பை விதைக்கும் வேலையையும் செய்து வருகிறார்கள்.

மல்லையா 9000 கோடியுடன் மோடி அரசால் விமானத்தில் வழியனுப்பி வைக்கப்பட்டார்.

பி.ஜே.பி. ஆட்சி கட்டிலில் ஏறிய காலத்திலிருந்து சிலரை காப்பாற்றி வருகிறது. காப்பாற்றப்பட்டவர்கள் ஏழைகளோ, நிரபராதிகளோ, சாமானியர்களோ  அல்ல. மத்திய அரசின் அதிகாரிகளால் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இருக்கும் சில கோடிஸ்வரர்கள் தாம்  அவர்கள்.

விஜய் மல்லையாவின் கதை, இவர் நம் நாட்டு வங்கிகளிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். இன்று கடனை அடைக்காமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். நம் நாட்டின் சாமான்யர்கள் தங்கள் தேவைகளை சுருக்கி சேமித்த பணமிது. ஊதாரிகளுக்காக சேமித்த சேமிப்பில்லை!

வங்கியிடம் இருந்து 9000 கோடி கடன் பெற்ற குற்றச்சாட்டுக்காக கடந்த ஆண்டு (2015) டிசம்பர் மாதமே சி.பி.ஐ. அதிகாரிகளின் கண்காணிப்பில் விஜய் மல்லையா கொண்டு வரப்பட்டார். ஆனால் மார்ச் 2, 2016 அன்று இலண்டனுக்கு சகல ஏற்பாடுகளுடன் ஏழு பெரிய சூட்கேஸ்களுடன் தப்பி ஓடினார். (ஆதாரம் தி இந்து, டிசம்பர் 11, 2015 மதுரை), (தி டைம்ஸ்ஆப் இந்தியா, மார்ச் 11, 2016, மதுரை)

இடைப்பட்ட காலத்தில் பிஜேபி அரசு மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்காமல் வெளிநாடு தப்பி செல்லும் வரை அமைதி காத்தது. இப்பிரச்னையை எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பியபோது, டெல்லி கிரிக்கெட் வாரியம் ஊழல் மனன்ன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மட்டுமே ஒருவருடைய பாஸ்போர்ட்டை முடக்க முடியும். இல்லாவிட்டால், ஒருவர் வெளிநாடு செல்வதை யாராலும் தடுக்க முடியாது” என்று தனது பா.ஜ.க. அரசின் கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 2010ஆம்ஆண்டு லலித் மோடியின் பாஸ்போர்ட்டை காங்கிரஸ்தலைமையிலான அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது. (தி இந்து, மார்ச், 11, 2016, மதுரை)

மேலும், அக்டோபர் 2015 அன்றே சிபிஐ அதிகாரிகளால் விஜய் மல்லையா வெளிநாடு செல்வதை தடுப்பதற்காக ஒரு சுற்றறிக்கை எல்லா விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தச் சுற்றறிக்கையையும் கண்டு கொள்ளாமல் மல்லையா 9000 கோடி சொத்துடன் தப்ப வைக்கப்பட்டிருக்கிறார். (ஆதாரம் - டைம்ஸ்ஆப் இந்தியா 11, மார்ச் 2016, மதுரை)

ஒரு குற்றவாளி சி.பி.ஐ. விசாரணை வலைக்குள் இருந்தாலும் வெளிநாடு எளிதாக தப்பி செல்லலாம் எனும் நிலை பா.ஜ.க.வால் மட்டுமே உருவாக்க முடியும்.

உள்நாட்டில் உள்ள வாராக் கடனையே வசூலிக்க முடியாதவர்கள் வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வருவார்களாம்! யார் காதில் பூ சுற்றுகிறார்கள்?

9000 கோடி கடன் வாங்கி மோசடி செய்தவரை வெளிநாட்டுக்கு தப்ப விட்டுவிட்டு ஏழை விவசாயிகளை அவர்கள் வாங்கிய கடனுக்காக அடித்து உதைத்து துன்புறுத்துகிறார்கள்.

பிட்காயின் ஊழல் : பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பிட்காயின் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சி நடைபெற்றது. இந்த ஊழலில் பா.ஜ.க.வை சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனிஷ் பாட்டியா இருப்பது குஜராத் சிஐடி காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டது.

5000 கோடிக்கும் மேலாக இதில் ஊழல் நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.

