உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம், பிதாரி செயின்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் ராஜேஷ் மிஸ்ரா. இவர், காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகள் சாக்ஷி மிஸ்ராவையும் (23). அவரது கணவரும் தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான அஜிதேஷ் குமாரையும் (29) படுகொலை செய்யப் போவதாக ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தார்.

“நாங்கள் இருவரும் வயது வந்தவர்கள். விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டோம். எங்களது அமைதியான வாழ்க்கையில் போலீசாரோ அல்லது பாஜக எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ராவோ இடையூறு செய்யக் கூடாது” என்று உயர்நீதிமன்றத்தை நாடினர்.

உயர்நீதிமன்றத்தில் சாக்ஷி தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க நீதிபதி சித்தார்த் வர்மா உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி இவ்வாறு தீர்ப்பு வழங்கிய அடுத்த சில நிமிடங்களில், நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே, அங்கிருந்த வழக்கறிஞர்களால், சாக்ஷியும், அவரது கணவர் அஜிதேஷூம் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாஜக எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, அதே நீதிமன்ற வளாகத்தில் மற்றொரு காதல் தம்பதி கடத்தப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அவர்கள் பதேபூர் பகுதியில் மீட்கப்பட்டு உள்ளனர்.  ‘மிஸ்ரா’ பார்ப்பனர்களில் ஒரு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It