ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் அய்யா எஸ்.பொ.(எஸ்.பொன்னுத்துரை)அவர்களின் 80வது பிறந்தநாள் அவரது நலம் விரும்பிகளால் கொண்டாட்டமாக கூடியது!முன் கை எடுத்தவர் கவிஞர் தமிழச்சி. "எஸ்.பொ.'-வின் "நற்போக்கு இலக்கியம்' என்ற நூல் வெளியிடப் பட்டது! நற்போக்கு இலக்கியம் என்கிற கோட்பாட்டை எஸ்.பொ.நீண்ட நாட்களாக சொல்லி வருகிறார்.இது முற்போக்கு இலக்கியத்துக்கு மாற்றானது என்றொரு கருத்தும் உண்டு. விழாவில் இயக்குநர் பாலுமகேந்திரா பேசியது இது:

"படைப்பு வாசகனால்தான் முழுமை பெறுகிறது. படைப்பாளியின் மவுன இடைவெளிகளை தக்கவாறு தனக் கேற்றவாறு நிரப்பிக் கொள்பவனே நல்ல வாசகன்''.

"படைப்பாளி இறந்து விடுகிறான்'' என்ற மேலைக்கோட்பாட்டுக்கும், படைப் பாளியோடு பயணம் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு தானே!

கொசுறு :

"மரணத்தேதி தெரிந்தவனின் சிரிப்பு
மகோன்னத மாயிருக்கிறது''.

Pin It