26.12.2014 அன்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 41ஆவது, புரட்சியாளர் அம்பேத்கரின் 58ஆவது நினைவுநாளையொட்டி திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மதவாத எதிர்ப்புக் கருத்தரங்கம், மன்னார்குடி குமாரசாமி திருமண அரங்கத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு தலைமையில் நடைபெற்றது.

கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர்மணி பங் கேற்று, காவிமயமாகும் கல்வி, அரசியல் என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார். துவக்கத்தில், பெரியார் இயக்கத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் மறைந்த தோழர் ராம முத்துராமலிங்கம் படத்தினை கழகத் தலைவர் கொளத்தூர்மணி திறந்து வைத்தார். பின்னர் துவங்கிய கருத்தரங் கத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று மன்னை வட்ட லாரி உரிமை யாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சேரன் குளம் செந்தில்குமார் வரவேற்புரை யாற்றினார்.

எழுத்தாளர் தஞ்சை பசு கௌதமன், தஞ்சை வடக்கு மாவட்ட அமைப்பாளர் கு.பாரி, தஞ்சை தெற்கு மாவட்ட அமைப் பாளர் சித.திருவேங்கடம், நாகை மாவட்ட தலைவர் மகாலிங்கம், நாகை மாவட்ட செயலாளர் தெ.மகேஷ், மாவட்ட அமைப்பாளர் அன்பரசன், தலைமைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளைய ராஜா, புதுக்கோட்டை மாவட்ட அமைப் பாளர் பூபதி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

புரட்சியாளர் அம்பேத்கர் படத்தினை விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் என்.டி.இடி முரசும், தந்தை பெரியாரின் படத்தினை திருவாரூர் மாவட்ட பூ வியாபரிகள் சங்க தலைவர் ரயில்பாஸ்கரும் திறந்து வைத்து உரையாற்றினர். பின்னர் புரட்சியாளர் அம்பேத்கர் 58ஆவது நினைவேந்தலை விளக்கி கழகப் பேச்சாளர் முனைவர் ஜீவானந்தமும், தந்தை பெரியார் 41ஆவது நினைவேந்தலை விளக்கி தலைமைக்குழு உறுப்பினர் தூத்துக்குடி பால்பிரபாகரனும் கருத்துரை யாற்றினர். இறுதியாக, காவிமயமாகும், கல்வி, அரசியல் என்கிற தலைப்பில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர்மணி சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து தனது கொள்கை, கோட்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை மதசார்பற்ற நாடான இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்கள் மீதும் திணிப்பது தான் பாஜகவின் குறிகோளாகும். பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஆர்எஸ்எஸ்ஸின் வழிகாட்டுதல் பேரில் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, ஆசிரியர் தினத்தை குருஉத்சவ் என மாற்றியது, இந்தியாவின் தேசிய நூலாக பகவத்கீதையை கொண்டு வர முயற்சித்தது, இஸ்லாமியருக்கு எதிராக மீண்டும் கலவரங்களை தூண்டும் முயற்சியாக ராமர் கோவிலை கட்ட நினைப்பது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டை முற்றிலுமாக நீக்க முயற்சி செய்வது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.  மதசார்பற்ற நாட்டில் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி அதன்மூலம் தன்னுடைய அரசியல் ஆதாயங் களுக்காக பல்வேறு நடவடிக்கைகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஈடுபடுகிறது.

இந்தியாவில் உயர்ந்த விருதான பாரத ரத்னாவிருதை வாஜ்பாஜ், மாளவியா ஆகியோருக்கு அளித்திருப்பது என்பது மக்கள் ஒற்றுமையை விரும்பும் எவரும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயலாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் மத்தியில் இருக்கின்ற மோடி அரசை பின்புலமா இருந்து இயக்குகிறது. இந்த அமைப்பு பற்றி அம்பேத்கர் கூறுகையில் ஆர்.எஸ்.எஸ் என்பது எறும்பிற்கு சர்க்கரையை உணவாக இடுவார்கள் ஆனால் மனிதர்கள் தண்ணீர்குடிக்க தடை விதிப்பார்கள் என்று கூறியிருக் கிறார். மேலும் ஜவஹர்லால் நேரு ஆர்.எஸ்.எஸ் பற்றி கூறுகையில் ஐரோப்பாவில் பல்வேறு பாகங்களில் தோன்றிய மக்கள் விரோத அமைப்பு களின் மறுபதிப்பாக விளங்குகிறது என்றார். எனவே கல்வி முதல், அரசின் ஒவ்வொரு துறையையும் காவிமயமாக்கி வருகின்றன பாஜகவின் திட்டங்களை அனைவரும் எதிர்த்து போராட முன்வரவேண்டும் என கூறினார்.

கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் மார்பளவு பெரியார் சிலையினை பொறுப்பாளர்க்ள நினைவு பரிசாக வழங்கினர். இறுதியாக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் நல்லிக்கோட்டை முருகன் நன்றி கூறினார்.

--

Pin It