dmlogo

தொடர்பு முகவரி: எஸ்-5, மகாலட்சுமி அடுக்ககம், 13/26, குளக்கரை சாலை, சென்னை - 600 0034. பேச: 044 - 2822 1314

 

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 1,300 கோடி ரூபாயில் உயர் விரைவு பறக்கும் சாலை; கடற்கரையோரம் 1,000 கோடி ரூபாயில் அதிஉயர் விரைவு சாலை; அடையாறு ஆறு பக்கிங்காம் கால்வாய்; மாம்பலம் கால்வாய்; கூவம் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் 3,000 கோடி ரூபாயில் ஆற்றோர வட்டச் சாலைகள்; பறக்கும் ரயில்; மெட்ரோ ரயில்; சாலைகள் விரிவாக்கம்; கூவம் நதியை அழகுபடுத்தும் திட்டம் எனப் பல ஆயிரம் கோடிகளில் சென்னை "சிங்காரச் சென்னை'யாக மாற்றப்படுகிறது. சிங்காரச் சென்னை யாருக்காக? எதற்காக உருவாக்கப்படுகிறது? என்ற எதிர்க் கேள்விகள் கேட்கப்படாத சுரணையற்ற இன்றைய நிலையில், முன்பைவிட மிக வேகமாக சென்னை நகர சேரிகள் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன.

கடந்த நவம்பர் மாதம் சேத்துப்பட்டு பகுதியில் இருந்த சேரிகள் அகற்றப்பட்டு, அம்மக்களுக்கு கண்ணகி நகரில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. அடுத்து, சூளைமேடு சாரி தெருவில் கூவம் ஆற்றின் ஓரத்திலிருந்த மு.. ஸ்டாலின் நகர், ஜோதிமா நகர் குடிசைப் பகுதிகளை எந்த முன்னறிவிப்பும், கால அவகாசமும் இன்றி, ஒரே நாளில் சுமார் ஆயிரம் வீடுகளை இடித்து நொறுக்கியது (19.11.2009) தமிழக அரசு. அங்கு பறக்கும் சாலை வரப் போகிறதாம்!

"எந்த முன்னறிவிப்பும், கால அவகாசமுமின்றி வீடுகளை இடிக்கக் கூடாது' என்று நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியிருந்தனர், ஜோதிமா நகர் மக்கள். அந்த தடையுத்தரவும் தள்ளுபடியாகி, நீர் நிலை ஆக்கிரமிப்பு என ஜோதிமா நகர் வீடுகளும் இடித்து தள்ளப்பட்டன. அரசு நிர்வாகம் மற்றும் போலிஸ் மிரட்டல்கள், அத்துமீறல்கள் மற்றும் குடிசைகளை இடித்துத் தள்ளும் வன்முறை வெறியாட்டங்கள் எஞ்சியுள்ள சென்னை நகர சேரி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கேட்க நாதியற்று, இன்று சென்னைக்கு வெளியே குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் அடைக்கப்படுகின்றனர்.

"நீர் நிலை ஆக்கிரமிப்புகள்' என்று சொல்லி வெளியேற்றப்படும் இம்மக்கள், சென்னையை விட்டு 40 கிலோ மீட்டர் தூரத்தில், சுற்று வட்டாரத்தில் எந்த குடியிருப்புகளும் இல்லாத திறந்த காடுகளில், இன்னொரு நீர் பிடிப்பு நிலத்தில்தான் குடியமர்த்தப்படுகின்றனர்.

சென்னை நகரின் மய்யப் பகுதிகளிலிருந்து சுமார் 50–க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகளை சென்னையை விட்டு வெளியேற்றிய அரசு, ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 15,000 குடும்பங்களை மறு குடியமர்த்தியுள்ளது. இந்த பதினைந்தாயிரம் சேரி குடும்பங்களுக்கு இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படவில்லை. கிட்டத்தட்ட ஒரு லட்சம் நகர்ப்புற உழைக்கும் மக்கள் சென்னைக்குள் சென்று வர வெறும் 15 மாநகரப் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அதுவும் முறையாக வருவதில்லை. குடி தண்ணீருக்குப் பெரும்பாடு. மின்சாரம் இருந்தும் பாதி நாள் இருளில்தான் கிடக்கிறார்கள். கல்விக் கூடங்கள் இருந்தும் போதிய ஆசிரியர் இல்லை. பதினைந்தாயிரம் குடும்பங்களுக்கு இதுவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்கூட இல்லை. கடந்த பத்தாண்டுகளாக இம்மக்கள் நடத்திய போராட்டங்கள்தான் எத்தனை! எத்தனை! எதற்கும் மசியவில்லை அரசு.

போராடி, போராடி சலித்துப்போய், வெறுத்துப்போய் கிடக்கிறார்கள், சென்னையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சேரிமக்கள். கடந்த சூன் மாதம் நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் விரிவு குடிசைப் பகுதி திடீர் தீ விபத்தில்(?) எரிந்து நாசமானது. ஒரே வாரத்தில் மாற்று வழங்கப்பட்டது. ஆனால் யாருமற்ற பொட்டல் காட்டில் மனிதர்கள் வசிக்க ஏதுமற்ற சூழலில், மழை நீரில் குடிசைகள் மூழ்கி, ஈர களிமண் தரையில் குடும்பம் நடத்த முடியாமல் கன்னடப்பாளையம் "திடீர் நகர்' பகுதி மக்கள் தாம்பரம் பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் இரவில் குழந்தைகளுடன் தங்கி வருகின்றனர். இதைவிடப் பேரவலம், போரூர் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்குநல்லூர், கூடப்பாக்கத்தில 1 சென்ட் நிலம் ஒதுக்கியதால், அங்கும் மக்கள் வசிக்க முடியாமல், பழைய இடங்களில் (போரூர்) நடை பாதைகளிலும், கடை ஓரங்களிலும், கோணிகளில் கூடாரம் அமைத்து குடும்பம் நடத்துகின்றனர்.

சொந்த மண்ணில் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்ட சென்னை நகர சேரி மக்கள் வயிறெரிஞ்சு சொல்கிறார்கள்: “குப்பை மாதிரி வாரியாந்து கொட்டிட்டானுங்க. இங்க எந்த வசதியும் இல்ல. நாங்க தினம், தினம் செத்துக்குனு இருக்கோம்.''

குடிசைகள் நிறைந்த சென்னை, இன்று குடிசைகளே இல்லாத சென்னையாக கட்டமைக்கப்படுகிறது. “சென்னையில் குடிசை வீடுகளே இல்லாத நிலை உருவாக்கப்படும். இதற்காக மத்திய அரசு 210 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கால்வாய் கரைகளில் உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்'' என்று சொல்கிறார். மேயர் மா. சுப்பிரமணியன் ("தினகரன்', 29.8.09). “2013 ஆம் ஆண்டுக்குள் மதுரை, சென்னை மற்றும் கோவை நகரங்களை குடிசைகள் இல்லாத நகரமாக மாற்ற திட்டமிடப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 250 கோடி ரூபாயில் சென்னை மற்றும் பிற நகரங்களில் 16,377 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்'' என்று குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப. தங்கவேலன் கூறியிருக்கிறார் ("தினத்தந்தி', 1.7.2009). சென்னை மாநகராட்சி மன்றக் கட்டடத்தில் மேயரும், சட்டப்பேரவையில் சுப. தங்கவேலனும் இந்த அறிவிப்புகளை சொல்லிக் கொண்டிருந்தபோது, இங்கு மிச்சம் மீதி இருந்த சென்னை நகர குடிசைகள் – "திடீர் விபத்துகள்' என்ற பெயரில் எரிந்து கொண்டிருந்தன.

குறிப்பாக, 2009 சூன் சூலை மாதங்களில் மட்டும் எட்டு குடிசைப் பகுதிகள் தீ விபத்தில் எரிக்கப்பட்டன. இதில் கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரிலும், பெரம்பூர் மடுமா நகரிலும் குடிசைகள் எரிந்ததில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என மொத்தம் ஆறு சென்னை நகர சேரி மக்கள் தீயில் கருகி மாண்டனர். சிங்காரச் சென்னையை அழகுபடுத்துவதற்கு தங்களின் வாழ்வையே பலி கொடுத்துவிட்டு இன்று வீதியில், நடைபாதையில் கிடக்கிறார்கள் சென்னை நகர சேரி மக்கள். குடிசைகள் எரிந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை இம்மக்களுக்கு மாற்று வசதி செய்து தராமல் மவுனம் காக்கிறது அரசு.

மழையிலும், வெயிலிலும் லோல்பட்டு, லொங்கழிஞ்சு கீனு கிடக்குறோம். எங்கள யாருமே கண்டுக்க மாட்டேன்னுறாங்க! எத்தனை நாளைக்குதான் பிளாட்பாரத்திலேயும், சொந்தக்காரங்க வீட்டுலயும் தங்கிக்குனு இருக்குறது'' என்று கேட்கிறார் கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த சிறீராம் என்பவர். “எங்களுக்கு மாத்து இடம் கொடுங்க. இல்லைன்னா எரிஞ்சு போன வீடுகள மறுபடியும் கட்டி கொடுங்கள், கவுன்சிலர்கிட்ட போய் கேட்டோம். அந்த இடத்துல மறுபடியும் யாரும் வீடு கட்டக் கூடாதுன்னு சொல்லிட்டாரு. வீடு கட்டக் கூடாதுன்னு வேகமா தடுக்குற அதிகாரிங்க, எங்களுக்கு மாற்று வழிய சொல்லுறதுக்கு ஆறு, ஏழு மாசமாகுது; இன்னும் பதிலக் காணோம்'' என்கிறார் கொருக்குப்பேட்டை நாகராஜ். குடிசை வீடுகளை இழந்து குடும்பத்துடன் வீதியில் குடும்பம் நடத்தும் அவலம் இங்கு மட்டுமல்ல, சேத்துப்பட்டு அவ்வைபுரம்வியாசர்பாடி, புளியந்தோப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்கிறது.

நந்தம்பாக்கம் அடையாறு பாலத்தை ஒட்டி வலதுப் புறம் உள்ளது "எம்.ஜி.ஆர். நகர் விரிவு' என்ற குடிசைப் பகுதி. கடந்த சூன் 15 அன்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இங்கிருந்த 106 வீடுகளும் தீயில் எரிந்து நாசமாயின. தொடர்ந்து மூன்று நாட்களாக எம்.ஜி.ஆர். நகர் குடிசைப் பகுதி மர்மமான முறையில் எரிந்ததில் 15 வீடுகள் நாசமாயின. இத்திடீர் தீ விபத்தை(?) கண்டித்து அப்பகுதி மக்கள், கவுன்சிலர் பெருமாள்சாமி தலைமையில் 22.6.2009 அன்று போரூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். வழக்கம் போலவே பெருமாள் சாமி உட்பட 15 பேரைக் கைது செய்து, 9 நாட்கள் சிறையிலடைத்தது

அரசு. இப்பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பு தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து, அளந்து கோடுகள் போட்டதோடு, கற்கள் நட்டும் சென்றுள்ளனர். இந்தப் பகுதியில் "பிரிட்ஜ் வரப்போகுது' (அடையாறு போரூர் எக்ஸ்பிரஸ் ஹைவே) என்றும், கல்லுக்கு மேலே உள்ளது நத்தம் புறம்போக்கு, கீழே உள்ளது ஆத்து புறம்போக்கு என்றும் அதிகாரிகள் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்.

அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆற்று கரைகளில் வசித்து வந்த சென்னை நகர சேரி மக்களை நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என்று சொல்லி வெளியேற்றி வந்த தமிழக அரசு, வீடுகளை இழப்பதை எதிர்த்து சிலர் நீதிமன்ற தடையுத்தரவு வாங்கி விடுகிற தொந்தரவுகள் பொறுக்க முடியாமல் சேரிகளை மிக எளிதாக வெளியேற்றும் உத்தியாகவே இத்தீவிபத்துகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில்தான் நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் விரிவுப் பகுதியில் இருந்த 106 குடிசைகள் தீயில் எரிந்ததும், ஒரே வாரத்தில் பெருங்களத்தூர் கன்னடப்பாளையம் அருகில் எருமையூர் கூட்டு ரோடு செல்லும் வழியில் ஆள் நடமாட்டமில்லாத வெட்டவெளியில், குடும்பத்துக்கு ஒரு சென்ட் நிலம் கொடுத்து (மாற்று இடம்) கட்டாயமாக இம்மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்; சென்னையை விட்டு துரத்தப்பட்டுள்ளனர்.

