புரட்சி பெரியார் முழக்கம்

ஆண்டுக்கட்டணம் ரூ.150/-
தொடர்புக்கு:  ஆசிரியர், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு,
திருவள்ளுவர் நகர்,  திருவான்மியூர், சென்னை-41.

 

 

 

பெரியார் முழக்கம் ஆகஸ்ட் 24, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.

 

 

Pin It

 

 

பெரியார் முழக்கம் ஆகஸ்ட் 31, 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.

 

 

Pin It

‘குடிஅரசு’ வெளியிட்ட செய்திகள்

ஈரோட்டில் 1931ஆம் ஆண்டு விருதுநகர் 3ஆவது சுயமரியாதை மாநாடு ஜூன் 8, 9 தேதிகளில் நடந்தது. மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக டபிள்யூ.பி.ஏ. சவுந்திரபாண்டியன் மாநாட்டுக்கு முழு பொறுப்பு ஏற்று நடத்தினார். மாநாட்டுக்கு பொருளாதார மேதையும் சுயமரியாதைக்காரருமான ஆர்.கே. சண்முகம் தலைமை தாங்கினார்.

இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாடும், மூன்றாவது சுயமரியாதை , வாலிபர் மாநாடும் இதே மாநாட்டில் நடந்தன. மாநாடு குறித்து ‘குடிஅரசு’ விரிவாக செய்திகளை பதிவு செய்திருக்கிறது.

ஊர்வலத்தில் 15,000 பேர் பங்கேற்றனர். மாநாட்டில் 5000 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பெண்கள் மாநாட்டில் 3000 பெண்களும், வாலிபர் மாநாட்டில் 2000 வாலிபர்களும் பங்கேற்றனர். இரண்டு யானைகள் ஊர்வலத்தில் வந்தன. 6 குதிரைகள் பூட்டிய ரதத்தில் தலைவர்கள் ஊர்வலமாக வந்தனர். பெரிய மைதானத்தில் 5 ஏக்கர் சுற்றளவில் அடைப்பு தட்டிகள் போட்டு மாநாட்டு பந்தல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடைகளும் கட்டப்பட்டிருந்தன. மாநாட்டு பந்தலில் 200 கம்பங்களில் சுயமரியாதை கொள்கைகள், புராண மரியாதைக் காரர்களின் புரட்டு வாக்கியங்கள், தேசியப் புரட்டு வாக்கியங்கள் பெரிய எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன.

மாநாட்டின் நடு மண்டபத்தில் பனகல் அரசர் படம் ஒரு பக்கமும், ஈ.வெ.ராமசாமி படம் இன்னொரு பக்கத்திலும் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தன. சுகாதார கண்காட்சி, மருத்துவம் விகிச்சை முறைகளை விளக்கும் கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 150 அடி நீளத்தில் தனி சமையல் கொட்டகை அமைக்கப்பட்டு, 40 அடுப்புகளில் உணவு தயாரிக்கப்பட்டன. 100 ஆதி திராவிட வாலிபர்கள் இராணுவ உடையுடன் காப்பாளர்களாக செயல்பட்டனர்.

மாநாட்டில் பங்கேற்ற பிரமுர்களின் நீண்ட பட்டியலில் பட்டுக் கோட்டை அழகிரி, எஸ். இராமநாதன், ப. ஜீவானந்தம் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. மாநாட்டுத் தலைவர் ஆர்.கே. சண்முகம், மாநாட்டுக்கு முதல் நாளே வந்தார். ஊர்வலமாக அவர் அழைத்து வரப்பட்டார். விருதுநகர் நகரசபை அவருக்கு வரவேற்புத் தந்தது.

