தலித் மக்களும் கல்வியும்

புகழ் பெற்ற சீன யாத்ரிகரான யுவான்சுவாங் சென்னைக் கடலோரப் பகுதியில் புத்த மதம் செழித்தோங்கி இருந்ததைக் கண்டார். தென்னிந்தியா முழுவதிலும் பார்ப்பனிய கள்ள போதகர்களுக்கும் அவர்களுடைய கடவுளர்க்கும் எதிராகப் போராடிய போதிலும் பவுத்த மதம் வளர்ந்து கொண்டே வந்தது. பஞ்சமர்களே தென்னிந்தியாவின் பழங்குடி மக்கள். அவர்கள் தங்களுக்கு எதிரான சமயங்களின் அடியார்களுடன் செய்த கடுமையான போர்களில் வெற்றி கொள்ளப்பட்டார்கள்.''

-ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

பக்கங்கள் : 112

விலை : ரூ. 90

எழுத்து

மதுரை - 4

பேசி : 0452 - 2373283

நின்று கெடுத்த நீதி

குழந்தைகளும் ஆண்களும் பெண்களுமாய் 44 பேர் துள்ளத் துடிக்கத் தீயில் கருகி மாய்ந்துபோன கொடூரம் நடந்து 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் அந்தச் சம்பவ நினைவுகள் கடக்காமல் அங்கேயே நிற்கின்றன. சங்கம் சேர்ந்து தலை நிமிர்ந்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று நீதி வழங்கிய முறையைச் சொல்கிறது இந்நூல். நிர்வாகத் தூண் செயல்பட்ட விதமும் இதன் மூலம் தெரியவருகிறது.''

-தமிழில் : மயிலை பாலு

பக்கங்கள் : 448

விலை : ரூ. 230

அலைகள் வெளியீட்டகம்

சென்னை - 600 024

பேசி : 044 - 24815474

குரலற்றவனின் குரல்

தமிழகக் கிராமங்களில் மட்டுமன்றி ஈழத்திலும், ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாடுகளிலும், தமிழகத் தமிழர்கள் குடிபெயர்ந்து வாழும் வெளிநாடுகளிலும் ஜாதி, தலித்துகளை தேசம் கடந்தும் ஓட ஓடத் துரத்துவதை இந்தக் கதைகள் உணர்த்துகின்றன. உழைக்கும் மக்களை வர்க்க ரீதியில் ஒன்று சேரவிடாமல், ஜாதியே அணை போட்டு தடுத்து நிறுத்தி உள்ளது.நன்கறியப்பட்ட எழுத்தாளர்களின் கதைகள் மட்டுமன்றி, புதிய எழுத்தாளர்களின் கதைகளும் உள்ளன.''

-தொகுப்பு : யாழினி முனுசாமி

பக்கங்கள் : 328

விலை : ரூ. 150

இருவாட்சி

சென்னை - 600 011

பேசி : 044 - 25582552

பெரியார் சாதித்ததுதான் என்ன?

இந்நாட்டுப் பெண்களின் நகைகளையும் கோயில்களிலுள்ள நகைகளையும் விற்றால், ஜில்லாவுக்கு ஜில்லா ஒரு சுரங்கம் தோண்டலாம். அவ்வளவு கோடிக்கணக்கான பணம் நகைகளில் முடங்கிக் கிடக்கிறது. நம் பெண்களுக்கு நகைப் பைத்தியம் பிடிக்காதபடி இளமை முதலே வளர்த்து வர வேண்டும். நகையினால் தான் அழகு ஏற்படுகிறது என்பதே ஒரு மூடநம்பிக்கை. ஆண்கள் எல்லோரும் கம்மலும், கை வளையலும் அணிந்து கொள்ளாததால் அவர்கள் விகாரமாகவா இருக்கிறார்கள்?''

-செந்தமிழ்க்கோ

பக்கங்கள் : 192

விலை : ரூ. 100

தமிழ்க் குடிஅரசு

சென்னை - 5

பேசி : 94443 21902

கொலைக்களத்தில் உழைக்கும் பத்திரிகையாளர்

book 1பத்திரிகையாளர் மற்றும் செய்தியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இழப்பீடு போன்ற நிவாரணங்கள் முறையாகவும், முழுமையாகவும் கிடைப்பதில்லை என்கிற உண்மைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகப் பெற்று, சான்றுகளை எடுத்துக் காட்டி நூலாசிரியர் நிறுவியுள்ளார். சமூக நீதி அடிப்படையில் இப்பட்டியலில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும் குமுறுகிறார்.''

-கருப்பன் சித்தார்த்தன்

பக்கங்கள் : 120

விலை : ரூ. 50

தழும்பு பதிப்பகம்

சென்னை - 107

பேசி : 97103 09050

அறுபடும் விலங்கு

தேச விடுதலையைக் காட்டிலும்சமூக விடுதலையை தாழ்த்தப்பட்டவர்களும் சமூக உணர்வாளர்களும் அவாவியதற்கான நியாயமான காரணங்கள், இந்நாவலில் முன்னிறுத்தப்பட்டுள்ளது போல், வேறு எந்த நாவலிலும் முன்னிறுத்தப்பட்டதில்லை என்று தோன்றுகிறது.

பார்ப்பனர்களின் போலித்தனமான விழுமியங்களையும், இந்த நாவலைப் போல் அண்மைக் காலத்தில் வேறு எந்த நாவலும் சாடியதில்லை என்று தோன்றுகிறது.''

- கரன் கார்க்கி

பக்கங்கள் : 336

விலை : ரூ. 160

முரண்களரி படைப்பகம்

சென்னை - 68

பேசி : 98413 74809