தாம்பரத்தை அடுத்துள்ளது பெருங்களத்தூர் பேரூராட்சி. கிஷ்கிந்தா போகும் சாலை, எருமையூர் கூட்டு ரோடு. இரண்டு பக்கமும் பச்சை நிறம் படர்ந்த திறந்தவெளிக் காடு. அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மலைகள். கை தொடும் தூரத்தில் வானம். கொட்டும் மழையில் நனையும் உடல்களைப் பற்றி கவலைப்படாமல், கட்டிய துணியுடன், கைக் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தாம்பரம் தாலுகா அலுவலகத்தை நோக்கி நடக்கத் தொடங்கியது அந்த மக்கள் கூட்டம். "மழையில் நனைஞ்சுக்குனு எல்லோரும் எங்க போறீங்கன்னு' கேட்கக்கூட நாதியற்ற வெறுமை பிரதேசம். நந்தம்பாக்கம் தீ விபத்தில்(?) வீடுகளை இழந்த மக்களுக்கு அரசாங்கம் கொடுத்த மாற்று இடம்.

சிங்களப் பேரினவாதத்தின் குண்டுகளுக்கு அஞ்சி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இடம் பெயர்ந்து ஓடிக்கொண்டேஇருக்கும் ஈழத் தமிழர்களைப் போல் இந்து பேரினவாத சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர் தலித் மக்கள். வருசம் 1500 ரூபாய் சம்பளம், மூன்று வேளை சோறு, பொங்கல், தீபாவளிக்கு ஒரு வேட்டி, சட்டை வாங்கிக் கொண்டு பண் ணையடிமையாய் வாழ்கிறார்கள். அடிமைச் சமூகத்திற்குள் அடிமையாய், கீழான மக்களாய் கிடக்கும் நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் விரிவு குடிசைப் பகுதி மக்களான அருந்ததிய மக்களின் பூர்வீக முகவரி, திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு. இம்மண்ணின் பூர்வகுடி மக்களான இவர்கள் சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள்தான்!

முதலில் சேப்பாக்கம் ஸ்டேடியம் பகுதியில் தங்கியிருந்த இவர்கள் மொத்தம் நூற்றுப்பத்து குடும்பங்கள் கட்டட வேலை, வீட்டு வேலை உள்ளிட்ட கூலி வேலைகளை நம்பியுள்ளனர். இவர்களின் முதன்மையான தொழில் "திருஷ்டிக் கயிறு' விற்பது. நந்தம்பாக்கத்தில் மட்டும் 27 ஆண்டுகள் வசித்து வந்துள்ளனர். இவர்களின் குழந்தைகள் பரங்கிமலை ஒன்றியம் கன்டோன்மென்ட் பள்ளியில் படித்து வருகின்றனர். திடீரென்று வீடுகள் எரிந்து, எங்கோ காட்டில் மாற்று இடங்களில் இவர்கள் வசிப்பதால், மூன்று பேருந்துகள் மாறி பள்ளிக்கூடம் போய் வருகின்றனர் இவர்களின் பிள்ளைகள். “இங்க எங்களுக்கு எந்த வசதியும் இல்லைங்க. கரண்ட் இல்ல, தெரு விளக்கு இல்ல, இடம் மட்டும்தான் கொடுத்தாங்க. குடிக்க தண்ணிக்குகூட வழியில்ல. இங்கயிருந்து இரண்டு கிலோ மீட்டர் எருமையூர் போய்த்தான் தண்ணீர் எடுத்துக்குனு வர்றோம்'' என்கிறார் கருப்பையா.

"பெருங்களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் இது பற்றியெல்லாம் சொன்னீர்களா? அவர்கள் ஏதும் செய்யவில்லையா? என்று கேட்டோம். “பஞ்சாயத்து தலைவர பார்த்துக் கேட்டோம். "உங்கள யாரு இங்க கொண்டு வந்து விட்டாங்களோ, அவங்கள (கலெக்டர்) போய் கேளுங்க. எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றாரு'' என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவர். ஒரு வாரமாக மழை பெய்றதால எந்த வேல வெட்டிக்கும் போக முடியல. தண்ணி நிக்குற இடத்துல வீடு ஒதுக்குனதுல, எங்க குடிசையெல்லாம் மூழ்கிடுச்சு. சாதாரணமாவே பாம்பு, தேள் எல்லாம் வருது. இதோ மழை பெய்ஞ்சி வெள்ளம் சூழ்ந்துக்குனதுல வானம் வெளுத்தாதான் நாங்க வீடுகளுக்குப் போக முடியும் என்கின்றனர், இரும்புலியூர் நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள்.

எங்க ஊருக்கு இன்னும் பேர்கூட வெக்கலங்க. சிலபேரு "திடீர் நகர்'னு சொல்லுறாங்க. சிலபேரு கருணாநிதியோட அம்மா பேர வைக்கப் போறதா சொல்லிக்குனு இருக்குறாங்க'' என்கின்றனர், சோனை மற்றும் மொட்டையாண்டி. 110 குடும்பங்களில், முடிச்சூர் ரோடு ஆந்திரா ஸ்கூலில் 50 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய மக்கள் ரோட்டோரமாக கடைகளின் கீழே அடைக்கலமடைந்துள்ளனர். மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, பஸ் வசதி இல்லை, மழைக் காலங்களில் வீடுகளில் தண்ணீர் வந்து விடுகிறது, பள்ளிக் கூடங்கள் இல்லை, சுடுகாடு இல்லை, பொதுப்பாதை இல்லை, பட்டா இல்லை என ஏகப்பட்ட "இல்லை'களோடு இருண்டு கிடக்கின்றன, சென்னையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சேரி மக்களுக்கு அரசு கொடுத்த மாற்று இடங்கள். காலங்கõலமாய் ஒதுக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களாய் சேரியில் அடைக்கப்பட்டிருந்த பூர்வகுடி மக்கள், இன்று சென்னையில் வசிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் அசுத்தமானவர்கள் என்றும் சொல்லி சென்னையை விட்டு வெளியேற்றுகிறது அரசு.

இருண்ட பிரதேசங்கள் : 1. வேளச்சேரியை அடுத்துள்ள மயில பாலாஜி நகர் 2. ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் 3. செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு 4. குன்றத்தூரை அடுத்த நல்லூர் 5. பூவிருந்தவல்லியை அடுத்த கூடப்பாக்கம் 6. செம்மஞ்சேரி எழில் நகர், ஜவகர் நகர் 7. ஆவடி கேம்பை அடுத்த மோரை 8. பெருங்களத்தூர் கன்னடப்பாளையம்.

நந்தவனமாய் காட்சியளிக்கிறது அந்த நான்கு வழிச் சாலை. பூத்துக் குலுங்கும் மலர்கள், மரம், செடி, கொடிகள், பக்கவாட்டுச் சுவர்களில் வரையப்பட்டுள்ள நவீன ஓவியங்கள். ஸ்டீல் தகடுகளால் மினு மினுக்கும் நவீன பேருந்து நிறுத்தங்கள். அலங்கார கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ள அகலமான நடைபாதைகள். வானைத் தொடும் உயரத்தில் சாலையை கடக்க நடைபாலங்கள். காண்பவர்களை மயக்கும் மின் விளக்குகளின் பேரொளியில் உலகமயத்தின் பெருமதிமாய் நீள்கிறது, அடையாரிலிருந்து தொடங்கும் தகவல் தொழில்நுட்ப (கட்டண) சாலை. அதாவது, பழைய மகாபலிபுரம் சாலை – "சாப்ட்வேர்' சமஸ்தானத்தின் தலைமையகமான திருவான்மியூரிலிருந்து தொடங்குகிறது.

என்னைக்கு சாலைய மறிச்சு சுவர் எழுப்புனாங்களோ (இரண்டே கால் அடி), அன்னைக்கே எங்க பொழப்பெல்லாம் போச்சு'' என்ற சிறு வியாபாரிகளின் குமுறல் முதல், இந்தப் பக்கத்துல இருந்து, அந்தப் பக்கம் போகணும்னா ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சுத்திக்குனு வர வேண்டியதா இருக்குது. குறுக்கு சுவறுனால சாதாரணமா ரோட்ட தாண்டக்கூட முடியல''ன்னு நீள்கிறது, இந்த அய்.டி. சாலையினால் அன்றாடம் பாதிப்புக்குள்ளாகும் ஏழை எளிய மக்களின் அவலக் குரல்கள்.

மழை பெய்ய ஆரம்பிச்சுட்டா, இந்தக் களிமண் தரையில கால்வைக்கக் கூட முடியாது. கூடவே பாம்பு, தேள், விஷ வண்டுகள் எல்லாம் வருது. இதனாலேயே எங்க புள்ளைங்க ஆறு மாசம் ஸ்கூலுக்கு போனா, ஆறு மாசம் வீட்டுலதான் கெடக்குறாங்க. ஏன்னா இங்கேயிருந்து மூணு அரை கிலோ மீட்டர் நடந்தாதான் மெயின் ரோடு வரும். போற வழியெல்லாம் தண்ணி தேங்கி நிக்குது. புள்ளைங்க எப்படி ஸ்கூலுக்கு போக முடியும்?'' என்று கேட்கிறார்கள், இந்த தகவல் தொழில்நுட்ப சாலையின் விரிவாக்கத்திற்காக வெளியேற்றப்பட்ட செம்மஞ்சேரி எழில் நகர், ஜவகர் நகர் மக்கள்.

திருவான்மியூரை அடுத்துள்ள தரமணி ஜவகர் நகரிலும், பெருங்குடி எழில்முக நகரிலும் வசித்து வந்த சுமார் 500 குடும்பங்களை (1999 – 2000 ஆண்டுகளில்) ஆக்கிரமிப்புகள் என அடித்து விரட்டியது, தமிழக அரசின் சாலை வளர்ச்சி நிறுவனம். வெளியேற்றப்பட்ட இம்மக்களுக்கு அரசு இழப்பீடாக, காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்க நல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ஊராட்சியில், மேய்க்கால் புறம்போக்கில் இரண்டு சென்ட் நிலம் ஒதுக்கி மாற்று இடம் வழங்கியுள்ளது தமிழக அரசு. ஜேப்பியாரின் சத்தியபாமா கல்லூரியின் கட்டடங்களைத் தவிர, சுற்று வட்டாரத்தில் எந்தக் குடியிருப்புகளும் இல்லாத திறந்தவெளிக் காட்டில் குடியமர்த்தப்பட்டுள்ளனர், சென்னை நகரின் உழைக்கும் மக்கள்.

கரண்ட், தண்ணீர், தெரு விளக்கு, ரோடு வசதி எதுவுமே இல்லாததினால இடம் ஒதுக்கியும் இத்தனை வருசமா இங்க குடிவராம இருந்தோம். கரண்டும், தண்ணியும் வந்ததினால இப்ப ரெண்டு வருசமாத்தான் இங்க வந்து வீடு கட்டி குடியிருக்கோம்'' என்று சொல்லும் சியாமளா தாமோதரன், இத்தனை நாளும் தரமணியில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக சொல்கிறார்.

இங்கேயிருந்து மெயின் ரோட்டுக்குப் போகணும்னா மூன்றரை கிலோ மீட்டர் சுத்திக்கினுதான் போகணும். தெரு லைட் இல்லாம இருண்டு கிடக்கிற சாலையில நடந்து, பாம்பு, தேள், விஷப் பூச்சிகளிடமிருந்து தப்பிச்சு மெயின் ரோட்டுக்கு (அய்.டி. ரோடு) வந்து பஸ் ஏறணும்னா, இந்தப் பக்கம் ஒரு கிலோ மீட்டர் நடந்தா ஆலமரம் பஸ் நிறுத்தம். அந்தப் பக்கம் ஒரு கிலோ மீட்டர் நடந்தா நாவலூர் பஸ் ஸ்டாப். வேலை வெட்டிக்கும், ஸ்கூலுக்கும், ஆஸ்பத்திரிக்கும், நாங்களும் எங்க புள்ளைங்களும் தினமும் 4 கிலோ மீட்டர் நடந்து நடந்து சோர்ந்து போயிட்டோம். அரசாங்கம் எங்களுக்குனு ஒதுக்குன அய்ந்து அடி பொதுப் பாதையையும் ஜேப்பியார் ஆக்கிரமிச்சு, காலேஜ் கட்டியிருக்காரு என்று குரலை உயர்த்தி, கோபமாக சொல்கிறார், கேளம்பாக்கம் மருந்துக் கம்பெனியில் வேலை செய்யும் அனிதா.