சுயமரியாதை மாநாட்டில் ‘எல்லா மதங்களும் ஒழிய வேண்டும்; மதங்கள் ஒழியாத வரை சகோதரத்துவம் வளராது’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘மத நடுநிலை’ என்ற பெயரில் மத சீர்திருத்த சட்டங்களைக் கொண்டு வருவதை தடைப்படுத்துவதைக் கண்டித்தும், வர்ணாஸ்ரமக் கொள்கை ஒழிய வேண்டும் என்றும், தீண்டாமை சமூகத்தைப் பிடித்த நோய்; அது ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இந்தியைத் திணிப்பது வர்ணாஸ்ரமத்தைத் திணிப்பதாகும் என்றும் கதர் தேசியப் பொருளாதாரத் திட்டம், பொருளாதார வளர்ச்சிக்கு தடை என்றும் பெண்களுக்கு சொத்து உரிமை, திருமண உரிமை, விவாகரத்து உரிமை வேண்டும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தேவகோட்டையில் ஆதி திராவிடர்கள் மீது நடத்தப்பட்ட ஜாதிவெறி தாக்குதல் குறித்து விசாரணை ஆணையம் நியமிக்கப்பட வேண்டும். மதப் பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை தரக் கூடாது; தேவைப்பட்டவர்கள் தனியாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பெண்கள் மாநாட்டுக்கு இந்திராணி பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பெண்களின் கல்வியை 11 வயதிலேயே நிறுத்திவிடாமல் 30 வயது வரை படிக்க வைக்க வேண்டும். ‘பால்ய விவாகத்தை’ தடை செய்யும் ‘சாரதா’ சட்டத்தை உடனே நிறைவேற்றவேண்டும். பெண்களை ஆசிரியர், மருத்துவத்தொழிலுக்கு மட்டும் எடுக்காமல், காவல் துறை, இராணுவத்திலும் வேலைக்கு எடுக்கவேண்டும். ஆண்களைப்போல் சொத்துரிமை வேண்டும். சேர்ந்து வாழ முடியாத கணவர்களிடமிருந்து விவாகரத்து உரிமை வேண்டும். தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும். பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் அதற்கான விண்ணப்பங்களில் ஜாதி கேட்பதை நிறுத்த வேண்டும். (அப்போது ஜாதி கேட்கப் பட்டது, ஜாதியப் பாகுபாடு கண்ணோட்டத்தில் - ஆர்.) ஜாதி மற்றும் வர்ணாஸ்ரம அடிப்படையில் நடத்தப்படும் மாணவர் விடுதிகளுக்கு அரசு உதவித் தொகையை நிறுத்த வேண்டும். இரயில் நிலையங்களில் தங்கும் அறைகள் பெண்களுக்காக தனியாக ஒதுக்கவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை ஆதரித்து நீலாவதி, சிவகாமி, குஞ்சிதம், மரகதவல்லி, நாகம்மாள், ரங்கம்மாள், ஈ.வெ. ராமசாமி பேசினர்.

வாலிபர் மாநாட்டுக்கு வரவேற்புக் குழு தலைவர் எஸ். ஜெயராம், பி.ஏ., அரசியல் விடுதலையைவிட சமூக விடுதலையே அவசியம் என்று அவர் கூறினார்.

வாலிபர் மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர் டி.வி. சோமசுந்தரம், பி.ஏ., பி.எல்., சமதர்மத்தை வலியுறுத்தி அவர் பேசினார்.

Pin It

விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள்

விருதுநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ‘விருதுநகர் சுயமரியாதை மாநாடு’ 23.9.2017 அன்று மாலை விருதுநகர் விஸ்வேஸ்வரர் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது.

1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டின் வரலாற்றை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இம்மாநாடு. மாநாட்டையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வரலாற்றுப் பதிவுகள் பேரறிஞர் அண்ணா சிலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்த வரலாற்றுச் சுவடுகள் கண்காட்சியை திறந்து வைத்தார்.