சத்திஸ்கர் இ-டெண்டர் ஊழல் : சத்திஸ்கர் மாநிலத்தில் ராமன் சிங் (பா.ஜ.க.) தலைமையிலான அரசின் கீழ் ஏப்ரல் 2016 - மார்ச் 2017 வரை மட்டும், 74 கம்ப்யூட்டர்களை உபயோகித்து அரசின் 17 துறைகளுக்கு 1971 டெண்டர் களுக்கான 477 மனுக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

இந்த புள்ளி விவரம் டெண்டர் எடுக்கும் முதலாளிகளுக்கும் அரசின் கீழ் இயங்கும் அதிகாரிகளுக்கும் டெண்டர் கொடுக்கும் முன்பிருந்தே தொடர்பு இருப்பதை உறுதி செய்கிறது. அதனால் இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், பல டெண்டருக்கு வழங்கப்பட்ட மனுக்கள் ஒரே இமெயில் ஐ.டி.-லிருந்து பெறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வருமான வரித் துறை விதிகளை அரசு மீறி யிருக்கிறது. அதோடு 15.44 கோடிக்கான ஐந்து டெண்டர்கள் தகுதியில்லாத ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியிருக்கிறது என்று உயப CAG (Comptroller and Auditor General)  அறிக்கை வெளியிட்டிருக்கிறது. (தி இன்டியன் எக்ஸ்பிரஸ் 11.1.2019)

குஜராத் முதலமைச்சர் ஆனந்தி பென் குடும்ப ஊழல் : குஜராத்தின் முதலமைச்சர் ஆனந்தி பட்டேல் (பாஜக) அரசின் கீழ் ஒரு சந்திப்பு கூட்டத்தில் இரு நிறுவனங் களுக்கான நில ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதில், குஜராத் முதலமைச்சரின் மகள் அனர் பட்டேலுக்கு உரிமையான நிறுவனத்திற்கு 422 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதே நேரம் முரளிதர் கௌ என்ற நிறுவனத்திற்கும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இருவருக்கும் நிலம் வழங்கப்பட்ட தொகையில் இமாலய வேறுபாடு இருந்தது.

அனர் பட்டேல் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் அரசு நிர்ணயித்த தொகையான ஒரு சதுர மீட்டருக்கு ரூ.180 என்றதிலிருந்து 92 சதவீதம் தள்ளுபடி செய்து வெறும் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.15 ரூபாயில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே மற்றொரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலத்துக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.671 ரூபாய் என்று வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரே சந்திப்பில் இரு வேறு முடிவுகள் ஒரே துறையின் கீழ் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டும் நேர் எதிர் முடிவுகள். அதிகாரத்தின் பேரில் ஊழல் எளிமையாக நடந்தேறியிருக்கிறது. (எக்னாமிக் டைம்ஸ் 2.3.16)

நீட் ஊழல் - தமிழ்நாட்டின் பாதிப்பு : தமிழகம் தொடர்ச்சியாக இந்த நீட் நுழைவுத் தேர்வை எதிர்ப்பதற்கு காரணம் இதுதான். இது இந்நாள் வரை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த சமூக நீதியின் அடிப்படையிலான கல்வி முறையை தகர்ப்பதோடு மட்டுமல்லாமல் தமிழகம் அடைந்து கொண்டிருந்த வளர்ச்சியை பின்னுக்கு தள்ளியிருக்கிறது.

2016க்கு முன் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை, தமிழகக் கல்வி முறையில் பயிலும் 12ஆவது வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக ‘நீட்’ நுழைவுத் தேர்வின் மூலம் இந்த சேர்க்கை நடந்து வருகிறது. இது தமிழகத்தின் திராவிட இயக்க சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்ட கல்வி அமைப்பு மூலம் தமிழகம் அடைந்து வந்த வளர்ச்சியையும், சமூக நீதியையும் குலைத்திருக்கிறது. இதனை இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக மருத்துவ கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் உணர்த்தியிருக்கிறது.

நீட்டிற்குப் பிறகு பின் தமிழகத்தின் பாதிப்புகள் : தமிழகத்தில் மட்டும்தான், இந்தியாவிலேயே அதிகப்படியான மருத்துவத் துறையின் சிறப்பு சிகிச்சைகளுக்கான உயர் மேற்படிப்பில் 195 சீட்டுகள் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள 10 மாநிலங்களில் ஒரு சீட் கூட இல்லாத நிலையும், 10 மாநிலங்களில் பத்துக்கும் குறைவான சீட்டுகளே இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட NEET-SS நுழைவுத் தேர்வில் வெறும் 19 பேர் தான் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் தேர்வானார்கள். தேர்வான மற்றவர்கள் எல்லாம் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இது  தொடர்ந்தால் மருத்துவத் துறையிலும், சிறப்பு சிகிச்சை முறையிலும் பேர் பெற்றிருக்கும் தமிழ்நாடு அந்த நிலையை இழக்க நேரிடும் என்கிறார்கள் தமிழக மருத்துவர்கள்.