கவர்மென்ட் ஆஸ்பத்திரி எதுவும் இங்க கிடையாதுங்க. எதுனா ஒண்ணுன்னா, இங்கேயிருந்து கேளம்பாக்கம் (அரசு மருத்துவமனை) ஓடணும். இல்லைன்னா துரைப்பாக்கம் ஆஸ்பத்திரிக்குதான் (ஆராம்ப சுகாதார நிலையம்) ஓடணும். குண்டும், குழியுமான களிமண் ரோடுன்றதால 500 ரூபாய் கொடுத்தாக்கூட ஆட்டோக்காரங்க வர மாட்டாங்க. மழையில இன்னும் மோசம். வீட்ட விட்டு வெளியவே வர முடியாது என்கின்றனர், குமார் என்பவரும், ஆஸ்துமா நோயாளியான அறுபது வயது சுப்பராயனும். இவர்களிடையே பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட நாற்பத்தைந்து வயதான பாக்கி என்பவர், எல்லாருக்கும் போடும் சொட்டு மருந்தக்கூட எங்க புள்ளைங்களுக்கு இரண்டு வருசமா போடலிங்க. யாரும் வந்து எட்டிக்கூட பார்க்கல என கொந்தளிக்கிறார் ஆவேசத்துடன்.

பாம்பு, தேள், விஷ பூச்சிகள் உலவும் வெட்டவெளி பொட்டல் காட்டில் மக்களைக் கொண்டு வந்து குடியமர்த்தியதால் இதுவரையில் 10–க்கும் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் பாம்பு, தேள் கடித்து பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார், நாற்பத்தியாரு வயதான விஜயா. அவர் மேலும், அங்கம்மா (35) என்பவரின் மூன்று மாத கைக் குழந்தையை தேள் கடித்து, மழை நேரம், பஸ் வசதி எதுவுமில்லாததால், மருத்துவமனைக்குப் போகிற வழியிலேயே அந்தக் குழந்தை இறந்து போனதையும் குறிப்பிடுகிறார்.

ஏதோ ஒரு விஷப் பூச்சி தீண்டியதால், தனது மகனின் தலைமுடி உதிர்ந்து வருவதையும், தலையில் சிரங்கு பிடித்துள்ளதையும் நம்மிடம் காட்டினார் அமுதா. தலையில் முடி உதிர்வது ஊட்டச் சத்து குறைவினால் ஏற்படும் கோளாறு என்றோம். உடனே அதை மறுத்த அமுதா, விஜயராஜ் (7ஆவது வகுப்பு), பிரித்விராஜ் (3ஆவது வகுப்பு), மதன்ராஜ் (4ஆவது வகுப்பு) ஆகிய தனது மூன்று மகன்களுக்கும் இதே பிரச்சனைகள் இருப்பதுடன் வேறு பல குழந்தைகளுக்கும் தழும்புகள் இருப்பதை காட்டுகிறார்.

எழில்முக நகர், ஜவகர் நகர் மக்களை ஒருங்கிணைத்து, பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தனசேகர் நம்மிடம், "பெரும்பான்மையாக தாழ்த்தப்பட்ட மக்களும், முஸ்லிம்களும், கிறித்துவர்களும், கொஞ்சம் வேற சாதியை சேர்ந்தவங்களுமா மொத்தம் 500 குடும்பங்கள் இங்கு இருக்குது. குடிநீர், மின்சாரம், இந்த இரண்டும் எங்களுக்கு இந்த வருசம் தான் கிடைக்குது. ஒவ்வொரு வருசமும் நாங்க நடத்துன போராட்டங்களினால்தான் எங்களுக்கு இந்த வசதிகூட கிடைச்சது. வீட்டுக்கு இருநூறு, இருநூற்றைம்பது ரூபாய்ன்னு "பிரிவு' போட்டு வசூலிச்சுதான் ஒவ்வொரு போராட்டமும் நடத்திக்கினு வர்றோம்' என்கிறார்.

மேலும், குடிமøனப்பட்டா, மூன்றரை கிலோ மீட்டர் சுற்றுப்பாதையை பள்ளிக் குழந்தைகள் நலனுக்காக 1 கிலோ மீட்டர் குறுக்குப் பாதை அமைத்திடவும், புதிய சுடுகாட்டை உருவாக்கவும் இரவு நேரத்தில் பெண்கள் பொது சாலையில் வீட்டுக்கு வர முடியாமல் சமூக விரோதிகளால் பலாத்காரம், வழிப்பறி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இருள் சூழ்ந்த பொது சாலையில் மின்விளக்கு அமைத்திடவும், பொதுக் கழிவறை, மழைக் காலத்தில் வீடுகள் மழை நீரில் சூழா வண்ணம் சுற்றுச்சுவர் அமைத்திடவும், சத்தியபாமா ஜேப்பியார் காலேஜ் அரை ஏக்கர் நிலத்தில் கட்டியுள்ள நோய் பரப்பும் மலம் தேக்கும் மூடியில்லா தொட்டியை ஊருக்கு அருகில் இருந்து அகற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 வகை கோரிக்கைகளை முன்வைத்து 18.8.2009 அன்று சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

தமிழக அரசு எங்களுக்கு ஒதுக்குன எல்லையம்மன் சாலையில இருந்து, வால் வெட்டி மதகு வரைக்கும் இருக்குற பொதுக்கால்வாய் மேல 5 அடி குறுக்கு சாலையை ஜேப்பியார் ஆக்கிரமிச்சு கட்டடம் கட்டியிருக்காரு. பள்ளிக்கூடம் போற குழந்தைங்க மூன்றரை கிலோ மீட்டர் சுத்திக்கினு போறாங்க. அவங்களுக்காகவாவது 1 கிலோ மீட்டர் குறுக்குப் பாதையை மீட்டுத் தரணும்னு தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் (காஞ்சிபுரம்)ன்னு எல்லோருக்கும் மனு கொடுத்துட்டோம். இதுவரையில் எந்த பதிலும் இல்லை என்றவர், கட்சித் தலைமையுடன் பேசி, அடுத்தக் கட்டமாக மக்களைத் திரட்டி ஆளுநர் மாளிகை முன்பு சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாக கூறுகிறார் தனசேகர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என சென்னையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களின், செம்மஞ்சேரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் – 7 ஆயிரம் குடும்பங்களும், துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 15 ஆயிரம் குடும்பங்களும் வசிக்கும் பகுதிகளுக்கே எந்த அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தராத ஜெயலலிதா, கருணாநிதி அரசுகள், 500 குடும்பங்கள் வசிக்கும் எழில் நகர், ஜவகர் நகர் மக்களின் தேவைகளை மட்டும் நிறைவேற்றிடப் போகிறார்களா என்ன? இலவசத் திட்டங்களுக்காகப் பல கோடிகளை செலவழிக்கும் தி.மு.. அரசு, வெளியேற்றப்பட்ட சேரி மக்களின் துன்பங்களை கண்டு கொள்ள மறுப்பது ஏன்?

- இசையரசு

அடுத்த இதழிலும்

Pin It

 

கடவுளைக் காப்பாற்ற, கடவுள் ஒருவரோ, பலரோ, உருவமாகவோ, அருவமாகவோ, மற்றெப்படியாகவோ கடவுள் இருக்கிறார் என்பதாக மக்களுக்கு மக்கள் எடுத்துச் சொல்ல வேண்டியதும், பிரச்சாரம் செய்ய வேண்டியதும் அவசியம்தானா? கடவுள் எண்ணம் மக்களுக்கு மறைந்து போய்விட்டது. அதை ஞாபகப்படுத்த பிரச்சாரக்காரர்களைச் சம்பளத்திற்கு வைத்து பாதிரிகளை, குருமார்களை ஏற்படுத்தி, கடவுள் தத்துவத்தைப் போதிக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியந்தானா? மற்றும், நாத்திகர்கள் பலர் தோன்றி, கடவுள் இல்லை என்று நாத்திகப் பிரச்சாரம் செய்து வருவதால் கடவுள் கரைந்து வருகிறார். ஆதலால் கடவுளைக் காப்பாற்ற வேண்டியது மிக மிக அவசியம் என்று பலர் கருதி, ஆத்திகப் பிரச்சாரம் செய்து கடவுளைக் காப்பாற்ற வேண்டியது அவசியந்தானா?

மற்றும், கடவுளுக்குக் கோயில் வேண்டுமா? கடவுளுக்குப் பொண்டாட்டி வேண்டுமா? கடவுளுக்கு காம விகாரம் உண்டா? கடவுளுக்கு குழந்தைகள் வேண்டுமா? கடவுளுக்கு தாசி, போக மாதர்கள் வேண்டுமா? கடவுளுக்கு படைப்பு, சாப்பாடு, நகை, துணி, மணி, கல்யாணம், உற்சவம், ஊர்வலம் வேண்டுமா? இவை ஒருபுறம் இருக்க, கடவுள் சக்திக்கு செய்கைக்கு ஏதாவது அளவு உண்டா? அல்லது அவர் எல்லாம் வல்லவரும் எல்லாவற்றிற்கும் பொறுப்பானவருமா? அவருடைய சக்திக்கும் செயலுக்கும் எல்லை உண்டா? இல்லையா? கடவுள் சக்தியை உணர்ந்தவன் கடவுளைக் காப்பாற்றக் கவலை கொள்ளுவானா? உண்மையிலேயே, "சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்று மனப்பூர்வமாய் நம்பி இருக்கும் ஒருவன் கடவுளைக் காப்பாற்ற முற்படுவானா?

இந்தப்படி கடவுளைப் பற்றிக் கவலைப்படுகிறவர், கடவுள் பிரச்சாரம் செய்கிறவர்களில் யாராவது தங்களது எண்ணத்தில், நடத்தையில் கடவுள் சித்தப்படி நடப்பவர்களாகவோ, கடவுளுக்குப் பயந்து நடப்பவர்களாகவோ அல்லது கடவுள் தன்மையில் மதிப்பும் நம்பிக்கையும் பயமும் கொண்டவர்களாகவோ எங்காவது காணப்படுகிறார்களா? கடவுள் நம்பிக்கை உடையவன் எவனாக இருந்தாலும் அவன் கடவுளைத் தொழ வேண்டுமா? பூசிக்க வேண்டுமா? தொழுதாலும், பூசித்தாலும் அதற்கு ஒரு நேரம், ஓர் இடம், ஓர் உருவம், ஒரு வாக்கியம், பாட்டு வேண்டுமா? மற்றும் அதற்குப் பண்டம், படைப்பு வேண்டுமா? உண்மையாகக் கடவுள் இருப்பதானாலும், இருப்பதாக நம்புவதானாலும் பல மதக்காரர்களும் இன்று கடவுள் சம்பந்தமாய் நடந்து கொள்ளும் நடத்தைகள் அவசியமா? – என்பனவாகியவை ஒருபுறம் இருக்க,

தங்களைப் பெருத்த அறிவாளிகள் என்றும், எல்லாம் அறிந்த மேதாவிகள் என்றும் கருதிக் கொண்டிருக்கும் சிலர் கூறுகிறபடி, அதாவது – "கடவுள் இருக்கிறதோ, இல்லையோ அது வேறுவிஷயம்; கடவுள் என்பதாக ஒரு சர்வ சக்தி உள்ளவர் ஒருவர் இருக்கிறார் என்று மக்கள் நம்பும்படி செய்தால்தான் மக்கள் யோக்கியமாய், பிறருக்குத் தீங்கிழைக்காமல் நடந்து கொள்ளுவார்கள்; ஆதலால், கடவுள் பயம் மக்களுக்கு இருக்க வேண்டும்; அந்தப் பயத்தைத் தெளிய வைக்கக் கூடாது' என்று சொல்லுகிறார்களே அதைப் பற்றிச் சிறிது சிந்தித்தால்...