அங்கிருந்து பறை இசை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு மாநாட்டு அரங்கிற்கு தோழர்கள் வந்து சேர்ந்தனர். டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் நினைவரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் அல்லம்பட்டி நாத்திகபாண்டி முன்னிலை வகித்தார். தோழர்கள் டார்வின்தாசன் (திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), இரா உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), ஈரோடு இரத்தினசாமி (கழக அமைப்புச் செயலாளர்) ஆகியோர் உரையைத் தொடர்ந்து தி.மு.க. கலை இலக்கியப் பேரவையின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் பா.அசோக் உரையாற்றினார்.

மாநாட்டின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள், சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், 1931இல் விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்களை எடுத்துக் கூறி இன்றைய காலகட்டத்தில் அத் தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்ட கருத்துகளை செயலாக்குவது குறித்தும் அதற்கான திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். தொடர்ந்து தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநில துணை அமைப்பாளரும், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்தவருமான தமிழச்சி தங்க பாண்டியன், விருதுநகர் மாவட்டத்தின் சுயமரியாதை வீரர்களை நினைவுகூர்ந்தும் வரலாற்றில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பை விளக்கியும் ஒரு மணிநேரம் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், 1931இல் விருதுநகர் மாநாடு நடந்த காலத்தில் நிலவிய சமூகச் சூழலை விளக்கிப் பேசினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி விருதுநகர் சுயமரியாதை மாநாட்டு வரலாற்று நிகழ்வுகளையும் நீட் தேர்வின் ஆபத்துகளையும் விளக்கி, மாநாட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தார்.

virdhunagar kolathurmani 600நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1931ஆம் ஆண்டு ஆகஸ்டு 8, 9 தேதிகளில் விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாடு மனிதத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரான மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அன்றைய காலகட்டத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது அத்தீர்மானம். எதிர்ப்பு களுக்கு அஞ்சாது பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மக்கள் மன்றத்தில் எதிர்நீச்சல் போட்டு பரப்பிய கருத்துகளால் தான் தமிழ்நாடு மதவெறிக்கு இடம் அளிக்காத மண்ணாக பக்குவம் பெற்றது. இப்போது பா.ஜ.க., சங் பரிவாரங்கள் ஆட்சி அதிகாரங்கள் வழியாக தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக மாற்றும் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கின்றன. சகோதரத்துவத்தை பேணும் மதவெறி அற்ற தமிழ்நாட்டுக்கு சங்பரிவாரங்கள் விடுக்கும் சவாலை தனித்துவமான தமிழகத்தின் மதச் சார்பற்ற சமூகநீதி கொள்கைகளில் ஊன்றி நிற்கும் அனைத்து கட்சிகள், இயக்கங்கள் மக்களோடு ஒருங்கிணைந்து முறியடிப்போம் என்று இம்மாநாடு 1931இல் பெரியார் முழங்கிய இந்த விருதுநகரில் இருந்து சூளுரைக்கிறது.

பெண்களுக்கு முக்கிய பங்கு: பெண்களின் சம உரிமைக்கும், விடுதலைக்கும் குரல் கொடுத்த பெரியார் பொது வாழ்க்கையில் பெண்களின் பங்கேற்பை தொடர்ந்து வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் பெண்ணுரிமை ஜாதி ஒழிப்பு சமூகநீதி போராட்டக்களம் நோக்கி ஏராளமான பெண்கள் முன்வரத் தொடங்கி விட்டார்கள். இந்த வரலாற்று மாற்றத்தை கருத்தில் கொண்டு பொது வாழ்க்கையில் பெண்களுக்கான ‘சுதந்திர வெளியை’ உருவாக்கித் தருவதற்கு கட்சிகளும் இயக்கங்களும் முன்வர வேண்டிய அவசியத்தை இம்மாநாடு சுட்டிக்காட்டு கிறது அதேபோல் குடும்பங்களிலும் பெண்களுக்கான ஜனநாயக உரிமைகளை மதிக்கும் சுயமரியாதை பண்பாடுகளையும் பேணி வளர்த் தெடுப்போம் என்று இம்மாநாடு உறுதி ஏற்கிறது.

மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம் : மதவெறியர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு குறி வைக்கப்பட்ட தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரிலங்கேஷ் அனைவரும் மதவெறி எதிர்ப்புடன் மூடநம்பிக்கை களுக்கு எதிரான அறிவியலை பரப்பியவர்கள்.  மதவெறி எதிர்ப்பு பரப்புரையுடன் அறிவியலையும் இணைப்பது தான் மக்களிடத்தில் உறுதியான மதவெறி எதிர்ப்பை உருவாக்கும் என்று மதவெறியர்கள் அஞ்சுகிறார்கள் என்பதையே இந்த படுகொலைகள் உணர்த்துகின்றன. எனவே மதவெறி எதிர்ப்பை அரசியல் கண்ணோட்டத்தோடு நிறுத்தி விடாமல் மூடநம்பிக்கைகளில் இருந்து மக்களை விடுவிக்கும் அறிவியல் மனப்பான்மையை வளர்த் தெடுக்கும் பரப்புரையையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

கழகத் தோழர்கள் கணேசமூர்த்தி, செந்தில் ஆகியோர் முன்னின்று தோழர்களை ஒருங்கிணைத்து கடும் உழைப்பில் இந்த மாநாட்டை நடத்தி முடித்துள்ளனர்.  நிகழ்வுகளை பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் ஒருங்கிணைத்தார்.

Pin It

பால பாரதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தொலைக்காட்சி பேட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பற்றி கூறும்போது அந்த ‘பொம்பள’ய நான் பார்த்ததே இல்லை என்று கூறினார். இதற்கு பதிலளித்து ‘தமிழ் இந்து’ நாளேட்டின் பெண்கள் மலரில் (செப்.17) பாலபாரதி எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அவரது உயிரைப் பறித்த நீட்டை ரத்து செய்யக்கோரிய மாணவர்களின் போராட்டம் தமிழகமெங்கும் வியாபிக்கத் தொடங்கியது. அதைத் திசை திருப்பும் நோக்கோடு நீட்டை ஆதரித்தும் அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் ஊடகங்கள் வழியாக விவாதங்கள் நிகழ்ந்து கொண் டிருந்தன. அதிலும் குறிப்பாக அனிதா நீட் தேர்வில் தோற்றுவிட்டதால் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தகுதி யில்லையென்றும் நீதிமன்றத்தின் வழியாக அனிதாவின் உரிமையைப் பெற உதவ முன் வந்தவர்கள்தான் அவரது மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று டாக்டர் கிருஷ்ண சாமி போன்ற தலைவர்கள் பிரச்சாரத்தை நடத்தியதும் பெரும் வேதனையைத் தந்தன.

இதன் பின்னணியில்தான் 2015-ல் தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வொன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, டாக்டர் கிருஷ்ண சாமியின் மகளுக்கு மருத்துவ மேற்படிப்புக்கு சீட் வழங்கினார் என்பதை அன்றைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்ட மன்றத்தில் தெரிவித்திருந்தார். தமக்கென்றால் ஒரு நீதி அனிதாவுக்கென்றால் இன்னொரு நீதியா என்ற எனது கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாதவர், “அந்தப் பொம்பளை யாரென்றே எனக்குத் தெரியாது” என்று ஊடகத்தில் மறுப்பு தெரிவித்தார். “உங்களைப் போன்றே பொதுச்சேவைக்கு வந்த ஒரு பெண்ணை பொம்பளை எனச் சொல்லலாமா?” என்ற ஊடகத்தாரின் கேள்விக்கு மீண்டும் அவர், “பொம்பளையைப் பொம்பளை என்று சொல்வதிலே என்ன தவறு? அது அழகான தமிழ் வார்த்தைதானே” என்றார். அதே தூய தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தி, “அந்தப் பொம்பளையிடம் நான் சீட் வாங்கவில்லை” என ஏனோ அவர் சொல்லவில்லை. அதன் அரசியல் நமக்குப் புரியாமலும் இல்லை.

