செருப்புகள் கூட
வணங்குதலுக்கு உரியவைதான்.
சில
கடிக்கும்
சில
அடிக்கும்.
செருப்புகள் பற்றிய
கதைகளை
அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள்...
வேப்பமரத்தில்
அண்டியிருக்கும்
பேயினை விரட்ட
செருப்புகளையே
கட்டி வைப்பார்களாம்...
எதிர்வினையாற்றலின்
அடையாளமாக.
இராமனின்
பாதம் அணிந்தபோது
அயோத்தியில்
சில காலம்
அரியணை ஏறியது...
சர்வாதிகார
மேலாண்மையின்
முகத்திலெறியும் போது
போராளிகளின் ஆயுதமானது!
Pin It