அவர்கள் கருதுவது போல், கடவுள் உணர்ச்சியையும், கடவுள் தன்மைகளையும்; நியாயத் தீர்ப்புகளையும்; பயப்படத்தக்கக் கொடூர ரூபம் உள்ள நரக வேதனைகள், செக்கில் போட்டு ஆட்டுதல் முதலிய பலமான தண்டனைகளையும்; பின் ஜென்மத்தில் பல கஷ்டமான இழிவுகளையும் துன்பங்களையும் தரத்தக்க தலைவிதிகளையும் மற்றும் பலவித மோட்ச சுகங்களையும், உயர் பிறவிகளையும், சுகபோகங்களையும் தரத்தக்க முன் ஜென்ம புண்ணிய கருமங்களையும்; அவை களுக்கு ஏற்ற கடவுள் வாக்கு, வேதம், சாஸ்திரம், புராணம் முதலிய கற்பனைகளையும் எவ்வளவோ கெட்டிக்காரத்தனமாய் கற்பனை செய்து, மக்களுக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் புகுத்தி வந்தும்கூட, இன்று வரையில் மக்களில் பெரும்பாலோர் ஏறக்குறைய எல்லா மக்களும் யோக்கியமாய், மனிதனை மனிதன் ஆட்கொல்லாமல், சராசரி மனிதனுக்கு மேம்பட்ட பொருளை அனுபவியாமல் இருக்க முடியவில்லையே அது ஏன் என்றும், கடவுள் உணர்ச்சியை இவ்விதமாக எல்லாம் மக்களுக்குள் ஊட்டியதால் ஏதாவது பயன் ஏற்பட்டு இருக்கிறதா என்றும் பார்த்தால், "மனிதன் ஒழுக்கத்திற்கு கடவுள் உணர்ச்சி வேண்டும்' என்கின்ற வாதமும் அடிபட்டுப் போகின்றதே!

ஏன் எனில், உலகில் அறிவில்லாத பாமர ஏழை மக்கள் மாத்திரந்தான் ஒழுக்கமற்று, நாணயமற்று, உண்மையற்று நடந்து கொள்கிறார்கள் என்பது அல்லாமல், கற்ற மக்கள், செல்வவான்கள், பெரும் பதவியில் உள்ளவர்கள், மிகமிகப் பக்திமான்கள், குருமார்கள் உட்பட எல்லோருமே பெரிதும் விதிவிலக்கு இல்லாமல், கீழ் மக்கள் தன்மையாய் நடந்து கொள்கிறதைப் பார்க்கிறோமே! ஆகவே, கடவுள் உணர்ச்சிக்கும், ஒழுக்கத்திற்கும், உயர் குணத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்று தெளிவாகிடவில்லையா?.

-பெரியார்

குடி அரசுகட்டுரை-7.5.1949

 

Pin It

ஒரு குற்றவியல் வழக்கின் விசாரணை, நீதிமன்றத்தில் எவ்விதம் நடைபெற வேண்டும் என்பது குறித்து சென்ற இதழில் வெளியான இக்கட்டுரைத் தொடரில் விரிவாகப் பார்த்தோம். ஒவ்வொரு வழக்கு விசாரணையிலும் சாட்சிகள், சாட்சியங்கள் வழக்கின் முடிவிற்கு அடிப்படையாக அமைபவை என்பதையும் கண்டோம். ஒவ்வொரு சாட்சியின் நீதிமன்ற விசாரணையும் முதல் விசாரணை, குறுக்கு விசாரணை மற்றும் மறு விசாரணை என வகைப்படுத்தப்பட்டுள்ளதையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் குறித்து ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும் பொழுதுதான் அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும்.

வன்கொடுமை வழக்குகளைப் பொருத்தவரையில், இன்று பரவலாக அறியப்பட்டதும் முன் உதாரணமாகத் திகழ்வதுமான மேலவளவு வழக்கின் சாட்சிகளின் சாட்சியங்களைக் கொண்டு விளங்கிக் கொள்ள முற்படலாம். இந்த அடிப்படையில்தான், மேலவளவு வழக்கின் சாட்சிகளின் சாட்சியங்களைத் தொகுத்து பின்வருமாறு தருகிறோம் :

.சா 1 : கிருஷ்ணன் (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :

நான் மேலவளவு தெற்கு நகர் காந்தி நகரில் வசிக்கிறேன். நான் இந்து பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். எதிரிகள் அனைவரையும் எனக்கு தெரியும். பாரதிராஜா, மனோகரன் எதிரிகளைத் தவிர, மற்ற எதிரிகள் அம்பலக்காரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எதிரிகளுக்கும் எங்களுக்கும் விரோதம். மனோகரன், பாரதிராஜா ஆகியோர் அம்பலக்காரர்களுக்கு சப்போட்டாக இருந்ததால், அவர்கள் இரண்டு பேர்களும் எங்களுக்கு விரோதம். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மேலவளவு பஞ்சாயத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக தனி பஞ்சாயத்தாக ஆக்கப்பட்டது. அம்பலக்காரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை தேர்தலில் நிற்கக்கூடாது என்று சொன்னார்கள். 1996ஆம் ஆண்டுக்கு முன்னால் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த 1 ஆவது எதிரி அந்த பஞ்சாயத்தில் தலைவராக இருந்தார். எங்களை நிற்கக்கூடாது என்று சொன்னதினால் தேர்தல் நடைபெறவில்லை.

இரண்டாவது முறை மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அரசாங்க அதிகாரிகள் வந்து நீங்கள் தேர்தலில் நில்லுங்கள் உங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். இவ்வழக்கில் இறந்த முருகேசன் என்பவர் நாமினேசன் தாக்கல் செய்து விட்டு வந்த அன்று இரவு சேவகமூர்த்தி, /பெ. ஊமையன், பாண்டியம்மாள் /பெ.சின்னகாளை, காஞ்சிவனம் /பெ. நல்லையன் ஆகியோரின் வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவம் நடந்ததால் வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் என்று தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, முருகேசன் நாமினேசன் தாக்கல் செய்யப்பட்டு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அந்த முறை அம்பலக்காரர்கள், கள்ளர்கள் ஓட்டுப் பெட்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். ஓட்டுப் பெட்டி இல்லாததால் ஓட்டு எண்ணிக்கை தடைப்பட்டது.

28.12.1996 தேதியன்று மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த முறை முருகேசன் தேர்தலில் நின்று ஜெயித்தார். பதவி பிரமாணம் செய்தது தவிர, அந்த அலுவலகத்திற்குள் முருகேசன் உள்ளே நுழைய முடியவில்லை. அம்பலக்காரர் சமுதாயம், முருகேசனை தலைவராக இருக்க விடவில்லை. ஓட்டுப்பெட்டியை எடுத்துக்கொண்டு போனதற்காக அம்பலக்காரர் சமுதாயத்திற்கு தண்டனை கிடைத்தது. இவ்வழக்கில் உள்ள இரண்டு எதிரிகள் ஓட்டுப்பெட்டியை எடுத்துக் கொண்டு போன வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அவர்கள் 3ஆவது மற்றும் 21 ஆவது எதிரிகள் (பொன்னய்யா மற்றும் செல்வம் ஆவார்கள்) 30.6.1997 அன்று என் வேலை விஷயமாக மதுரை கலெக்டர் சேவகமூர்த்தி, நித்தியானந்தம், பாண்டியம்மாள், காஞ்சிவனம் எல்லோரும் இருந்தார்கள். என்னைப் பார்த்ததும் தலைவர் முருகேசன் கூப்பிட்டார். 3 பேர்களுடைய வீடுகள் தீப்பற்றி எரிந்ததற்காக நஷ்டஈடு கேட்பதற்காக, மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்க்கப் போகிறோம் வாருங்கள் என்று முருகேசன் கூப்பிட்டார்.

அன்று கலெக்டர் அலுவலகத்தில் இல்லை. கலெக்டர் அலுவலகத்தின் வாசலில் 8 ஆவது எதிரி மனோகரன் கேட்டார். நித்தியானந்தம், கே.என்.ஆர். பஸ்ஸில் போவதாக சொன்னார். மனோகரன் போன் பேசும் பக்கம் போய்விட்டார். மற்ற நாங்கள் அனைவரும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம். நான், தலைவர் முருகேசன், உப தலைவர் மூக்கன், சேவகமூர்த்தி, செல்லத்துரை, பாண்டியம்மாள், மூர்த்தி, பூபதி எல்லோரும் கே.என்.ஆர். பஸ்ஸில் ஏறினோம். பஸ் மேலூர் வந்தது. மேலூரில் அந்த பஸ் இரண்டு நிமிட நேரம் நின்றது. மேலூரில் எங்கள் இனத்தைச் சேர்ந்த குமாரும், சின்னய்யாவும் அதே பஸ்ஸில் ஏறினார்கள். அம்பலக்காரர் இனத்தைச் சேர்ந்த தலைவர் அழகர்சாமி முதல் எதிரி, துரைபாண்டி 2ஆவது எதிரி, மணிகண்டன் 5ஆவது எதிரி , ஜோதி 4ஆவதுஎதிரி, (தற்பொழுது வழக்கில் ஜெயராமன், மணிவாசகம் 6ஆவது எதிரி, ஆகிய எல்லோரும் அதே பஸ்ஸில் ஏறினார்கள். 1, 2, 4, 5, 6 எதிரிகளை சாட்சி அடையாளம் காட்டுகிறார். சுமார் 2.45 மணிக்கு மேலவளவு அக்ரஹாரம் கள்ளுக்கடை அருகே கே.என்.ஆர். பஸ் வந்தது. 2 ஆவது எதிரி துரைபாண்டி பஸ்ஸை நிறுத்தச் சொல்லி டிரைவரிடம் சத்தம் போட்டார். பஸ்ஸை அதே இடத்தில் டிரைவர் நிறுத்தினார். ராமர் தலைமையிலிருந்த நீதிமன்றத்தில் உள்ள எதிரிகள் பஸ்ஸை ஆயுதங்களுடன் வந்து வழிமறித்தார்கள். அழகர்சாமி (முதல் எதிரி) முருகேசனை ஈனப்பயலான உனக்கு எதற்கு தலைவர் பதவி, எதற்கு நஷ்டஈடு என்று சொல்லி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பஸ்ஸிலிருந்த ஜனங்கள் சிதறி ஓடினார்கள். அழகர்சாமி, முருகேசனின் தலையைப் பிடித்து தலை துண்டாகும்படி வெட்டினார். 1ஆவது எதிரி முருகேசனின் தலையை எடுத்துக்கொண்டு மேற்குப்புறமாக ஓடினார். இறந்து போன ராஜாவை 40 ஆவது எதிரி ராமர் வெட்டினார். இறந்து போன செல்லதுரையை, 5 ஆவது எதிரி மணிகண்டன் வெட்டினார். சேவகமூர்த்தியை 6ஆவது எதிரி மணிவாசகம் வெட்டினார். உபதலைவர் மூக்கன் பஸ்ஸிலிருந்து இறங்கி கிழக்கு முகமாக ஓடினார். 4ஆவது எதிரி ஜோதி, அவரை வெட்டினார். பஸ்ஸிலிருந்து இறங்கி பூபதி மேற்கு முகமாக ஓடினார். அவரை 3ஆவது எதிரி பொன்னைய்யா வெட்டினார்.

நான் கீழே இறங்கி ஓட முயற்சித்தேன். சின்னய்யாவும், குமாரும் பஸ்ஸில் உள்ள வேறு ஒரு வாசல்படியாக வெளியே வர முயற்சித்தார்கள். சின்னய்யாவை 16ஆவது எதிரி கரந்தமலை, வலது கன்னத்தில் பட்டாக்கத்தியால் வெட்டினார். குமாரை, தமிழன் 19ஆவது எதிரி, மற்றும் 29ஆவது எதிரி அசோகன் ஆகியோர்கள் வெட்டினார்கள். தலையில்லாத முருகேசனின் பிணம், ரோட்டில் கிடந்தது மற்றும் வெட்டுப்பட்டவர்கள் கீழே விழுந்து கிடந்தார்கள். நான் மேலவளவு காலனிக்கு பயந்துகொண்டு ஓடிப்போய்விட்டேன். காலனி மக்களிடம் நடந்த விஷயத்தை சொன்னேன். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் மூவரும் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று சொன்னதின் பேரில் மூன்று சைக்கிளில் மேலூர் ஆஸ்பத்திரிக்கு குறுக்கு வழியில் சென்றோம். மேலூர் ஆஸ்பத்திரியில் எங்களுக்கு முதல் உதவி அளித்தார்கள்.