அந்தக் கேள்வியோடு நிறுத்தாமல், “பிறகு அந்தம்மா பொம்பளை இல்லையா?” என அடுத்த கேள்வியையும் தொடுத்தார். இதை விடக் கூர்மையான ஆயுதம் வேறு இருந்துவிட முடியாதுதான். நிகழ்ச்சித் தொகுப்பாளர் அசந்தே போனார். இத்தனை நெருக்கத்தில் ஆணாதிக்கத்தின் விஷ அம்பை அவரும் எதிர்கொண்டிருந்திருக்க மாட்டார். ஒரு அரசியல் கட்சியின் முக்கியத் தலைவரிட மிருந்து இப்படியொரு கேள்வியை யாரும் எதிர்பார்க்கவில்லை. போர்க்களத்தில் எனது ஆயுதம் பறிக்கப்பட்டதைப் போன்ற அனுதாபத் தோடும் இரக்கத்தோடும் பலரது பார்வையும் இருந்தது. அதே நேரம் எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

அனிதாவுக்கு நியாயம் கேட்டுத் தன் ஆசிரியர் பணியைத் துறந்த சபரிமாலாவை அதிமுகவின் பிரமுகர் ஒருவர், “இந்தம்மா வெல்லாம் டீச்சராக வேலை பார்த்தால் விளங்குமா? வேலையைவிட்டுப் போனதே நல்லது” என்று கொச்சைப்படுத்தினார். போற்ற வேண்டிய போர்க்குணத்தை, வளர்க்க வேண்டிய தியாகக் குணத்தை இத்தனை கேவலமாக இழிவுபடுத்த இவர் யார் என்ற கேள்வியை யாரும் எழுப்பவில்லை.

இந்துத்துவவாதிகளை எதிர்த்துப் பேசினார் என்பதற்காகத் தான் கௌரி லங்கேஷ் மீது ஏழு புல்லட்டுகளை வெறித்தனத்தோடு பாய்ச்சி, உடலைச் சல்லடையாக்கினார்கள் சமூக விரோதிகள். வேறு சிலரோ போதைப்பொருள் கடத்தலில் அவர் ஈடுபட்டதாகக் கூச்சநாச்சமின்றி அவதூறு சொல்லி உயிரற்ற உடலை மேலும் சல்லடையாக்கினார்கள். மதவெறியர், சமூகவிரோதிகளை விட்டுவிட்டு மாணவி வளர்மதியைக் குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளிய அரசு பயங்கரவாதம் உள்ளிட்ட பெண் மீதான வன்முறைகள் கூர்மையடைந்தே வருகின்றன.

குடும்பத்தில் மட்டுமல்ல பெண்கள் அரசியலுக்கு வந்தாலும் அங்கேயும் அடக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்றே உலகம் எதிர்பார்க்கிறது. அடக்க மானவர்கள் எல்லாம் சுடுகாட்டில்தான் இருப்பார்கள். அந்த அடக்கம் தேவையற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி என் எதிரியல்ல, நாவடக்கம் தேவை என என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களையும் எச்சரிக்கிறார். அது அவரது குரல் அல்ல, ‘மனு’வின் குரல். ஆகவே, அவரது கருத்தை எதிர்க்கிறேன்.

‘பொம்பளை’ என்றால் பொம்பளை அல்ல. போராட்டம் என்பதே அதன் பொருளாகும் என மாணவிகள் உணர்த்திக் கொண்டிருக் கிறார்கள். எந்தவொரு பெண்ணுக்கு எதிராகவும் எங்கே அநீதி நிகழ்ந்தாலும் சாதி, மதம், அரசியல் வேறுபாடின்றி தடியைச் சுழற்றித் தட்டிக் கேட்பதற்கு ஒரு தந்தை பெரியார் நிச்சயம் வேண்டும்.

Pin It

உட்பிரிவுகள்