H Raja 4501) மோடியை விமர்சித்துப் பேசியதற்காக வைகோ வீதிகளில் நடமாடி முடியாது என்று பார்ப்பனத் திமிரோடு பேசியது யார்

2) திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்ட போது தமிழ்நாட்டிலும் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று முகநூலில் பதிவிட்டு சொந்தக் கட்சிக்குள்ளே எதிர்ப்பு வந்த பிறகு அதை ‘அட்மின்’ போட்டார் என்று பதுங்கியது யார்?

3) ‘ஈ.வெ.ரா. ஒரு தேசத் துரோகி’ என்று வாய்க் கொழுப்போடு தொடர்ந்து பேசியது யார்?

4) பெரியார் சிலைகளையும் உடைக்க வேண்டும் என்று முகநூலில் பதிவு செய்ததைத் தொடர்ந்து திருப்பத்தூரிலும் தாராபுரத்திலும் பெரியார் சிலைகளை மதவெறி காலிகள் சேதப்படுத்தியதற்கு தூண்டி விட்டது யார்?

5) திருவெம்பாவையை பாடியதாகக் கூறப்படும் ‘ஆண்டாள்’ - தேவதாசி மரபிலிருந்து வந்திருக்கக் கூடும் என்ற ஒரு ஆய்வுக் கருத்தை பேசியதற்காக கவிஞர் வைரமுத்துவையும் அவரது ‘பிறப்பையும்’ ஒருமையில் பார்ப்பனத் திமிரோடு இழிவுபடுத்தியது யார்? (ஆண்டாளுக்காக வீதியில் வந்து போராடிய பார்ப்பனப் பெண்களும் ஆண்களும் இப்போது பொள்ளாச்சி பாலுறவு வன்முறைக்கு வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்)

6) உயர்நீதிமன்றம் மேடை போட அனுமதிக்கவில்லை என்று காவல்துறை கூறியபோது என்ன ‘மயிரு கோர்ட்’ என்று உயர்நீதிமன்றத்தையே தடித்த வார்த்தைகளில் பேசி, பிறகு உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட ‘மாவீரன்’ யார்?

7) தனது தந்தை எழுதிய சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவுக்கு காஞ்சி விஜயேந்திரனை அழைத்து தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடியபோது காஞ்சி விஜயேந்திரன் எழுந்து நிற்க மறுத்ததை நியாயப்படுத்தியது யார்?

8) மாநிலங்களவை தி.மு.க. அணித் தலைவர் கனிமொழியை பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்திப் பேசியது யார்?

அந்த ஆசாமிதான் எச். ராஜா .

டில்லியில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற பார்ப்பனத் திமிருடன் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை சீண்டிக் கொண்டிருந்த அந்த மனிதரை - தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தேர்தல் ஓட்டுக்காக இப்போது பம்பிக் கொண்டு, பதுங்கி நிற்கும் அந்த பார்ப்பன வெறியரை எப்படித் தமிழர்கள் மன்னிக்க முடியும்?

பார்ப்பனத் திமிருக்கு பதிலடி தருவதற்கான நேரம் இப்போது தேர்தல் வழியாகக் கிடைத்திருக்கிறது.

பதிலடி தருவதற்கு தயாராவீர், தமிழர்களே!

Pin It