மேலூர் மருத்துவமனையில் ஒரு காரில் எங்களை மதுரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். அரைமணி நேரம் கழித்து மேலூர் ஆய்வாளர் மருத்துவமனைக்கு வந்தார். அவர் நான் சொன்னதை எழுதிக் கொண்டார். அதை அவர் என்னிடம் படித்துக் காண்பித்தார். நான் அதில் கையெழுத்துப் போட்டேன். .சா..1 நான் கொடுத்த ஸ்டேட்மெண்ட் முதல் எதிரி அழகர்சாமி என்னிடம் காட்டப்படும் பட்டாக்கத்தி போன்ற பட்டாக்கத்தியை துரைபாண்டி வைத்திருந்தார். 1ஆம் தேதி டி.எஸ்.பி. அவர்கள் என்னை விசாரித்தார்கள். ஒருவாரம் நான் உள்நோயாளியாக இருந்தேன். கருப்பன், கல்யாணி, மாயவர், பெரியவர், ஆகிய நான்கு பேரும் இந்த சம்பவத்தை பார்த்தார்கள். அவர்களையும் எதிரிகள் மிரட்டியதால் அவர்கள் அருகில் வரவில்லை.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

மேலவளவு காலனியில் சுமார் 400 குடியிருப்பு வீடுகள் உள்ளன. எங்கள் காலனியில் உள்ள எங்கள் இன மக்களுக்கு விவசாய நிலங்கள் உள்ளன. எங்கள் ஊரிலிருந்து வேலை விஷயமாக மேலூர் மற்றும் ஊர்களுக்கு தினந்தோறும் சிலர் செல்வார்கள். மூன்று முறை எலக்ஷன் அறிவித்து நடத்தாமல் மூன்றாவது முறைதான் எங்கள் இன முருகேசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனது புகாரிலோ போலிஸ் விசாரணையிலோ முருகேசன் நாமினேசன் தாக்கல் செய்து அன்று இரவே மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அந்த மூன்று வீடுகளில் சொந்தக்காரர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொல்லவில்லையென்று சொன்னால் சரிதான். எதிரிகள் 40 பேர்களும் எங்கள் ஊரில் குடியிருப்பதால் அவர்களை நான் பார்த்திருப்பதினால், அவர்களை எனக்கு தெரியும். ஒரு சில எதிரிகளின் தகப்பனார்களின் பெயர்கள் எனக்கு தெரியும். ஒரு சில எதிரிகளின் தகப்பனார்களின் பெயர்கள் எனக்கு தெரியாது. பஸ் நின்று நாங்கள் வெளியே ஓடும்வரை 5, 6 நிமிடங்களில் சம்பவம் முடிந்துவிட்டது. பஸ்ஸுக்குள் நின்று கொண்டேதான் அந்த 5, 6 நிமிடங்களில் நான் சம்பவத்தை பார்த்தேன். நான் வெட்டு வாங்கிய பிறகு கொஞ்ச நேரம் நின்ற பிறகுதான் ஓடினேன். எங்கள் ஊர்க்காரர்கள் தவிர வெளியூர்காரர்களும் சம்பவம் நடக்கும்போது இருந்தார்கள். சம்பவம் நடக்கும்போது எந்த வாகனமும் போகவில்லை. அந்த கட்டத்தில் எனக்கு தெரியாத நபர்கள் யாரும் இல்லை.

நான் ஊருக்குப் போய் சேரும்போது பொது இடத்தில் சின்னைய்யா, குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பொது இடத்திலிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பெண்களும் இருந்தார்கள். அந்தக் கட்டத்தில் இறந்தவர்களின் மனைவிகளோ, குழந்தைகளோ யாரும் இல்லை. ஊருக்கு சென்ற பிறகு 5, 6 நிமிடத்தில் நான் ஆஸ்பத்திரிக்கு கிளம்பிவிட்டேன். ஊரிலிருந்து ஊர்க்காரர்கள் மூன்று சைக்கிளில் எங்கள் மூவரையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள். அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர் எங்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்துதான் பார்த்தார். மருத்துவர் எங்கள் மூவரையும் காயம் எப்படி ஆனது என்று தனித்தனியாக கேட்டார். காயம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி மொத்தமாக சொன்னோம். ஒரே மருத்துவர்தான் மதுரை ஆஸ்பத்திரியில் எங்கள் மூவரையும் பார்த்தார். மதுரை ஆஸ்பத்திரியில் மருத்துவர் என்னை கேட்டார். நான் சொன்னேன். எங்கள் ஊரிலிருந்து மேலூர் ஆஸ்பத்திரிக்கு போவதற்கு முன்பு எங்கள் ஊர் பீட் காவலர் இரண்டு பேர்களிடம் நடந்த சம்பவத்தை சொன்னேன்.

கலெக்டர் ஆபிசுக்கு போவதற்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்க வேண்டுமென்று எண்ணம் இருந்தது. அன்று திங்கட்கிழமை பொதுமக்கள் மனு கொடுக்கும் நாள், கலெக்டர் இல்லாத காரணத்தினால்தான் மனு ஒன்றும் கொடுக்காமல் திரும்பி வந்தேன். வீடு தீப்பற்றி எரிந்தது குறித்து முருகேசன் ஒரு மனுவை பி..விடம் கொடுத்தார். ஆய்வாளரிடம் நான் புகார் கொடுத்தபோது அந்த இடத்தில் சின்னய்யாவும், குமாரும் இருந்தார்கள். 30.6.1997 ஆம் தேதியன்று, காவல் துறை துணை கண்காணிப்பாளர் அவர்களுடைய வாகனத்தில் மேலூருக்கு கூட்டி வந்தார்கள் என்று சொன்னால் அது சரியல்ல. சா.பொ.1அய் முதல் எதிரி பயன்படுத்தினார் என்று நான் பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல. பஸ்ஸிலே நானே பிரயாணம் செய்யவில்லை என்று சொன்னால் அது சரியல்ல.

2, 3, 8, 11, 16, 18, 20இலிருந்து 23ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

ஆய்வாளர் என்னை விசாரித்தார். என்னிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தை எனக்கு படித்துக்காட்டி என்னிடம் கையெழுத்து பெற்றார். எல்லா எதிரிகளின் பெயர்களும் எனக்கு தெரியும். அழகர்சாமியின் மருமகன் குணசேகரன் எங்கள் இனத்தை சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவரும் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று மிரட்டி, ஒரு அம்மா கேட்பார்கள் அதற்கு ஆமாம் என்று பதில் சொல்லுங்கள் என்று சொன்னதின் பேரில் அந்த அம்மா என்னைக் கேட்க "ஆமாம்' என்று சொல்லி கையெழுத்துப் போட்டேன். அதை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். ஆபிசரிடம் என்னை மிரட்டியவிஷயத்தை நான் சொல்லவில்லை. எதிரிகள் தரப்பு சான்றாவணம் 1–தான் ரிட் பெட்டிசன் நெம்பர் 273/99இல் சாட்சி. கிருஷ்ணனின் அபிடவிட் (ஜெராக்ஸ் சான்றிட்ட நகல்) அரசு வழக்கறிஞர் ஆட்சேபனைக்குட்பட்டு மேற்படி ஆவணம் குறியீடு கொடுக்கப்பட்டது. என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியது குறித்து இன்றுதான் முதன் முதலாக சொல்கிறேன்.

அபிடவிட்டில் பொய்யான குற்றவாளிகள் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், சி.பி.அய். விசாரணை வேண்டுமென்றும் நான் அபிடவிட் தாக்கல் செய்துள்ளேன் என்றால் அது சரியல்ல. என்னை பலாத்காரமாக கூட்டிக்கொண்டு போய் மிரட்டி என்னிடம் கையெழுத்து வாங்கப்பட்டது என்று சொன்னால் சரிதான். எங்கள் ஊரிலிருந்து மேலூர் ஆஸ்பத்திரிக்கு மாலை 4.30 மணியளவில் போய் சேர்ந்தேன். எங்கள் ஊரில் இருந்த போலிசிடம் கும்பலாய் வந்த 30 பேர்கள் வெட்டினார்கள் என்று சொன்னேன். நான் கொடுத்த ரிப்போர்ட் (.சா..1) சொன்ன நேரத்தில் சொன்ன தேதியில் கொடுக் கப்படவில்லை என்று சொன்னால் அது சரியல்ல. எங்கள் சங்கத் தலைவர்களின் ஆலோ சனையின்பேரில் .சா.. 1 பிற்பாடு தயார் செய்யப்பட்டது என்று சொன்னால் அது சரியல்ல. மதுரை கலெக்டர் அலவலகத்தின் மனோகரன் என்னைப் பார்த்து எப்போது ஊருக்குப் போகிறீர்கள் என்று என்னை கேட்டது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

7, 9, 12, முதல் 15, 17, 24, 26 மற்றும் 28ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

மனோகரன் நித்தியானந்தத்திடம் என்ன பேசினார் என்ற விபரம் எனக்கு தெரியும். போலிசார் என்னிடம் புகார் பெற்றபோது நித்தியானந்தம் பேசி விபரத்தை சொல்லி உள்ளேன் என்றால் சரிதான். மனோகரன் அன்று எங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்க வந்தான் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. முருகேசனுக்கு குத்து விழுந்தவுடன் பஸ்ஸில் இருந்த அனைவரும் பீதி அடைந்து ஓடினார்கள். நான் பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடவில்லை. நான் ஊருக்கு போவதற்கு முன்னால் சின்னைய்யாவும், குமாரும் ஊரில் இருந்தார்கள். நான் ஊருக்குள் போவதற்கு முன்னாலேயே இந்த சம்பவம் பற்றி தெரிந்துள்ளது. அப்போது அண்ணாதுரை காவல் உதவி ஆய்வாளர் 7 எழுதாத பேப்பரில் என்னிடம் கையெழுத்து வாங்கிச் சென்றார் என்றால் அது சரியல்ல என்று மூன்று பேர்களுக்கும் காவல் நிலையம் போய் புகார் கொடுக்க வேண்டுமென்று தோன்றவில்லை.

நாங்கள் அப்பொழுது மிரண்டு போய் குழப்பத்தில் இருந்தோம். நான் சம்பவத்தை பார்க்காததால்தான் நான் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கவில்லையென்று சொன்னால் அது சரியல்ல. வேறு சம்பவத்தில் எனக்கு ஏற்பட்ட காயத்தை இந்த சம்பவத்தில் எனக்கு காயம் ஏற்பட்டதாக 7 வெற்றுப் பேப்பரில் என்னிடம் போலிசார் கையொப்பம் பெற்று, அம்பேத்கர் சங்கத் தலைவர்கள் கூடி அந்தப் பகுதியில் உள்ள முக்கியமான அம்பலக்காரர்கள் எல்லோருடைய பேரிலும் இந்த வழக்கைப் பொய்யாக ஜோடித்துள்ளேன் என்றால் சரியல்ல. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து என்னையும் என்னுடன் சேர்ந்த 12 சாட்சிகளையும் கொண்டுபோய் அடைத்து வைத்து, அவர்கள் சொன்ன தின்பேரில் நான் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல. அந்த இயக்கத்திற்கு பயந்துதான் நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.

29 முதல் 39 வரை எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை : நான் சொன்ன மாதிரி சொன்ன இடத்தில், சொன்ன எதிரிகளால், நான் சொன்ன நேரத்தில் எனக்கு காயங்கள் ஏற்படவில்லையென்று சொன்னால் அது சரியல்ல. நான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவர் மீது குற்றம் சாட்டுபவர் என்று சொன்னால் சரியல்ல.

- சாட்சிகள் தொடரும்

-சு. சத்தியச்சந்திரன்

Pin It

 

(கடந்த இரு இதழ்களில் வெளிவந்த பேராசிரியர் ராமு. மணிவண்ணன் பேட்டி இந்த இதழிலும் தொடர்கிறது)

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் எத்தகைய முன்னெடுப்புகளை செய்தால், ஈழத் தமிழர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

இன்றைக்கு இருக்கிற காலகட்டத்தில், ஈழத்தின் முகாம்களில் உள்ள முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் அவரவர் வாழ்விடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். 1950இலிருந்து குறிப்பாக, 70–க்குப் பிறகு n> தமிழர்களுக்கு வாழ்வாதாரங்களே இல்லை. இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. நான்காம் ஈழப் போர் என்பது, பொருளாதார ரீதியான போர்; சமூக ரீதியான போர்; ராணுவ ரீதியான போர். எல்லா விதமான அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஓர் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போர். இந்தப் போருக்குப் பிறகு உடனே மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இல்லை. இந்த மக்கள் வீடு திரும்பினால் கூட வாழ்வாதாரங்கள் வேண்டும். பிறகு வாழ்வாதாரங்களுக்குத் தேவையான தொழிற்கூடங்கள், விளை நிலங்கள் உருவாக்கப்பட வேண்டும். மிகக் கடினமான சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். இந்த நிலையிலிருந்து இவர்கள் மீள முடியுமா என்று தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக தமிழர்களுக்குச் சம உரிமை வேண்டும். இலங்கை நாட்டின் ஒற்றை அரசாங்கத்தில் சம உரிமை மற்றும் அவர்களது வாழ்க்கை நிலைகள் இதெல்லாம் ஒரு நீதி கிடைக்கக்கூடிய அமைப்பாக இருக்குமா என்று நாம் பார்க்க வேண்டும். இல்லையென்றால் ஈழத் தமிழ் மக்களுக்காக, அவர்களுடைய சமூக உரிமைகளுக்காக மற்றும் சொல்லப் போனால், அவர்களுடைய சுயநிர்ணய உரிமைகளுக்காகவும், அவர்களுக்கான அடிப்படை வாழ்க்கை நிலைகளுக்காகவும் நாம் உறுதியாகக் குரல் கொடுக்க வேண்டும். அது ஈழமாகவும் இருக்கலாம்; ஈழத்திற்கு அப்பாற்பட்டும் இருக்கலாம்.

