சாமிகளுக்கு                                                                                                                                                                         (1)
சமஸ்கிருதம் மட்டுமே
தெரிந்திருக்கிறது.
ஆங்கிலம் மட்டுமே தெரிந்தது போன்ற
ஐயாக்கள் எங்கெங்கும்.
எந்தப்பிரச்னையை எவனிடம்
எந்த மொழியில் பேசி எழவெடுப்பது?

மங்களம் பாடி, கூத்து முடிந்தது.                                                                                                                               (2)
நன்றியைக் கலந்து
வணக்கம் சொன்னது ஒலிபெருக்கி.
ஒப்பனைக்கலைத்த ராஜாவுக்கு
பேசினபடி சம்பளம் வரவில்லையாம்,
ஒரே சப்தம்.
"எல்லாம் நீ கிழிச்சக்கிழிக்கு
இது போதும்டே'
சவுண்டு விட்டுக் கொண்டிருந்தார்
நாட்டாமை. இப்படித்தான்...
அங்கே மறுபடியும் ஒரு கூத்து
ஆரம்பமானது.

ஒரு... கன்றுக்குட்டி... ஏன்,                                                                                                                                              (3)
ஒரு... கருவைக்குற்றுக்கூட
அனாதையாக இருக்கவில்லை.
அவ்வப்போது,
குப்பைத் தொட்டிகளிலிருந்து
குழந்தை அழும் சப்தம்
கேட்டுக் கொண்டிருக்கிறது.

"ஊருக்கார கம்முனாட்டிங்க                                                                                                                                       (4)
தையாச்சும் சொல்லுவானுவனுட்டு
கட்டுனவ கையில சூடம்
ஏத்திச் சுத்தச் சொல்றியேடா...
மூதி... ஒனக்குப் புத்தியே
இல்லையா?''
கடுப்படித்த சித்தப்பாவிடம்
""எனக்குத் தெரியாதா... அவள...
சித்தப்பு... சும்மா, ஒரு... ஊரு
ஒப்பறைக்குத்தான்...''
என்றவனை,
""ச்சீ... நீ ஒரு மனுசனாட்டம்''
என்று காறித்துப்பிச் சென்றாள்
பொஞ்சாதி.

பழைய கிழிந்த                                                                                                                                                                   (5)
ந்து ரூபாய் நோட்டில்
ஐ ப்ர்ஸ்ங் ஹ்ர்ன் அம்ம்ன்
என்று
எவனோ தன் காதலைத்
தெரிவித்திருந்தான்.
அம்மு, அந்தக் காதலை
ஏற்றாளா... இல்லையா...
தெரியவில்லை.

Pin It