ஊருக்குப் போயிருந்தேன்,
ஊர் காணாமல் போயிருந்தது;

மரக் கூட்டங்கள் இல்லை
இப்பொழுது வெறும் மனித
கூட்டம்தான்;

கட்சிகளின் கொடிகள்
கணிசமாய் உயர்ந்து
தலையில்லா தலைவர்கள்
தொண்டர்களை வாங்குகிறார்கள்;

ஏரி, குளமாய் சுருங்கி
நகராய் விரிந்ததில்
வட்டங்களின் தொந்தி
பெருத்திருந்தது;

குளம் குட்டையாய் சுருங்கி
ரசிக மன்றங்கள்
சூடு பிடித்திருந்தது;

கூன்விழுந்த அம்மாவுக்கு
மனசு மட்டும் அப்படியே.

Pin It