ஈழத்துடனான தொப்புள் கொடி உறவு என்பது, தண்ணீரோடு கலந்த உறவு. அந்த தண்ணீர் கடலில் நிற்கும்போது எப்பவுமே அந்த உணர்வு எனக்கு இருக்கும். நாம் இந்தக் கரையில் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு இருக்கிறபோது, அந்தக் கரையில் நம்மை சார்ந்தவர்கள் இருப்பார்கள். அந்த மாதிரியான ஓர் உறவு நமக்கு. அந்த உறவுக்கு இன்றைக்கு தமிழ் நாட்டின் நிலையிலோ, இந்திய ஜனநாயகத்தின் நிலையிலோ பெரிய மாற்றங்கள் இருந்தாலும், அந்த மாற்றங்களை தமிழ்ச் சமுதாயம் குறிப்பாக இளைஞர் சமுதாயம் மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அவர்கள் என்ன மாதிரியான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

குறிப்பாகச் சொல்வதென்றால், இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிற அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். அரசியல் கட்சிகளின் சிந்தனைகளில் மாற்றம் வேண்டும். மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்திகள் தயாராக இல்லை. தமிழக அரசியலைப் பொருத்தவரையில் ஓய்ந்த நிலை அரசியல்தான்! திராவிட இயக்கம் தன்னுடைய தரை மட்டத்தைத் தொட்டுவிட்டது. அதன் அடிநிலைக்கு வந்துவிட்டது. இந்த நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் கீழே போக முடியாது. இந்த நிலையிலிருந்து போக வேண்டும் என்றால், ஒரே நிலை மேல் நோக்கித்தான் போக வேண்டும். அதற்கான புதிய சக்திகள் உருவாக வேண்டும். அது நிச்சயமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், ஈழத்தில் நடந்த இந்த ஒரு பெரிய போராட்டம், ஈழ மக்களோட துயரம், இதை உட்படுத்திக் கொண்டுள்ள ஓர் இளைஞர் சமுதாயம் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் சக்தியாக உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. இருக்கிற திராவிட கட்சிகள் எல்லாமே உணர்வு ரீதியாகத் தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பேசித்தான் ஓட்டு வங்கிகளை ஆதாரமாக்க முயல்கிறார்கள். இந்த நிலைப்பாட்டிலிருந்து உண்மையாகவே இளைஞர் சமுதாயம் ஈழ மக்களுக்காகப் பேசும் போது, தமிழகம் தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. தமிழகத்தில் மாறுதல் வந்தால், இந்திய அரசியல் நிலைப்பாட்டிலும் மாறுதல் வரும்.

குறிப்பாக ஈழம், திபெத், பர்மா இந்த மூன்று விஷயங்களில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களே?

இன்றைக்குக் கறுப்பு இன விடுதலைப் போராட்டம் ஒரு நிலைக்கு வந்துள்ளது. ஒரு சுதந்திர நிலைக்கு என்று சொல்லமுடியாவிட்டாலும், அவர்களுடைய உரிமைக்காகப் போராடக்கூடிய அமைப்புகளை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட மாறுதலுக்குப் பிறகு ஓரளவுக்கு மற்ற பகுதிகளுக்கு சிந்தனைப்பூர்வமாகவும் அரசியல் சார்ந்தும் பணி செய்யக் கூடிய வாய்ப்பு அமைந்தது. திபெத் வரலாற்றுப் பூர்வமாக நம் அண்டை நாடாக இருக்கிறது. 1960 களில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய இன ஒடுக்கல் மற்றும் தேசிய ஆக்கிரமிப்பால் திடீரென ஓர் அண்டை நாடு மறைந்து, அதற்கப்பால் ஒரு புதிய நாடு அண்டை நாடாகத் தோன்றும் போது, நிச்சயமாக நமக்கு சில சங்கடங்கள் உருவாகும்.

லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் வாழ்வின் அடையாளம், வரலாறு திடீரென்று புதைக்கப்படுகிறது. இது கவனத்தில்கொள்ளப்பட வேண்டிய விசயம். அண்டை நாடாகவும் பண்பாட்டு ரீதியாகவும் திபெத் என்னை ஈர்த்தது. பர்மாவைப் பொருத்தமட்டில், என்னுடைய வளரும் பருவத்தில் இருந்தே நான் முன்னொருமுறை கூறியபடி, என் குடும்பத்தினர் கடல்கடந்து திரும்பி வந்த ஒரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அண்டை நாடுகளில் வாழும் மற்ற இந்தியர்கள், தமிழர்களைப் பற்றிய எண்ணம், சிந்தனை, ஆர்வம் எப்போதுமே எனக்கு உண்டு. 1966–க்குப் பிறகு 70 களில் பர்மாவில் இருந்து தமிழர்களும் வெகுவாக இந்தியர்களும் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர் அல்லது அங்கிருந்து செல்லவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது. அப்பொழுது அங்கு மக்களாட்சி கிடையாது. 1962 இலிருந்து அங்கு லூவின் ("நியுவே டு சோசலிசம்') ராணுவ ஆட்சிதான்.

இந்தியர்களுக்குப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டார்கள். அத்தகைய தருணத்தில் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்கள். அதனால் அங்கு பெரிய முதலாளியாகவும் இருக்க முடியாது. பெரிய முதலாளிகளைப் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. அங்குள்ள சாதாரண மக்களைப் பற்றிதான் நான் பேசுகிறேன். அந்த சாதாரண மக்கள் அங்கு சுதந்திரமற்ற ஓர் அடையாளத்தோடு வாழவேண்டிய கட்டாய சூழ்நிலை உண்டாகிறது. அதனால் திரும்பி தாயகத்திற்கு, இந்தியாவிற்கே வரவேண்டியதாகிறது. அந்த ஒரு காலகட்டத்தில் நிறைய பேரை தமிழகத்தில் நான் சந்தித்திருக்கிறேன். பர்மாவில் இருந்து வந்தவர்கள், எனக்கு ஒரு பெரிய வியப்பாகவே இருந்தனர். எதற்காக பர்மாவிற்குப் போனவர்கள் திரும்பி வந்தார்கள்? இந்தக் காலகட்டத்தில் வேலைக்குப் போனோம், சம்பாதித்து திரும்பி வந்தோம் என்றிருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நாங்க போனோம்; எங்கள் உரிமைகளையெல்லாம் இழந்தோம், வாழ்வாதாரங்கள் இல்லாமல் மறுபடியும் இந்தியாவுக்கு திரும்பி வந்தோம் என்றொரு நிலை இருந்தது.

என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மூலமாக பர்மாவில் இந்தியர்களின் சூழ்நிலையை மட்டும் பார்க்காமல், ஜனநாயக ரீதியாகவும் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் 1988க்குப் பிறகு கிடைத்தன. குறிப்பாக, "8.8.88' என்ற இயக்கத்திற்குப் பிறகுமாணவர் இயக்கம் பர்மாவில் ஏற்பட்டது. அந்த மாணவர் இயக்கத்தில் எல்லாருமே மிகவும் இளம் பருவத்திலேயே 16, 18 வயது மாணவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மிகவும் கொடுமையான சித்ரவதை அவர்களுக்கு இழைக்கப்பட்டது. அவர்களுடைய உரிமைகளை இழந்ததோடு மட்டுமில்லாமல், அந்தப் போராட்டக் காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பல பகுதிகளில் பர்மாவினுடைய கிழக்கு மேற்கு ஆகிய பகுதிகளில் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள். ஒருபுறம் அவர்களுடைய மனித உரிமை மீறல்கள்; மறுபுறம் அங்கே கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும் இருந்தது. பல இன மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறை, பெரும்பான்மை மக்களே ஜனநாயகத்திற்காகப் போராடினார்கள். ஆக, எல்லா வகை மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

ஜனநாயக ரீதியாகவும், சுதந்திர ரீதியாகவும் பர்மாவின் அரசியல் அமைப்பின் பின்னணி என்னவென்றால், வளமான ஒரு பூமி, செல்வம் கொழிக்கும் ஒரு நிலப்பகுதி, கனிமவளங்கள், ஆசியாவிலேயே மிக அதிகமாக அரிசி உற்பத்தி செய்யக்கூடிய ஒரு தானிய பூமி இத்தனைச் செல்வங்களைக் கொண்ட ஒரு நாடு, இத்தனை ஒடுக்குமுறைகளை செய்யும்போது, இது ஏதோ ஒரு முதலாளித்துவம், தேசிய அளவிலான முதலாளித்துவம், உலகளாவிய முதலாளித்துவம் இணைந்து, இந்த ஒரு ராணுவ ஆட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த ஜனநாயகப் போராட்டம் ஒரு முக்கியமான ஒரு போராட்டமாக மட்டுமில்லாமல், இந்த ஜனநாயகப் போராட்டத்தில் பங்கேற்கின்றவர்கள் எந்தளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு பர்மா மிகப்பெரியதொரு சாட்சியாக இருக்கிறது.அதனுடைய சாதாரண பாமர மக்கள் எல்லாரும் அடிமட்டத்தில் வேலை செய்கிறவர்கள். எல்லாருமே அரசாங்கத்தின் கண்காணிப்பிற்குள்ளாகிற மக்களாக இருந்தார்கள். பொதுமக்கள் அனைவருக்குமே சிறைக்குள் இருப்பதாக ஓர் உணர்வு. அவர்கள் தேசமே ஒரு சிறையாக இருப்பதான ஒரு நிலைமை, எப்படி ஈழத்தின் வடக்கு, கிழக்கைச் சொல்கிறோமோ, பர்மாவும் ஒரு ராணுவ பிடிக்குள் இருக்கிற திறந்தவெளி சிறைதான்.

எங்கெல்லாம் மனித உரிமைகளுக்கான போராட்டங்கள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் அவர்கள் என்ன மொழி, என்ன இனம், என்ன பண்பாடு என்பதைவிட என்ன உரிமைகள் பறிக்கப்படுகின்றன, எந்த உரிமைகளுக்காக நாம் போராட வேண்டும் என்றே பார்க்க வேண்டும். பாலஸ்தீனிய மக்கள் அவர்களது வீட்டை இழந்து, நாட்டை இழந்து, சொந்த பூமியை இழந்து அகதிகளாக மாறிய பொழுது, அவர்களுக்கும் அதே அடிப்படையில்தான் நாம் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்.

1947க்குப் பிறகு குறிப்பாக இஸ்ரேல் நாடு அமைக்கப்பட்ட பிறகு, யூதர்களுக்கு எதிராகக் கூறப்படும் மிகப்பெரிய கருத்து என்னவெனில், இத்தனை துன்பங்களையும் அனுபவித்த யூதர்கள், யூதர்களுடைய அமைப்பு, அவர்களுடைய தேசியப் போராட்டம் அனைத்தும் எவ்வாறு இவ்வளவு கொடுமைகளைத் திருப்பி மற்றவர்கள் மேல் செலுத்தும் அளவுக்கு அவர்கள் உருவானார்கள் என்பதுதான். ஏனெனில் இவர்களுக்கு உரிமைகளைப்பற்றி பயரீதியான உணர்வு ஏற்படுகிறது. நம்மிடம் பறித்த ஓர் உரிமையை, நாம் திரும்பப் பெற்றபின் திரும்ப இந்த உரிமைகளை இழந்து விடுவோமோ என்று அவர்களுக்கு ஓர் அச்சம் உண்டாகிறது. ஆனால் அதே உரிமை நாம் ஜனநாயக ரீதியாகப் பார்க்கும் போது, நமக்கு கிடைத்த உரிமை மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும். மற்றவர்களுக்கு கிடைக்காத உரிமைகள் நமக்கு அதிகமாக கிடைத்தால் அப்படியான ஒரு ஜனநாயகத்தை நாம் கொண்டாடவே முடியாது.

