நிற்பதா, போவதா
நிலவுக்கு வெட்கம்.

சூடு அப்படி
மாலைவரை குளியல்.

மாடுகள் ஈட்டுகின்றன
மக்கள் நுகர்கின்றனர்.

கண்ணன் அமரக்
கிளைகள் கூச்சம்.

கூச்சம் தவிர்க்க
முளைத்தன சேலைகள்.

விரும்பி முந்தும் உறுப்புகள்
ஈர்ப்பு பரஸ்பரம்.

கரையோர மரம் உயர்ந்தது
காட்சி இனிமை உந்தலில்.

முல்லை நிலம் விரிவு
பசுமைக்கில்லை பஞ்சம்.

இச்சைப்படி மேய்
இங்கே சுதந்திரம்.

இது, வேற்றுமை மயக்கம்.

உன் அணைப்பில்
பருவ காலங்கள்
அனைத்தும் இதம்.

உன் குழலோசை
ஆதிரைகளுக்கா?

கொடிகளும்
கொம்பேறுகின்றன.

இன்னொருத்தியின் கனவில்
அழைக்கப்படுகிறேன்
விடைகொடு.

சேலை பறிப்பா?
வரி பாக்கியாயிருக்கும்...

அச்சமா கண்ணா
மரத்தில் ஏன் ஒளியல்?

உறக்கம் வராமல்
பூக்கள் கண்திறக்கின்றன.

தனிமையால் வீணடிக்க அல்ல
உடல்.

காத்திருப்பில் செலவழிகிறது
ஆயுள்.

Pin It