MBBS சேர்வதற்கு நடத்தப்படும் நீட் தேர்விலும் இதே நிலைதான். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 720 மதிப் பெண்ணிற்கு 420க்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தவர்கள் தமிழ்நாட்டில் வெறும் 470 பேர் மட்டும் தான். ஆனால் அதுவே கேரளாவில் 4000 மாணவர்கள், உத்தரபிரதேசத்தில் 11900 மாணவர்கள், டெல்லியில் 9000 மாணவர்கள் 400க்கு மேல் வாங்கியிருக்கிறார்கள். (7.8.17-TOI)

தமிழ்நாட்டில் மொத்தம் 22 அரசு மருத்துவ கல்லூரியில் 2447 எம்.பி.பி.எஸ். சீட்டுகள் இருக்கின்றன. ஆனால் கடந்த ஆண்டில் அரசு பள்ளியிலிருந்து நீட் தேர்வின் மூலம் வெறும் 4 பேருக்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவே 2017இல் 2 பேர் என்ற அளவில்தான் இருந்தது. ஆனால், 2016ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அடிப்படையில் நடந்த மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளியில் இருந்து 30 மாணவர்கள் தேர்வாகியிருந்தார்கள். இந்த எண்ணிக்கை போதாது எனும் நிலையில்கூட, முன்னேறிக் கொண்டிருந்த வளர்ச்சியையும் அழித்து தமிழகத்தை படுபாதாளத்தில் தள்ளியிருக்கிறது மத்திய அரசு கொண்டு வந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு.

மருத்துவத் துறையில் தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சி: உலகத் தரத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் விதி, 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என சொல்கிறது. ஆனால், தமிழகம், கேரளா, கர்நாடகம், டெல்லி போன்ற மாநிலங்களில் இதைவிட அதிகமான மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்று மருத்துவத் துறையின் உச்சியை தொட்டிருப்பதாக சொல்லப்படும் மேலை நாடுகளுக்கு நிகராகவும், அதிகமாகவும் தமிழகத்தின் வளர்ச்சி இருக்கிறது.

1000 பேருக்கு 4 மருத்துவர்கள் என்பது தமிழகத்தின் நிலை. இது நார்வே (4.3), ஸ்வீடன் (4.2) ஆகிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியாகும். இதுவே டெல்லியில் 1000:3, அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு இணையான வளர்ச்சி. கேரளா மற்றும் கர்நாடகாவில் 1000:1.5 எனவும், பஞ்சாப் மற்றும் கோவா 1000:3 என்ற அளவிலான வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது.

தமிழகத்தின் கல்வி வளர்ச்சி அடைந்ததற்கான காரணம், இங்கிருந்த திராவிடர் இயக்க சிந்தனையாளர்களே. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண்களில் 4 பேரில் ஒருவர் மட்டுமே எழுதப் படிக்க தெரிந்தவர்கள். ஆனால் தமிழகம் மற்றும் கேரளாவில் இது 100 சதவீதம் ஆக இருக்கிறது. இது தேசிய அளவில் இருப்பதைவிட இருமடங்கு அதிகம். உலக அளவில் 10 சதவீதம் அதிகம்.

உயர்நீதிமன்றம் - உச்சநீதிமன்றம் : 2018ஆம் ஆண்டு நடந்த நீட் நுழைவுத் தேர்வில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தமிழக மாணவர்கள் அதிகமாகவே மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்.

தமிழகத்திலிருந்து நீட் தேர்வை எழுத 1500 பேருக்கு கேரளா, கர்நாடகம், ராஜஸ்தான் என வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனை ஒட்டி மதுரை உயர்நீதிமன்றம் தமிழகத்திற்குள்ளேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை நம்பி முன்பதிவு செய்திருந்த பயணச் சீட்டுகளையும் இரத்து செய்தனர் பல மாணவர்களின் பெற்றோர்கள். ஆனால் இறுதி நேரத்தில் உச்சநீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என உத்தரவிட்டது. இதில் தமிழக மாவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி தேர்வு மையத்திற்குச் சென்றார்கள்.

நீட் தேர்வில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 49 கேள்விகள் தவறாக கொடுக்கப்பட்டிருந்தது. அதனால், மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 198 மதிப்பெண்களை கருணை  அடிப்படையில் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் ஆறுதலடைந்த மாணவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை தந்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உளெந உச்சநீதிமன்றத்தை முறையிட்டபோது, எந்த மதிப்பெண்ணும் வழங்க முடியாது இது தமிழ் மொழிப் பெயர்ப்பாளர்களின் குற்றம். ஆங்கிலத்தில் சரியாகவே இருந்தது. மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. அதனால் கருணை மதிப்பெண் வழங்கக் கூடாது என்ற சிபிஎஸ்இ தரப்பின் வாதத்தை ஆமோதித்து உச்சநீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கியது.

இவ்வளவு ஊழல்களையும் பாதிப்புகளையும் உருவாக்கிய பா.ஜ.க. ஆட்சிதான் உத்தமர் வேடம் போடுகிறது.

நன்றி : ‘வைகறை வெளிச்சம்’

Pin It