1968 டிசம்பர் 25 - தமிழகத்தின் கருப்பு நாள். தலித் கூலி விவசாயிகள் 44 பேர் கீழ தஞ்சையிலே படுகொலை செய்யப்பட்ட நாள். ஆனால் படுகொலை செய்தவர்களை தண்டிக்காமல் ஆளும் தரப்பினரும், அரசியல்வாதிகளும் தட்டிக் கொடுத்தனர். நீதியே நிலை குலைந்து நின்றபோது வெகுண்டெழுந்த புரட்சியாளர்கள், வெண்மணி சாதிவெறியனின் கதையை 1980இல் முடிவுக்கு கொணர்ந்தனர்.

அந்த மாவீரர்களில் ஒருவர் என்று கைது செய்யப்பட்டு, கடும் சித்திரவதைக்கு உள்ளானவர்தான் தோழர் சதாசிவம். அம்மாவீரன் இன்று மருத்துவமனையில். எம்மக்களுக்காகப் போராடிய இவர், இதய நோயினால் இன்னல்பட்டுக் கொண்டிருக்கிறார். மருத்துவ செலவிற்காக 1.5 லட்சம் ரூபாய் உடனே தேவைப்படுகிறது. விதியினை எதிர்த்து வீரம் விளைத்த அந்த மாவீரனின் இதயவலி குறைப்பது நமது கடமையன்றோ! இந்தப் பணி முடிக்க உங்களின் உதவி உடனே தேவை.

மீ.த. பாண்டியன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) பணம், வரைவோலை, காசோலை (Cheque, D.D.) அனுப்புவோர், T.TAMILVELAN,A/C No. 16138, கனரா வங்கி, காரனோடை, சென்னை 67 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். செல் : 99529 30165