ஒரே ஒரு கொசு
தூக்கத்தைப் பறித்துவிடுகிறது.
விளக்கைப்போடப்
பதுங்கி விடுகிறது.
அடித்து விட்டே படுப்பது என்றால்,
வருவதே இல்லை.
விளக்கணைத்துப் படுக்க
காதுக்குள் பேசுகிறது.
கைக்கு எட்டா முதுகுப் பகுதியில்
கடிக்கிறது... போர்வையைத்
தாண்டியும் கடிக்கிறது.
எழுவதும், முயல்வதும், படுப்பதுமாக
நள்ளிரவைத் தாண்டிவிடுகிறது.
அசந்தர்ப்பமான
ஒரு நிலையில்
அடித்தே விட்டாலும்
அடுத்து ஒன்று வந்து விடுகிறது.
கொசுக்களுக்குத்
தேனீக்கள் போலக் கொடுக்குகள் இல்லை,
இறைக்கு நன்றி.
கொஞ்சம் அரிக்கும்
சொறியச் சரியாகும்.
எப்போதும் கொசு இருக்கும், கடிக்கும்.
நாம்தான் தூங்கப் பழகுதல் வேண்டும்.
Pin It