மறைந்த பெரியார் சாக்ரடீஸ் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு பெரியார் திடல் நடிகவேள்எம்.ஆர். ராதா மன்றத்தில் நடந்தபோது (30.5.2014) கவிஞர் அறிவுமதி, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். பெரியார்கொள்கைகளுக்கு நெருக்கடி உருவாகியுள்ள அரசியல் சூழலில், பெரியார் இயக்கங்கள்,தங்களுக்குள் இணைந்து செயல்படவேண்டும் என்றும், அதற்கான முன்முயற்சியைதிராவிடர் கழகத் தலைவரே எடுக்க வேண்டும் என்பதே கவிஞர் அறிவுமதியின் கோரிக்கை.தொடர்ந்து பேசிய நடிகர் சத்தியராஜ் அவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமது உரையில் பேசியதை ‘விடுதலை’ நாளேடுகீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறது.

“இங்கே கவிஞர் அறிவுமதி அவர்களும் நமது இனமுரசு சத்யராஜ் அவர்களும் ஒன்றைக்குறிப்பிட்டார்கள். அது பற்றி நான் கருத்து சொல்லவில்லை என்றால், என்ன நாம் எடுத்துவைத்த கோரிக்கைக்கு ஆசிரியர் (கி.வீரமணி) பதில் சொல்லாமல் போய்விட்டாரே என்றுகருதிட இடம் கொடுக்கக் கூடாதல்லவா?

பெரியார் திடல் என்பது எந்த ஒரு தனிப்பட்டவருக்கும் சொந்தமானதல்ல. என்றைக்கும்திறந்தே இருக்கிறது. யாரும் வரலாம். நான் அடிக்கடி சொல்வதுண்டு, அதையே திரும்பவும்சொல்கிறேன். நம்மை எது இணைக்கிறதோ அதனை விரிவு செய்வோம்; எது நம்மைப்பிரிக்கிறதோ அதனை அலட்சியப்படுத்துவோம் என்று குறிப்பிட்ட திராவிடர் கழகத் தலைவர்அவர்கள், சாக்ரட்டீசின் நினைவைப் போற்றும் வகையில் ஆக்கப்பூர்வமாக சிலவற்றைச்செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்” என்று ‘விடுதலை’ பதிவு செய்துள்ளது.

ஆனால், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரையின் ஒலி வடிவம், பெரியார்வலை தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் பெரியார் இயக்கங்கள் 10, 12 என்ற அளவில்உள்ள நிலையில், பொது கொள்கை என்று வரும்போது கூட்டு அமைப்பாக செயல்பட முன்வரவேண்டும் என்ற கருத்தை “இரு கை நீட்டி வரவேற்க திராவிடர் கழகம் தயாராகஇருக்கிறது” என்று பேசியுள்ளார். ஆனால், இந்த முக்கிய பகுதியை ஏனோ ‘விடுதலை’அச்சேற்றவில்லை. கவிஞர் அறிவுமதி எழுப்பிய கோரிக்கைக் குறித்து அவர்களேமேடையில் வெளியிட்ட கருத்தைக்கூட முழுமையாக வெளியிட தயங்குகிறார்கள்.

‘திராவிடர் விடுதலைக் கழக’த்தைப் பொறுத்தவரை பெரியார் இயக்கங் களுக்குள் பகைமைபாராட்டும் அணுகுமுறையை தவிர்த்தே வந்திருக்கிறது. ‘குடிஅரசு’ தொகுப்பை வெளியிடநாம் திட்டமிட்டபோது திராவிடர் கழக தலைமை அதை எதிர்த்து நீதிமன்றம் போய்தடைப்படுத்த முயன்றபோது தான் அவர்களைக் கடுமையாக விமர்சிக்க வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டோம்.

தீர்ப்பு கிடைத்த பிறகு, திராவிடர் கழக அணுகுமுறையில்நமக்கு கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் விமர்சனங்களைத் தவிர்த்தேவந்துள்ளோம்; அதுபோது ஜாதி மறுப்புத் திருமணங்களுக்காக திராவிடர் கழகம்மேற்கொண்ட “மன்றல்” திட்டத்தை நாம் பாராட்டி வரவேற்று எழுதியுள்ளோம்.