இப்பொழுது பர்மாவில் காலம்தான் எல்லாவற்றிற்கும் ஒரு சரியான பதிலைச் சொல்ல வேண்டும். அதன்படி பார்த்தால், ஒரு ராணுவ ஆட்சியில் நிர்வாகப் பதவியில் வீற்றிருக்கும் முக்கியமான அய்ந்து பேர் அடங்கிய குழுவினர் இன்று முதுமை அடைந்துள்ளனர். இயற்கையைச் சார்ந்து மட்டும் நான் அரசியல் பேசவில்லை. இந்த ராணுவ ஆட்சி நிலையை அவர்கள் அடுத்த காலகட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு மத்திய மற்றும் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளிடம் பணிந்து, இணைந்து செயல்பட வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் அவர்களால் இந்தச் சூழ்நிலையில், மாற்றங்களை உள்வாங்கி வரும் ஜனநாயப் போராட்டத்தை தொலை தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, வெகு நாட்களுக்கு ராணுவ ஆட்சி அரசியலைக் கொண்டு செல்ல முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி. அவர்களுடைய இந்தப் போக்கு இன்னும் நான்கு அல்லது அய்ந்து ஆண்டுகளுக்குள் பலத்த எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். அவர்களுடைய சர்வாதிகாரத்திற்கு இயற்கையிலேயே ஒரு விடை உண்டு.

இப்போதுள்ள ராணுவத் தலைமைக்குப் பின் ஏற்படும் குழப்பத்தில், புதியதாக மத்திய அளவில் உள்ள தலைவர்கள் அமர்ந்து, மறுபடியும் ராணுவ ஆட்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்தகைய சூழலில் ஜனநாயகப் போராட்டமானது மிக வலிமையான நிலையை எட்டும். இப்பொழுதும் பர்மாவில் ஜனநாயகப் போராட்டம் உண்மையிலேயே வலிமையான நிலையில்தான் உள்ளது. அதனுடைய வலிமையை ராணுவத்தின் வலிமையோடு ஒப்பிடுவோமேயானால், ஜனநாயகம் என்பது மக்கள் சக்தி; ராணுவத்தின் பலம் என்பது அதன் குண்டுகளிலும் அதனுடைய வன்முறைகளிலும்தான் இருக்கும். ராணுவத்தின் வன்முறைகள் அதிமாகும்போது அது நமக்குப் பலமாகத் தெரியும். ஆனால் ஒரு தெளிவான எண்ணப் பார்வை கொண்ட அரசியலுக்கான ஜனநாயகத்தைச் சார்ந்த மாறுதல் என்பது, அதற்கான ஒரு சில தடைக்கற்கள் விலகும்போது ஒரு பெரிய குதூகலம் போல் அந்த மாறுதல் அமையும். அத்தகைய மாற்றங்களை உருவாக்கக்கூடிய அமைப்புகள் பர்மாவில் இயங்கி வருகின்றன. அடுத்த ஆண்டில் பர்மாவில் நடைபெறப் போகும் தேர்தல் ஜனநாயகப்பூர்வமாக இருக்குமா என்பதிலும், அந்தத் தேர்தலை ஒட்டி அமைக்கப்படும் அரசோ, அமைப்போ மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதும் அய்யமே.

பர்மாவில் தற்போதுள்ள சூழலுக்குத் தேவையõ மாறுதல் என்னவெனில், அங்கு ஜனநாயக ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகப் போராடி, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூயியை விடுதலை செய்ய வேண்டும். அவரை விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல், அவர் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்க வேண்டும். அத்தகைய ஒரு சூழலில் அந்த தேர்தலுக்குப் பர்மிய மக்களிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். இவர்களும் மக்களும் தேர்தலுக்கு வரும் முன்னே அங்குள்ள சட்ட அமைப்புகளைக் குறித்து சில வினாக்களை எழுப்பி, குறிப்பாக அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதித்த பின்னர் தேவையான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். அத்தகைய மாற்றங்கள் நிகழக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

"நேஷனல் லீக் டெமாக்ரசி' என்று அழைக்கப்படுகின்ற பர்மாவின் ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பே பல இன, மொழி, பண்பாட்டு, நிலப்பரப்புகளை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட ஓர் அரசியல் அமைப்பாகும். இதில் பல மொழி பேசுகின்ற, பல இனத்தைச் சார்ந்த குறிப்பாக அரேன், அக்சின், ஷான் என்று அழைக்கப்படுகிற பல இனத்தைச் சார்ந்தவர்கள் இருந்தாலும் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பின் சார்பில், இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறுகின்ற ஜனநாயகப் போராட்டத்தில் ராணுவ ஆட்சியை நீக்க வேண்டும் என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற ஜனநாயக ஆட்சியை எவ்வாறு அமைக்க வேண்டும் என்று ஓர் ஒருங்கிணைந்த தேசியப் பார்வையைக் கொண்டுவர வேண்டும். பர்மியர்களுக்கு எதிராக மற்ற இன மக்களும், பர்மியர்கள் மற்ற இன மக்களைத் தரக்குறைவாகப் பார்ப்பதும் அங்கு நிலவி வருகிறது. வரலாற்றுப்பூர்வமாக ஒரு பண்பாட்டு முரண்பாடு அங்கு ஏற்பட்டுள்ளது.

சந்திப்பு : .செந்தில் நாராயணன்

- பேட்டி அடுத்த இதழிலும்

Pin It

 

சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது.'' – டாக்டர் அம்பேத்கர்

அழகிய பெரியவன்

IV

மன்னர்களின் மனைவியரோடு முதலிரவை கழிக்க பார்ப்பனர்கள் உரிமை கோரியதுடன் நிறுத்தாமல் அந்த உரிமையை கீழ்த்தட்டுப் பெண்கள் வரையிலும் செயல்படுத்த முயன்றனர்.இதற்கு அம்பேத்கர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். “சமோரின் (சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்யும்போது தலைமைப் புரோகிதரோ, நம்பூதிரியோ மணப் பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. புரோகிதன் விரும்பினால் மூன்று இரவுகளைக்கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனில், அப்பெண்ணின் முதல் உடலுறவின் பலன்கள் அவள் வணங்கும் கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்பட வேண்டும்'' (ஹாமில்டனின் நூலிலிருந்து மேற்கோள்).

இதில் கவனத்துக்குரிய ஒரு செய்தியும் உண்டு. இந்தப் புரோகிதர்களும் நம்பூதிரிகளும் விருப்பத்தோடு இதை மேற்கொள்ளவில்லையாம்! மன்னன் தன் மனைவியோடு முதலிரவை கழிப்பவனுக்கு பணம் தந்திருக்கிறான். ஆண் விபச்சாரகர்களாக அப்புரோகிதர்களும், நம்பூதிரிகளும் மாறிவிட்டிருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.

அன்றைய பம்பாய் மாகாணத்தில் வைணவப் பிரிவு புரோகிதர்கள், தங்கள் இனப் பெண்களின் முதல் இரவு உரிமையை கோரியிருக்கிறார்கள். இது தொடர்பாக 1869இல் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும்கூட தொடரப்பட்டுள்ளது. கேரளத்தில் மலபார் பகுதியில் பிற சாதி பெண்களுடன் முதலிரவு உரிமை வேண்டும் என பார்ப்பனர்கள் கோரியுள்ளனர். சம்மந்தன் தொடர்பு (குச்ட்ஞச்ணஞீடச்ண க்ணடிணிணண்) என்ற பெயரில் பார்ப்பன ஆண்கள், தாழ்த்தப்பட்ட சாதி பெண்களுடன் உறவு கொண்டிருக்கிறார்கள். இந்த உறவின் மூலம் குழந்தை பிறந்துவிடுமானால், அக்குழந்தையின் உரிமையும், பராமரிப்பு பொறுப்பும் தாயையே சாரும். அக்குழந்தை தன் பார்ப்பனத் தந்தையிடமிருந்து எந்தவிதமான உரிமையையும் கோர முடியாது.

கேரள மலபார் பகுதிகளில் உயர்ந்த பார்ப்பனராக தம்மை சொல்லிக் கொண்ட நம்பூதிரிகளின் குடும்பத்தில் இந்த வழக்கம் இருந்தது. நம்பூதிரிகளின் குடும்பத்தில் இருக்கும் மூத்த மகனும், பெண்களும் மட்டுமே நம்பூதிரி வம்ச பெண்ணையும், ஆணையும் மணந்து கொள்ள முடியும். அக்குடும்பத்து இளைய மகன்கள் அனைவரும் நாயர் சமூகப் பெண்களுடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்ள வேண்டும் (இந்தியாவில் சாதிகள், ஜே.எச். அட்டன், 1973).

பார்ப்பனர்களை பஞ்ச கவுட பார்ப்பனர் (வட இந்திய பார்ப்பனர்), பஞ்ச திராவிட பார்ப்பனர் என பொதுவாக இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். மகாராட்டிரா, ஆந்திரா, திரõவிடா, கர்நாடக, குர்ஜார், கன்யா குப்ஜா, கவுடா, உத்கலா, மைதிலி, காஷ்மீர், மலபார், ரஜபுதனா, நேபாள், மத்திய இந்தியா, வங்கம் ஆகிய மரபார்ந்த இந்தியாவின் பகுதிகளில் 450க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளோடு பார்ப்பனச் சாதிகள் உள்ளன. இங்கு குறிப்பிடப்படும் பட்டியலில் கடைசியாக இடம்பெற்றுள்ள ஆறு பகுதிகளில் இருக்கும் பார்ப்பனர்களில் உட்பிரிவுகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. இவற்றில் மேலும் உட்பிரிவுகள் உண்டு (450இல்). மலபார் பகுதி நம்பூதிரிகளும், வங்கத்தின் குலின் (ஓதடூடிண) களும் தம்மை மிக உயர்ந்த பார்ப்பனர்களாக சொல்லிக் கொள்கின்றனர். மகாராட்டிரத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்களும் தங்களை மிக உயர்ந்த பார்ப்பனர்களாக சொல்லிக் கொள்கின்றனர்.

வங்கத்தின் குலின் பார்ப்பனரிடையே பலதார மணமுறை வழக்கத்தில் உண்டு. இப்பிரிவு பார்ப்பன ஆண்கள், எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். பெரும் மணக்கொடை தந்து பெண்ணின் தந்தை மகளை மணமுடித்து தர வேண்டும் என்பது நடைமுறை. அந்த மணக்கொடையை (வரதட்சிணை) எடுத்துக் கொண்டு திருமணத்துக்குப் பிறகு வேறொரு பெண்ணிடம் போய்விடும் ஆண்களே அதிகம். இப்படி ஓர் ஆண் இருபது பெண்கள் வரை மணந்த கதையும்கூட உண்டு என்கின்றன ஆய்வு நூல்கள். இவ்வழக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் குலின் இனப் பெண்கள் மிகவும் பரிதாபத்துக்குரிய கைமை வாழ்க்கையை மேற்கொள்ளத் தள்ளப்பட்டு விடுவர். தம் இனப் பெண்களின் மீது பார்ப்பனர்கள் திணித்த கைம்பெண் வாழ்முறைகளும், சதியும், பிற சடங்குகளும் கொடுமையானவை.

கோயில்களோ, அரண்மனைகளோ, சமூகவெளிகளோ எங்கும் பார்ப்பனர்கள் தமது உயர் சாதி தகுதியை வைத்துக் கொண்டு மிக உயர்ந்த அதிகாரங்களையும், ஆடம்பரங்களையும், கோரிக்கைகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை வரலாற்று நூல்கள் அனைத்துமே சொல்கின்றன. இந்த நிலை சமகாலத்திலும்கூட தொடர்கிறது. கருவறைக்குள் உறவு வைத்துக் கொண்டால் செல்வம் கொழிக்கும் என்று சொல்லி பெண் பக்தர்களை வசப்படுத்திக் கொண்ட காஞ்சிபுரம் அர்ச்சகரின் அண்மைக் கதை நீண்ட கால வரலாறின் தொடர்ச்சிதான். புட்டபர்த்தி சாயிபாபா, ஜெயேந்திரன் உள்ளிட்ட எந்த சாமியாரை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலானவர்களோடு இதுபோன்ற கதைகள் பிணைந்தே கிடக்கின்றன.

