நீலமணி

 = சூலம் மறந்து வந்த சிவன்
 சூரனிடம் பேசினார் சமரசம்.

 = இராட்டைக்கு மின் இணைப்பாம்
 உலக மயமாக்கல்

 = தாண்டுவதற்கே
 கிழித்தது கோடு

 = அரசியல்வாதி கேட்கிறார்
 பொய் அகராதி ஒரு பிரதி

 = காதால் ஆமாம் போடுகிறது
 யானை

 = மரத்தடிப் பள்ளி
 கரும்பலகையில் எழுதியது
 காக்கை எச்சம்

 = பல்லக்கில் ஊர்வார்
 அறியார் வியர்வை

 - நீலமணி

Pin It