திருவரங்கத்தில் திராவிடர் கழகம் நிறுவிய பெரியார் சிலை மதவெறி சக்திகளால்சேதப்படுத்தப் பட்டபோது பெரியார் திராவிடர் கழகம்தான் அதற்கு எதிர் வினையாற்றியது.கழகத் தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட் டார்கள்.அதற்கான கண்டனத்தைக்கூட திராவிடர் கழகம் பதிவு செய்யவில்லை.

திண்டுக்கல்லில் திராவிடர் கழகத் தோழர் இராசேந்திரன், மதவெறி சக்திகளால்தாக்கப்பட்டபோது, பெரியார் திராவிடர் கழகம்தான், தாக்கப்பட்டவர் திராவிடர் கழகத்தைச்சார்ந்தவர் என்று பார்க்காமல் அனைத்து அமைப்புகளையும் திரட்டி இயக்கம் நடத்தியது. (அதில்கூட திராவிடர் கழகமே பங்கேற்காமல் தவிர்த்துக் கொண்டது) திராவிடர் கழகத்தலைவரை மதவெறி சக்திகள் தாக்க முயன்றபோது நாம் உடனே கண்டனம் தெரிவித்தோம்.தலைவர்களின் கண்டன அறிக்கைகளை எல்லாம் வெளியிட்ட ‘விடுதலை’, கழகம்வெளியிட்ட கண்டனத்தை மட்டும் ஏற்கவே மறுத்தது.

பெரியார் சாக்ரடீசு உடலுக்கு இறுதிமரியாதை செலுத்திய அனைத்து அமைப்புகள், பிரமுகர்கள் பெயர்களை பட்டியலிட்ட‘விடுதலை’, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பொதுச் செய லாளர் விடுதலைஇராசேந்திரனும், தோழர்களும் இறுதி மரியாதை செய்ததை மட்டும் நீக்கிவிட்டுத்தான்வெளியிட்டது.

இப்படி ஏராளம் பட்டியலிட முடியும். என்றாலும்கூட, இப்போதும் நமதுநிலை பெரியார் இயக்கங்கள் தங்களுக்கான தனித்தனி செயல் திட்டங்களைமுன்னிறுத்தினாலும் அவசியம் தேவை கருதி பொதுவான திட்டங்களில் கரம் கோர்த்துநிற்க வேண்டும் என்பதுதான்.

பெரியார் திராவிடர் கழகத்தில் செயல் திட்டங்களை முன்னெடுப்பதில் எழுந்த கருத்துமாறுபாடுதான், திராவிடர் விடுதலைக் கழகம் உருவாகக் காரணமாயிற்று. அப்போதும்கூட‘பெரியார் திராவிடர் கழகம்’ என்ற பெயருக்கு பெரியார் அமைப்புகள் வெளிப்படையாகமோதிக் கொள்ளக் கூடாது என்றே நாம் கருதினோம்.

அதன் காரணமாக அந்த அமைப்பின்தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக இருந்த நாம் இயக்கத்தின் பெயருக்கு உரிமை கோரவேண்டாம் என்று முடிவெடுத்து, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற தனி பெயர் சூட்டிக்கொண்டு செயல்பட முன் வந்தோம். அதற்குப் பிறகும்கூட தந்தை பெரியார் திராவிடர்கழகத்தோடு கூட்டமைப்புகளில் நாம் எந்த மனத் தடையுமின்றி இணைந்தே நிற்கிறோம்.

திருவரங்கத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தில் தோழர்கள்கைது செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாகியபோது அதைக் கண்டித்து திராவிடர்விடுதலைக் கழகம் கண்டன சுவரொட்டிகளை ஒட்டியதோடு கழகத்தின் தலைவர்கொளத்தூர் மணி பொதுக் கூட்டங்களில் கண்டனம் தெரிவித்துப் பேசினார்.

பெரியார் இயக்கங்களின் தோழர்கள், அரசியல் கட்சிகளைப்போல் அல்லாமல்,கொள்கைக்காக வாழக்கூடியவர்கள்; பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றவர்கள்; அதற்காகவிலை கொடுத்து வருவோர். இந்தப் பார்வையோடுதான் பெரியார் இயக்கங்களிடையேதோழமையும் கூட்டுச் செயல்பாடுகளும் தேவை என்ற அணுகுமுறையை திராவிடர்விடுதலைக் கழகம் வற்புறுத்தி வருவதோடு, செயலளவிலும் அதை நடைமுறைப்படுத்திவருகிறது. இந்த ஆரோக்கியமான பார்வை வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்பதே நமதுஉறுதியான நிலைப்பாடு.