இந்தியத் துணைக் கண்டத்தில் பார்ப்பனர்கள் இவ்வளவு மேலாதிக்கத்தையும், தனியதிகாரத்தையும் பெருவதற்குக் காரணம் இந்து மதமும் அதன் அடிப்படையான சாதிய கட்டமைப்பும்தான். இந்தியாவில் இருந்த அனைத்து வகையான வழிபாட்டு முறைகளும் இந்து மதத்துக்குள் அடக்கப்பட்டு விட்டன. வெகுமக்களின் குலச்சாமிகளும், நாட்டார் சிறு தெய்வங்களும்கூட இதற்குத் தப்பவில்லை. வேத மதமான பார்ப்பன மதமே இன்று இந்து மதமாக நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. அம்மதத்தின் தலையாக பார்ப்பனர்கள் தம்மை அறிவித்துக் கொண்டனர். இந்து மதத்தை தமது இருப்புக்கானதோர் வலுவான ஊடகமாக அவர்கள் வைத்துக் கொண்டனர். பார்ப்பனர்களின் சுயநல செயல்திட்டமான பார்ப்பனியம் இங்கே வெகுமக்களின் இயங்கியல் சட்டமாக மாற்றப்பட்டு விட்டது. அம்பேத்கர் பட்டியலிடும் பார்ப்பனியத்தின் ஏழு செயல்களை இங்கே கவனத்தில் கொள்வது பொருத்தமாக இருக்கும் :

1. ஆட்சி செய்வதற்கும், மன்னனை கொல்வதற்கும் பார்ப்பனர்களுக்கு உரிமையுண்டு என்பதை நிலைநிறுத்தியது. 2. பார்ப்பனர்களை சிறப்புரிமை கொண்ட ஒரு வர்க்கமாக ஆக்கியது. 3. வர்ணத்தைச் சாதியாக மாற்றியது. 4. பல்வேறு சாதிகளிடையே மோதல்களையும், சமூக எதிர்ப்புணர்வையும் தோற்றுவித்தது. 5. சூத்திரர்களையும், பெண்களையும் இழிந்த நிலைக்குத் தள்ளியது. 6. பன்மப்படி நிலையிலான, சமத்துவமற்ற அமைப்பை உருவாக்கியது. 7. மரபு ரீதியாகவும், நெகிழ்ச்சி கொண்டதாகவும் இருந்த சமூக அமைப்பை, சட்டத்துக்குட்பட்டதாகவும், இறுக்கமானதாகவும் ஆக்கியது ("பார்ப்பனியத்தின் வெற்றி', அம்பேத்கர்).

அம்பேத்கர் பட்டியல் இடுகின்ற பார்ப்பனியத்தின் செயல் திட்டங்களில் ஒன்றுகூட இம்மி பிசகாமல் நடந்து வருகின்றன என்பதை இன்றும் நம்மால் நடைமுறையில் பார்க்க முடிகிறது.

பழங்காலம் தொட்டு இன்றுவரையில் நமது கவனத்துக்கு வந்து போகும் ஆளுமைகளின் பெயர்களில் பாதிக்கும் மேற்பட்டவை பார்ப்பனர்களின் பெயர்கள்தான். தெனாலிராமன், பீர்பால், ராமாநுஜர், சங்கரன், ஜான்சி ராணி லட்சுமிபாய் என்ற பழங்காலத்துப் பெயர்களானாலும் சரி; திலகர், நேரு, சுப்பிரமணிய பாரதி, ரமண மகரிஷி, ராஜாஜி, மேதா பட்கர், இந்திரா நூயி, ஜெயலலிதா, சாரு மஜும்தார், பிரசாந்தா, அசோகமித்ரன், மாதவன், டெண்டுல்கர் போன்ற சமகாலப் பெயர்களானாலும் சரி; பல்வேறு துறைகளிலும் பார்ப்பனர்களின் பெயர்களே முன்னிறுத்தப்படுகின்றன. நமது கவனத்தின் இண்டு இடுக்குகளிலும்கூட அவர்களின் பெயர்களே நிரப்பப்படுகின்றன. காட்சி மற்றும் எழுத்து ஊடகங்களின் வழியே ஆழமாகப் பதிய வைக்கப்படுகின்றன.

அய்யங்கார், சாரி, ஆச்சாரி, ராவ், முகர்ஜி, பானர்ஜி, சாட்டர்ஜி, பண்டிட், கங்குலி, கோகல், சக்ரபர்த்தி, ராய், ரே, ராய்சவுத்ரி, மஜும்தார், குல்கர்னி, தேஷ்பாண்டே, ஜோஷி, திலக், கோகலே, கார்வே, ராணடே, சவர்க்கர், அகர்க்கர், பாவே இப்படி பிரபலமானவர்களின் பின்னொட்டாக வருகிற பெயர்களை நாம் சொல்லிக் கொண்டே போனால் உங்கள் மனத்திரையில் அரசியலிலும், இலக்கியத்திலும், விளையாட்டிலும், திரைப்படத்திலும், பொதுச் சேவையிலும், தொழில் துறையிலும் புகழ் பெற்றவர்களின் முகங்கள் சடார் சடார் என மாறும். அம்முகங்கள் எல்லாமே பார்ப்பன முகங்களே. அவர்களின் பெயர்களாகவே நம் மனதில் நிலைத்துவிட்ட இப்பின்னொட்டுகள் யாவுமே பார்ப்பனச் சாதி உட்பிரிவுகளின் பெயர்களே!

இந்தியச் சமூகத்தில் பல்வேறு சமூகக் குழுக்கள் இருக்கின்றன. அவற்றில் பார்ப்பனச் சமூகமும் ஒன்று. அது தனது அறிவாலும், அர்ப்பணிப்பாலும், உழைப்பாலும் இந்த நிலையை அடைந்திருக்கிறது. அதில் தவறேதும் இல்லை என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் இந்தியச் சமூகம் நாய் குதறிய சடலமாக நாறிக்கிடப்பதற்கு பார்ப்பனியமே காரணம் என்பதை கவனத்தில் கொண்டால், அம்முன்னேற்றத்தின் உண்மை விளங்கும்.

"உண்மையான சமூகம் என்பது ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, உடனடியான, குறிப்பான பல்வேறு லட்சியங்களைக் கொண்ட சில குழுக்களின் தொகுப்பே சமூகம் ஆகும்' என்கிறார் அம்பேத்கர். இச்சமூகக் குழுக்களின் ஒத்திசை வும், ஒற்றுமையுமே அச்சமூகத்தை மேம்படுத்தும். ஆனால் இந்தியச் சமூகத்தில் நடந்திருப்பது அதுவல்ல. சமூக சமத்துவம் அற்ற நிலையே உருவாகியுள்ளது. இதற்கு காரணம் பார்ப்பனியம் ஒவ்வொரு குழுவையும் தனிமைப்படுத்தி சாதி வட்டத்துக்குள் அடைத்ததுதான்.

"சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது' ("பார்ப்பனியத்தின் வெற்றி', அம்பேத்கர்) என்று விளக்குகிறார் அம்பேத்கர். பார்ப்பனச் சமூகமும், அதற்குக் கீழுள்ள இடைத் தட்டுச் சமூகங்களும் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு சுயநலத்துடன், தம் சொந்த நலன்களுக்காக ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டும் வேலையையும் அடிமைப்படுத்தும் வேலையையும் பல நூற்றாண்டுகளாக இங்கே செய்து வருகின்றன. இந்தியச் சமூகக் குழுக்களில் தன்னை உச்சாணிக் கொம்பில் இருத்திக் கொண்டு இந்த சுரண்டலுக்குத் துணை நிற்கிறது பார்ப்பனியம்.

இந்திய மண்ணில் சாதி ஒழிப்பு இயக்கங்களும், அரசியல் கட்சிகளுமே வந்துவிட்டன. சாதிக்கு எதிரான கருத்துத் தெளிவு உருவாகியிருக்கிறது. புலே தொடங்கி அம்பேத்கர் வரை எண்ணற்றோர் சமூகப் புரட்சிக்காகப் போராடி இருக்கின்றனர். இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இன்று அரசியலில் உள்ள எல்லோரும் உண்மையாகவோ போலியாகவோ சமூக நீதி பேசுகிறவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் இன்று பார்ப்பன மேலாதிக்கம் ஒழிந்துவிட்டதா? பார்ப்பனியம் நசுக்கப் பட்டு விட்டதா? இல்லை என்பதே விடை.

இன்றும் இந்தியாவில் 90 சதவிகித பெரும் பணக்காரர்கள் பார்ப்பனர்களே. இந்தியா விடுதலையடைந்தது தொடங்கி இன்றுவரையிலான பிரதமர்களில் 90 சதவிகிதத்தினர் பார்ப்பனர்கள்தான். 1950 முதல் 2000 வரையிலான நீதித்துறை வரலாற்றில் 47 சதவிகிதத்தினர் முதன்மை நீதிபதிகளாகவும், 40 சதவிகிதத்தினர் துணை நீதிபதிகளாகவும் இருந்துள்ளனர். (சென்னை மாகாணத்தின் முதல் உயர் நீதிமன்ற "இந்திய' நீதிபதி ஒரு பார்ப்பனர்தான். வெள்ளை நீதிபதிகள் பலர் எழுதிய புகழ் பெற்ற பல தீர்ப்புகள்கூட உதவியாளர்களாக இருந்த பார்ப்பனர்களால் எழுதப்பட்டதே).

1984 வரை நாடாளுமன்றத்தில் 20 சதவிகித உறுப்பினர்கள் அவர்களாகத்தான் இருந்தனர். இந்திய ஆட்சிப்பணி, மிக உயர்ந்த அரசு நிர்வாகப் பணி ஆகியவற்றில் பார்ப்பனர்களே அதிகம். பெரும்பாலான அரசு ஆலோசகர்களும், அமைச்சுசெயலாளர்களும் பார்ப்பனர்களே. "ரா' எனும் உளவுத் துறை, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி, விண்வெளி அறிவியல் துறை ஆகியவற்றில் பார்ப்பனர்களே நிறைந்துள்ளனர் (இத்துறைகளில் இடஒதுக்கீடு வேறு இல்லை) பொருளாதாரம், வருவாய், சட்டம் என எடுத்துக் கொண்டாலும் முக்கியப் பதவிகளை பார்ப்பனர்களே கையில் வைத்துள்ளனர். அரசுத் துறை பணிகளில் 37.17 சதவிகிதம் இடங்களை பார்ப்பனர்கள் வைத்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

சோமநாதர் கோயில், திருப்பதி கோயில், காமாட்சி கோயில், அக்ஷர்தம், வைஷ்ணவதேவி ஆலயம், மகாலட்சுமி, காசி விஸ்வநாதர், பூரி ஜெகநாதன் கோயில் என எல்லாமே பார்ப்பனர் கையில்தான் (பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டு மார்க்சியம், எஸ்.கே. பிஸ்வாஸ், அதர் புக்ஸ், 2008). இன்றும் நிலைமை இப்படி இருக்கிறது. அதனால்தான் வெட்ட வெட்டத் துளிர்க்கும் விஷச் செடியாக உள்ள பார்ப்பனியத்தை எதிர் கொள்வதே இந்தியாவின் வரலாறாக இருந்திருக்கிறது என்கிறார் அம்பேத்கர். அவர் பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையிலான ஜீவ மரணப் போராட்டமே இந்திய வரலாறு என்கிறார். பார்ப்பனியத்தை சாய்ப்பதில் எண்ணற்ற இயக்கங்கள் இங்கு எழுந்துள்ளன. தத்துவங்கள் உருவாகியுள்ளன. பார்ப்பனியம் அவற்றுள் சிலவற்றை உள்வாங்கிச் செறித்திருக்கிறது. சிலவற்றைக் கண்டு மிரண்டிருக்கிறது; நிலை குலைந்திருக்கிறது. பவுத்தமும், அம்பேத்கரியமும், பெரியாரியமும்தான் பார்ப்பனியத்துக்கு அவ்வாறான மிரட்சியை தந்தவை. நிர்மூலமாக்க நிற்பவை.

-அழகிய பெரியவன்

- தொடரும்

 

Pin It

உட்பிரிவுகள்